Wednesday, August 30, 2023

#Victory King: தன்னடக்கமே தன்னம்பிக்கைக்கு வித்து!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2093🙏

நாம் ஒரு செயலை முழு ஈடுபாடுடன் மகிழ்வுடன் முனைந்து செய்யும்பொழுது அந்த செயலில் சிரமம் சிறிதும் நமக்குத் தெரியாமல் முழு வெற்றியை பெரும்பொழுது நாம் ஆனந்தப்படலாம். ஆனால் அந்த ஆனந்தமே தற்பெருமைக்கு உந்துகோலாகி ஆணவம் தலைக்கேறி விட்டால் நாம் பெற்ற வெற்றிக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே தன்னடக்கம்தான் நம் தன்னம்பிக்கையை ஊக்குவித்து மேன்மேலும் நம் வெற்றிக்கு வித்திடும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Friday, August 25, 2023

#Victory King: நாம்தான் அறிவாளி!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2092🙏

வாழ்க்கையில் கவலைகள் என்பது வந்து செல்லும் ஒரு நிகழ்வு தான். அதனை கையாளும் திறமை நம்மிடம் தான் உள்ளது. கவலைகளை நிரந்தரம் ஆக்கிவிட்டால் நாம் நோயாளி. தற்காலிகமாக மாற்றும் திறமை இருந்தால் நாம் புத்திசாலி. கவலைகளை உடைத்தெறிந்து வாழ்க்கையை எதார்த்தத்தோடு மகிழ்ந்து வாழப்பழகி விட்டால் நாம்தான் அறிவாளி!🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Thursday, August 24, 2023

#Victory King: ஆத்மபலம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2091🙏 

வாழ்க்கையில் நமக்கு இன்னல்கள் வரும் பொழுது அதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக ஏற்றுக் கொண்டு விட்டால் நம் மனம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நாடி நம்மை துவளவிடாமல் நமக்கு ஆத்மபலத்தை கொடுத்து புத்துணர்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Wednesday, August 23, 2023

#Victory King: உண்மைக்கு தோல்வி இல்லை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2090🙏 

நம் உள்ளம் உண்மையின் உறைவிடமாக அமைந்து விட்டால், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், அஞ்சா நெஞ்சமும், வலியோரும் வியக்கும் ஆற்றலும் தானே நம்மை வந்து அடைந்து விடும். எனவே உண்மைக்கு தோல்வியும் இல்லை பொய்மைக்கு நிலையான வாழ்வும் இல்லை என்பதை நாம் உணர்ந்தாலே போதும். 

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Monday, August 21, 2023

#Victory King: பாக்கியம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி மட்டுமே - 2089🙏

அந்திம காலத்தில் கோடிக்கணக்கில் பணம் மட்டும் இருந்தால் போதாது. அன்பான ஆதரவான நிம்மதியான குடும்பம் அமைந்தாலே போதும். நம் வாரிசுகள் நமக்கு 60, 70, 80 வயதுகளில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் என நம் அனுபவ சங்கமத்தை, நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் ஆன்மீகத் திருவிழாவை கொண்டாடி மகிழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பது அரிது. அந்த பாக்கியம் நமக்கும் அமைய இறைவனைப் பிரார்த்திப்போமே!

 🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Tuesday, August 15, 2023

#Victory King: துவேஷம் இல்லாத உள்ளத்துடன் வாழ்வோமே!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2088🙏

இதயங்கள் இணைந்த அன்பும், உணர்வுபூர்வமான பாசமும், எதிர்பார்ப்பில்லா உறவுகளும், மனிதாபிமானத்தோடு கூடிய உதவிகளும் தான் நிலைத்து நிற்கும். எனவே வேஷத்தோடு வாழும் வாழ்க்கையை விடுத்து துவேஷம் இல்லாத உள்ளத்தோடு வாழ்ந்து நம் வாழ்க்கையை சிறக்க செய்வோமே.

 🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰



Saturday, August 12, 2023

#Victory King: நம் வாழ்க்கை நம் கையில்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2087🙏

எது நமக்கு கடைசி காலம், அப்பொழுது என்ன தான் நமக்கு நடக்கும் எனத்தெரியாமலேயே அந்த காலத்தை கருத்தில் கொண்டு சிந்தித்து சிந்தித்து நிகழ்காலத்தை கோட்டை விட்டு விடாமல் குடும்பம் குழந்தைகளோடு மகிழ்வுடன் வாழப் பழகி விட்டால் வாழ்க்கை மன நிறைவுடன் நகர்ந்து செல்லும். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை உணர்ந்து வாழ்வோமே! 

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Thursday, August 10, 2023

#Victory King: கிரீடம் சூட்டுவோம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2086🙏

சமையலின் வாசனை நம்மை ஈர்த்து, அதனை நாம் சுவைத்து உண்ணும் பொழுது, அருமையான சமையல் என்று நாம் புகழ்ந்தால் அது சமைத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் புகழ். அதையே சமைத்தவர்கள் தாங்களே அதனை பறை சாற்றிக் கொண்டால் அது தற்பெருமை. அதுபோல்தான் நம்மை நாமே புகழ்ந்து கொண்டு மார்தட்டிக் கொள்ளாமல் நம் எண்ணங்கள் செயல்கள் மற்றவர்களை ஈர்த்து நமக்கு புகழைத் தேடி தர வேண்டும். மற்றவர்கள் நமக்கு கிரீடம் சூட்டினால்தான் அந்த கிரீடத்திற்கே பெருமை.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Monday, August 7, 2023

#Victory King: வாழ்க்கையே ஒரு ரத யாத்திரை!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2085🙏

ஏனோ பிறந்து விட்டோம் என்று வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையே ஒரு சுமை தான். அந்த சுமையோடு வாழ்வைக் கடப்பது சொல்ல முடியாத துயரம் தான். எனவே இப்பிறவி நமக்கு கிடைத்தது ஒரு பொக்கிஷம் என்று எண்ணி சாதனையை நோக்கிப் பயணம் செய்தால் வாழ்வே ஒரு ரத யாத்திரை தான். வாழ்ந்துதான் பார்ப்போமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Sunday, August 6, 2023

#Victory King: கடலளவு மனசு!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2084🙏

நமக்கு கடலளவு கிடைத்தாலும் மயங்காத மனதையும் கையளவே கிடைக்கும் பொழுதும் கலங்காத உள்ளத்தையும் நாம் பெற்று நமக்கு கிடைத்ததை இறைவன் நமக்கு அளித்த வெகுமதி என்று மனமுவந்து ஏற்று வாழ பழகி விட்டால் துன்பத்திலும் இன்பத்தை காணும் சக்தியை பெற்று துவளாத மனதுடன் மகிழ்வான வாழ்க்கை இறுதி வரை நம்மை விட்டு அகலாது. முயற்சிப்போமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Thursday, August 3, 2023

#Victory King: இதயத்தைத் தொடும் நிஜம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2083🙏

ஒருவர் இறந்த பிறகு அவர் முன் நின்று, சுகங்களை பகிர்ந்து கொண்ட நாம் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று கண்கலங்கி, அன்பையும் பாசத்தையும் அவர்உயிரோடு இருக்கும் பொழுதே செலுத்தி இருந்தால் அந்த ஏக்கம்அவரை பாதிக்காமல்இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருப்பாரோஎன்ற எண்ணம் இன்று வந்து என்ன பலன்? காலம் கடந்த ஞானோதயம். சற்று சிந்தித்தால் இதற்கான விடை நம் இதயத்தை தொடும்!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Tuesday, August 1, 2023

#Victory King: உணர்வுப்பூர்வமான பாசம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2082🙏

நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் நாம் உணர்வது வருத்தம் மட்டுமே. இதனை நாம் எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாத்தியமே. ஆனால் நாம் ரத்த சம்பந்தமான உறவுகளிடம் காட்டும் பாசம் ஒரு தலைப்பட்சமாக இருந்துவிட்டால் அதனுடைய தாக்கம் தான் ஏக்கம். இதனைப் போக்குவதற்கு ஒரே வழி நம் மனநிலை மாற்றம் மட்டுமே. பாசம் என்பது உணர்வுபூர்வமாக வரவேண்டுமேஒழிய எதிர்பார்த்து வருவது சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