Friday, April 30, 2021

தொலைநோக்குப் பார்வை!

Status 2021 (119)

நாம் ஒரு செயலை செய்ய நினைத்தால் எதற்காகவும், அதை தாமதிக்காமல் உடனே அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே ஒரு புது செயலில் ஈடுபடும் பொழுது அதற்கு ஓர் எதிர்மறை பேச்சுக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது நேற்றைய விளைவுகளை எல்லாம் மனதில் கொள்ளாது நம் இன்றைய செயலிலின் நாளைய நிலை என்ன என்பதை மட்டும் சிந்தித்து சிறப்பாக செயல்பட்டால் நாம் எடுத்த செயலில் வெற்றி என்பது நிச்சயம். எப்பொழுதும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட்டு நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

Victory King (VK)

Thursday, April 29, 2021

நம்பிக்கை!

Status 2021 (118)

நம்பிக்கையை இழந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று மனம் உடைந்து போகாமல் இது முடிவு இல்லை, ஒரு சிறிய தடங்கல் தான் என்றெண்ணி நாம் முன்னேற வேண்டும் எத்தனை கைகள் நம்மை கை விட்டாலும் நம் நம்பிக்கை நம்மை கை விடாது! எனவே, எந்த தருணத்திலும் நாம் நம்பிக்கையை தளர விடாமல் தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!

Victory King (VK)

Wednesday, April 28, 2021

ஆலோசனை!

 Status 2021 (117)

நாம் ஒருவருக்கு ஆலோசனை சொல்லும் பொழுது எதிராளியின் குணமறிந்து திறனறிந்து சொல்ல வேண்டும். அதிலும் எதிராளிக்கு நாம் ஆலோசனை கூறும் அளவிற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியே ஆலோசனை கூறும் பொழுது ஆலோசனை பெறுபவர்கள் மனம் புண்படாமலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத படியும் பண்போடு பகிர்ந்து அவரை பக்குவப்படுத்த வேண்டும். எனவே ஆலோசனை என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் எதுவும் சொல்ல முடியுமானால் சொல்லலாம். இல்லையேல் அவர்கள் கூறும் குறைகளை காதுகளால் கேட்டு மௌனம் சாதிப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் பேர் உதவியாகும்!

Victory King (VK)

Monday, April 26, 2021

வாழ்க்கையின் போக்கில் வாழ!

 Status 2021(115) 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!

கண்ணதாசன் பாடல்

ஒரு சிலர் தன் கடந்த கால வாழ்க்கையை மனதிலேயே நினைத்து நினைத்து "நாம் அனைவருக்கும் ஓடி ஓடி உழைத்தோமே நல்ல விஷயங்கள் எல்லாம் சிறப்பாக நடத்தி வைத்தோமே இன்று நமக்கு நல்ல வசதிகள் இருந்தும் நம்மால் நம் குழந்தைகளுக்கு அப்படி எல்லாம் செய்து பார்க்க முடியவில்லையே" என்ற ஆதங்கத்தை விடுத்து அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நம்மிடம் மிக பாசத்தோடும் அன்புடன் பேசி மகிழ்கிறார்களே அதனைக் கேட்டு மகிழ நமக்கு மனோதிடமும் இருக்கிறதே என்பதை நினைத்து மகிழ்ந்து நமது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து நம் உடலை பேணி காத்து உற்சாகத்துடன் இருப்போமே!

Victory King (VK)

Saturday, April 24, 2021

நம் மனதை கட்டுப்படுத்த!

 Status 2021 (113)

மற்றவர்கள் நம்மை பாராட்டுவதற்கும் பழி சொல்வதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்தால் நம்மால் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற முடியாது. அத்தகைய சமயங்களில் நாம் செவிடர்களாய் மாறி அதனைப் பொருட்படுத்தாமல் நம் முயற்கையில் நாம் தெளிவாக இருந்து பீடு நடை போட்டால் வெற்றி என்பது நமக்கு நிச்சயம். நம் மனதை நாம் கட்டுப்படுத்த இதுவும் ஒரு யுக்தியமாகும். இதனை முயற்சித்து வெற்றி பெற்றால் முன்னேற்றம் நம் கையில்!

Victory King (VK)

Friday, April 23, 2021

வாய்ச் சவடால்!

