Saturday, December 31, 2022

#Victory King: வருக வருக 2023!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1170

நம்மையெல்லாம் நலமுடன் வழிநடத்தி 2023ல் காலடி எடுத்து வைக்கும் பாக்கியத்தை கொடுத்த 2022 ம் ஆண்டிற்கு மனதார வாழ்த்துச் சொல்லி வழி அனுப்பி, இந்த ஆண்டும் நமக்கு அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையவும், எதையும் தாங்கும் இதயத்தை வலிமையுடன் தந்தருள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து 2023 ம்ஆண்டே வருக வருக என மலர் தூவி வரவேற்போம்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, December 28, 2022

#Victory King: சீரான வாழ்க்கைக்கு அருமருந்து!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1169

அளவுக்கு மீறியஅன்பு, ஆசை, பற்று, பாசம் இவைகளும் நமக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். நாம் எந்த அளவிற்கு சந்தோஷத்தில் திளைக்கிறோமோ, அந்த அளவிற்கு  அவை நம்மை விட்டு சிறிது சிறிதாக விலகும் பொழுது, அதன் தாக்கம் நம்மால் தாங்க முடியாத அளவிற்கு கொண்டு விட்டு விடும்.எனவே "அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம்" என்ற பழமொழியை மனதில் கொண்டு எதையும் அளவோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு வாழ்ந்தால் நமது வாழ்க்கை சீராக அமையும் என்பதை உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, December 27, 2022

#Victory King: மனிதநேய வாழ்க்கை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1168

ஓடம் நிதானமாக தான் ஓடும் அமைதியான நதி வெள்ளப்பெருக்கெடுக்காத வரை, காற்று சுகமாக தான் இருக்கும் அது சூறாவளியாக மாறாத வரை, சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் காடுகளும் சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாறாத வரை, அதுபோல் நம் வாழ்க்கையும் இனிதுதான் நம் மனதில் அரக்க குணம் அண்டாதவரை. எனவே மனிதநேயத்தை மேம்படுத்தி நம் வாழ்க்கையை இனிதாக்குவோமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, December 24, 2022

#Victory King: எதிர்காலம் வளமாக!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1167

கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்களை மூலதனமாக்கி முன்னேற்றத்திற்காக முழுமையாக முயன்று எதிர்காலத்தின்  இலக்கை நம் மனதில் கொண்டு, நிகழ்காலத்தில் நாம் மகிழ்வோடு வாழ்ந்தால், எதிர்காலம் நமக்கு வளமாக அமையும் என்பது நிதர்சனம். முயற்சிப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, December 22, 2022

#Victory King: செயலில் நேர்த்தி!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1166

முயற்சி செய்தும் நாம் செய்யும் செயலில் முழுமை ஏற்படவில்லை என்றால் அதற்கு மூல காரணம் பயம், அவசரம், ஆர்வத்தில் ஏற்படும் படபடப்பு, கோபம் இவைதான். எனவே நாம்  நிதானத்துடன் அமைதியாக சிந்தித்து செயல்பட்டால் அது நம் செயல்திறனை செம்மை படுத்தி, அந்த செயலில் ஒரு நேர்த்தியை கொடுக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, December 19, 2022

#Victory King: நற்பண்புகளுக்குக் கிடைக்கும் மரியாதை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1165

கேட்டு கிடைக்கும் அன்பும், மிரட்டி பணிய வைக்கும் பண்பும், பணத்தைக் காட்டி பெரும் புகழும், தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு ஒரு நிலையில் தன்மானத்தை இழக்கும் நிலைதான் வந்து சேரும். நாம் செய்யும் நற்செயல்களாலும் நம்முடைய நற்பண்புகளாலும் நம்மைத் தேடி வரும்  மரியாதை மட்டுமே எக்காலத்திலும் நிலைத்து நின்று நம் புகழை காப்பாற்றும். உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, December 17, 2022

#Victory King: சுற்றத்தாரின் மகிமை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1164

கிளைகளாலும் இலைகளாலும் சூழப்பட்ட மரங்கள் நிழலை கொடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றுவதுபோல, நாம் நொடிக்கும் போதும் தளர்வடையும் போதும் ஆறுதல் கூறி, அரவணைத்து கரம் கொடுக்கும் உறவுகளின் சுற்றம் நம்மை சூழ்ந்து இருந்துவிட்டால், நம் வாழ்க்கையே வசந்தம்தான். உறவைகளின் மகிமை உணர்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, December 14, 2022

#Victory King: பிறவிப் பயன்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1163

நம் வாழ்க்கையின் முதல் பாதி அனுபவங்களே மறு பாதிக்கு பாடமாக அமைகிறது. அந்தப் பாடங்களை புத்தகம் ஆக்கி நம் சந்ததியினரின் வாழ்க்கை சிறக்க பொக்கிஷமாக பரிசளித்து ஆத்ம திருப்தியோடு பிறவிப் பயனை அடைவோமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, December 13, 2022

#Victory King: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1162

அன்புடனும் மரியாதையுடனும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பழகுவதே மதித்தல். பிள்ளைகள் பெற்றோர்களை மதித்தல், மாணவர்கள் ஆசிரியர்களை மதித்தல், சிறியவர்கள் பெரியோர்களை மதித்தல் இவை எல்லாம் மதித்தலின் இலக்கணம். ஒரு குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மதிக்கவில்லை என்றாலும், அதுபோல் உறவினர்கள் ஒருவரை ஒரு மதிக்கவில்லை என்றாலும் உறவுகள் சிதைந்து விடும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ ஒருவரை ஒருவர் மதித்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, December 12, 2022

#Victory King: ஆணவம் அழிப்போம், மதிப்புடன் வாழ்வோம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1161

நான் என்ற எண்ணம் நமக்கு தலைக்கேறி விட்டால், சுயநலம் மேலங்கி அடுத்தவர்களை மதியாது, ஆணவத்தில் அனைத்தும் தானே என்ற மமதையில் ஆட்டம் போட்டு, கடைசியில் மற்றவர்களால் அசிங்கப்பட்டு அழியும் நிலைதான் வந்து சேரும். எனவே அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து, ஆணவத்தை அறவே ஒழித்து மதிப்புடன் வாழ பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Sunday, December 11, 2022

#Victory King: தலைமுறை இடைவெளி!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1160

ஏழையாக இருந்தாலும் வசதியாகவே வளர்த்தும், சமூகத்தில் எவ்வளவு அந்தஸ்தில் இருந்தாலும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமலும்,  உயர்வுக்கு தோள் கொடுத்தும் வளர்த்த பெற்றோரை, இவற்றை எல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி பெற்றோர்களை தலைகுனியும் வண்ணம் வைக்காமல் பெருமைப்படுத்தினாலே போதும் பிள்ளைகள். இதுதான் தலைமுறை இடைவெளி இல்லா உறவு என்பதை உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, December 9, 2022

#Victory King: பிறவி பாக்கியம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1159

நமக்கு மிகவும் பிடித்த உறவுகள் நட்புகள் நம்மை விட்டு விலகிச்செல்லும்பொழுது அவர்களை மீண்டும் சந்திப்போம் பேசவும் வாய்ப்பு உண்டு என்ற நிலை இருந்தாலும் அதனால் நமக்கு ஏற்படும் துயரம் நாம் இறக்கும் தருவாயில் நமக்கு ஏற்படும் துயரத்தை விட பெரிது என்று எண்ணும் அளவிற்கு உறவுகளும நட்புகளும் நமக்கு கிடைத்துவிட்டால் அதுதான் நமக்கு இப்பிறவியில் கிடைக்கும் பெரும் பாக்கியம்.

Victory king alias V. Krishnamurthy

Thursday, December 8, 2022

#Victory King: உண்மையான அன்பு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1158

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நயமாக நாலு வார்த்தை பேசாத, நலிந்திருக்கும் பொழுது ஏளனம் செய்த உறவுகள் அவர் இறந்த பிறகு ஓடோடி  வந்து கண்ணீர் விட்டு கதறி அழுது ஊரை ஏமாற்றி மற்றவர்கள் அனுதாபத்தை பெற முயற்சிக்கும் போலி உறவுகளிடமிருந்து நாம் விலகி இருப்பதே மேல்!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, December 7, 2022

#Victory King: வாழ்தல் இனிது!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1157

தன்னுடைய சுயநலத்திற்காக ஒவ்வொருவரிடமும் குற்றத்தை கண்டுபிடித்து உறவுகளை புறம்தள்ளி வாழ்ந்தால் தனிமை என்று நமக்கு வரும் பொழுது அனைத்தும் நமக்கு இருந்தாலும் உறவுகளற்ற அனாதையாக வாழ்தல் என்பது சகிக்க முடியாத ஒரு வேதனை வாழ்க்கையாகும் என்பதை உணர்ந்து உறவுகளோடு ஒருங்கிணைந்து வாழ்ந்து மகிழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Sunday, December 4, 2022

#Victory King: பிறப்பின் மகிமை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1156

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் தான் நாம் வாழ்வதற்கான நாடகத்திற்கு இறைவன் நமக்கு அளித்த கால கெடு. எனவே அதை முறையாக பயன்படுத்தி மற்றவர்களை நோகடிக்காமல் நற்செயல்களே செய்து புண்ணிய பலன்களை பொக்கிஷமாக்கி நம்முடைய வாரிசுகளுக்கு பூர்வீக சொத்தாக அளித்து நம் பிறப்பின் மகிமையை உணர்த்துவோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, December 2, 2022

#Victory King: அன்பும் தன்னம்பிக்கையும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1155

இரண்டு இதயங்களின் சங்கமம்தான் அன்பாக மலரும். நாம் உண்மையான அன்பை 'நா'நயத்தினாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்த்த முடியும். உண்மையானஉள்ளன்பு கொண்ட உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்குத் தன்னம்பிக்கை தானே வரும். எனவே நாம் அன்பை ஒருவருக்கொருவர் மனதார பகிர்ந்து மகிழ்ந்து பரவசமுடன் வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, December 1, 2022

#Victory King: எளியோர்களின் வாழ்த்து மழை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1154

நடவு நட்ட வயல் வறண்டு கிடக்கும் பொழுது வாய்க்காலின் நீர்மட்டம் பெருகி மடையை திறந்துவிட்டவுடன்  வயல் முழுவதும் தண்ணீர் பரவிச்சென்று பயனடைந்த பயிர்கள் தங்களுக்கு உயிர் கொடுத்த ஆனந்தத்தில் மள மள என்று வளர்ந்து நல்ல மகசூலை அள்ளித் தரும். அதுபோல் நாம் எளியவர்களுக்கு மனமகிழ்ந்து செய்யும் உதவிகளுக்கு அவர்களின் வாழ்த்து மழையால் நம் வாழ்க்கை வளம் பெறும்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, November 30, 2022

#Victory King: இலக்கு கானல் நீராகாமல் இருக்க!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1153

