Monday, February 28, 2022

#Victory King: காலம் தரும் பாடம்!

Victory King's Status 1047 

நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சிறந்த ஆசானாக இருந்து நம்மையெல்லாம் வழி நடத்துவது காலம். ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு மாற்றத்தையும் ஏமாற்றியவர்களுக்கு தகுந்த தண்டனையையும் கொடுத்து நீதியின் பக்கம் நிலைத்து நின்று அனைவருக்கும் பாடம் புகட்டுவதும் காலம்தான். காலம் நம்மை கைவிடாது என்று முழு மனதுடன் நம்பி காலத்தின் போக்கில் நாம் வாழ்வை கடத்தினால் தளர்வில்லா  மனதுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழமுடியும். முயற்சிப்போமே!

VK

Sunday, February 27, 2022

#Victory King: மனத் தெளிவு!

Victory King's Status 1046

நம்முடைய இன்றைய வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் மூல காரணம் நாம் தான் என்று நம் மனசாட்சி நமக்கு எச்சரித்துவிட்டால் அதனை சரிசெய்து அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர முடியும். இதனை உணராத மனம் தெளிவுபெறாது என்பதுடன் சம்பந்தப்பட்ட அனைவரையுமே அது பாதிக்கும் என்பதையும நாம் நன்கு உணர வேண்டும். சிந்திப்போமே!

VK

Saturday, February 26, 2022

#Victory King: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோமே!

Victory King's Status 1045

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" இது நம் வாழ்க்கைக்கு உகந்த மிகச்சிறந்த தத்துவ பழமொழி. நமக்கு ஒரு நல்ல  வாய்ப்பு கிடைக்கும் பொழுதே அதனை முறையாக மனசாட்சியுடன் அதனைப் பற்றி கொண்டு அற்ப பதர்களை எல்லாம் மனதில் இருந்து நீக்கி சத்துள்ள  நல்ல விஷயங்களை மட்டும் ஏற்று வாழ்க்கையில் முன்னேறுவோமே!

VK

Friday, February 25, 2022

#Victory King: தன் வினை!

  Victory King's Status 1044

குறுகிய மனம் படைத்தவர்கள் தங்கள் குற்றங்களை சிறிதளவும் உணராமல் மற்றவர்கள் மீது பழியைப் போட்டு தங்களை புனிதமாக்கி கொள்வார்கள். "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்". இது பழமொழி மட்டுமல்ல.
"தன் வினை தன்னைச் சுடும்" என்ற தாரக மந்திரத்தின் மூல மந்திரம் தான் அது. இதை உணராத ஜென்மங்கள் மனித பிறவிக்கு ஒரு சாபக்கேடு!

VK

Thursday, February 24, 2022

#Victory King : திறம்பட திறமை!

 Victory King's Status 1043

நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருந்தே தீரும். அதை ஒரு சிலர் தன் திறமையை தானே மழுங்கடித்துக் கொண்டு அடுத்தவனை அழித்து தன் பிழைப்பை நடத்தி ஈனப்பிறவி ஆகிவிடுகிறார்கள்.. ஒரு சிலர் தன் திறமையை அறிவுப் பாதையில் செலுத்தி பயனடைந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள்.. எனவே நம் திறமையை திறம்பட பயன்படுத்தி பயனடைவோமே!

VK

Wednesday, February 23, 2022

#Victory King: பணம் படுத்தும் பாடு!

  Victory King's Status 1042 

பணம் படுத்தும் பாடு. பணம் படைத்தவன் பேராசை பட்டால் அறிவாளியையும் முட்டாளாக்கி நல்லவனையும் கெட்டவனாக்கி நீதியை அநீதியாக்கி மொத்தத்தில் பணத்திற்கு அடிமையாக்கி மனிதனுடைய பண்பை அடியோடு மாற்றிவிடுகிறது. வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம்தான்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகாது என்பதை நாம் நன்கு உணர்ந்து விட்டால் பண்போடு வாழலாம்!

VK

Tuesday, February 22, 2022

#Victory King: வினையும், எதிர்வினையும்!

  Victory King's Status 1041

'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்', 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்'  பழமொழிகள் பொய்க்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த  வினையைப் பொறுத்தே அமையும் என்பதை மனதில் கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்க்கை சிறக்கும்.

VK

Monday, February 21, 2022

#Victory King: சொர்க்க வாழ்க்கை!

  Victory King's Status 1040

வாழ்க்கையில் நாமும் நன்கு வாழ்ந்து அடுத்தவர்களையும் நன்கு வாழவைத்து ஆனந்தப்பட்டால் அதுதான் நமக்கு இப்பிறவியில் கிடைக்கும் சொர்க்க வாழ்க்கை என்பதை நாம் உணர்ந்து விட்டாலே அடுத்தவனை  அழிக்கும் எண்ணம் நம்மிடம் தலைதூக்காது!

