Monday, February 27, 2023

#Victory King: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2003

கெட்டுப்போன உணவை குப்பையில் கொட்ட வேண்டியதுதான். அதுபோல் கடந்த காலத்தில் எதிர்மறையாக நிகழ்ந்த செயல்களை மனதில் இருந்து தூக்கி எறிந்தால்தான் எதிர்காலத்தைப் பற்றி நாம் செவ்வனே சிந்தித்து நிகழ்காலத்தை மகிழ்வுடன் கடத்த ஏதுவாகும். எனவே 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கு ஏற்ப நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை நம் உயிருடன் இருக்கும் வரை செம்மைப்படுத்தி வாழ முயல்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, February 25, 2023

#Victory King: மனிதம் போற்றுவோம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2002

நம் எதிரிகளை கூட மன்னித்து ஒரு கட்டத்தில் நட்பு வட்டத்தில் கொண்டு வருவது சாத்தியம். நம்பிக்கை துரோகிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அவர்களுக்கு நம்ம இதயத்தையே கொடுத்தாலும் நம் முதுகில் குத்துவதில்தான் குறியாக இருப்பார்கள். நம்பிக்கை துரோகம் என்பது கொலை குற்றத்துக்கு சமம். எனவே அத்தகைய கொடூர குணம் கொண்டவர்களிடமிருந்து காத தூரம் தள்ளி இருந்தால் மட்டுமே நாம் தப்ப முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

#Victory King: மனிதம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2001

கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை நாம் இனம் கண்டு கொள்ளாது இருந்ததையாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குழி பறித்த பிறகும் கூடவே இருந்து துரோகம் செய்யும் துரோகிகளையும் நாம் இனம் கண்டு கொள்ளவில்லை என்றால் நம்மை இறைவனால் கூட காப்பாற்ற முடியாது. நாம் விழித்தெழுந்தால்தான் நமக்கு விடிவு மோட்சம்.

Victory king alias V. Krishnamurthy

Thursday, February 23, 2023

#Victory King: வாழ்வெனும் பூங்காவனம்!

  விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2000

மலர் தோட்டங்களை நன்கு பராமரித்து பாதுகாத்தால்தான்அவை வண்ண மலர்களால் அலங்கரித்து நம்கண்ணிற்கு குளுமையையும் இதயத்திற்கு இதமான சுகத்தையும் அளிக்கும்.அதுபோல் இறைவன் நமக்கு அளித்த வாழ்க்கை என்னும் சோலையை பூங்காவனமாக்குவதும் பாலைவனமாக்குவதும் நமது எண்ணங்களிலும் செயல்களிலும்தான் உள்ளது. எனவே நல்லதையே எண்ணி நற்செயல்களால் வாழ்க்கையை அலங்கரித்து அதை ஒரு பூங்காவனமாக மாற்ற முயல்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, February 22, 2023

#Victory King: யதார்த்த வாழ்க்கை!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1199

அன்பைப் பகிர்ந்தால்தான் பாசம் மலரும். ஆசையை வெளிப்படுத்தினால்தான் விரும்பியது கிடைக்கும். இயற்கை ரசித்தால்தான் இதயத்திற்கு சுகம். ஈகோவை விடுத்தால்தான் இயல்பான வாழ்க்கை. உண்மையை உணர்ந்தால்தான் உறவுக்கு வலிமை. யதார்த்தமாக வாழ்ந்து நம் வாழ்க்கை மலர இவற்றினை கடைபிடித்துதான் பார்ப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, February 21, 2023

#Victory King: வாழ்க்கை சொர்க்கமாக!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1198

ஏதோ பிறந்து விட்டோமே வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று வாழ்ந்தால் வாழ்க்கையே ஒரு சுமைதான். எனவே நமக்கு கிடைத்த இந்த  வாழ்க்கை மீண்டும் கிடைக்கப் போவதில்லை. இது நமக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்று எண்ணி முழுமையாக முனைந்து வாழ நாம் முயற்சித்து விட்டால் நம் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் ஆகிவிடும். சிந்திப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, February 17, 2023

#Victory King: முயற்சி எனும் இலக்கு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1197

