Sunday, April 13, 2025

#Victory King: சேரும் இடம் அறிந்து...

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2292🥰 

சதுப்பு நிலத்தில் விழும் மழைநீர் பயிர்களை வளமாக்கி நல்ல மகசூலைகொடுக்கிறது. ஆனால் சாலையில் விழும் மழை நீர் கழிவு நீருடன் கலந்து பயனற்றதாகிறது. அதுபோல்தான் நாம் சேரும் இடம் சார்ந்தே நமது தரம். நம் சேர்க்கை சரி இல்லை என்றால் நம் வாழ்க்கையும் சறுக்களில் தான் முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, April 12, 2025

#Victory King: மனப்பக்குவம்

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2291🥰 

சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளை நினைத்து நினைத்து இதுதானா வாழ்க்கை என்று வெதும்பதை விடுத்து இது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்ற மனப்பக்குவத்தை நாம் அடைந்து விட்டால் வாழ்க்கையில் நமக்கு கசப்பான பலவும் இனிக்க துவங்கி வாழ்க்கை மெல்ல மெல்ல ஜொலிக்க துவங்கும். முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, April 11, 2025

#Victory King: வாய்ப்பை தவற விட வேண்டாமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2290🥰

மரங்கள் கொத்து கொத்தாக கனிகளை ஈட்டி நம்மை கவர வைக்கும். அந்த கனிகளை  சேதமில்லாமல் பறித்து சுவைத்து உண்பது நம் திறமை. அதுபோல்தான் இறைவன்  நமக்கு கொடுக்கும் வாய்ப்பை சரியாக முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற முயல்வதும் நம் திறமையால் மட்டுமே. நமக்கு கிடைத்த வாய்ப்பை வரம் மாக்குவதும் விரயமாக்குவதும் நம் கையில் தான்!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, April 10, 2025

#Victory King: வெற்றி தோல்விகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2289🥰  

பயம், கோழைத்தனம் இரண்டிற்கும் மூல காரணம் தன்னம்பிக்கை இல்லாத திட சிந்தனையில்லாத மனம். இந்த நிலையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடியும். எனவே தீர்க்கமாக முடிவெடுத்து அது அடுத்தவர்களையும் பாதிக்காமல் செயல்படுத்த முடியும் என்றால் மட்டுமே நாம் முயற்சி செய்தது வெற்றி பெறும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, April 8, 2025

#Victory King : சுதந்திரமும் முட்டுக் கட்டையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2288🥰  

நாம் செய்யும் செயல்களுக்கு நமக்கு முழு சுதந்திரம் உண்டு என்ற நினைப்பில் நம்மை நாமே அதி புத்திசாலியாக கற்பனை செய்து கொண்டு அடுத்தவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் நாம்தான் முட்டாள் ஆவோம். அதுவே நம் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, March 25, 2025

#Victory King: உழைப்போம் உயர்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2287🥰  

உழவர்கள் கடினமாக உழைத்தால் தான் நமக்கு உணவு.  அந்த உணவும் நாம் உழைத்து சம்பாதித்தால் மட்டுமே.அடுத்தவர்கள் தோளிலிலேயே அமர்ந்து  சொகுசுபயணம் செய்தே பழகியவர்கள் வாழ்க்கையின் சுமையை அறிய மாட்டார்கள். அவர்கள் கீழே விழும் பொழுது தான் தட்டு தடுமாறி தத்தளிபார்கள். எனவே நம் உழைப்பால் மட்டுமே முன்னேறி நம்மை நாம் உயர்த்தி கொள்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, March 23, 2025

#Victory King: ஏமாற்றங்களை தாங்கப் பழகுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2286🥰 

என்னதான் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் நமக்கு வலிக்கத்தான் செய்யும். உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் நாம் ஜெயித்து விடுவோம். ஆனால் அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கும் பொழுது நமக்கு ஏமாற்றம் தான்.எனவே தவிர்க்க முடியாத இத்தகைய ஏமாற்றங்களை தாங்கும் சக்தியை நாம் வளர்த்துக்கொண்டு வாழப் பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, March 22, 2025