 Status 2021 (112)

மரத்தில் ஏற முடியாத மனிதன்  தான் ஒரு போதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசிக் கொண்டிருப்பதைப் போல், தான் எந்தவித முயற்சியும் செய்யாமல் எந்த செயலிலும் ஈடுபடாமல் தான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருவது, மற்றவர்கள் அதை நம்பும் வரை அவருடைய காலம் ஓடும். மற்றவர்கள் அவருடைய உண்மை நிலை உணரும் பொழுது தலைகுனிந்து ஓடி ஒளியும் நிலைதான் வரும். எனவே வாய்ச் சவடாலை விடுத்து ஆக்கப்பூர்வமான செயலில் நாம் முழுமையாக ஈடுபட்டு நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுதான் நமக்கு கௌரவம்.

Victory King (VK)

Thursday, April 22, 2021

அனுபவ ஆசிரியர்!

Status 2021 (111) 

எல்லாவற்றிற்கும் பயந்து பயந்து யோசித்துக் கொண்டிருப்பதை விட நாம் முயற்சித்துப் பார்த்தால், கிடைத்தால் வெற்றி... இல்லாவிட்டால் அனுபவம். இரண்டுமே வாழ்க்கைக்கு தேவைதானே. அனுபவம் என்பது ஒரு வித்தியாசமான ஆசிரியர். பாடத்தைக் கற்றுக்கொடுத்து பரிட்சை எழுத வைப்பவர் ஆசிரியர். ஆனால் அனுபவம் என்ற ஆசிரியர் பரீட்சை எழுதிவிட்டு பாடத்தைக் கற்றுக் கொடுப்பவர். எனவே நாம் முயற்சியை செய்து அதன்மூலம் நமக்கு கிடைக்கும் பாடத்தை சரியான வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் தெளிவு பெறுவோமே!

Victory king (VK)

Wednesday, April 21, 2021

உடல் பலமும் மனோபலமும்!

 Status 2021 (110)

பலம் உங்கள் உடலில் இருந்து வரவதில்லை; அது உங்கள்  மனதில் இருந்து பிறப்பது! - மகாத்மா காந்தியடிகள்.

மனோபலம்தான் மனித பலம் என்பதை நாம் நன்கு உணர்ந்து மனதை தூய்மையாக வைத்து அதை ஊக்கப்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற அளவுக்கு திடமான மனதை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். 

Victory King. (VK)

Tuesday, April 20, 2021

மனிதாபிமானம்!

 Status 2021 (109)

யார் யாரிடம் எப்படி பழக வேண்டும் எந்த அளவுக்கு பழகவேண்டும் என்பதிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள முடிகிறது. தகுதி பார்க்காமல் எல்லோரிடமும் சமத்துவமாக பழகும்பொழுதும் சரி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் உயர்மட்ட அதிகாரிகள் நமக்குக் கீழ் பணிபுரிபவர்கள் என தகுதி பார்த்து பழகும் போதும் சரி சில இடர்பாடுகளை சந்திக்கத்தான் நேரிடும். இதனை நாம் பாரபட்சமில்லாமல் சமாளிப்பது தான் மனிதநேயம். யாரிடம் பழகினாலும் எப்பொழுதும் மனிதாபிமானத்தோடு பழகுவதுதான் பண்பு. அனைவரையும் அரவணைப்போம் பண்போடு வாழ்வோம்!

Victory King. (VK)

Sunday, April 18, 2021

நற்குணங்கள் செய்யும் நற்பயன்கள்!

 Status 2021 (108)

அடுத்தவர்கள் இன்னலில் இருக்கும்போழுது உபகாரம் செய்தல் நலிந்தோர்க்கு நன்மை செய்தல் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று பண்போடு பேசி அன்போடு உபசரித்து விருந்தளித்தல் உறவினர்களை அரவணைத்தல் இவை அனைத்தும் பண்பானவர்களுக்கான நற்குணங்கள். இந்த நற்குணங்கள்தான் நம் கூடவே கடைசி வரையில் இருந்து நமக்கு பெருமை சேர்ப்பதுடன் நம் சந்ததியினரையும் அதன்படி வழிநடத்தி அவர்கள் வாழ்க்கையையும் வளமாக்கும். நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் இந்த சொத்து பொன் பொருள் சேர்த்து வைப்பதைவிட சிறந்தது. நம் குடும்பம் தழைக்க முயற்சிப்போமே!

