Tuesday, March 28, 2023

#Victory King: பாசமா, பாய்ஸனா?

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2019

அளவுக்கு மீறிய ஆசை, வரம்புக்கு மீறிய செல்வம், தகுதிக்கு மீறிய புகழ், தவறுகளை சுட்டிக்காட்ட முடியாத அளவில் தம் பிள்ளைகளிடம் காட்டும் அன்பும் பாசமும் அனைத்துமே ஆணவத்தின் உச்சத்தை தொடும் விஷத்திற்கு சமம். நம் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே அறியாமல் நம்மை அழிக்கும். "Slow Poison"

Victory king alias V. Krishnamurthy

Monday, March 27, 2023

#Victory King: அன்பு பாராட்டுவோம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2018

தகுதி இல்லாத இடத்தில் அன்பை செலுத்தி விட்டேன், பாசத்தைப் பொழிந்து விட்டேன், அவர்களின் பச்சோந்தித்தனத்தை உணராமல் பழகிவிட்டு இன்று  பரிதவிக்கிறேன் என்று புலம்புவதை நாம் விடுத்து இன்றாவது அதனை புரிந்து கொண்டு நம்மால் தப்பிக்க முடிந்ததே என்று எண்ணி வாழ பழகி விட்டால் நம் மன அழுத்தம் நீங்கி மகிழ்வுடன் வாழ ஏதுவாகும்.

Victory king alias V. Krishnamurthy

Friday, March 24, 2023

#Victory King: மனசாட்சியிடம் கேட்கும் அன்புப் பரிசு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2017

ஊரு விட்டு ஊரு சென்று ஊன்றுகோல் கிடைத்தவுடன் உறவுகளை உதறித் தள்ளலாகாது. அயல்நாடு சென்றாலும் நாம் பிறந்து வளர்ந்த தாய் நாட்டை மறக்கலாகாது. நமக்கு என்னதான் அந்தஸ்து வந்தாலும் நம்மை பெற்றெடுத்து போற்றி வளர்த்த பெற்றோரையும் குடும்பத்தையும் புறக்கணிக்கலாகாது. இவைதான் நாம் நம் மனசாட்சியிடம் கேட்கும் அன்பு பரிசாக இருக்க வேண்டும்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, March 22, 2023

#Victory King: மனதை ஒருமுகப்படுத்துவோம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2016

சமையல் சரியாக வரவில்லை என்று ஆத்திரத்தில் பாத்திரத்தை போட்டு உடைத்தால் நமக்குத்தான் பொருள் நஷ்டம். அதற்கான காரணத்தை உணர்ந்து அமைதியாக செயல்பட்டால் அதனை சரி செய்து விட முடியும். அதுபோல்தான் நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் நாம் ஆத்திரப்படுவதை விடுத்து அமைதியாக சிந்தித்து மனதை ஒருமைப்படுத்தி செயல்பட்டால்தான் அவை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அமையும். உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, March 21, 2023

#Victory King: நல்வாழ்வுக்கு...

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2015

சிரித்துப் பேசி அடுத்தவர்கள் சிந்தனை தம்பக்கம் இழுத்து அவர்களை ஏமாற்றுவதும், நீலிக்கண்ணீர் வடித்து அடுத்தவர்கள் பரிதாபத்தை பெற்று அவர்களை ஏமாற்றுவதும் ஒரு பச்சை துரோகச் செயல். எத்தனக்கும் எத்தன் இவ்வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு இவர்களுக்கு. இல்லையேல் இவர்கள் வாழ்க்கை சிதைவதிலிருந்து தப்பவே முடியாது.

Victory king alias V. Krishnamurthy

Monday, March 20, 2023

#Victory King: மகிழ்ந்து வாழ்வோமே!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2014

இயற்கையை நாம் மதித்து அது வளம் பெறச் செய்யும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் இயற்கையும் நம்மை பேணி பாதுகாக்கும். அதுபோல் நாமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதித்தால்தான் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். வாழ்க்கையும் இனிமையாகும். மற்றவர்கள் நம்மை மதிக்காத இடத்தை நாம் புறம் தள்ளி வைத்தாலே நம் மதிப்பிற்கு பங்கம் விலையாது. எனவே மதிப்பிற்கான மரியாதையை கொடுத்து மகிழ்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, March 17, 2023

#Victory King: சுயநல மனிதர்கள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2013

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" அதுபோல்தான் பண்பற்ற நன்றி கெட்ட மனிதர்களுக்கு அன்பைப் பற்றியும் பாசத்தை பற்றியும், உறவுகளின் புனிதத்தைப் பற்றியும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சுயநலம் மட்டும்தான். எனவே அவர்களை புறந்தள்ளி வாழ்வதே நமக்கு நல்லது.