#Victory King: நேர்மையாக பழகப் பழகுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2285🥰 

ஒரு செயல் தவறு என்று தெரிந்தே நாம் அதை செய்யும்பொழுது அதற்கான தண்டனை கிடைக்காத சமயத்தில் ஒரு நிலையில் நாம் தவறே செய்யாத போது நமக்கு தண்டனை கிடைக்கும் பொழுதாவது நாம் செய்த தவறை உணர்ந்து திருந்த வேண்டும். அதுபோல் நாம் மற்றவரிடம் ஏமாறியது தவறு இல்லை. நம்மை ஏமாற்றும் அளவிற்கு நாம் அவர்களிடம் அன்பாகவும் உண்மையாகவும் பழகியது தான் தவறு என்பதை உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, March 21, 2025

#Victory King: கற்றுக் கொடுக்கும் காலம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2284🥰  

உள்ளொன்று வைத்து புறமொன்று நாவினால் தேனொழுக பேசி அடுத்தவர்களுக்கு ஒரு மாய பிம்பத்தை பிரகாசமாக சித்தரித்து இறுதியில் எதிராளியின் இதயத்தை இரணமாக்கும் விஷயத்தை தங்கள் மீது குற்றமில்லாத படி உரைக்கும் துரோகிகளை ஒரு நிலையில்"காலம்" கதறடிக்கும் என்றாலும் நம்மை நாம் காக்க அவர்களை இனம் கண்டு பழக முயல்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, March 20, 2025

#Victory King: நேர்மையும் வெற்றியும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2283🥰  

நாம் தோல்வி அடையும் பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்து விடாமல் அந்த தோல்விக்கு இடையில் வாய்ப்புகளும் மறைந்திருக்கும் என்று நம்பிக்கையோடு மாற்று பாதையை தேடி அடைந்த தோல்விக்கு தோல்வியை ஏற்படுத்தி நாம் நேர்மையாக ஆசைப்பட்டதை நிறைவேற்றி வெற்றி பெறுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, March 19, 2025

#Victory King: இதுவும் கடந்து போகும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2282🥰 

எந்த ஒரு நிகழ்வுமே நடந்து முடிந்து கடந்து போனதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு, நாம் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் புரிதல் இல்லாதவர்களிடம்  சொல்லியும் பிரயோஜனம் இல்லை என்பதை மனதில் கொண்டு மௌனமாய் இருந்து,  எதிர்காலமானது நம்மை ஏளனமாக பேசிய சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்டும் ஒரு வாய்ப்பாக கருதி  எதிர்காலத்தை சிறப்பாக்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, March 18, 2025

# Victory King: நேர்மை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2281🥰 

நேரத்தில் உண்ணாமை நம் உடலுக்கு கேடு. நேர்மையற்ற செயல் நம் வாழ்க்கைக்கு கேடு. அதுபோல் நம் எண்ணம் தூய்மையாக இருந்தும் செயல் நேர்மையாக இருந்தும் நாம் ஒருவரிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் முறையாக சொல்லவில்லை என்றால் அதுவே நம்மை பழிக்கு ஆளாக்கி பகைக்கு வித்திட்டு நம்மை மீளாத்துயரில் அழ்த்தி விடும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, March 17, 2025

#Victory King: நம் மதிப்பு உயர!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2280🥰 

நம் மதிப்பு உயர:

'தான்' என்ற அகந்தையை ஒழித்திடல் வேண்டும். தேவையில்லாத அர்த்தமில்லாத எதையும் பேசாதிருத்தல் வேண்டும். நான் சொன்னது தான் சரி என்ற வாதத்தை விலக்கிடல் வேண்டும்.நாம்தான் எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்ற மனப்போக்கை கைவிட்டு கர்வத்தை முழுமையாக அடக்கிடல் வேண்டும். அப்பொழுதுதான் நமக்குரிய மரியாதை நம்மை வந்து தானே அடையும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, March 16, 2025