நம்மால் முடியும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு, விழுந்தால் எழுவேன் என்ற தீவிர தன்னம்பிக்கையோடு அடுத்தவர்களை எதிர்பாராமல் வாழ்க்கை என்னும் ஏணியில் ஏறிச் சென்றால் வெற்றி என்பது நிச்சயம். குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் அதற்கு வேண்டியது கிடைக்கும் வரை. அதுபோல் நாம் எண்ணிய இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருந்து தன்னம்பிக்கையோடு முயற்சி என்ற உந்துவிசையை உற்சாகத்தோடு செயல்படுத்தி நம் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெறுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, February 16, 2023

#Victory King: நேசிப்போம் உயிருள்ள வரை!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1196

நாம் தொலைபேசியில் ஒருவரை அழைக்கும் பொழுது நம் அழைப்பை பார்த்துவிட்டு மற்றவர்களிடம் கொடுத்து 'தான்' இல்லை என்று சொல்ல சொல்வதும் அப்படியே அவரே அந்த அழைப்பை ஏற்று விட்டால் பிஸியாக இருக்கிறேன் பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்வதுமான உறவுகளை விட யார் நம்மை அழைத்து மனது சரியில்லை அதனால் தான் பேசுவதற்காக கூப்பிட்டேன் என்று கூறும் உறவுகள்தான் உண்மையான ஆத்மார்த்தமான உறவுகள். எதையுமே நம்மிடம்எதிர்பார்க்காமல் நம்மை உயிருள்ளவரை நேசிக்கும் அன்பு உள்ளங்கள்.

Victory king alias V. Krishnamurthy

Monday, February 13, 2023

#Victory King: உறவுகள் கானல் நீரல்ல!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1195

உறவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் உள்ளங்கள் ஒருமித்ததாக இருக்க வேண்டும். நன்மையோ தீமையோ இன்பமோ துன்பமோ பகிர்ந்து பாசத்தை பசை போல் ஒட்டி ஒருவருக்கொருவரை பிரிக்க முடியா  வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் ஒரு "கானல்நீர்" தான்.

Victory king alias V. Krishnamurthy

Sunday, February 12, 2023

#Victory King: பாவ புண்ணிய கணக்குகள்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1194

நாம் செய்த நன்மைகள், தான தர்மங்கள், புண்ணியங்கள் அனைத்தும் எப்படி தக்க சமயத்தில்நம்மை நாடி வந்து காப்பாற்றி வாழ்க்கையை வளம்பெறச் செய்யுமோ இதுபோல் நாம் செய்யும் துரோகங்களையும் காலம் கணக்கில் வைத்து நாம் எங்கு ஓடி ஒளிந்தாலும் தேடிவந்து மீள முடியாத துயரத்தை தண்டனையாக கொடுத்தே தீரும். தப்பவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

Victory king alias V. Krishnamurthy

Wednesday, February 8, 2023

#Victory King: நிம்மதியான வாழ்க்கைக்கு!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1193

சோகமும் ஒருநாள் சுகமாகலாம், கவலைகளும் ஒருநாள் கலைந்து செல்லலாம், இரவும் பகலும் மாறி மாறி வருவது போல்தான் வாழ்க்கையில் நன்மையும் தீமையும். எனவே நம் உயிரே நமக்கு நிரந்தரம் இல்லாத நிலையில் எதுவுமே நிரந்தரமானது கிடையாது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் நிம்மதியாக வாழ்க்கையை கடந்து செல்லலாம்.

Victory king alias V. Krishnamurthy

Saturday, February 4, 2023

#Victory King: காலதேவனின் கணக்கு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1192

பொய் சொல்லியே அடுத்தவர்களை கெடுத்து ஏமாற்றிப் பிழைத்தல், மனசாட்சியே இல்லாமல் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்தல் போன்ற பாவ காரியங்களை செய்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். காலதேவன் கணக்கிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது. செய்த பாவம் அனைத்திற்கும் தாங்க முடியாத துயரத்தை அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் நியதி.

Victory king alias V. Krishnamurthy

Thursday, February 2, 2023

#Victory King: கிளைகளை வெட்டாதீர்கள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 1191

உறவுகளையும் சுற்றத்தையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும்அண்ட விடாமல் சுயநல செருக்கில் மற்றவர்களை மதிக்காது மட்டுமில்லாமல் அடுத்தவர்களுக்கு கேடு நினைப்பவர்களின் நிலை கிளைகளை எல்லாம் வெட்டப்பட்ட யாருக்கும் பயன்படாத பட்டமரத்திற்குத்தான் சமம்.

Victory king alias V. Krishnamurthy