VK

Sunday, February 20, 2022

#Victory King: ஒற்றுமையாக வாழ்வோமே!

 Victory King's Status 1039

"கூட்டுக்குடும்பம், ஒரே வீட்டுக்குள் தனித்தனியாக பல குடும்பங்கள், ஒரே கட்டிடத்தில் தனித்தனி வீடுகளில் (Apartment) குடும்பங்கள்"அனைத்திலும் ஒற்றுமை என்னும் ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருந்தால் மட்டுமே ஒளிமயமாகும். இதில் ஏதேனும் ஒரு நச்சு ஊடுருவி விட்டால்கூட நன்கு விளைந்த பயிரை ஒரு  பெருச்சாளி நுழைந்து அழித்த நிலைதான். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் வாழ்ந்தால் மட்டுமே உண்டு நல்வாழ்வு என்பதை உணர்வோமே!

VK

Saturday, February 19, 2022

#Victory King: வாழ்க்கை எனும் பூந்தோட்டம்!

Victory King's Status 1038
 
பூத்து குலுங்கினால் தான் பூஞ்செடிகளுக்கு அழகு.அதுபோல் உறவுகளோடு கூடி மகிழ்ந்தால்தான் குடும்பத்திற்கு அழகு. அதை விடுத்து வெட்டிவிட்ட உறவுகளோடு பறவைகள் கூட அண்டாத பட்டமரம்போல் வாழும் வாழ்க்கை ஒரு சூன்யமே.

VK

Friday, February 18, 2022

#Victory King: செய்த பாவங்களுக்கான தண்டனை!

Victory King's Status 1037

விழுந்தவன் தானாக எழுந்தால் அது அவருடைய தன்னம்பிக்கை. மற்றவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டால் அது மற்றவர்கள் அவர் மேல் வைக்கும் நம்பிக்கை. எழ முடியாமல் தத்தளித்து தவித்து துன்பப்பட்டால் அதுதான் அவர் செய்த பாவ மூட்டைகள். அவரை எழ முடியாமல் அழுத்தி அவர் செய்த பாவங்களுக்கு கிடைக்கும் சம்பளம். எனவே எந்த காலகட்டத்திலும் நாம் செய்த பாவங்களில் இருந்து தப்ப முடியாது என்பது தான் நீதி.

VK

Thursday, February 17, 2022

#Victory King: தாயின் பெருமை!

  Victory King's Status 1036

தர்மதேவதையாக இருக்க வேண்டிய தாயே "வேலியே பயிரை மேய்வது போல்"  தன் பிள்ளைகளிடம் பாரபட்சத்தை காண்பிக்கும்பொழுது அதனால் பிள்ளைகளின் சந்ததியினர் வாழ்க்கையும் பாதிக்குமேயானால் அதனால் ஏற்படும் எதிர்வினையைஒரு தாயால் தாங்க முடியாமல் தலைகுனிவுதான் ஏற்படும். எனவே ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் ஒருமித்த பாசத்தோடு இருந்தால் மட்டுமே தன் தலைமுறையின் வாழ்க்கை வளம் பெறும் என்பதோடு தன் பெருமையையும் நிலைநாட்ட ஏதுவாகும் என்பதை நன்கு உணர வேண்டும்.

VK

Wednesday, February 16, 2022

#Victory King: நம் வாழ்க்கை நம் கையில்!

 Victory King's Status 1035 

நம் நல்ல எண்ணங்களும், நற்செயல்களும்தான் நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு நாம்இடும் உரமாகும். அதுபோல் நாம் செய்யும் தீவினைகளும் அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகங்களும் நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் மெதுவான விஷம்(slow poison). இது நமக்கே தெரியாமல் நம்மை அணுஅணுவாக உருக்கி ஒரு நிலையில் நம்மை ‌அழித்துவிடும். நம் வாழ்க்கை நம் கையில்தான் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோமே!

VK

Tuesday, February 15, 2022

#Victory King: துவண்டோருக்கு உதவ!

Victory King's Status 1034

மற்றவர்களுக்கு பணம் பொருள் கொடுத்து உதவுவது மட்டும் உதவி அல்ல. மற்றவர்கள் நலிந்திருக்கும்பொழுது நயமாக நாலு வார்த்தை பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தாலே போதும். அதுவே ஒரு பேருதவியாக இருக்கும். . நல்ல இதயம் மட்டும் இருந்தாலே போதும் உதவிக்கரங்கள் தானாகவே நீளும் துவண்டோரை தூக்கி நிறுத்த!