நாம் வாழ்க்கையில் ஒரு இலக்கை அடைய தேர்ந்தெடுக்கும்  பாதையில் சில இடர்பாடுகள் இருந்தாலும் நேர்வழியை தேர்ந்தெடுத்து விட்டால் அந்த இடர்பாடுகளையும் களைந்தெடுத்து அந்த இலக்கை அடைய ஏதுவாகும். எந்தவித இடர்பாடுகளும் இல்லை என்று எண்ணி தவறான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டோம் என்றால் நாம் அடைய நினைத்த இலக்கு ஒரு "கானல் நீர்" தான். சிந்தித்து செயல்படுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, November 29, 2022

#Victory King: உண்மை, நேர்மை, உறவுகளின் வலிமை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1152

உரிமையோடு கிடைக்கும் உறவு, உண்மையோடு இணைந்த அன்பு, நேர்மையுடன் கூடிய நட்பு இவை நமக்கு அமைந்துவிட்டால் தன்னம்பிக்கையோடு கூடிய நல் வாழ்க்கை நமக்கு அமைவதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே உண்மை நேர்மை உறவுகளின் வலிமை இவைகளுக்கான சக்திக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Sunday, November 27, 2022

#Victory King: உள்ளார்ந்த அன்பு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1151

தானாக கனிந்த கனிகளுக்குத்தான் சுவை மிகுதி. அதுபோல் நம் ஆழ்மனதிலிருந்து மற்றவர்களிடம் காட்டும் பாசத்திற்கு தான் ஈர்ப்பு சக்தி அதிகம். உள்ளத்திலே குமுறல் உதட்டிலே புன் முறுவலோடு  காட்டும் போலியான அன்பு, அதன் வேஷம் கலைந்தவுடன் வேதனையுடன் நம் குனிந்த தலை நிமிரவும் முடியுமோ. சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, November 26, 2022

#Victory King: ஆலமர விழுதுகள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1150

ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கி பிடிக்கலாம். ஆனால் அந்த மரம் நிலைத்து நின்று அதை வாழ வைப்பது அதன் வேர்தான். அதுபோல்தான் பணம் பட்டம் பதவி புகழ் இவைகளால் நாம் பிரபல மடைந்தாலும் நம்முடைய பண்பு நல்ல எண்ணம் நற்செயல் இவைகளால்தான் நாம் அடைந்த அனைத்தையும் நிலைத்து நிற்கச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, November 25, 2022

#Victory King: சுற்றம் சூழ வாழ்வோமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1149

நாம் ஒருவருடைய குற்றத்தை மட்டுமே பார்க்கத் தொடங்கினால் அவருடைய குற்றம் மட்டுமே கண்ணுக்கு தெரியும் அவர் செய்த நன்மைகள் நல்ல செயல்கள் எதுவுமே நம் கண்களுக்கு புலப்படாது. எனவே கொஞ்சம் விட்டுக் கொடுத்து அவர்களது குறைகளை சுட்டிக்காட்டி அவர்கள் உணரும்படி செய்ய முயற்சித்தால் உறவுகளும் நட்புகளும் நம்மை விட்டு அகலாது நாம் தக்க வைத்துக்கொண்டு உறவுகளையும் நட்புகளையும் இழக்காமல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மனதில் கொண்டு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து வாழ்ந்து நம் வாழ்க்கையை பரவசமடைய முயல்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, November 24, 2022

#Victory King: அடுத்தவர் வாழ்க்கையை நாம் வாழ வேண்டாமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1148

அடுத்தவர் போல் நாமும் வாழ வேண்டும் என்ற என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் இது நம் வாழ்க்கை நமக்கென ஒரு சிறந்த வழியை ஏற்படுத்திக் கொண்டு நாம் நாமாக வாழ்ந்து விட்டால் பொறாமை என்னும் சலனம் நம்மை அண்டாது நாம் மகிழ்வுடன் வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, November 22, 2022

#Victory King: மன அமைதி!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1147

மனம் அமைதியாக இருக்கும்போது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் தெளிந்த நீரில் தெளிவு ஏற்படுவது போல. முயற்சிப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, November 14, 2022

#Victory King: அல்லிக்கொடி லாஜிக்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1146

நீர்நிலைகளில் வளரும் அல்லிக்கொடி  நீர்மட்டத்திற்கு தகுந்தாற்போல் உயர்ந்து தாழ்ந்து வளரும் தன்மையுடையது. நீர்மட்டத்திற்கு மேல் அதனால் வளரவே முடியாது. அதுபோல்தான் நம் எண்ணத்திற்கு தகுந்தாற்போல்தான் நம் வாழ்க்கை உயர்வதும் தாழ்வதும். எனவே எண்ணத் தூய்மை இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கை வளம் பெறும் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் உண்டு நமக்கு மகிழ்வுடன் கூடிய நல்வாழ்வு!

Victory king alias V. Krishnamurthy

Saturday, November 12, 2022

#Victory King: முயற்சியே தன்னம்பிக்கைதான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1145

நாம் எண்ணியதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் நம்மை வந்து அடைந்து விட்டால் முயற்சி என்பது நம்மை விட்டு விலகிவிடும். முயற்சி இல்லையேல் தன்னம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கை இல்லையேல் எந்த செயலிலும் வெற்றி என்பது நமக்கு ஒரு எட்டாக்கனியாகி விடும். எனவே முயற்சிதான் தன்னம்பிக்கைக்கு ஆணிவேர் என்பதையும் வெற்றிக்கான வழிகாட்டி என்பதையும் நன்குணர்ந்து செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, November 10, 2022

#Victory King: பணத்தின் குணமும், பச்சோந்தி சுபாவமும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1144

பணத்தால் இணையும் உறவுகள் பச்சோந்திகளுக்கு தான் ஒப்பாகும். குணத்தால் இணையும் உறவுகள்தான் குடும்பங்களை ஒருங்கிணைக்கும் பலமாக அமைந்து இறுதி வரை நிலைத்து நிற்கும் என்பதை உணர்ந்து ஒத்த குணங்களோடு ஒருங்கிணைந்து உறவுகளை மேம்படுத்துவோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, November 3, 2022

#Victory King: வாழ்வே எண்ணம்போல்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1143

"எண்ணம் போல் வாழ்வு". நம் எண்ணம் தூய்மையாக இருந்தால் எண்ணியது கிட்டும். செயலின் நேர்மை தான் நம் வெற்றிக்கு ஆணிவேர். எனவே நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும் என்பதை நன்கு உணர்ந்து விட்டால் நஞ்சும் நம் நெஞ்சத்தை நாடுமோ?. சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, October 26, 2022

#Victory King: நற்சிந்தனை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1142

நற்சிந்தனை இல்லாமைஇயலாமை முயலாமை இம்மூன்றும் ஒரு வரிடம் இருந்தால் அவர்கள் மனதில் மற்றவர்களைப் பற்றிய பொறாமை குடிகொண்டு ஆழ்மனதிலிருந்து அக்னிப் பிழம்போடு ஏற்படும் அந்தப் பொறாமையின் வைப்ரேஷன் பொறாமைக்கு ஆட்பட்டவர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பொறாமைப் படுபவர்கள் தங்கள் இயலாமையால் தங்களைத் தானே அழித்துக் கொள்ளும் நிலை தான் என்பதனை உணர்ந்து தம்மை தாமே உயர்த்திக்கொள்ள முயன்று வாழ பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, September 22, 2022

#Victory King: பொறாமை தவிர்ப்போமே!

 😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1141😍

பொறாமையை தவிர்த்து நம் வாழ்க்கை தான் நமக்கு என்ற எண்ணத்தோடு நாம்  எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் அதனைபெரிது படுத்தாமல் கிடைத்ததை இயல்பாக ஏற்றுக் கொண்டு அதன் மூலம் நடப்பதை சிறப்பாக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டு வாழப் பழகினால் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே மகிழ்ச்சி தான். முயற்சிப்போமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Wednesday, August 17, 2022

#Victory King: எதையும் தாங்கும் இதயம்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1140😍

மனது என்ன நினைக்கிறதோ அதுதான் செயலாக மாறுகிறது. எண்ணங்களை பொறுத்துதான் வாழ்க்கை அமைகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல்நலம் போல மனநலமும் மிக முக்கியம்.மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க தனிமையை தவிர்த்து உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடி நட்புடன் பழக கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் நம் வாழ்க்கை இறுதி வரைக்கும் அமைதியாக இருக்கும். முயன்று பார்க்கலாமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Monday, August 15, 2022

#Victory King: வந்தே மாதரம்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1139😍

'இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மக்களும் என் உறவு, எல்லோர் மொழியும் என் பேச்சு, ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம் சத்தியம் எங்கள் தேசம், சமத்துவம் எங்கள் கீதம், வருவதைப் பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம். வந்தே மாதரம் வந்தே மாதரம்'  இந்தசுதந்திர தின நன்னாளில் கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை மனதில் ஏற்றி இந்திய நாட்டுப்பற்றை போற்றி தேசபக்தியுடன் வாழ்வோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Saturday, August 13, 2022

#Victory King: மகிழ்ந்து வாழ!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1138😍

 இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. அதனால் இன்பம் வரும் பொழுது ஆனந்தத்தில் திளைத்து ஆட்டம் போட்டால் அதுவே நமக்கு துன்பமாக அமைவதற்கும் சாத்தியம் உண்டு. எனவே இன்பம் வரும் பொழுது அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல் துன்பம் வரும் பொழுது துவளாமல் அதற்கு வடிகால் என்ன என்று நம் சிந்தனையை திசை திருப்பினாலே அதுவே நம் துன்பத்தின் வலியை குறைத்து நம் மனதின் வலிமையை வலுப்படுத்தும். எனவே மனதை நம் கட்டுக்குள் கொண்டு வந்தாலே போதும் நாம் மகிழ்ந்து வாழலாம்.