#Victory King: புறம் பேசுவதை தவிர்ப்போம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2279🥰 

செய்தது தவறு என்று மற்றவர்களை பார்த்து நாம் குறை கூறும் பொழுது அவர்களிடமே நேரடியாக கூறும்பொழுது தான் அவர்கள் செய்த தவறை அவரே உணரவும் முடியும். அப்படியே அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் நமக்கும் உண்மை புரியும். அதை விடுத்து சுற்றத்தில் எல்லாம் கூறும் பொழுது அது பல செவிகளை பலகோணத்தில் சென்று சம்பந்தப்பட்டவரை பாதிக்கக்கூடும். எனவே புறம் பேசுவதை தவிர்ப்பது தான் நம் அனைவருக்குமே நலமாக இருக்கும். உணர்வோமே !

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, March 15, 2025

#Victory King: வார்த்தைகளே 'சாவி'!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2278🥰 

வார்த்தைகள் 'சாவி' போன்றது. சரியான வார்த்தைகளை பிரயோகித்தால் தான் அடுத்தவர்கள் இதயத்தை திறந்து  அவர்களுடன் இணக்கமாக இருக்க முடியும். அதுபோல்தான் மற்றவர்கள் நம் இதயத்தை நோக அடிக்கும் பொழுதும் சரியான வார்த்தைகளால் அவர்கள் வாயை பூட்டவும் முடியும். எனவே நாம் சரியான வார்த்தைகளை சரியான நேரத்தில் பிரயோகப்படுத்திஅனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, March 14, 2025

#Victory King: மகுடம் சூடு மகிழ்வோமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2277🥰 

செடிகளிலிருந்து பூக்கள் உதிர்வது போல் நம் லட்சியத்தை உதிரவிடாமலும், அதன் இலைகள் பழுத்து சிதைந்து விழுவது போல் நம் ஆசைகளை சிதைத்து விடாமலும், அதன் விதைகள் விழுந்து மண்ணில் புதைந்து மீண்டும் துளிர்விட்டு வளர்வது போல் நம்மை தோல்வி  தழுவும்பொழுது மனம் தளராமல் புத்துணர்ச்சி யுடன் செயல்பட்டு அந்த தோல்வியை உடைத்தெறிந்து வெற்றி மகுடம் சூடி  மகிழ்வுடன் வாழபழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, March 13, 2025

#Victory King: நன்றே செய் அதையும் இன்றே செய்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2276🥰 

ஒரு செயலின் முக்கியத்துவம் அறிந்து அதற்கான முழு முயற்சியை உடன் எடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் அதன் வெற்றி பிரகாசமாகத்தான் இருக்கும். அதையே காலம் தாழ்த்தி முடிவெடுக்கும் பொழுது நாம் பல சிக்கல்களை சந்திப்பதுடன் மன உளைச்சல், குற்ற உணர்ச்சிகளுக்கும் ஆளாவதுடன் நேர விரையத்தையும் தவிர்க்க முடியாதாகி விடுகிறது. எனவே"செய்வதை நன்றே செய் அதையும் இன்றே செய்". உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, March 12, 2025

#Victory King: வருங்காலம் சிறப்பாக அமைய!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2275🥰  

நடிப்பவர்கள் பதட்டப்பட மாட்டார்கள். அப்படி பதட்டப்பட்டாலும் அதுவும் ஒரு நடிப்பே. நாடகத்தில் நடிக்க திறமை வேண்டும். ஆனால் சுயநலவாதிகளுக்கு நடிப்பு ஒரு இயல்பு. இவர்களுக்கு தன்னலம மேலிட்டு கண்களுக்கு சுற்றத்தை மறைக்கச் செய்யும். ஆனால் சுற்றத்தில் குற்றம் காணும் மகாசக்தி படைத்தவர்கள். இவர்கள் "தான்" என்ற குருகிய வட்டத்திலிருந்து விலகி "நாம்" என்னும் வெளி வட்டத்திற்கு வர முயற்சித்தால் தான் அவர்கள் வருங்காலம் சிறப்பாக அமையும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, March 11, 2025