Victory King (VK)

Saturday, April 17, 2021

விவேகமான விவேக்!

 Status 2021 (107)

வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து தன்னுடைய திறமையை கண்டறிந்து அதனை முறையாக  வெளிப்படுத்தி ஒரு சிறந்த நாகரிக நகைச்சுவை நடிகராகவும் பொதுநல பார்வையுடனும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தை பெற்று கடைசிவரையில் அதனை நிலைநாட்டி வாழ்ந்து காட்டிய ஒரு சிறந்த பண்பாளர் சிறந்த மனிதர் இன்று நம்மை விட்டு பிரிந்த விவேக்.  இரண்டு நாட்கள் முன்பு நாம் பார்த்த விவேக் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் புகழ் உலகளாவி உள்ளது. இறந்த பிறகும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விவேகின் மரணம்தான் முன்னுதாரணம். இதனை பார்த்த பிறகாவது திருந்தாத ஜென்மங்கள் திருந்தி வாழ்ந்தால் நல்லது. எனவே நமக்கு கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை பெருமையுடன் வாழ்ந்து இறந்த பிறகும் அழியாப் புகழோடு விளங்க முனைவோமே!

Victory King (VK)

Friday, April 16, 2021

நல்லதையே நினைப்போம், நல்லவற்றையே செய்வோம்!

 Status 2021 (106)

உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பில் விடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோல நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள். ஆனால் வீழ்ந்து விட மாட்டார்கள்.

கிருஷ்ண பரமாத்மா

நாம் அந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி எந்த நிலையிலும் நாம் மாறாத மனதோடு நன்மைகளையே செய்யும் பொழுது நாம் நல்லவன் என்ற நிலைப்பாடு நம்மை விட்டு அகலாது. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் புழுதிக்கே என்பார்களே அதை மனதில் கொண்டு எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் நலமுடன் வாழ்வோம்!

Victory King (VK)

Thursday, April 15, 2021

திறமையும் முன்னேற்றமும்!

 Status 2021 (105)

அன்பு பாசம் நேர்மை அனைத்தையும் நம்மிடம் வைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் அதை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று யோசித்து எதிர்பார்க்க வேண்டும். இல்லையேல் எதிர்பார்த்து தோற்று விட்டோமே மன உளைச்சல் நமக்குத்தான் இருக்குமே ஒழிய அவர்கள் அதை சிறிதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். எதிர்பார்ப்பு என்பது ஒரு மகிழ்வான செயல்தான். நாம் ஒன்றை எதிர்பார்த்து அது நடந்துவிட்டால் நாம் அந்த சமயத்தில் மகிழ்வதை விட அதனை எதிர் பார்த்த பொழுது கிடைத்த மகிழ்ச்சிதான் பெரிதாக இருக்கும். எனவே எதிர்பார்ப்பு என்பது நம் உள்ளக் கிளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியத்திற்கு புத்துணர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். நம் தகுதிக்கேற்ப திறமைக்கேற்ப எதனையும் எதிர்பார்த்து செயல்பட்டால் அதில் வெற்றி என்பது நிச்சயம். முயற்சிப்போம் முன்னேறுவோம்.

Victory King (VK) 

Wednesday, April 14, 2021

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 Status 2021 (104)

நம் எண்ணம் போல்தான் நம் வாழ்க்கை. நம் செயல் போல்தான் நம் சக்தி. எனவே நாம் நல்லவற்றையே எண்ணுதலும், மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காமலும், மற்றவர்கள் வாழ்க்கையை அழிக்காமலும் நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் உரிய பலன் கிடைத்து நாம் வாழ்க்கையில் சிறந்து விளங்குவோம். எனவே நாம் மனத்தூய்மையுடன் நல்ல சிந்தனைகளையே சர்வகாலமும் நினைத்து நலம் பெறுவோமே. அனைவருக்கும இந்த ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு பிரகாசத்துடன் ஜொலிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்தும்...

Victory King (VK)

Tuesday, April 13, 2021

நேர்மையே உயர்வு!