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Friday, August 12, 2022

#Victory King: ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1137😍

'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார், உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ஆசை,கோபம்,களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!'   கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகளை மனதில் கொண்டு பண்புடன் வாழப்பழகுவோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻


Thursday, August 11, 2022

#Victory King: வாழ்க்கையின் வெற்றி!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1136😍

வாழ்க்கை என்பது நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் தகவல்களையும் வைத்துக்கொண்டு அதனை முறையாக பயன்படுத்தி சரியான முடிவு எடுத்து ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும்பொழுது கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் இடையில் பல இடர்பாடுகள் வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் சக்தியை வளர்த்துக் கொண்டு நமது இலட்சியமே பெரியது என்று எண்ணி வீறு நடை போடும் பொழுது நமது வெற்றியும் பெரிதாகவே அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை. நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மூல மந்திரம் இதுதான் என்பதை உணர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Monday, August 8, 2022

#Victory King : உள்ளத்து உண்மையான அன்பு!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1135😍

உள்ளத்திலிருந்து வரும் உண்மையான அன்புடன் முகத்தில் பொலிவோடு கூடிய புன்முறுவலுடன் தன்மையுடன் பேசி நம் அன்பு கரங்களால் அரவணைத்து தேவையான சமயத்தில் தேவையான உதவியை விளம்பரம் இல்லாமல் நலிந்தோர்க்கு நாம் செய்யும் உதவிதான் உண்மையானதும்,நமக்கு ஆத்ம திருப்தியை கொடுப்பதுமாகும். உணர்வோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

#Victory King: நல்லெண்ணம்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1134😍

நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும் போது, கால்வாய் கரையில் உள்ள காய்ந்த புற்களும் பயன்பெற்று பச்சை பசேலன வளர்ந்து சூழலையும் குளுமையாக்கி ஆடு மாடுகளுக்கான உணவாகவும் பயனளிக்கிறது. அது போல ஒரு குடும்பத்தில் ஒரு சிலராவது நல்லெண்ண நற்குணங்களை பெற்றிருந்தால் அதன் பொருட்டு மற்ற அனைவரையுமே நல்வழிப்படுத்தி குடும்பத்தை தழைக்க வைக்க ஏதுவாகும் நல்லெண்ணம் படைத்தோர் முயற்சித்தால். சிந்திப்போமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Saturday, August 6, 2022

#Victory King: மனிதாபிமானம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1133

---
தேவைப்படும் பொழுது மட்டும் நம்மை நாடுபவர்களையும், ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தங்கள் காரியத்தை சாதித்து கொள்பவர்களையும் நாம் நம்பினால் எந்த நேரத்திலும் அவர்கள் நமக்கு துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள். நாம் பரோபகாரியாக இருக்கலாம். ஆனால் இது போன்ற பச்சோந்திகளுக்கு இடம் கொடுத்தால் நம் நிலை பரிதாபமாகிவிடும். எனவே மனிதாபிமானத்திலும் கவனம் மிகவும் தேவை என்பதை மனதில் கொள்வோமே!
---
Victory king alias v Krishnamurthy

Thursday, August 4, 2022

#Victory King : நல்லோர் சூழ வாழ்வோமே!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1132🥰 

முள்ளின் மேல் சேலை விழுந்தாலும் சேலையில் முள்பட்டாலும் சேலைக்குத்தான் சேதம். அதுபோல் தீயவர்கள் நடுவில் நல்லவர் ஒருவர் சேர்ந்தாலும் நல்லவர்கள் நடுவில் ஒரு தீயவர் ஊடுருவினாலும் நல்லவர்களுக்கு தான் கேடு. எனவே"தீயாரைக் காண்பதுவும் தீதே; தீயார் சொல் கேட்பதுவும் தீதே-; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது". என்ற அவ்வைப் பாட்டியின் வாக்கை மனதில் கொண்டு வாழ பழகுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Tuesday, August 2, 2022

#Victory King: பாசத்தினாலும் அன்பினாலும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1131🥰 

போலியான முகத்துடன் பொய்யான அன்பு காட்டி கடைசியில் நம்மை கண்ணீர் சிந்தும் நிலைக்கு  ஆளாக்கும் சில உறவுகளை நமக்கே உரித்தான பாசத்தினாலும் அன்பினாலும் தவிர்க்க முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் நிலை வந்துடுகிறது. இப்படிப்பட்டவர்களை நாம் திருத்துவது என்பது இயலாத காரியம்.எனவே நாமே இனம் கண்டு ஒதுங்கி வாழ்வதே மேல் என்பதை உணர்வோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Saturday, July 30, 2022

#Victory King: தற்பெருமையும் சுயதம்பட்டமும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1130🥰 

பூனை தன் கண்ணை மூடினால் பூலோகமே அஸ்தமித்து விட்டது என்று நினைக்குமாம். அது போல்தான் நம்மால் மட்டுமே முடியும் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு அடுத்தவர்களை மதியாதிருக்கும் செயலும். தற்பெருமையின் உச்சத்தில் தலைகனத்தால் தன்நிலை மறந்து பிதற்றும் பொழுது அடுத்தவர்கள் முன் அசிங்கப்பட்டு தலைகுனிந்து தங்களை தாங்களே தரம் தாழ்த்திக் கொள்ளும் நிலைதான் வந்து சேரும். அடுத்தவர்களை மதித்தாலே தற்பெருமை நம்மை ஆட்கொள்ளாது என்பதை உணர்ந்து வாழ்வோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Friday, July 29, 2022

#Victory King: தன்னம்பிக்கையே நம் நம்பிக்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1128🥰 

நாம் சோர்வடைந்து விழும் பொழுதெல்லாம் நம்மை தூக்கி நிறுத்துவதும், மனம் உடைந்து நிலை குலைந்து நிற்கும் சமயத்தில் நம்மை தட்டிக் கொடுத்தது உற்சாகப்படுத்துவதும்,செய்வதறியாது நாம் தனிமையில் தவித்து கண்ணீர் விடும் பொழுதெல்லாம் நம் கண்களை துடைத்து ஆறுதல் அளிப்பதும் நம்மிடமே உள்ள தன்னம்பிக்'கை' தான். எனவே எந்த கை நமக்கு உதவாவிட்டாலும் நம் தன்னம்பிக்கை என்ற அஸ்திரம் நம்மை கைவிடாது என்பதை உணர்ந்து அந்த அஸ்திரத்தின் சக்தியை வலுப்படுத்தி தன்னம்பிக்கையோடு வாழ்வோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Thursday, July 28, 2022

#Victory King: உறவுச் சங்கிலி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1127🥰

தாவரங்களை நல்ல மண் பகுதியில் உரங்களை இட்டு தேவையான அளவு நீரை பாய்ச்சி வளர்க்கும் பொழுதுதான் அது தரமான செடி கொடி மரங்களையும் மகசூலையும் கொடுக்கும். அதுபோல்தான் நாம் அன்பு பண்பு பாசம் நேசம் போன்ற உரங்களை நம் உறவுகளிடம் செலுத்தி வாழ்ந்தால் மட்டுமே நமது family tree ஒற்றுமையுடன் தழைத்து வளர்ந்து நம் அனைவரது எண்ணத்தையும் பசுமையாக்கி ஒருவருக்கொருவர் நிழலாக இருந்து குளுமையுடன் வாழ்ந்து உறவுச் சங்கிலியை வலுப்படுத்த முடியும் என்பதை உணர்வோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Wednesday, July 27, 2022

#Victory King: உதவிக்கு அழகு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1126🥰

தேவைப்படுவோருக்கு தேவையை அறிந்து தக்க சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்ணால் பார்த்ததும் காதுகளால் கேட்டதும் நம்மையும் அறியாமல் ஒரு உந்துவிசையை போல் ஓடிச் சென்று செய்வதுதான் உண்மையான உதவி. மனிதாபிமானமும் கூட. பெருமைக்காக எதிர்பார்ப்புகளுடன் உதவி என்ற பெயரில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஓடோடி செய்யும் செயல்கள் எல்லாம் வெறும் சுயநலம் தான். இத்தகைய செயல் தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்வதற்கு சமம் என்பதை நாம் நன்கு உணர்ந்து மனிதாபிமானத்தோடும் ஆத்ம திருப்தியோடும் வாழ பழகுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Tuesday, July 26, 2022

#Victory King: வாழ்த்தின் மகிமை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1125🥰

நாம் ஒருவரை வாழ்த்தும் பொழுது மனதார மகிழ்வுடன் வாழ்த்த வேண்டும். நெஞ்சத்திலே வஞ்சத்தை வைத்துக்கொண்டு வாழ்த்தினால் வாழ்த்து பெறுபவர்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. அதுபோல் வாழ்த்து பெறுபவரும் நேர்மறை எண்ணங்களோடு அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்த்தின் பலன் முழுமையாக கிடைக்கும். எனவே ஊருக்காகவும் பெயருக்காகவும் வாழ்த்தாமல் உளமாற வாழ்த்தி வாழ்த்துவோர் பெறுவோர் இருவர் உள்ளங்களும் ஒன்றுபட்டு மகிழும்படி வாழ்த்தி நலமுடன் வாழ பழகுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Sunday, July 24, 2022

#Victory King: வெற்றிக்கு நம்மிடம் உபாயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1124🥰

நாம் கஷ்டப்படும் பொழுது சோர்ந்து துவளாமல் அதனை துணிவுடன் எதிர்கொண்டால் நம் தன்னம்பிக்கை வெற்றிபெறுகிறது. உண்மையை மறைத்து உளறிக் கொட்டாமல் இடர்பாடுகள் வந்தாலும் உண்மையே பேசும் பொழுது நம் மனசாட்சி வெற்றி பெறுகிறது. குறுக்கு வழியில் சென்று கரடு முரடான பாதையை விடுத்து நேர்வழியில் நல்லதொரு பாதையில் பயணம் செய்யும்போது நம் சமயோகித புத்தி வெற்றி பெறுகிறது. வாழ்க்கையில் விழுந்து விட்டாலும் எழுந்து நிமிர்ந்து வீறு நடை போடும் பொழுது நம் முயற்சி வெற்றி பெறுகிறது. எனவே நமது ஒவ்வொரு வெற்றிக்கும் நம்மிடமே சிறந்த உபாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Saturday, July 23, 2022

#Victory King: வாழ்க்கையின் ரசனை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1123🥰

நாம் பிறக்கும் பொழுதும் மற்றவர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுவதை நம்மால் பார்க்க முடியாது. அதுபோல் இறக்கும் பொழுதும் மற்றவர்கள் கதறி அழுவதையும் நம்மால் பார்க்க முடியாது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நமது உடல் உறுப்புகள் active ஆக இயங்கும் பொழுதே நல்லவற்றையே பார்த்து, பேசி,கேட்டு, மனதளவில் நல்லவைகளேயே எண்ணி அனைவரிடமும் சுமூகமாக வாழும் சந்தர்ப்பத்தை நாம் முறையாக பயன்படுத்தி மகிழ்வுடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கை முழுமை அடையும். எனவே நாம் நம் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழப் பழகுவோமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Friday, July 22, 2022

#Victory King: துஷ்டரைக் கண்டால்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1122🥰

நல்ல பாம்பை நல்லது என்று நினைத்து நம் வீட்டில் வளர்க்க முடியுமா?
அதுபோல் அற்பர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியுமா? பண்பற்றவர்களிடம் பாசத்தை எதிர்பார்க்க முடியுமா? கயவர்களிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியுமா? சுயநலவாதிகளிடம் சமரசத்தை எதிர்பார்க்க முடியுமா? எனவே துரோகிகளிடமிருந்தும் அவர்களுக்கு துணை போகிறவர்களிடமிருந்தும் நாம் தூர விலகி இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும்.."துஷ்டரைக் கண்டால் தூர விலகு" கடைபிடிப்போமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Thursday, July 21, 2022

#Victory King: வெற்றியின் சுவை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1121🥰

நாம் மற்றவர்களுக்காக வாழாமல் நாம் நாமாகவே வாழ்ந்து 
மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகி எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை திருப்த்தியுடன் ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களைப் பற்றி பொறாமைப்படுவதை விடுத்து, வசதிக்கேற்ப மிடுக்கான உடைகளையே அணிந்து எப்பொழுதும் மலர்ந்த முகத்துடனே அனைவரிடமும் பேசி நிகழ்காலத்தை அனுபவித்து வாழ பழகி
எதையும் நேர்மறையாகவே சிந்தித்து சுயத்தை இழக்காமல் முடிவெடுத்து மொத்தத்தில் நம்மை நாமே நேசிக்க பழகி எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் நாம் வாழ்க்கையில் வெற்றியை சுவைத்து நிம்மதியுடன் வாழ முடியும்!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Tuesday, July 19, 2022

#Victory King: சொர்க்க வாழ்க்கை!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1120🥰

நாம் இறந்த பிறகு நமக்கு சொர்க்கமா நரகமா? ஆனால் நாம் இறக்கும் தருவாயில் இறுதி மூச்சின் பொழுது நாம் இருக்கும் போது செய்த நற்செயல்கள் அனைத்தும் நம் கண் முன்னே தோன்றி ஆனந்த கண்ணீருடன் சொர்க்கத்தைக் கண்டு உயிர் பிரியும். அதுபோல் நாம் செய்த பாவ முட்டைகள் அனைத்தும் நம் இதயத்தை அழுத்தி அவதிப்பட்டு நரக வேதனையை அனுபவித்துத்தான் உயிர் பிரியும். இதனை உணர்ந்தாவது நாம் இருக்கும் காலத்திலேயே சொர்க்க வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து வாழ பாவச் செயல்களை தவிர்ப்போமே!