#Victory King: நல்லவற்றை ஏற்று வாழப் பழகுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2274🥰 

நம் மீது படும் காற்றின் சுகத்தை நம்மால் எப்படி அனுபவிக்க முடிகிறதோ, மலர்களின் நறுமணம் நம் இதயத்திற்கு எப்படி இதம் அளிக்கிறதோ, அதுபோல் தானாகவே நம்மை நாடிவரும் நல்லவைகளை ஏற்று நாம் மகிழ்ந்து வாழ பழகிவிட்டால் நாமாக தேடிச் செல்லும் சில விஷயங்கள் நமக்கு கிடைக்காத நிலை வந்தாலும் அதன் தாக்கம் நம்மை பாதிக்க வண்ணம் நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, February 28, 2025

#Victory King: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனைகள்

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2273🥰 

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அதுபோல்தான் ஒரு பிரச்சனை மனஸ்தாபம் என்று வந்தால் வாழ்க்கையில் அதை ஒருநிலையில் முற்றுப்புள்ளி வைத்து முடிக்கவில்லை என்றால் அது விஸ்வரூபம் எடுத்து விபரீதத்தில் தான் முடியும். உணர்ந்து செயல்பட முயல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 27, 2025

#Victory King: பணமே வாழ்க்கை அல்ல!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2272🥰 

நாம் வாழ்க்கையில் முன்னேற: பணிவு இருக்கலாம் ஆனால் அடிமையாகி விடக்கூடாது. இரக்கம் இருக்கலாம் ஆனால் ஏமாளி ஆகிவிடக்கூடாது. ஆசை இருக்கலாம் அது பேராசையாக ஆகிவிடக்கூடாது. துணிவு இருக்கலாம் ஆனால் துரோகிகளுக்கு துணை போகிவிடக்கூடாது. எளிமையாக வாழலாம் ஆனால் கருமியாகவே வாழ்ந்து விடக்கூடாது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான் ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. முயற்சிக்கலாமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, February 26, 2025

#Victory King: அன்புக்கும் பாசத்துக்கும் கூட இடைவெளி வேண்டும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2271🥰 

சாலையில் வாகனங்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்பொழுது சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தால் மட்டுமே விபத்தை தவிர்க்கலாம். அதுபோல்தான் உறவுகளாகட்டும் நட்புகளாகட்டும் என்னதான் மிகவும்நெருங்கியவர்களாக இருந்தாலும்கூட சிறிது இடைவெளி விட்டு அந்த அன்பையும் பாசத்தையும் தொடர்ந்தால் தான் வாழ்நாள் முழுவதும் அது நிலைத்து நம்மை மகிழ்விக்கும். அதுதான் நிதர்சனம். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, February 25, 2025

#Victory King: விழலுக்கு இறைத்த நீர்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2270🥰  

எவ்வளவுதான் ஓடி ஓடி உதவி செய்தாலும் பெருந்தன்மை இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் உதவியானது "விழலுக்கு இறைத்த நீர் போல் தான்". "பாத்திரம் அறிந்து பிச்சை இடு"என்ற பழமொழிக்கேற்ப தகுதி பார்த்து தேவை அறிந்து நாம் செய்யும் உதவி தான் பேரு உதவி, பயனுள்ள உதவி. உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, February 24, 2025

#Victory King: நிம்மதியான வாழ்க்கைக்கு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2268🥰 