Victory king alias V. Krishnamurthy

Thursday, March 16, 2023

#Victory King: வாழ்த்தும் உறவுகள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2012

காரண காரியத்திற்காக நம்மோடு உறவாடாமல் நாம் வாழ்ந்தால் மனமார வாழ்த்தி மகிழ்ந்தும், வீழ்ந்தால் கரம் நீட்டி நம்மை தூக்கிவிட முனைந்து நம் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தும், இறுதி வரை நம்மோடு பயணித்து பக்கபலமாக அமையும் உறவுகளே உணர்வு பூர்வமான உண்மையான உறவுகள்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, March 15, 2023

#Victory King: யதார்த்த வாழ்க்கை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2011

புத்தக அறிவை வைத்துக்கொண்டு, தங்கள் கற்பனை வளத்தையும் சேர்த்து மிகைப்படுத்தி அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்பவர்களை விடுத்து அனுபவ அறிவை கொண்டு நம் நலம் விரும்பிகள் கூறும் அறிவுரைகளில் உள்ள யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை நலம் பெறும். சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, March 13, 2023

#Victory King: மனமும், சாட்சியும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2010

சோகத்தையும் துக்கத்தையும் இதயம் அடக்க முயற்சிக்கலாம் உதடுகள் துடித்து சிரிக்க முயலலாம். ஆனால் கண்கள் மட்டும் கலங்கி நின்று நம்மை காட்டிக் கொடுத்து விடும். அதுபோல் நாம் செய்த எந்த குற்றத்தையும் தவறையும் கண்களால் மறைக்க முடியாது. மனசாட்சி நம்மை உறுத்தி பீதியில் நம் கண்களே நம்மை காட்டி கொடுத்து விடும்!

Victory king alias V. Krishnamurthy

Friday, March 10, 2023

#Victory King: வாழும் வாழ்க்கைச் சொல்லும் நம் பாதையை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2009

படித்து விட்டோமே என்ற இறுமாப்பில் அலட்டுவது, பணம் படைத்து விட்டோம் என்ற மிதப்பில் பகட்டுவது, பக்க பலம் இருக்கிறது என்று ஆட்டம் போடுவது இவை எல்லாம் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு மோக பாதைதான்.அறிவோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, March 9, 2023

#Victory King: ஆச்சர்யம் கொடுக்கக் காத்திருக்கும் வாழ்க்கை!

  விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2008

நம் வாழ்க்கையில் நமக்கு புலப்படாத எண்ணற்ற ஆச்சரியங்கள் மறைந்திருக்கிறது. காத்திருக்க பழகி விட்டால் அந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக  நாடி வந்து நம்மை பரவசிக்க செய்யும். எனவே நிகழ்வதை ரசித்து வருவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து மகிழ்ந்து வாழ்ந்தால் வாழ்க்கையே வசந்தம் தான்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, March 8, 2023

#Victory King: மகளிர் தினத்தை மங்களகரமாக கொண்டாட!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2007

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை பெற்ற பிள்ளைகளை பாரபட்சம் இல்லாமல் வளர்க்கும் வரை. மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்ற பெருமைமிக்க மாதர்கள் அத்தவத்தின் மகிமையை நிலைநாட்டும் வரை. பெண்ணுரிமை என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளாமல் உரிமை என்பது அனைவருக்கும் பொது என்பதை மனதில் கொண்டு இந்த மகளிர் தினத்தை மங்களகரமாக கொண்டாட மனமார வாழ்த்தும்...

Victory king alias V. Krishnamurthy

Monday, March 6, 2023

#Victory King: குடும்பம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2006

அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பெற்றோர்கள் அரவணைப்பில் வளரும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் ஒற்றுமை என்ற ஓங்காரம் ஒலித்தால் மட்டுமே குடும்பம் தழைத்து குதூகலத்துடன் கலகலப்பாக அமைவதோடு உறவுகளும் ஒன்றுபட்டு அந்த குடும்பத்தை உறுதிப்படுத்தும்.

Victory king alias V. Krishnamurthy

Saturday, March 4, 2023

#Victory King: உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2005

நாம் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் பொய்களை பேசி உண்மை போல் சித்தரித்து மற்றவர்களை ஏமாற்றி துரோகம் செய்து மகிழலாம். அனைத்திற்கும் நம் மனசாட்சியே ஒரு நாள் மீள முடியாத துன்பத்தை கொடுத்து நரக வேதனையை அனுபவிக்கும் தண்டனையிலிருந்து நாம் தப்பவே முடியாது. 'கெடுவான் கேடு நினைப்பவன்' உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, March 1, 2023

#Victory King: வெற்றி வாழ்க்கை வாகை சூட!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2004

ஒரு செயலை இஷ்டப்பட்டு ஈடுபாட்டுடன் செய்யும் பொழுதுதான் அதில் ஒரு முழுமை கிடைக்கும். பராமரிக்காத பயிர் வகைகளும், பயன்படுத்தாத பொருட்களும், பாசத்தோடு வளர்க்காத பிள்ளைகளது வாழ்க்கையும் பாழ்தான். ஈடுபாடு என்று ஒன்று இருந்தால்தான் இவற்றைக் களைத்தெறிந்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்!

Victory king alias V. Krishnamurthy