VK

Monday, February 14, 2022

#Victory King: நன்மையும் தீமையும்!

Victory King's Status 1033 

நாம் ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனே செயல்படுத்த வேண்டும். அடுத்த நொடி நம் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. அதுபோல் ஒருவருக்குத் தீமை செய்யும்பொழுது உணர்ச்சிவசப்படாமல் சிறிது சிந்தித்து விட்டால் நமது மனம் சாந்தம் அடைந்து தீமை செய்வதை தவிர்க்கவும் வாய்ப்பும் உண்டு. முயற்சித்து தான் பார்ப்போமே!

VK

Sunday, February 13, 2022

#Victory King: வாழ்க்கையின் நிதர்சனம்!

 Victory King's Status 1032
 
நாம் வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் நம் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம். நம் பிறப்பில் மரணத்தை தவிர அனைத்துமே நிச்சயமற்ற தன்மை தான் என்பதையும் இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதையும் நாம் நன்கு உணரும் பொழுதுதான் நாம் துவளாத வாழ்வை பெற முடியும்.

VK

Saturday, February 12, 2022

#Victory King: குடும்பம் சுபிக்‌ஷமாக இருக்க!

 Victory King's Status 1031 

ஒரு குடும்பத்தில் ஒரு நல்லவர் இருந்தால்கூட அவர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை நல்வழிப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் குடும்பத்தில் அனைவருமே மனசாட்சியற்றவர்களாக இருந்தால் அவர்கள் பிள்ளைகளும் அதை பார்த்து வளர்ந்து அனைவராலும் வெறுக்கப்படுவார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்தால் மட்டுமே நம் பிள்ளைகள் வாழ்வு மகிழ்வுடன் 😌😄😁 அமையும்.

VK

Friday, February 11, 2022

#Victory King: ஆளும் வளரணும், அறிவும் வளரணும்!

 Victory King's Status 1030

வயது வளரவளர அத்துடன் நம் அறிவும் முதிர்ச்சியடைய வேண்டும். அப்பொழுது தான் தினம் தினம் காலம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தை மனம் முறையாக ஏற்று அதற்கேற்ப நம் வாழ்வை வழிநடத்திச் செல்ல ஏதுவாகும். அறிவு முதிர்ச்சி என்பது நம் சிந்தனையும், செயலையும் சார்ந்தது என்பதால் அதனை நாம் செவ்வனே செயல்படுத்தி மகிழ்ந்து வாழ்வோமே! 

VK

Thursday, February 10, 2022

#Victory King: சந்ததிக்கான சொத்து!

 Victory King's Status 1029

நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் அறநெறியுடனும், எவர் குடும்பத்தையும் அழித்து  பாவமூட்டைகளை சேர்க்காமலும் வாழ்ந்தாலே நம் சந்ததியினர் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதுதான் நாம் நம் சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. நம் சந்ததியினர் நல்வாழ்விற்க்கு நம் வாழ்க்கை ஓர் முன்னுதாரணமாக இருக்கட்டுமே!

VK

Wednesday, February 9, 2022

#Victory King: உள்ளத்தில் நல்ல உள்ளம்!

 Victory King's Status 1028

மரணம் யாரையும் விட்டு விடாது என்றாலும் நல்ல மனிதர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் அவர்கள் இறந்த பின்பும் நம் அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள். தீயவர்கள் நல்வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றினாலும் அவர்கள் தினம் தினம் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா” உணர்வோமே! 

VK

Tuesday, February 8, 2022

#Victory King: சாது மிரண்டால்!

 Victory King's Status 1027 

ஒருவர், அடுத்தவர் தமக்கு செய்யும் அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார் என்றால் அவரை ஏமாளிகள் என்றோ அதனை அங்கீகரிக்கிறார் என்றோ நினைத்துவிட வேண்டாம். அது அவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம். இல்லையேல் அக்கிரமங்கள் அத்து மீறும் பொழுது அதன் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது என்பதுதான் சரித்திரம்.  'சாது மிரண்டால் காடு கொள்ளாது'!

VK

Monday, February 7, 2022

#Victory King: சுயமாக செயல்படுவோமே!

 Victory King's Status 1026

மற்றவர்களைப் பார்த்து நாம் நம் சுயத்தை இழந்தால் நம் சந்ததியினர்கள் கூட நம்மை மதிக்க மாட்டார்கள். அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய பாவமும் நமக்குத்தான் வந்துதடையும். எனவே நாம் நாமாகவே இருந்து நம் கவுரவத்தையும் காப்பாற்றி, நம் சந்ததியினரையும் நல்வழிப்படுத்தி வழி நடத்துவோமே. பெரியவர்களாகிய நாம் பெரியவர்களாகவே இருந்து நம்மை பெருமைபடுத்திக்கொள்வோமே!