 Status 2021 (103)

தெரிந்தே ஒருவர் பிழைசெய்வதும் அதனையே சாதிப்பதும், தவறை உணர மறுப்பதும் நேர்மையின்மை ஆகும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒருவர் தனது கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மாற்றிகொள்வதும், அதனையே நியாயமென கூற முனைதலும் கூட நேர்மையின்மையின்மைதான். நேர்மையாக இருந்து எதை சாதித்து விட்டாய் என்று தர்க்கவாதிகள்  நம்மிடம் கேட்கும்பொழுது நாம் தைரியமாக சொல்ல வேண்டும், நேர்மையாக இருப்பதே பெரிய சாதனைதான் என்று. சொல்லில் நேர்மை இல்லையென்றால் செல்லாக்காசாகிவிடுவோம். செயலில் நேர்மை இல்லை என்றால் எல்லோராலும் தூற்றப்படுவோம். நேர்மை ஒன்றுதான் நம்மை வாழ்நாள் முழுவதும் நம் கூடவே இருந்து நம்மை காப்பாற்றி தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். சொல் செயல் அனைத்திலும் நேர்மையைக் கடைபிடிப்போம். தலைகுனிவை தவிர்ப்போம்!

Victory King (VK)

Monday, April 12, 2021

கவலையே போ...போ...

 Status 2021 (102)

கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது. கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையை நம் உள்ளத்திலே வைத்து பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழ்க்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். எனவே கவலையை உச்சகட்டத்திற்கு செல்லவிடாமல் நம் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களிடமோ நண்பர்களிடமோ மனம் விட்டுப் பேசியோ, நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் மனதை முழுமையாக செலுத்தியோ கவலையைத் திசை மாற்றி மறக்கச் செய்யலாம். நம் மனதால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. முயற்சித்துத்தான் பார்ப்போமே!

Victory King (VK)

Sunday, April 11, 2021

அன்பும் அறமும்!

 Status 2021 (101)

மற்றவர்கள் நம் பொறுமையை கேவலமாக்கும் போதும் நம் அன்பை அசிங்கப்படுத்தும் போதும் அமைதி காப்பது அவர்களை தூக்கி வீச தெரியாமல் அல்ல. பொறுமையாக இருந்து அவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கத்தான். நாம் அமைதி காத்தும் அவர்கள் திருந்தாதோடு மட்டுமல்லாமல் நம்மை  முட்டாள் என்று எண்ணி மேலும் மேலும் நம்மை கேவலப்படுத்தும் பொழுது, நாம் வெகுண்டு எழுந்தால் அவர்களால் அதன் வேகத்தை தாங்க முடியாமல் தூள் தூள் ஆகிவிடுவார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு, அமைதிக்கும் அளவுண்டு என்பதை அவர்கள் உணர்ந்தால் நல்வாழ்வு உண்டு இல்லையேல் அவர்கள் செய்த பாவத்திற்கு பரிகாரம் அழிவுதான். அறம் காப்போம் அமைதி காப்போம் இறையருள் பெற்று நலமுடன் வாழ்வோம்!

Victory King (VK)

Saturday, April 10, 2021

இன்பமும் துன்பமும்!

 Status 2021 (100)

இன்று நமக்கு ஏற்படும் துன்பங்களை கண்டு பயந்து ஓடினால் நாளை நமக்கு வரும் இன்பங்களை வரவேற்க நாம் இருக்க வேண்டாமா? எனவே நமக்கு துன்பங்கள் வரும்போது அதை கண்டு மிரளாமல் துன்பத்தைத் தொடர்வது இன்பம்தான் என்பதை மனதில் கொண்டு இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடுவதில் கவனம் செலுத்தினால் இன்று நடக்கும் துன்பத்தின் வேகம் குறைந்து அதனை எதிர்கொள்ளும் சக்தியையும் நாம் பெற்று நாளை வரும் இன்பத்திற்கு தோரணம் கட்டி மாலையுடன் காத்திருந்து அதனை வரவேற்க தயாராகி விடுவோம். எனவே நாம் துன்பத்தை புறம்தள்ளி வருகிற இன்பத்தினை முழுமையாக அனுபவிப்போமே!

Victory King (VK)

Friday, April 9, 2021

நேற்றும், இன்றும் நாளையும்!

