Wednesday, June 28, 2023

#Victory King: இனிக்கும் வாழ்க்கை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2064🙏 

எதற்கெடுத்தாலும் அஞ்சி அஞ்சி வாழ்க்கையை கடந்தால் நமக்கு இறுதி அஞ்சலி தான் மிஞ்சும். எனவே நமக்கு நடப்பவைகள் அனைத்தும் நம் விதியின் வழிப்படிதான் என்பதை உணர்ந்து அஞ்சா நெஞ்சத்துடன் இயல்பாக வாழ்க்கையோடு ஒட்டி வாழ்ந்தால் நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகவே அமையும். முயற்சிப்போம்!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Monday, June 26, 2023

#Victory King: வாழ்க்கைக் கணக்கு!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2063🙏 

எந்த கணக்கிற்கும் ஏதாவது ஒரு வழியில் நாம் விடையை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நம் வாழ்க்கை கணக்கிற்கு மட்டும் நம்மால் விடை கண்டுபிடிக்க முடியாது. விதியால் மட்டுமே விடையை அடையக் கூடியது தான் நம் வாழ்க்கை கணக்கு என்பதை நாம் உணர்ந்தாலேபோதும் நம் ஆணவம் அழிந்து விடும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Saturday, June 24, 2023

#Victory King: மனமே மருந்து! மாமருந்து!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2062🙏 

நம் நிம்மதியை நாம் குலைப்பதற்கு மூல காரணம் நாளை என்ன செய்யலாம் என்பதை நாம் எண்ணுவதை விடுத்து நாளை எப்படி இருக்குமோ என்று வருந்துவதும், நமக்கு நடந்த செயல் சரியில்லை என்றால் அதைப் பற்றியே எண்ணி வருந்தி, நடக்க வேண்டியதை சிந்தித்து நம் கவனத்தை திசை திருப்ப தவறுவதும் தான். எனவே நிம்மதி அடைவதற்கு மருத்துவமோ மருந்தோ கிடையாது. நம் மனநிலையை ஒருங்கிணைக்கும் பக்குவம் நமக்கு வந்தாலே போதும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Thursday, June 22, 2023

#Victory King: இந்த நிமிடம்தான் இன்னைக்கு மட்டும்தான்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2061🙏 

எப்போது வரும் எப்படி வரும் என்று உணர முடியாத, சாதி சமய வேறுபாடு இன்றி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் வாழ்க்கையின் இறுதியில் வந்தடைவது மரணம் மட்டும்தான். வாழ்க்கை என்னும் தொடர்கதையின் முடிவுரை மரணம் தான். எனவே இந்த நிமிடம்தான் வாழ்க்கை நம் கையில் என்று எண்ணி இருக்கும் வரை நம் எண்ணம் செயல் அனைத்துமே நல்லவைகளாகவே இருக்கட்டுமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Wednesday, June 21, 2023

#Victory King: சொல்லும் நேரத்தில் சொல்லப் பழகுவோம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2060🙏 

மாட்டின் கழுத்தில் உள்ள தும்பு கயிற்றின் மறுமுனையை நம் கையில் வைத்துக் கொண்டு நாம் கட்டுப்படுத்தா விட்டால் அது திமிறிக் கொண்டு ஓடுவதை தவிர்க்க முடியாது. அதுபோல்தான் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்ல வேண்டிய காலகட்டத்தில் சொல்ல வேண்டியவர்களுக்கு  சொல்லித் திருத்தாவிட்டால் அதன் பிறகு அவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Tuesday, June 20, 2023

#Victory King: நம்பினோரும் கைவிடப்படுவதில்லை, நம்பிக்கைகளும் பொய்ப்பதில்லை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2059🙏 