நிம்மதியான வாழ்க்கைக்கு: உடல் ஆரோக்கியம், திருப்தி அடையும் மனம், நேர்மையுடன் சம்பாதித்த பணம், அனுசரணையான குடும்பம், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத நிலை, கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழப் பழகும் பக்குவம், விட்டுக் கொடுத்து வாழும் மனம், அன்பான உறவுகள், பாசமுள்ள பிள்ளைகள் இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்துவிட்டால் அதுதான் இறைவன் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு அளிக்கும் அருள்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: பொறுமைக்கும் எல்லை உண்டு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2269🥰 

எதிராளி பொறுத்துக் கொள்கிறார் சகித்துக் கொள்கிறார் என்பதற்காக நாம் அடுத்தடுத்து அவரை உதாசீனப்படுத்தி காயப்படுத்தினால், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு"எனவே ஒரு நிலையில் அவர்களின் எதிர்ப்பு அஸ்திரத்தை நம் மீது பிரயோகப்படுத்தும் பொழுது அதை தாங்கும் சக்தியை நாம் இழந்து நம் நிலை மிகவும் மோசமாகிவிடும்."சாதுமிரண்டால் காடு கொள்ளாது"இதனை உணர்ந்து மனிதநேயத்தோடு வாழப் பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, February 23, 2025

#Victory King: சக்தி வாய்ந்த மண், தரமான விதை, பதமான தண்ணீர்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2267🥰 

பயிர் நல்ல மகசூலை கொடுக்க வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மண் தரமான விதை பதமான தண்ணீர் வளர்ச்சிக்கேற்ப உரம் உணர்வோடு பாதுகாக்கும் உழவர்கள் அனைத்தும் உறங்கிணைத்து இருக்க வேண்டும். அதுபோல்தான் குழந்தைகள் வளர்ப்பிலும். ஆரோக்கியமான சூழ்நிலை அன்புக் கரங்களின் அரவணைப்பு குழந்தைகளின் குதூ களிப்பிற்கு உறவுகளின் வலிமை மிகவும் முக்கியம். சிந்திப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 20, 2025

#Victory King: மனமெனும் ஆசான்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2266🥰  

நல்ல வாழ்க்கை அமைய பெற்றவர்கள் அதனை தக்க வைத்துக் கொண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்காதவர்கள் கிடைத்த வாழ்க்கையை தமக்கு தகுந்தபடி நல்வாழ்க்கையாக அமைத்துக் கொண்டும் மகிழ்வுடன் வாழ பழகி விட்டால் அனைவரது வாழ்க்கையுமே நல்வாழ்க்கைதான். அனைத்திற்கும் நம் மனம் தான் ஆசான். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, February 19, 2025

#Victory King: பாசம், நேசம், ஒற்றுமை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2265🥰  

பாரபட்சம் இல்லாத பாசமும், நேர்மையான நேசமும், ஓரவஞ்சனை இல்லாத ஒற்றுமையும் ஒரு குடும்பத்தில் அமைந்துவிட்டால், இந்த மனோபாவங்கள் ஆல விழுதுகளை போல் அந்த குடும்பத்தை தாங்கி ஆணிவேரை அசைக்க விடாமல் ஓங்கி உயர்த்தி விடும். முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, February 18, 2025

#Victory King: வாழ்க்கையும் மனப்பக்குவமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2264🥰  

நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள், நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள், சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சில ஆசைகள், மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள், இவைகளை எல்லாம் நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று வாழ பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, February 14, 2025

#Victory King: உறவினர்களும், குடும்ப ஒற்றுமையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2263🥰 

நம் வீட்டிற்கு விரும்பி வரும் உறவுகளிடம் நாம் முகம் கொடுத்து பேசாமல் அலட்சியப்படுத்தி உரிய மரியாதை கொடுக்காமல் அவர்களை காயப்படுத்தும் பொழுதும்கூட அவர்கள் வந்த இடத்தில் நம்முடன் சரிக்கு சரி நின்று தங்கள் அதிர்ப்தியை காண்பிக்காமல் அதன் பிறகு நம் குணம் தெரிந்து நம்மை விட்டு விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள். இதுதான் நல்லவர்களின் பண்பு.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 13, 2025