🙏Victory King Alias 'V. Krishnamurthy'🙏

Monday, July 18, 2022

#Victory King: கேடு நினைப்பவன் கெடுவான்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1119🥰

தவளைகளுக்கான ஒரு அரசன் தனக்கு வேண்டாதவர்களை அழிக்க ஜென்ம விரோதியான கருநாகத்தை அணுகி அதற்கு ஆசை வார்த்தை காட்டி அந்தத் தவளையின் குடும்பத்தில் வேண்டாதவர்களை அழிக்க வசதி செய்து கொடுத்தது. கருநாகமோ அந்த குடும்பத்தில் உள்ள வேண்டாதவர்களை மட்டும் விழுங்காமல் அனைவரையுமே விழங்கி கடைசியில் நீயும் என் எதிரி தான் என்று சொல்லி அந்த தவளை அரசனையும் விழுங்கி விட்டது. எனவே நமக்கு வேண்டாதவர்களை அழிக்க நம் விரோதியையே உதவிக்கு அணிகினால் அந்தத் தவளை அரசனின் கதிதான் என்பதனை நாம் உணர வேண்டும்.

🙏"கெடுவான் கேடு நினைப்பான்".🙏

#Victory King: சுற்றம்!

💚விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1118💚

சில விஷயங்கள் நமக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். மற்றவர்களுக்கு பிடித்தது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே நமது ரசனையை மற்றவர்கள் மீது திணிக்காமல் எதிர்மறை ரசனையை தவிர்த்து ஒருவருக்கொருவர் பண்போடு பழகி வந்தாலே உறவுகளும் நட்புகளும் நிலைத்து நிற்கும் என்பதை உணர்ந்து சுற்றத்தோடு சுகமாக வாழ பழகுவோமே!

🙏🏻Victory king alias V. Krishnamurthy🙏🏻

Friday, July 15, 2022

#Victory King: மகிழ்ச்சிக்கான மந்திரம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1117

குடும்பமோ வசிக்கும் இடமோ பணி புரியும் இடமோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒற்றுமை என்னும் ஓங்காரம் ஒலித்தால் மட்டுமே மன நிம்மதியு டனும் மகிழ்வுடனும் நாம் வாழ முடியும். ஏதாவது ஒரு இடத்தில்  அடுத்தவர்கள் நிம்மதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சுயநல துரோகிகள் ஊடுருவல் வந்துவிட்டால் அதனைக் களைந்தெடுக்க முயற்சிக்கலாம். முடியவில்லை என்றால் நாம் நமது நிம்மதியை குலைத்துக் கொண்டு உடலை வருத்திக் கொண்டு நம்மையே அழித்துக் கொள்வதை விடுத்து அவர்களைப் புறந்தள்ளி நாம் வாழும் வழியை காண்பது தான் நம் வாழ்க்கைக்கு உகந்த ஒரே வழி சிந்திப்போமே!

Victory King (VK) Alias ‘V. Krishnamurthy’

Thursday, July 14, 2022

#Victory King: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான இரகசியம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1116

சதா தங்களைப் பற்றியே பெருமைப்படுத்திக்கொண்டு தானும் தன் குடும்பமும்தான் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது என்ற எண்ணம் படைத்தோர் அடுத்தவர்கள் நல்ல உள்ளங்களை சிறிதும் புரிந்து கொள்ளாமல் அவர்களை ஏதோ ஒரு காரணம் சொல்லி உறவுகளையும் நட்புகளையும் விலக்கி அவர்களைப்ற்றி மற்றவர்கள் வெறுக்கும்படி செய்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் மனிதாபிமானமற்ற மனிதர்களை நாம் துச்சம் என கருதி ஒதுக்கினால் மட்டுமே நாம் மகிழ்வுடன் வாழ ஏதுவாகும்.

Victory King (VK) Alias ‘V. Krishnamurthy’

Monday, July 11, 2022

#Victory King: பிறந்த நாள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1115

பூமாதேவியை நமஸ்கரித்து இப்பூ உலகை பார்த்தது முதல் இன்றுடன் 76 ஆண்டுகள் நிறைவு பெற்ற தருணத்தில் என்னை பெற்றெடுத்து அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வளர்த்து இந்த உயர் நிலையில் இருக்கும் வாய்ப்பை அளித்த பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் குடும்பத்தில் பெரியவர்களுக்கும் இன்றும் அன்பையும் பாசத்தையும் காட்டி வரும் குடும்ப இளைய தலைமுறைகள் அனைவருக்கும் திருமண பந்தத்தில் 54 ஆண்டுகள் உறுதுணையாக அனைவரையும் அரவணைத்து சென்று கொண்டிருக்கும் மனைவிக்கும், எங்களைப் பாசத்தோடும் அன்போடும் பண்போடும் வளர்த்து இன்று நாங்களும் எங்கள் பிள்ளைகளுடன் நலமுடன் வளமுடன் வாழ்கிறோம் என்று வாயாரப் புகழும் என்னுடைய பிள்ளைகளுக்கும் என்னுடன் அன்போடு பழகி வந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அந்த நிகழ்வுகளை இந்த 77வது படியில் நின்று கொண்டு மானசீகமாக கம்பீரத்துடன் பார்க்கும்  பாக்கியத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு மனதார நன்றியை தெரிவித்து மகிழ்வதில் பெருமை அடைகிறேன். 

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, July 10, 2022

#Victory King: பெருமையான வாழ்வு!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1114

பெருமைக்காக நாம் செய்யும் எந்த செயலும்அவ்வளவு சிறப்பாக அமையும் என்று சொல்ல முடியாது. நாம் மனமுவந்து முழு ஈடுபாட்டுடன் ஒரு செயலை செய்து அதில் வெற்றி கண்டு பெருமை அடைய வேண்டும். அதுபோல் நாம் ஒரு செயலை செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதை விடுத்து நியாயபடுத்தும் அளவிற்கு அதனை செய்து முடிப்பது தான் பெருமை தரும் விஷயம். எனவே பெருமை என்பது நம்மை தேடி வர வேண்டுமேஒழிய பெருமைக்காக நாம் அதைத் தேடி செல்லாமல் பெருமையுடன் வாழ்வோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Saturday, July 9, 2022

#Victory King: ஜெயமாகும் செயல்கள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1113

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் நம்  எண்ணத்தில் உதித்தாலே போதும் நமக்கு பொறுப்புடன் சேர்ந்து தன்னம்பிக்கையும் தானாகவே வந்து விடும். தன்னம்பிக்கை தான் நம் வெற்றிக்கான பாதையை காட்டும் திசைகாட்டி. காட்டிய திசையில் நாம் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாலே போதும் நாம் எடுத்த செயலில் வெற்றி என்பது நிச்சயம். எனவே நாம் எண்ணத்தை இனிதாக்கி  செயலை ஜெயமாக்க முயல்வோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Wednesday, July 6, 2022

#Victory King: அன்பெனும் ஆயுதம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1112

எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பது பழமொழி. அதுபோல் கடினமான இதயத்தைக் கூட கரைக்கும் சக்தி அன்பிற்கு உண்டு. அன்புதான் அனைவரையும் அரவணைக்கும். அன்பை பண்போடு பகிரும் பொழுது அது உறவுகளை வலுப்படுத்தும். நட்புகளை நிலைநாட்டும். ஆனந்தத்தில் நம்மை புத்துணர்ச்சியில் ஆழ்த்தும். அன்பினால் சாதிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. எனவே அன்பு என்ற பரிசை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு ஆனந்தமாக வாழ முயல்வோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Monday, July 4, 2022

#Victory King: பிறவிக் கயவர்களை விட்டு விலகி நிற்போமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1111

நாய் வாலை நிமிர்த்த முடியாது. அதுபோல் பிறவி கயவர்களை திருத்த முடியாது. எனவே நாய் வலம் போனால் என்ன இடம் போனால் என்னநம் மேலே விழுந்து குதறாமல் இருந்தால் சரிதான் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் நாம் கயவர்களை கண்டால் காத தூரம் விலகி நம்மை காப்பாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, July 3, 2022

#Victory King: விஷத்தைக் கக்கும் மனிதர்கள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1110

பாம்பு பூரான் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நாம் தெரிந்தோ தெரியாமலோ அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே தற்காப்புக்காக அவை நம்மை தீண்டும். ஆனால் குரோத குணம் படைத்த சில சுயநலவாதிகள் மற்றவர்களால் அவர்கள் பாதிக்கப்படாவிட்டாலும் மற்றவர்களை அழித்து வாழ துடிக்கும் துரோகிகள், விஷ ஜந்துக்களை விட மோசமானவர்கள். எனவே நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இப்படிப்பட்டவர்களிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதைவிட வேறு வழி இல்லை.

Victory King (VK) Alias V. Krishnamurthy

Saturday, July 2, 2022

#Victory King: புத்திசாலித்தனமான வாழ்க்கை!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1109

நம்மிடம் எவ்வளவுதான் புத்திசாலித்தனமும் திறமையும் இருந்தாலும் இவை இரண்டுமே நற்செயல்களுக்கும் நேர்மையான முன்னேற்றத்திற்கும் பயன்படாமல் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அதில் தன் புத்திசாலித்தனத்தையும் திறமையும் காண்பித்தால் அது பணத்தை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து பூதம் காப்பது போல் அதை காத்து அதோடு தானும் மடிந்து போகும் மனிதர்களுக்கு ஒப்பாகும். எனவே நம் புத்திசாலித்தனத்தையும் திறமையையும் நேர்வழியில் நம் முன்னேற்றத்திற்கு முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வளம் பெறுவோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Thursday, June 30, 2022

#Victory King: நல்ல சந்ததியினர்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1108

நம் எண்ணம் இனிதானால் நம் செயல் புனிதமாகும். நம் செயல் புனிதமானால் நம் வாழ்க்கை வளமாகும். நம் வாழ்க்கை வளமானால் நல்ல சந்ததி உருவாகும். எனவே நம் குடும்பம் குதூகளிக்க நாம் எண்ணியதை எட்டிப் பிடிக்க எண்ணத் தூய்மையே மூல மந்திரம் என்பதை உணர்ந்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Wednesday, June 29, 2022

#Victory King: பெற்றோரும் பிள்ளைகளும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1107

நாம் நம் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அவர்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம திருத்த முயற்சிக்காமல் அவர்கள் செய்வதை அப்படியே ஆமோதிப்பது அவர்கள் வயதுக்கு மீறிய கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இமாலய சாதனையாக நினைத்து போற்றுவது போன்ற இவைகள்தான் பிள்ளைகளின் மண்டையில் மமதையாக ஏறி இன்று எதுவுமே நம் கட்டுப்பாட்டில் வராத நிலை என்பதை நம் போன்ற பெற்றோர்கள் உணர்ந்தாலே போதும் பிள்ளைகளும் தங்கள் பொறுப்பை தாங்களே உணர்வார்கள்.