 Status 2021 (99)

நாம் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் நேற்று நடந்ததிலிருந்து கற்றுக்கொண்டதை இன்று சிறப்பாக செய்து நாளை இதைவிட சிறப்பாக அமைய என்ன செய்யலாம் என்று யோசித்து அதில் கவனம் செலுத்தினால், இன்றும் நமக்கு சிறப்பாக அமையும், நாளையும் சிறப்பாக அமையும். அதை விடுத்து நேற்று இடர்பாடுகள் ஏதேனும் இருந்திருந்தால் அதனையே நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் இன்றும் நமக்கு சிறப்பாக அமையாது நாளையும் சிறப்பாக அமைவது கடினம். எனவே நாம் செய்ததின் சிறப்பை மட்டும் சிந்தித்து செயல்பட்டு மேலும் நாம் சிறப்பாக வாழ முயல்வோமே!

Victory King (VK)

Thursday, April 8, 2021

துரோகத்தின் உச்சம்!

 Status 2021 (98)

துரோகம் செய்பவர்கள் கூட ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் துரோகத்தைச் செய்துவிட்டு சற்று கூட குற்ற உணர்வு இல்லாமல் திரிபவர்கள் எக்காலத்திலும் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் விஷப்பாம்புக்மகு ஒப்பாவார்கள். நல்ல பாம்பு கூட அதனை நாம் சீண்டினால் ஒழிய அது நம்மைத் தீண்டாது. ஆனால் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் துரோக சிகாமணிகளிடம் நாம் எப்போதுமே கவனமாக இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.

Victory King (VK)

Wednesday, April 7, 2021

உயர்வு தாழ்வு வேண்டாம்!

 Status 2021 (97)

நாம் நம்மைவிட மேலே உள்ளவர்களை பார்க்கும் பொழுது பொறாமைப்படக்கூடாது. அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு அது போன்று நாமும் வரவேண்டும் என்று எண்ண எழுச்சியில் செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும். அதுபோல் நம்மைவிட தாழ்ந்தவர்களை பார்க்கும் பொழுது நமக்கு தலைகனம் ஏறக்கூடாது. அவர்களைவிட எவ்வளவு வசதியாக இருக்கிறோம் என்று பெருமைப்பட்டு மகிழ்ந்து கொண்டு நம் முன்னேற்றத்தை மேலும் முடுக்கிவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அது நம் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தி நமக்கு மகுடம்சூட்டிவிடும். எனவே நாம் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வாழ்க்கையில் நலம் பெறுவோமே!

Victory King (VK)

Tuesday, April 6, 2021

இந்த நிமிடம் இந்த நொடி சந்தோஷம்!

 Status 2021 (96)

வாழ்க்கையில் காசு.. பணம்..

முக்கியமில்லை.. நம்மகிட்ட

அன்பு காட்ட ஒருத்தர் இருந்தா

போதும் வாழ்க்கை முழுவதும்

சந்தோஷமாக வாழ்ந்திடலாம்.

சந்தோஷத்தை அடுத்தவர்களிடம்

எதிர்பார்க்கும் நேரத்தில் நாம் நம்

 சந்தோஷத்தை

தொலைத்து விடுகிறோம்.

நாளைக்கு நாம் இருப்போமோ..?

என்று தெரியாது அதனால்

இந்த நிமிடம்.. இந்த நொடி..

சந்தோஷமாக இருப்போமே!

Victory King (VK)

Monday, April 5, 2021

யார் பார்வையற்றவர்?

 Status 2021 (95)

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.               

- மகாத்மா காந்தி

ஒருவனுக்கு உடலில் எந்த ஊனம் இருந்தாலும் அவர்கள் மிகவும் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். ஆனால் அவனுடைய புத்தியில் மட்டும் ஊனம் வந்துவிட்டால் உடலுறுப்புகள் அனைத்தும் வலிமையாகவும் செழுமையாகவும் இருந்தாலும் அறிவை சரியான வழியில் பயன்படுத்த முடியாமல் குறுக்கு வழி, கேடுகட்ட செயல்கள், சுயநலத்தின் உச்சம், இவைகளில் நாட்டம் சென்று தன்னைத்தானே அழித்துக் கொள்வார்கள். இவர்கள்தான் உண்மையிலேயே ஊனப் பிறவிகள். எனவே அறிவை வளர்ப்போம். உடலை வளைப்போம். நாம் வாழும் காலத்தை மானத்தோடு கழிப்போம்!

Victory King (VK)

Sunday, April 4, 2021

உறங்காத மனசாட்சி!