VK

Sunday, February 6, 2022

#Victory King: பிறவி குணமும், பிறவிப் பயனும்!

 Victory King's Status 1025

ஒருவருடைய பிறவி குணத்தை நம்மால் மாற்ற முடியாது. அவர் அவர்களாக வாழ்க்கையில் அடிபட்டு திருந்தினால்மட்டுமே அது சாத்தியம். எனவே மற்றவர்களை திருத்த முயல்கிறேன் என்று நம் நேரத்தை வீணடிக்காமல் நமக்கு இறைவன் இப்பிறவியில் என்ன வேஷம் கொடுத்திருக்கிறானோஅதனை செவ்வனே செய்து அதில் சாதனை படைத்து நம் வாழ்க்கையை வசந்த படுத்திக்கொண்டு இப்பிறவியின் பயனை அடைவோமே!

VK

Saturday, February 5, 2022

#Victory King: காலமும் முயற்சியும்!

  Victory King's Status 1024

காலம் நம் கையில் எண்ணம் நம் மனதில் முயற்சி நம் செயலில் இவை மூன்றையும் நாம் விவேகத்துடனும் நேர்மறையுடனும் பயன்படுத்துவோமேயானால் வெற்றி என்பது நம் கண்முன்னே. முயன்றால் நம் வாழ்க்கை ஒளிமயமே!

VK

Friday, February 4, 2022

#Victory King: ஆறாவது அறிவு!

 Victory King's Status 1023

கிடைப்பதற்கரிய ஆறாவது அறிவை பெற்ற மனிதனுக்கு இணை மனிதன்தான். எனவே பிறரை துன்புறுத்தல் பிறர் பொருளை அபகரித்தல் பிறர் வாழ்க்கை சுதந்திரத்தை அழி த்தல் போன்ற கொடூர செயல்களை விடுத்து மனித பண்பிற்கு ஏற்ற பிறரிடம் அன்பு காட்டுதல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் செய்தலும் நினைத்தலும். இல்லாதிருத்தல் மனித நேயத்தோடு வாழ்தல் போன்ற நற்பண்புகளுடன் வாழ்ந்து நம் பிறப்பின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும். நமக்குக் கிடைக்கபெற்ற பணமும் பட்டமும் மட்டும் நம்மை மனிதன் ஆக்காது என்பதை உணர்ந்து செயல்படுவோமே!

VK

Thursday, February 3, 2022

#Victory King: மனிதம் போற்றுவோம்!

  Victory King's Status 1022

ஒருவர் உள்ளத்தில் சிறிதளவாவது ஈரம் இருந்தால்தான் அவர்கள் நாவிலிருந்து இன்சொல்லும் மனதில் நயவஞ்சகமற்ற எண்ணங்களும் தோன்றும். கல்மனம் உள்ளவர்கள் அடுத்தவர் நெஞ்சைப் பிளந்து அதிலும் ஆனந்தம் கொள்ளும் அரக்கர்களாகத்தான் இருப்பார்கள். நாம் மனிதர்களாக இருக்க நம் மனதை பக்குவப்படுத்துமே!

VK

Wednesday, February 2, 2022

#Victory King: நயமாக உதவுவோம்!

 Victory King's Status 1021

நாம் ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அது ஒரு நல்லவருக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று பயன் அடைந்தால் அதில் நமக்கு ஓர் ஆத்ம திருப்தி ஏற்படும். அதுவே ஒரு இறக்கமற்றவருக்கு சென்றடைந்தால் அவரின் இருமாப்பு மேலும் அதிகமாகி அது நமக்கே தீவினையாகத்தான் முடியும். எனவே உதவி என்றாலும் உற்றுநோக்கி செய்வோமே!

VK

Tuesday, February 1, 2022

#Victory King: பார்வை!

 Victory King's Status 1020

கண்பார்வை அற்றவர்கள் உண்மையிலேயே குருடர்கள் இல்லை.மனிதநேய கரங்கள் மகிழ்வுடன் அவர்களை தாங்கி பிடித்து பார்வையற்ற கண்களையும் பரவசமடையச் செய்ய காத்திருக்கின்றனர். ஆனால் தன் குற்றங்களை உணராத குருடர்கள் அனைவராலும் உதாசினப்படுத்தப்பட்டு தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காது படுகுழியில்தான் விழுவார்கள்.

VK