#Victory King: கிடைத்ததை ஏற்று மகிழ்வோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2262🥰 

நம் வாழ்க்கையில் எல்லா பயணங்களும் இனிதாக முடியும் என்று கூற முடியாது. அதுபோல் நாம் எண்ணியதெல்லாம் நடந்து விடும் என்றும் கணித்து விடக்கூடாது. அனைத்துமே நமக்கு சாதகமாக வரும்பொழுது தான் நிம்மதியாக இருப்பேன் என்று நாம் எண்ணினால் வாழ்க்கையில் நிம்மதியையே தொலைத்து விடுவோம். எனவே கிடைத்ததை ஏற்று மகிழ்ந்து வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை மலரும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, February 10, 2025

#Victory King: எண்ணத்தூய்மையே மூலதனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2261🥰 

நம் சிந்தனை நேர்மையாக இருந்தால் நம் மனது தூய்மையாகி  நம் முயற்சியை முறைப்படுத்தும். முயற்சி முறையாகும் பொழுது நாம் எடுக்கும் செயல் அனைத்தும் தெளிவாகி நமக்கு வெற்றியை பெற்று தரும். எனவே நாம் எண்ணியது எண்ணியபடி நடக்க நம் எண்ணத்தூய்மையே மூலதனம் என்பதை உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, February 8, 2025

#Victory King: பொறாமை எனும் புற்றுநோய்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2260🥰 

ஒருவர் செயலில் உள்ள நேர்த்தியையும் அதன் தொடர் வெற்றியையும்பார்த்து பொறாமை படுவதை விடுத்து அந்த வெற்றிக்கு அவரின் உழைப்பின் வெளிப்பாடு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை சிந்தித்து அதன் வழி முயன்றால் நாமும் மற்றவர்களால் பாராட்டப்படுவோம் என்பதை உணரவில்லை என்றால் நாம் பொறாமை என்னும் புற்று நோயால் வாழ்க்கை முழுவதும் அவதிப்படுவதை தவிர வேறு வழி இல்லை. உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, February 7, 2025

#Victory King: வாழ்க்கையின் கெளரவம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2259🥰 

யானைக்கு மதம் பிடித்தால் தாறுமாறாக ஓடி அனைத்தையும் அழிக்க முயலும். கடிவாளம் கட்டாத குதிரை தரிகெட்டு ஓட ஆரம்பிக்கும். இவைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். அதுபோல் மனிதனுக்கு செருக்கு என்று வந்துவிட்டால் தலைகனம் மேலோங்கி தன்னிலை உணராது அடுத்தவர்களை மதியாது தன் சுய கௌரவத்தைஇழக்க நேரிடும். எனவே உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாம் கௌரவத்தோடு வாழபழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 6, 2025

#Victory King: பேச்சின் நயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2258🥰 

பேச்சு:  எதையும் எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும். அடுத்தவர்களை பற்றி பேசும்பொழுது  அருகில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி பேசினால் அதுவே நமக்கு ஆபத்தாக முடியும். நம் முகமும் தொனியும் கனிவுடன் இருப்பது மிகவும் முக்கியம். எனவே நாம் பேச்சில் நாகரீகத்தை கடைப்பிடித்தால் மட்டுமே நம் இமேஜை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, January 31, 2025

#Victory King: நேர்மையின் அழகு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2257🥰 

நேர்மை என்பது பேச்சில் மட்டும் இருந்தால் போதாது செயலிலும் இருக்க வேண்டும். தோற்றத்தில் மட்டும் கண்ணியத்தை காட்டாமல் நடத்தையிலும் வேண்டும். உதவி செய்வது மட்டும் கருணை  அல்ல அதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும் . உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, January 30, 2025

#Victory King: வாழ்க்கைப் பயணம் சுகமாக!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2256🥰 