 Status 2021 (94)

நாம் எல்லா தவறுகளையும் செய்து விட்டு அலங்காரப் பேச்சினாலும் அரிதாரம் பூசப்பட்ட முகத்தினாலும் நாம் யோக்கியன் என்று மற்றவர்களை வேண்டுமானால் நம்ப வைக்கலாம். ஆனால் நம் மனசாட்சி மட்டும் நம்பவே நம்பாது. அப்படியே நம் உண்மை வெளிப்பட்டு விட்டால் பொய் சாட்சிகளை அலங்காரம் பண்ணி அதனை அடக்க முயற்சிக்கலாம். ஆனால் நம் மனசாட்சி நம்மை சும்மா விடாது. அது ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மீதே அவதாரமெடுத்து நம் வாயாலேயே உண்மைகளை ஒப்புக் கொள்ள வைத்துவிடும். நம் மனசாட்சி உறங்குகிறது என்று நினைத்துக்கொண்டு தவறுகளை செய்து கொண்டே இருந்தால் அது நம்மையே சுற்றி சுற்றி வந்து நம்மை அழித்துவிடும். எனவே நாம் மனசாட்சிக்கு பயந்து தவறுகள் செய்யாது வாழ்ந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

பணி நேர்த்தி!

 Status 2021 (93)

 நாம் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் நமக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருந்தாலும் ஒரு வேலை என்று  வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் அமைதியாக ஒரு வேலைக்காரனை போல் அதனை மற்றவர்களோடு இணைந்து செயல்பட்டால் மற்றவர்களுக்கு நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும். நம்மோடு பணிபுரிவர்களும் பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்து நமது வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒருங்கிணைந்து உழைப்போம். அமைதியாக வாழ்க்கையை கடத்துவோம்!

Victory King (VK)

Friday, April 2, 2021

தர்மத்தின் நீதி!

 Status 2021 (92) 

நம் சுயநலத்திற்காக தீயவைகளை எண்ணி மற்றவர்களுக்கு தீமைகளை செய்து அடுத்தவர்களை அழித்து துரோகச் செயல்களையே தன் பண்பாக கொண்டு இப்படிப்பட்ட அனைத்து பாவங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்துகொண்டு தர்மம் என்ற பெயரில் கடவுளிடம் பேரம் பேசி காணிக்கை செலுத்தி விட்டு தன்னை எந்த வித பாவமும் ஒன்றும் செய்யாது தர்மம் என்னை காத்து விடும் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் பாவிகளின் கற்ற கல்வி தேடிய செல்வம் தன் குடும்ப கவுரவம் தன்னுடைய சந்ததியினர் உற்றார் உறவினர்கள் பற்று அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க வைத்து விடும். பாவங்களைச் செய்யும் பாவிகளுக்கு இதுபோன்ற தர்மம் துணை போகாது. எனவே நேர் சிந்தனையோடு நேர்மையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்யும் தர்மம் நிச்சயம் நம்மை காப்பாற்றும். உணர்ந்து செயல்படுவோம் உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம்!

Victory King (VK)

Thursday, April 1, 2021

ஆலோசனைகள் பயனுள்ளதாக அமைய!

 Status 2021 (91)

மற்றவர்களுக்கு நாம் ஆலோசனை கூறும் பொழுது மிகவும் கவனத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க வேண்டும். அவர்களாக நம்மிடம் ஆலோசனை கேட்டால் ஒழிய நாம் அதில் தலையிடக் கூடாது. மற்றவர்கள் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தார் போல் நம் ஆலோசனை இருக்கக்கூடாது. அப்படி செய்யக்கூடாது இப்படி செய்யக்கூடாது என்று எதிர்மறையாக கூறுவதை விடுத்து என்ன செய்தால் நல்லது என்பதை எடுத்துரைக்க வேண்டும். முறையாக நாம் செய்யாவிட்டால் அது மற்றவர்களை மேலும் பாதிக்கும். எனவே நம்மால் ஆலோசனை பெறுபவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவண்ணம் தகுந்த ஆலோசனையை கொடுத்து குழம்பி வந்தவர்களுக்கு பலத்தைக் கொடுத்து மகிழ வைக்க வேண்டும். அது தான் நமக்கும் ஆத்மதிருப்தி ஆகும்.

Victory King (VK)