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, June 26, 2022

#Victory King: சுயநலம் எனும் போதை!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1106

ஒருவன் தன் பேராசையின் உச்சத்தில் மதிமயங்கி அடுத்தவருக்கு துரோகம் செய்து, துன்புறுத்தி, சொத்துக்களை அபகரித்து அவர்கள் நிம்மதியை கெடுத்து சுயநலம் என்ற போதையைத் தனக்குள் ஏற்றி சொந்தத்தை இழக்கிறான், சுற்றத்தை இழக்கிறான், நட்பு வட்டத்தை இழக்கிறான், போதையின் உச்சத்தில் தன் சுகத்தையும் தன் குடும்பத்தையும் இழந்து இறுதியில் நாதியின்றி நடுத்தெருவில் அலையும் நிலையை வந்தடைகிறான். இதுதான் சுயநலத்தால் அவன் கண்ட பலன். இதனை உணர்ந்தால் சுயநலம் என்ற மதுவை ஒருவரும் அணுக மாட்டார்கள். யோசிப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Saturday, June 25, 2022

#Victory King: பச்சோந்தித்தனத்தை தவிர்ப்போமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1105
அடுத்தவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே நாமும் சொல்லி அவர்களுடன் உறவாடுவது பச்சோந்தி தனம். அவர்கள் கூறுவதில் கருத்து வேறுபாடு இருக்கும் பொழுது நாம் நேர்மையான நம் கருத்தையும் கூறி அவர்கள் ஏற்கும்படி செய்யும் திறன் நம்மிடம் இருந்தால் அதுதான் உறவுக்கும் நட்புக்கும் நாம் கொடுக்கும் வலிமை. எது எப்படி இருப்பினும் அடுத்தவர்கள் மனம் புண்படாவண்ணம் பேச முயல்வது தான் மனிதநேயம் கூட. 
Victory King (VK) Alias V. Krishnamurthy

Friday, June 24, 2022

#Victory King: இளையதலைமுறை வளரும் தலைமுறை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1104

நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வளமுடன் வளர தரமான நெல்லை விதைத்து அதை நாற்றுகளாக வளர்த்து அதை முறைப்படி சதுப்பு பூமியில் நட்டு நீர் வளத்துடனும் இயற்கை சூழல்களிலிருந்து காப்பாற்றியும் பேணிக் காத்தால் மட்டுமே அது நல்ல மகசூலை கொடுத்து தங்களை நன்கு கவனித்து வளர்த்த விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்யும். அதுபோல்தான் நம் பிள்ளைகளும் நன்கு வளர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வதுடன் தன் குடும்பத்தின் பெருமையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் அது பெற்றோர்களாகிய நம் வளர்ப்பில்தான் உள்ளது என்பதனை நாம் நன்கு உணர்ந்து நல்லதோர் இளைய தலைமுறைகளை உருவாக்குவோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Wednesday, June 22, 2022

#Victory King: குடும்ப உறவுகள் மனம் மகிழ!

  விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1103

சுபகாரியங்களுக்கோ, விசேஷங்களுக்கோ ஒருவரை அழைக்க நாம் அவர்கள் வீட்டிற்குச் சென்றால் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் இன்முகத்துடன் மனமுவந்து அழைக்கவேண்டும். அதுபோல் அவர்களை வரவேற்கும் பொழுதும் அனைவரது முகத்தையும் பார்த்து அன்புகூர்ந்து வரவேற்க வேண்டும். அதுதான் பண்பு. அதை விடுத்து நாம் அழைத்து வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தனித்துவம் கொடுக்கும் பொழுது மற்றவர்கள் மனம் சிறிதாவது காயப்படும் என்பதை நாம் உணர வேண்டும். சில உறவுகளும் நட்புகளும் பிளவுபடுவதற்கு நாம் ஒரு மூல காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதனை நாம் மனதில் கொண்டு பண்போடு வாழ்ந்து அன்போடு அனைவரையும் அரவனைப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Tuesday, June 21, 2022

#Victory King: சொற்களின் வலிமை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1102

ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு வரும் பொழுது பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் வெறுப்பை வளர்ப்பது, மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் வேண்டாதவற்றை எல்லாம் பேசி வம்பை விலைக்கு வாங்குவது, அரைகுறையாகக் கேட்ட விஷயங்களை அலப்பரை செய்து வெறுப்பேத்துவது, யாரோ சொன்ன விஷயங்களை வைத்துக்கொண்டு நேரில் பார்த்தது போல் பறைசாற்றுவது இவைகளெல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் பகைமையை மேலும் வளர்ப்பதற்கு சமம். எனவே இடமறிந்து அடுத்தவர் தரம் அறிந்து நாவடக்கத்தோடு சொற்களின் வலிமையை அறிந்து பேசினால் கருத்து வேற்றுமையை கருத்தொருமித்ததாக மாற்றவும் வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுவோமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

Sunday, June 19, 2022

#Victory King: எண்ணமே நம் சொத்து!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1101

ஆழ்ந்த துக்கத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டால் துக்கத்தின் சுமை குறையும். கோபத்தின் உச்சத்தில் மௌனியாகி நிதானத்தை கடைபிடித்தால் நாவிலிருந்து கடும் சொற்களை தவிர்க்கலாம். மட்டற்ற மகிழ்ச்சியில்சாந்தமுடன்இயல்பாக செயல்பட்டால் மமதை தலைக்கு ஏறாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். உற்றார் உறவினர் நண்பர்களுடன் கலந்துரையாடினால் சோகத்தை தவிர்க்கலாம். அடுத்தவர்களின் சொத்தை அபகரிக்கும் எண்ணத்தை நம் மனதிலிருந்து நீக்கினால் நம் சொத்தை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முயற்சிப்போமே!

Victory King (VK) Alias V. Krishnamurthy

#Victory King: தினம் தினம் தந்தையர் தினம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1100

அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அன்போடும் ஆசையோடும் பாசத்தோடும் வளர்ப்பதில் தப்பில்லை. அதேசமயம் பிள்ளைகள் தடம் மாறும் நிலை வந்தால் அவர்களை திருத்தி பண்போடும் வளர்த்தால் மட்டுமேஅவர்கள் வாழ்க்கை வளம் பெரும்.நலம்பெரும். பாசமும் அன்பும் நம் கண்ணை மறைத்து அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் நாமும் ஆடினால் நாமே நம் பிள்ளைகளின் வாழ்வு கெடுவதற்க்கு ஒரு காரணகர்த்தா ஆகிவிடுவோம் என்பதனை நாம் உணர்வோமே! தந்தையர் தின வாழ்த்துக்களுடன்!
Victory King (VK) Alias V. Krishnamurthy

Friday, June 17, 2022

#Victory King: முயற்சி எனும் தீபம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1099

தீபம் சுடர்விட்டு எரிந்து நமக்கு ஒளியை கொடுக்க வேண்டுமென்றால் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை போட்டு தீக்குச்சியினால் அந்தத் திரியை ஏற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அது அலைபாய்ந்து அணையாமல் இருப்பதற்கு பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். அதுபோல்தான் நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது முயற்சி என்ற தீப ஒளியை நம் மனதில் கொழுந்துவிட்டு எரியச் செய்து மனதை அலைபாயாமல் கட்டுப்பாட்டுடன் வைத்து செயலில் ஈடுபட்டால் பிரகாசமான வெற்றி நம் செயலுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி தான் நம் முன்னேற்றத்திற்கான மூலமந்திரம் என்பதனை உணர்ந்து வாழ்வோமே!
Victory King (VK)

Wednesday, June 15, 2022

#Victory King: நியாயமாக வாழ்வது அத்தனைக் கடினமா என்ன?

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1098

அடுத்தவர்கள் செய்யும் அனைத்துமே தவறு என்று அடித்து பேசுபவர்கள் சுயநலவாதிகளின் உச்சம். சரியோ தவறோ ஏதோ என் மனதில் பட்டதை சொல்கிறேன் என்று கூறுபவர்கள் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்கள். அடுத்தவர்கள் செய்வது சரியோ தவறோ அதனைச் சுட்டிக்காட்டி அடுத்தவர்களை திருத்த முயல்பவர்கள் நேர்மையாளர்கள். இத்தகையோர் சமயத்தில் மனதளவில் காயப்பட்டாலும் திருத்த முயன்றதிலுள்ள ஆத்ம திருப்தியில் மகிழ்வார்கள். நியாய வாதிகளாக இருந்து வாழ்வது சற்று கடினமான செயல் என்றாலும் நாம் முயற்சித்து தான் பார்ப்போமே!
Victory king (VK)

Monday, June 13, 2022

#Victory King: நடைபயணம் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பயணம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1097

நாம் நடக்கும் பொழுது நம் இடது காலும் வலது காலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் மாறி மாறி செல்லும் பொழுது தான் நம் நடைப்பயணத்தின் இலக்கை அடைய முடிகிறது. அதுபோல்தான் நம் வாழ்க்கைப் பயணத்திலும் முன்னேற்றமும் பின்னடைவும் நிகழ்வது இயற்கை. எனவே நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது முன்னேறும் பொழுது அகமகிழ்ந்து ஆணவத்தில் ஆடாமலும் பின்னடையும் பொழுது மனம் தளர்ந்து சோர்வடையாமலும் பயணித்தால் மட்டுமே நாம் அந்த இலக்கை அடைந்து வெற்றியை பெற முடியும் என்பதனை மனதில் கொண்டு சோர்விலா வாழ்க்கையை தொடர்வோமே!
Victory king (VK)

Sunday, June 12, 2022

#Victory King: தோற்கும் பொய்மை!

விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1096

பொய் என்ற கவசத்தை அணிந்து கொண்டு தாம் சொல்வதுதான் சரி, தாம் செய்யும் அராஜகங்கள் அனைத்துமே நியாயம் தம்மை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ஆணவத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் உண்மை என்ற அஸ்திரம் அந்தக் கவசத்தை துளைத்தெடுக்கும் பொழுது அவர்கள் சுக்கு நூறாகி விடுவார்கள். எனவே உண்மை என்ற அஸ்திரத்தின் வலிமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் நன்கு உணர்ந்து அநீதியை கடைப்பிடிக்காமலும் அநீதிக்கு துணை போகாமலும் திடமுடன் வாழ்ந்து நம் வாழ்வை வெல்வோமே!
Victory king (VK)

Monday, June 6, 2022

#Victory King: ஊன்றுகோலாக தன்னம்பிக்கை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 1095

தாங்கிப் பிடிப்பதற்கு ஒரு ஆள் இருந்தால் ஒரு சிலர் நொடிக்காத கால்களையும் நொடிப்பது போல் நடிப்பார்கள். இல்லாத சோகத்தை முகத்தில் ஏற்றியும் பரிதாப பார்வையில் மற்றவர்களின் பாசத்தை பெற்றும் அடுத்தவர் முதுகில் ஆனந்தமாக பயணம் செய்து சுகமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இப்படி இல்லாமல் நம்மை தாங்கி பிடிக்க ஒரு ஆள் இருந்துவிட்டால் நாம் சரிக்கு விழுந்தால் நம்மை தூக்கி விட ஆள் இருக்கிறது என்ற மனோதிடத்தில தன்னம்பிக்கையோடு செயல்பட்டு நமது இலக்கை அடைய அதனை ஊன்று கோலாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பழகுவோமே

Victory King (VK)

#Victory King: கூடா நட்பு கேடாய் முடியும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 1094 

தவறு செய்தவர்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத கோழைகள் தான் தவறு செய்பவர்களிடம் அடைக்கலமாகி நல்லவர்கள் செய்யும் நற்செயல்கள் அறிவுரைகள் எல்லாம் தவறு என்று வாய்கூசாமல் கூறிக்கொண்டு தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு அவர்கள் யாரோடு தவறுக்கு துணை போனார்களோ அவர்களோடு சேர்ந்து துணைபோன பாவத்திற்கு இவர்களும் சேர்ந்து அழிந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனம். "கூடாநட்பு கேடாய் முடியும்" என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் உணர்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, June 4, 2022

#Victory King: நன்மையே செய்து நலமுடன் வாழ்வோமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1093

காலைச் சுற்றின பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். அதுபோல நாம் செய்யும் பாவங்கள் அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகங்கள் நம் நிழலைப் போல நம்மை விட்டு அகலாமல் சுற்றி சுற்றி வந்து வாழ்க்கையை அழிக்காமல் விடாது. ஆனந்தப்பட்ட கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் பரவசப்பட்ட முகத்தில் மரண பயத்தை உண்டாக்காமல் பாவ மூட்டைகளால் நம் நெஞ்சை அழுத்தித் நம்மை திணர வைக்காமல் அதன் வேகம் தணியாது. எனவே இந்நிலையை நமக்கு வராமல் நம்மை நாமே காத்துக்கொள்ள நன்மையே செய்து நலமுடன் மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)


Wednesday, June 1, 2022

#Victory King: மனிதம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1092

ஐந்தறிவு உள்ள பிராணிகள் கூட நம்மோடு சிலகாலம் பழகிவிட்டால் நமக்கு நன்றியோடு செயல்படும். ஆனால் ஆறறிவு இருந்தும் சில மனிதர்கள் மனிதாபிமானமற்ற அதி சுயநவாதிகளாக செயல்பட்டு தங்கள் மூர்க்கத்தனத்தால் அடுத்தவர்களை துன்பப்படுத்தி அதில் ஆனந்தம் கண்டு உச்சக்கட்டத்தில் தங்களைத் தாங்களே பைத்தியங்கள் ஆக்கிக்கொண்டு அழிந்து விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட கயவர்களை புறக்கணித்து நன்றியுள்ளவர்களோடு பழகுவோம், நன்றியுள்ள செல்ல பிராணிகளிடம் அன்பு காட்டி அதனைப் பேணிக் காத்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

#Victory King: அனுபவமே வெற்றி தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1091

நம் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் அனுபவம் அல்ல. நடந்ததில் நாம் கற்றுக் கொண்டது என்ன எதையெல்லாம் களைந்தெடுத்தோம் எதையெல்லாம் நம் வாழ்க்கைக்கு உகந்தது என்று ஏற்றுக் கொண்டோம் அதன்படி நடந்து வாழ்க்கையில் முன்னேறினோம் என்பதில்தான் இருக்கிறது அனுபவத்தின் சக்தி. நாம் அனுபவத்தால் முன்னேறினால் அது தான் நம் வாழ்க்கையின் வெற்றி.
Victory King (VK)

#Victory King: ஒரு நாளும் அதர்மம் வெல்லாதே!

விக்டரி கிங்கின் சிந்தனை துளி 1090

நமது நேர்மையையும் தர்மசிந்தனையையும் மௌனத்தையும் மற்றவர்கள் அவர்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு நமக்கு துரோகம் செய்பவர்கள் அந்த சமயத்தில் வேண்டுமானால் அவர்கள் ஆனந்தபடலாம். காலத்தின் சுழற்சியில்அவர்கள் செய்த துரோகத்தின் பலனை பன்மடங்காக அனுபவித்து அணு அணுவாக அவதிப்பட்டு அழிவதிலி ருந்து அவர்கள் தப்ப முடியாது. எனவே நாம் செய்த நற்செயல்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாமல் அதர்மம் என்றும் வென்றதில்லை தர்மம் என்றும் தோற்றதில்லை என்ற தாரக மந்திரத்தை மனதார நம்பிசோர்வில்லாமல் வாழ பழகுவோமே!
Victory King (VK)

Saturday, May 28, 2022

#Victory King: பாரபட்சம் வேண்டாமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1089

பந்தியில் பாரபட்சம் காட்டக்கூடாது. பெற்ற பிள்ளைகளிடம் பாசத்தில் பிரிவினை காட்டக்கூடாது. அதுபோல் நம் உறவினர்களிடம் பழகும்பொழுது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் சரி திருமணமாகி தனியாக இருந்தாலும் சரி கணவனை இழந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரிடத்திலும் அந்த குடும்பத்தில் மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிய அந்தஸ்தை இவர்களுக்கும் கொடுப்பதுதான் பண்பான செயல். எனவே நமக்குப் பிறகும் நம் தலைமுறைகளின் வாழ்க்கை தொடரும் என்பதை நாம் நன்கு மனதில் கொண்டு பாரபட்சம் இன்றி வாழ்ந்து   உறவுச் சங்கிலியை வலுப்படுத்துவோமே!

Victory King (VK)

Tuesday, May 24, 2022

#Victory King: 'நா’ வண்மை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1088

நமது நாக்கு அறு சுவைகளை மட்டும் நமக்கு உணர்த்துவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. நாவின் மகிமை பல திறன் கொண்டது. நயமுடன் பேசி நட்பை வளர்க்கும். இனிமையாகப் பேசி அன்பை பெருக்கும். கோபத்தினால் கொடும் சொற்களை உதிர்த்து அடுத்தவர்களை அவமதிக்கும் பயனற்ற சொற்களைப் பேசி பண்பாட்டை கெடுக்கும். இப்படியாக நம் எண்ணத்தை பிரதிபலிக்கும் நாவை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் நமக்கு எண்ணத் தூய்மை வேண்டும். எனவே ருசிக்கு மட்டும் அல்ல நமது 'நா' நமது மதிப்பை மேம்படுத்துவதும்"நா" தான் என்பதை நாம் நன்குணர்ந்து என்ன தூய்மையோடு வாழ்ந்து நம் மதிப்பை மெருகூட்டிக்கொல்வோமே!

Victory King (VK)

Monday, May 23, 2022

#Victory King: குற்றமும் தண்டனையும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1087

ஒருவர் தெரியாமல் செய்த குற்றம்: அவருக்கு  புரிய வைத்து திருத்தி அவரை நேர்வழியில் செல்ல வைப்பது நமக்கு சாத்தியமே.

குற்றம் என்று தெரிந்தே செய்யும் குற்றம்: தானாக உணரவும் மாட்டார்கள் நாம் சொல்லியும் திருந்த மாட்டார்கள். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள்:

அவர்கள் செய்யும் அராஜகங்களினாலும் அநீதிகளினாலும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதுடன் தங்கள் சந்ததியினரையும் சேர்த்து அழித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் அராஜகங்களும் அநீதிகளுமே அவர்கள் வம்சத்தையே அழிக்கும் ஆயுதங்கள் என்பது நிதர்சனம்.

Victory King (VK)

Sunday, May 22, 2022

#Victory King: கடந்தகாலமும் நிகழ்காலமும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1086

கடந்த காலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலும் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சிந்தித்து நம் செயல் திறனை சிதறவிடாமலும் நிகழ்காலம் தான் நம் கையில் இன்று என்பதை நன்குணர்ந்து அதனை செவ்வனே பயன்படுத்தி மகிழ்வுடன் வாழ முயற் சித்தால் நாம் வாழும் அனைத்து நாட்களுமே நமக்கு பொற்காலம்தான் என்ற தாரக மந்திரத்தை நாம் மேற்கொண்டு நலமுடன் வாழ முயற்சிப்போமே!

Victory King (VK)

Saturday, May 21, 2022

#Victory King: சோகமும், சுகமும் நம் கைகளில்தான்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1085

நாம் எண்ணியது நடந்தால் மகிழ்வதும் அதுவே எதிர்மறையாக நடந்துவிட்டால் மனம் வேதனைப்பட்டு விரக்தி ஆவதும் மனித இயல்புதான். இந்த எதிர்மறை நிகழ்வின் விரக்தியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒன்று நாம் எதையும் அளவுக்கு மீறி எதிர்பார்த்து கனவு காணாமல் இருக்கலாம் அல்லது எதிர்மறை நிகழ்வுகள் நடந்து விட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இதை விடுத்து நடந்ததையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் சுகம் என்பதே வாழ்வில் இல்லாமல் சோகம்தான் மிஞ்சும். எனவே வாழும் காலத்தை வசந்தமாக்கி வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Friday, May 20, 2022

#Victory King: மமதை ஒழிப்போம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1084

மதம் கொண்ட யானையை விட மமதை கொண்ட மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். மதம் கொண்ட யானை தன் சுய நினைவில்லாமல் அனைத்தையும் அழிக்கும். ஆனால் மமதை கொண்ட மனிதர்கள் தன் சுய நினைவுடனேயே அனைவரையும் அழிக்க முயல்வார்கள். எனவே அத்தகைய மனிதர்களை நாம் இனம்கண்டு அவர்களிடமிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டாலே ஒழிய அவர்களிடமிருந்து தப்ப வேறு வழி இல்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொண்டு வாழப் பழகினால் மட்டுமே நமது வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

Victory King (VK)

Thursday, May 19, 2022

#Victory King : சுயநலம் தவிர்ப்போமே!