நம்மால் மட்டும் ஏன் சந்தோஷமான சூழ்நிலையில் வாழ இயலவில்லை என்று வருந்தி நம்மை நாமே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொள்ளாமல் அதற்கு என்ன சாத்திய கூறு என்று முயன்று நம் மனதை திசைமாற்றி பயணித்தால் அந்தப் பயணமே சுகமாக தான் இருக்கும்.இறதியில். அந்த வாழ்க்கையை நாம் அடையும் பொழுது அது நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை கொடுத்து  மகிழ்வுடன் வாழ வாய்ப்புண்டு. முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நிதானமே நிலையான வாழ்க்கைக்கான மந்திரம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2255🥰

உரிமை இருக்கிறதே என்று அதிக உரிமை எடுத்துக் கொண்டால் வெறுக்கப்படுவோம்.  அதிக அனுதாபம் கொண்டால் நாம் ஏமாளியாவோம். அடுத்தவர்களிடம் காட்டும் அதிக பாசம் அவர்களின் தவறுகளை நம் கண்கள் மறைக்கச்செய்யும். எனவே எதிலும் எப்பொழுதும் நிதானமாக இருந்தால் மட்டுமே நம் நிலையை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, January 25, 2025

#Victory King: வெற்றியடையச் செய்யும் யுக்தி

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2254🥰 

முடியாது என்று நாம் தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் அதை வெற்றியடையச் செய்யும் யுக்தி புதைந்திருக்கும். நாம் மனம் தளராது நம் முயற்சியை கைவிடாது தொடர்ந்தால்  அந்த சூட்சுமத்தை அடைந்து அந்த செயலில் வெற்றி பெறுவது சாத்தியமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, January 24, 2025

#Victory King: வாழ்க்கையின் கேடயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2253🥰 

பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் நம்மிடம் அமைந்து விட்டால் நமக்கான மரியாதையும் மதிப்பும் மற்றவர்களிடமிருந்து தானே நம்மை வந்து அடையும். நம் நற்குணங்கள் தான் நம் வாழ்விற்கான கேடயம். உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நம் வாழ்க்கை சொர்க்கமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2252🥰

பதவியால் வரும் கர்வம், புகழால் வரும் மயக்கம், கற்றதினால் வரும் செருக்கு, பணத்தால் வரும்போதை இவைகளை அகற்றி கடுமையான உழைப்பு, இடைவிடா முயற்சி, ஆரவாரமில்லாத வாழ்க்கை, ஆணவமில்லாத நன்னடத்தை இவைகளை தன்வயப் படுத்தி வாழப்பழகி விட்டால் இறுதி வரை நம் வாழ்க்கை சொர்க்கம் தான்!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, January 21, 2025

#Victory King: நம் வாழ்க்கை நம் கையில்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2251🥰

குடும்பத்தில் யாரையும் திருத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது. புரிய வைக்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும் செயல். எனவே நாம் அடுத்தவர்கள் குறைகளை சொல்லிப் புலம்பாமல் வாழப்பழகினால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, January 20, 2025

#Victory King: "எண்ணம் போல் வாழ்வு"

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2250🥰

"எண்ணம் போல் வாழ்வு"

எதுவும் நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டால் எல்லாமே முடியும். முடியாது என்ற எண்ணம் மேலாங்கி விட்டால் எதுவுமே முடியாததுதான். எனவே எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழப் பழகுவோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, January 18, 2025

#Victory King: பிரச்சனைக்கு தீர்வு காண:

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2249🥰

பிரச்சனைக்கு தீர்வு காண: 

பேசியே வளர்க்காமல் பேசி புரிய வைப்போம்! நடந்ததை கிளராமல் நடப்பதை மட்டும் பார்ப்போம்! ஊரெல்லாம் பேசி பெரிது படுத்தாமல் உரியவர்களிடம் மட்டும் பேசுவோம்! மனதில் உறுதியோடு இருப்போம் பிடிவாதத்தை தவிர்ப்போம்! முயற்சிப்போமே! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