நாம் ஆசைப்பட்டது கிடைத்து விட்டால் ஆனந்தம். இல்லையெனில் பெரும் துன்பம். இதுதான் மனித இயல்பு. அது பேராசையாக இல்லாமல் நியாயமாகவும் நம் தகுதிக்கு உட்பட்டும் இருக்குமாயின் நாம் நிச்சயம் அதை அடைந்தே தீருவோம் என்ற முழு நம்பிக்கையில், நம் ஆசை நிராசையாகி விடுமோ என்று மனம் தளராமல் அந்நாளை எதிர்பார்த்து மகிழ்வுடன் வாழ்ந்தால் காலம் நம்மை கைவிடாது. "நம்பினார் கெடுவதில்லை"

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Monday, June 19, 2023

#Victory King: துவளாத மனமும், அன்பான உள்ளங்களும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2058🙏 

அனைவரையும் அரவணைக்கும் சக்தியை கொண்டதுதான் தான் அன்பு உள்ளங்கள். உறவுகளை வலுப்படுத்தி இதயங்களை ஒருங்கிணைப்பதுதான் பாசம். அன்பு முகத்தில் பரவசத்தை கொடுக்கும். பாசம் பரவசத்தோடு கண்களில் கரக்கத்தையும் கொடுத்து உறவுகளின் இதயத்தை இதமாக்கும். எனவே, அன்பும் பாசமும் ஒருவருடத்தில் குடி கொண்டுவிட்டால் துவளாத மனதுடன் இன்பமுடன் வாழலாம்!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Friday, June 16, 2023

#Victory King: மனமும் பயிறும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2057🙏 

நாம் மறக்க வேண்டியவைகளை மறக்காமலும், நினைக்க வேண்டிய நல்ல விஷயங்களை நினைக்காமலும்  இருப்பது தான் நம் மன உளைச்சலுக்கு முக்கிய காரணம். பயிர்கள் வளரும் பொழுது அதை சுற்றியுள்ள புல் பூண்டுகளை அகற்றி களை எடுக்கும் பொழுது தான் அந்தப் பயிருக்கு முழு சக்தியும் கிடைத்து நல்ல மகசூலை தரும். அதுபோல்தான் நம் மனதில் தேவையற்றவைகளை நீக்கிவிட்டாலே நம் மனது நல்லவைகளை ஏற்கும் சக்தியை முழுமையாக பெற்று நற் செயல்களை செய்ய ஏதுவாகும். முயற்சிப்போமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Thursday, June 15, 2023

#Victory King: உபசரிப்பு!

  🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2056🙏 

நாம் நமக்கு விரும்பிய வரை விருந்தோம்பலுக்கு அழைக்கும் பொழுது அவர்களை மனமும் வந்து இன் முகத்துடன் வரவேற்று பரஸ்பரம் ஆரோக்கியத்துடன் உரையாடி மன மகிழ்வுடன் விருந்தை பரிந்து பரிந்து பரமாரி அவர்கள் அதை சுவைத்து மன நிறைவுடன் உண்ணும் அழகை நாம் பரவசத்துடன் பார்க்கும் அந்தக் காட்சிதான் நம்மை புத்துணர்ச்சிபடுத்தி அன்பு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சக்தி!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Wednesday, June 14, 2023

#Victory King: வாழ்க்கையே எண்ணம்தான்!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2055🙏 

நம் எண்ண அலைகளுக்குப் பலம் உண்டு. எதைப் பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். நம் எண்ண அலைகளுக்கு ஏற்ப்பத்தான் சம்பவங்களும் தொடரும். எனவே எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து எண்ணத் தூய்மையோடு வாழ பழகுவோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Monday, June 12, 2023

Victory King: வாழ்க்கையும் சொர்க்கமும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2054🙏 

கிடைக்காத ஒன்றை நினைத்து நினைத்து ஏங்கிக் கிடைத்ததை அனுபவிக்க முடியாமலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று எண்ணி வருந்தி வருந்தி நிகழ்வில் நடப்பதை கோட்டை விட்டும்  மனநிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகம் ஆக்கிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Friday, June 9, 2023