விக்டரிகிங்கின் சிந்தனைத் துளி: 1083

ஒருவருக்கு சுயநலம் மேலோங்கும் போது என்னதான் பட்டமும் பதவியும் பெற்றிருந்தாலும் அவர்கள் எண்ணம் நல்லதையே நாடாது. அடுத்தவனை எப்படி அழிக்கலாம் தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில்தான் சிந்தனைஓடும். அது ஒரு நிலையில் அவர்கள் கண்ணையே மறைத்து  படுகுழியில் விழுந்து தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைதான் வரும். எனவே எந்நிலையிலும் நம் மனதில் சுயநலத்திற்கு இடங்கொடாமல் வாழ்ந்தால்மட்டுமே நம் வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

#Victory King: தூய்மையான மனம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1082

மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால் தான் அந்த மரம் கிளைவிட்டு துளிர்விட்டு பூத்துக் குலுங்கி சுவையான காய்கனிகளை நமக்கு கொடுக்க முடியும். அதுபோல்தான் நாம் சொல் செயல் சிந்தனை அனைத்திலும் தூய்மை பெற்று நம் மனதை உறுதியாக வைத்து வாழ்ந்தால் மட்டுமே நம் சந்ததியினர் வாழ்வு சிறக்கும். எனவே நம் குடும்பத்திற்கு நாம்தான் ஆணிவேர் என்பதை நாம் நன்கு உணர்ந்து நம் சந்ததியினரின் வாழ்வை மலர வைப்போமே!

Victory King (VK)

Tuesday, May 17, 2022

#Victory King: பிரிவினை தவிர்ப்போமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1081

நம் உணர்வுகளை மதிக்காமல் நம்மை மிதித்து பயணித்து உறவுகளை பிளந்து விட்டு நாம் இருக்கும்போதே அன்பாய் நான்கு வார்த்தைகள் பேசக்கூட முடியாதவர்கள் நாம் இறந்த பிறகு வந்து அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்யும் போலி உறவுகளின் செயல்கள் போல கேவலம் வேறு ஒன்றுமில்லை.எனவே உயிரோடு இருக்கும்பொழுதே உறவுகளை மதித்து உணர்வுகளை மதித்து பிரிவினையைத் தவிர்த்து மதிப்போடு வாழ்ந்து மகிழ்வோமே!

Victory King (VK)

Monday, May 16, 2022

#Victory King: சொர்க்கமும் நரகமும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1080

உள்ளத்திலே அழுக்கு உதட்டிலே போலியான புன்சிரிப்பு நாவினால் தேனொழுக  நஞ்சு கொண்ட பேச்சு அடுத்தவரை அரவணைப்பது போல் அழிக்கத் துடிக்கும் கரங்கள் இவைகள் அனைத்தும் நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் நடைபாதை என்பதை நாம் நன்கு உணர்ந்து நம்மால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் எண்ணாமலும் செய்யாமலும் வாழ்ந்தாலே நாம் வாழும் காலங்களும் சொர்க்கம் நாம் இறுதியில் சென்றடையும் இடமும் சொர்க்கமே!

Victory King (VK)

Sunday, May 15, 2022

#Victory King: உறவினர் இங்கிதங்கள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1079

உற்றார் உறவினர் சுப நிகழ்ச்சிகளுக்கு நாம் நேரில் செல்ல சந்தர்ப்பம் இல்லாத சமயங்களில் வாழ்த்துச் செய்தி அனுப்பி நமது உளமார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், ஒருவரது இரங்கலுக்கு நமது ஆழ்மனது துக்கங்களை வெளிப்படுத்தி செய்திகள் அனுப்பி வைப்பதும் நாம் நம் மனசாட்சிக்கு உட்பட்டு செய்யும் செயல். இதனை ஏற்பவர்கள் சிலர் எதிராளியின் நிலையை சிறிதும் சிந்திக்காமல் தரம் தாழ்த்திப் பேசுவதும் உறவுகளை கேவலப்படுத்துவதும் அவர்களது அறியாமை என்று சொல்ல முடியாது. அது அவர்களது ஆணவத்தின் பிரதிபலிப்புதான். இப்படிப்பட்ட உறவுகளை பற்றி சிறிதும் நாம் கவலைப்படாமல் நம் மனசாட்சிதான் கடைசிவரை நம்முடன் வரும் உறவு என்று எடுத்துக்கொண்டு தூற்றுவாரை புறம்தள்ளி வைப்பதுதான் நம் இதயத்திற்கு இதம்!

Victory King (VK)

Saturday, May 14, 2022

#Victory King: தன் நிலை மறவாத நிலை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1078

நமக்கு பணம் பதவி புகழ் எது வேண்டுமானாலும் வரலாம். அதனால் எந்த நிலையிலும் நமக்கு மமதை மட்டும தலை தூக்க கூடாது. மமதை மதுவை விட மோசமானது. அது மட்டும் நம்மிடம் அடைக்கலம் கொண்டு விட்டால் எதிரில் இருப்பவர் தராதரம் தெரியாமல் பேசுவதும் தன்னை மிஞ்சி ஆளில்லை என்ற எண்ணம் மேலோங்கி நம் பழைய நிலையை மறந்து ஆடாத ஆட்டங்கள் ஆடி கடைசியில மண்ணைக் கவ்வும் நிலை தான் வரும். எனவே நாம் எந் நிலையிலும் நம் நிலையிலிருந்து மாறாது இருந்தால் மட்டுமே நம் மதிப்பையும் மரியாதையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Thursday, May 5, 2022

#Victory King: தவளை வைத்தியம்!

Victory King's Status 1077

நுணலும் தன் வாயால் கெடும் தவளை நீர் நிலையங்களில் குளிர்ச்சியுடன் இருக்கும் பொழுது வேகமாக கத்தி தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும். அதுவே அவைகளின் உயிர்களுக்கு ஆபத்து என்பதை அது உணராது. அதுபோல் சில மனிதர்கள் தங்கள் ஆனந்தத்தின் உச்சத்தில் எதிரிகளின்  சுபாவம் தெரியாமல் தேவையற்றவைகளை எல்லாம் பேசி சிக்கலில் சிக்கி தவிப்பார்கள். எனவே என்னதான் ஆனந்தம் வந்தாலும் நாம் நாவடக்கத்துடன் பேச பழகிவிட்டால் தவளை தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைபோல் நமக்கு வராமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள ஏதுவாகும்.

விக்டரி கிங் (விகே) | Victory King (VK)

Wednesday, May 4, 2022

#Victory King: வஞ்சனை செய்யோம்!

Victory King's Status 1076

பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுத்தாலும், அதனை மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்றும் நாம் இன்று செய்யும் பாவங்கள் அனைத்தும் நம்மை நிழல்போல் தொடர்ந்து நம்முடனேயே வந்து நம்மையும் நம் சந்ததியினரையும் அழித்துவிடும் என்றும் பழமொழிகளை நன்கு உரைக்கும்படி கூறி நல்லதையே செய்ய வேண்டும் நன்மையையே நினைக்க வேண்டும் அதுதான் நலமுடன் வாழ ஒரே வழி என்று எவ்வளவோ முறை உரைத்தாலும் திருந்தாத ஜென்மங்கள்  அழிவிலிருந்து தங்களையும் தங்கள் சந்ததியினரையும் காப்பாற்ற இயலாது என்பதுதான் நிதர்சனம்!

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)

Monday, May 2, 2022

#Victory King: சுயபச்சாதாபம் தவிர்ப்போம்!

Victory King's Status 1075

நம் சுய பரிதாபம்தான் நம் சோகத்திற்கான மூலகாரணம். எதுவும்   நம்மால் முடியாது என்ற தன்னம்பிக்கையை இழப்பதுதான் நம் இயலாமையை முடுக்கி விடுகிறது. எனவே நாம் நம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு உற்சகத்துடன் செயல்பட்டு சுய பச்சாதாபத்தை அறவே நீக்கி மன மகிழ்ச்சியுடன் வாழ பழகுவோமே!

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)

Sunday, May 1, 2022

#Victory King: வாழ்க்கை எனும் நூலின் எழுதுகோல்!

Victory King's Status 1074

நாம் நினைத்தது நடந்துவிட்டால் அது நமக்கு மகிழ்ச்சிதான். வெற்றியும் கூட. அதுபோல் நினைத்தது நடக்காவிட்டாலும் நடந்ததை நம் மனம் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அதனுடனே நம் வாழ்க்கையை கடக்கும் சக்தி நமக்கு கிடைத்து விட்டாலே அதுவும் நமக்கு கிடைத்த வெற்றிதான்.நம் வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய மற்றவர்கள் அதை தீர்மானிக்க நம் வாழ்க்கை ஒன்றும் காட்சிப் பொருளல்ல. எனவே நம் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் நம் கையில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ முயற்சித்தால் அதுதான் நம் வாழ்க்கையின் வெற்றி.

விக்டரி கிங் (விகே)

Victory King (VK)

Tuesday, March 29, 2022

#Victory King: உண்மையான அன்பு!

 Victory King's Status 1073

ஆழ்மனதில் இருந்து வரும் அன்புதான் பூவின் வாசம் காற்றோடு இணைந்து நம் இதயங்களை இதமாக்குவது போல் அன்பு இதயங்களை இணைத்து மனிதனை மனிதனாக்கும் சக்தியை பெறுகிறது. போலியான அன்பு ஒரு நிலையில் அதன் சுயரூபத்தைக் காட்டி மனிதனையும் மிருகமாக்கிவிடும். உண்மையான அன்பு கிடைப்பது என்பது ஒரு வரம். அந்த வரத்தைப் பெற்று நாம் மகிழ்வுடன் வாழ முயற்ச்சிக்கலாமே!

VK

Monday, March 28, 2022

#Victory King: நம்பிக்கைகள்!

 Victory King's Status 1073

நாம் அடுத்தவரை அழித்து விட்டோம் என்று அகமகிழ்ந்து பெருமைப்படுவதும் நம்மை நம்பியவரை ஏமாற்றி ஏளனமாக சிரித்து சந்தோஷப்படுவதும் நம் திறமையினாலோ தந்திரத்தாலோ இல்லை. அதற்குப் பெயர்தான் துரோகம். நம்பிக்கை துரோகம். கொலை செய்வதைவிட கொடிய மாபாதகம். அதுதான் நம்மையும் நம் குடும்பத்தையும் அழிக்கப் போகும் கொடிய விஷம் என்பதை நாம் உணர்ந்து விட்டால் நாம் தெளிந்து திருந்துவதற்கும் வாய்ப்பு உண்டு!

VK

Saturday, March 26, 2022

#Victory King: பிள்ளைகளை உணரச் செய்வோம்!

Victory King's Status 1072

நம் பிள்ளைகளை நம் வருமை தெரியாமல் வசதியாக வாழ வைக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்கு அந்த வசதிக்கு பின்னால் இருக்கும் நம் உழைப்பின் அருமை தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் வசதியை மட்டும் பார்த்து வளரும் பிள்ளைகளின் உள்ளம் ஊர் சுற்றக் கிளம்பி விட்டால் ஊதாரிகளாகத்தான் இருப்பார்கள். அதற்கு நாம் ஒரு காரணியாக இருந்து விடக்கூடாது என்பதை நாம் உணர வேண்டும்!

VK

Friday, March 25, 2022

#Victory King: சுயமதிப்பு!