#Victory King: பரமபத விளையாட்டு வாழ்க்கை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2053🙏 

வாழ்க்கை என்பது பரமபத விளையாட்டுப் போல் தான். ஏறுவதும் இறங்குவதும் போல. எனவே எண்ணத்தை தூய்மையாக்குவோம். எண்ணியதை எண்ணியபடி செயலாக்கி வெற்றி பெறுவோம். வஞ்சத்தை தவிர்ப்போம். வாழ்க்கையை வசந்த மாக்குவோம் என சூளுரைப்போமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Wednesday, June 7, 2023

#Victory King: அசரீரி!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2052🙏 

நாம் ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்தால் உடனே செய்து விட வேண்டும். அதுபோல் நமக்கு நெருங்கிய ஒருவரை சந்திக்க வேண்டும் என்றோ பேச வேண்டும் என்றோ தீவிர எண்ணம் நம் மனதில் தோன்றினால் தாமதம் இல்லாமல் செய்துவிட வேண்டும். இல்லையேல் நாம் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட வாய்ப்பு உண்டு.இவைகள் நமக்கு ஒரு "அசரீரி"என்பதை நாம் உணர வேண்டும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Monday, June 5, 2023

#Victory King: திறமையும் முன்னேற்றமும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2051🙏 

வாய்ப்பு என்பது மற்றவர்களிடமிருந்து நாம் பறித்துக் கொள்வதும் இல்லை, அது நம்மை தேடி வரும் என்று எதிர்பார்ப்பதும் இல்லை. திறமையும் வாய்ப்பும் ஒன்றுக்கொன்று பிணைந்த ஒரு சக்தி. திறமை இருந்தால்தான் வாய்ப்பும் நம்மை நோக்கி வரும். அந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி நம் திறமையால் முயற்சி செய்து முன்னேறுவது தான் வாழ்க்கை.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Saturday, June 3, 2023

#Victory King: நல்வாழ்வு உண்டு நமக்கு!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2050🙏 

பதவியால் வரும் கர்வம், செல்வ செழிப்பினால் வரும் அகம்பாவம், கல்வி கற்றதினால் வரும் இறுமாப்பு, புகழ்ச்சியால் வரும் போதை இவைகள் அனைத்தும் நாம் அழிவதற்கான அறிகுறி என்று உணர்ந்து நம்மை அண்ட விடாமல் தடுத்து வாழ்ந்தால் உண்டு நல்வாழ்வு நமக்கு. இல்லையேல் நம்மைப் படைத்த இறைவன் வந்தாலும் நம்மை காப்பாற்ற இயலாது.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Friday, June 2, 2023

#Victory King: நிம்மதியான வாழ்க்கைக்கு!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2049🙏 

அடுத்தவர்கள் விரும்பியபடி நாம் பேச வேண்டும் என்றால், நாம்பொய்தான் பேச வேண்டி இருக்கும். அதுபோல் அடுத்தவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டு செயல்பட்டால்  அது ஒரு நாடகமாகத்தான் இருக்க முடியும். எனவே நாம் நாமாக இருந்து நியாயமான கருத்தை நாம் செயல்படுத்தும் போதுதான் நமக்கு மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Thursday, June 1, 2023

#Victory King: இதயத்தில் அன்பும், பண்பும்!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2048🙏 

நாம் வாழ்க்கையை இயல்பாகவும் இனிமையாகவும் கடந்து செல்ல, நம் இறந்த கால பிரச்சனைகளை மறந்து இனிய நினைவுகளை மனதில் கொண்டும், ஆணவத்தை கைவிட்டு அன்பை நம் மனதில் ஆட்கொள்ளச் செய்தும், சோம்பலை துறந்து சுறுசுறுப்போடு இயங்கியும், பகைமையை புறம்தள்ளி பாசத்தை நம் இதயத்தில் ஏற்று பண்போடு வாழ்ந்தாலே போதும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