Victory King's Status 1071

நாம் நல்லவன் என்பதை மற்றவர்கள் வாயிலாக நமக்கு கிடைக்கப் பெற்றால் அது நமக்கு கிடைக்கும் மதிப்பு. அதையே நமக்கு நாமே மிகைப்படுத்தி தம்பட்டம் அடித்துக் கொண்டால் அது தற்பெருமை. தற் பெருமையின் உச்சம் தலைக்கனம் ஏறி நம்மை தடுமாற வைத்து ஒரு நிலையில் நம்மையே சாய்த்துவிடும். ஆனால் மற்றவர்களால் நமக்கு கிடைக்கும் மதிப்பு நம்மை மெருகேற்றி சமூக அந்தஸ்தை கொடுத்து கௌரவிக்கும். எனவே சுயதம்பட்டம் நம் சுயத்தை இழக்க வைத்துவிடும் என்பதை உணர்வோமே!

VK

Thursday, March 24, 2022

#Victory King: சிந்தித்து வாழ்வோமே!

 Victory King's Status 1070

ஏதோ பிறந்து விட்டோமே என்று வாழ்ந்தால் நமக்கு வாழ்க்கையே ஒரு சுமைதான். எனவே இப்பிறவி எடுத்ததற்காக நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு எண்ணத்தை விதைத்து வாழத் தொடங்கினால் அந்த எண்ணம் நம் மனதில் பூங்கொத்துக்களாக மலர்ந்து சாதனை என்னும் பசும்சோலையை உருவாக்கி நம் வாழ்க்கையையே வசந்தம் ஆக்கிவிடும். சற்று சிந்தித்து வந்தால் நமது வாழ்வே ஒரு சுகம்தான்.

VK

Wednesday, March 23, 2022

#Victory King: சந்ததி சிறக்க!

  Victory King's Status 1069

சாவின் விளிம்பில்  இருப்பவர்களை கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் ஆணவத்தின் உச்சியில் இருப்பவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. பாம்பாட்டிக்கு பாம்பினால் தான் சாவு என்றாலும் அவன் மட்டும்தான் சாவான். ஆனால் ஆணவத்தினால் அராஜகம் செய்பவர்களின் பாவச்செயல் அவனை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் சந்ததியினரையும் சேர்த்து அழித்து விடும். தன் சந்ததியினர் நல் வாழ்வை  மனதில் கொண்டாவது திருந்தி வாழ முயற்சிக்கலாமே!

VK

#Victory King: தன்னம்பிக்கை எனும் குடை!

 Victory King's Status 1068

குடையினால் ஒரு பொழுதும் பெய்து கொண்டிருக்கும் மழையை நிறுத்தி விட முடியாது. ஆனால் அந்தக் குடையை விரித்து நாம் மழையில் நனையாமல் கம்பீரமாய் நடந்து போக முடியும். அதுபோல நம் தன்னம்பிக்கை நமக்குத் துன்பங்கள் வரும்போது அதனை உடனே தூள் தூளாக்கி தூர துரத்திவிடாது. ஆனால் அது நமக்கு துன்பங்கள் வரும்பொழுது நம்மை துவள விடாமல் தூக்கி நிருத்தி மனத்தெளிவை கொடுத்து நம்மை வழிநடத்தும்.இதனை உணர்ந்து நாம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வளம்பெற முயல்வோமே!

VK

Monday, March 21, 2022

#Victory King: வாழ்க்கைப் பயணம்!

 Victory King's Status 1067

கருவறையிலிருந்து வெளி உலகத்திற்கு வந்து கல்லறை வரை செல்லும் நடைபயண வாழ்க்கையில் நமது பயணம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூட உணர முடியாத நிலையில் இடைப்பட்ட காலத்தில் மற்றவர்களை காயப்படுத்தாமலும் கண்ணீர் சிந்த வைக்காமலும் வாழ்ந்தாலே நமது வாழ்க்கைப் பயணத்தை இன்னல்கள் இன்றி இனிதே முடித்து இறைவனடி சேருவதற்கான உபாயமாகும்!
VK

Sunday, March 20, 2022

#Victory King: நல்லவற்றையே எண்ணுவோமே!

  Victory King’s Status 1066

கயவர்களிடம் கண்ணியத்தை எதிர்பார்ப்பதும், பச்சோந்திகளிடம் பாசத்தை எதிர்பார்ப்பதும், மதியாதவர்களிடம் மரியாதை எதிர்பார்பதும், பாலைவனத்தில் பசுஞ்சோலைகள் அமைக்க எண்ணுவதற்கு சமம். எனவே நாம் நடைமுறைக்கு ஏற்ற நடக்க சாத்தியக்கூறுகள் உள்ள நல்லவற்றையே எண்ணி செயல்பட்டு நம் மதிப்பை நாம் தக்க வைத்துக் கொள்வோமே!

VK

Saturday, March 19, 2022

#Victory King: வாழ்க்கையின் பூட்டும் சாவியும்!

 Victory King’s Status 1065

இறைவவன் நம்மைப் படைக்கும் பொழுதே நமக்கான பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் கொடுத்துத்தான் இபப்பூவுலகற்கு அறிமுகப் படுத்துகிறான். அதுதான் விதி.சாவி இல்லாமல் யாரும் பூட்டை தயார் செய்வதில்லை. ஆனால் அந்த சாவியை பூட்டில் போட்டு திறந்து மூடினால் தான் பூட்டிற்கு உபயோகம். அதுபோல்தான் முயற்சி என்ற சாவியை போட்டு பிரச்சனைகளை எதிர் கொண்டால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். வெற்றியும் தோல்வியும் நம் கையில்தான் என்பதை உணர்வோமே!

VK

Friday, March 18, 2022

#Victory King: உடல் நலனும், மன நலனும்!

 Victory King's Status 1064

எதையுமே அதிகமாக யோசித்தால் குழப்பம்தான் மிஞ்சும். அதிகமாக நேசித்தால் மனதில் துன்பம் தான் நிலைக்கும்.அதிகம் பேசினால் அமைதி கெடும். உடனுக்குடன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டால் நம் உடல்நலம் கெடுவதோடு உண்மையை உணரும்போது வருத்தம் தான் மிகும். எனவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் தான் என்பதை உணர்ந்து நிம்மதியாக வாழ பழகுவோமே.

VK

Thursday, March 17, 2022

#Victory King: உணர்வுகளை மதிப்போமே!

Victory King's Status 1063

ஆரம்பத்தில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் நாளடைவில் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று சிறிதும் கவலைப்பட வேண்டாம். அதைவிட நம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதும்.நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது நம் உணர்வுகளே உறவுகள் அல்ல என்பதை நாம் உணர்ந்து விட்டால் நாம் மன அழுத்தமின்றி வாழ்க்கையை மகிழ்வுடன் கடத்தலாம்!

VK

Wednesday, March 16, 2022

#Victory King: நம்மை நாம் திருத்திக்கொள்வோம்!

Victory King's Status 1062

நம் தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் அதனை திருத்திக் கொள்ளும் பக்குவமும் நமக்கு இருந்தால் மட்டுமே மற்றவர்கள் தவறுகளை சுட்டிக்காட்ட நமக்குத் தகுதி உண்டு. இல்லையேல் அது சாத்தான் வேதம் ஓதுவதுபோல்தான். எனவே நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள நம் குறைகளை நாம் முதலில் திருத்திக் கொண்டு வாழ முயற்சிப்போமே!

VK

Tuesday, March 15, 2022

#Victory King: சிந்தனையும் செயலும்!

 Victory King's Status 1061

என்னதான் நாம் ஒரு செயலை அது சரியானது என்று சிந்தித்து செயல்பட்டாலும் அது சமயத்தில் தவறாக முடிந்து விடுகிறது. எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காகத்தான் நடக்கிறது என்பதை நாம் மனதளவில் ஏற்றுக் கொண்டு அந்த தவறான முடிவும் நாம் எடுத்த செயல்பாடுகளில் உள்ள இடர்பாடுகளை நீக்கி நம்மை நல்வழிப்படுத்தவே என்பதை நாம் உணர்ந்து வாழ பழகிவிட்டால் நம் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான்.

VK

Monday, March 14, 2022

#Victory King: அதிர்வுகள்!

Victory King's Status 1061

 "அசரீரி" நமது கண்களுக்குப் புலப்படாத ஒலி வடிவில் மட்டுமே உணரக்கூடிய ஓர் நேர்மறை/எதிர்மறை அதிர்வு. நாம் நம் வீட்டில் ஒரு நிகழ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதோ பேசிக் கொண்டிருக்கும் பொழுதோ பல்லி, தெருவிலிருந்து பிராணிகளின் மூலமாகவோஅல்லது மனிதர்களின் பேச்சு வடிவிலோ ஒரு ஒலி நமக்கு சமிக்ஞையாக கிடைத்து அதன்மூலம் நமக்கு மனதில் ஒரு அதிர்வுஏற்படும். அதனை நாம் ஒலியின் உணர்வுகளுக்கு ஏற்ப நேர்மறை /எதிர்மறை அதிர்வாக எடுத்துக்கொண்டு  நம் சிந்தனைக்கான உடனடி விடை (instant result) அதுதான் என கருதி அதற்கேற்ப செயல்படலாம்.

VK

Sunday, March 13, 2022

#Victory King: அழிவிற்கான அஸ்திவாரம்!

Victory King's Status 1059

ஆணவம், அடாவடித்தனம், அரக்க குணம், இதயமற்ற பண்பு, இப்படிப்பட்ட ஈன குணம் படைத்தவர்கள் வாழ்க்கை இன்று வேண்டுமானால் ஆனந்தமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இந்த குணநலன்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி அணுவணுவாக அவதிப்பட்டு அழிவதற்கான அஸ்திவாரம்!

VK

Saturday, March 12, 2022

#Victory King: தர்மமும் நியாயமும்!

Victory King's Status 1058

உண்மையாகவும் நேர்மையாகவும் தர்ம சிந்தனையோடும் நடந்து அதன் பலனை பெறாத பொழுது.. தர்மம் தோற்பது போல தெரியலாம்; ஆனால் என்றாவது ஒருநாள் சூழ்நிலை மாறும். ஆடியவர் அடங்கும் நேரம் வரும். அன்றுஉண்மையும் தர்மமும்தான் நிச்சயம் வெல்லும். எனவே உண்மைக்கும் தர்மத்திற்கும் என்றும் அழிவில்லை என்பதை உணர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

VK

Friday, March 11, 2022

#Victory King: துணிவே துணை!

Victory King's Status 1057

நமக்கு துரோகம் செய்தவனை அவன் தானாகவே திருந்த ஒரு சந்தர்ப்பத்தை நாம் மனிதாபிமானத்தோடு கொடுக்கும் பொழுது அதனை அவன் தனக்கு சாதகமாக்கி மேலும் மேலும் தவறு செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் துணிவோடு அதனை எதிர்கொண்டு அவனை வீழ்த்த வேண்டும். நாம் எதிர்த்து நிற்கும் துணிவை பெற்று விட்டாலே துரோகிகளின் பலம் தூள் தூளாகி நாம் அவனால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி வெற்றி பெறுவது நிச்சயம்!

VK