About Me

வி.கிருஷ்ண மூர்த்தி!

மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு. வி.கிருஷ்ண மூர்த்தி என் தந்தை. இவர் தொலைபேசித் துறையில் 1966-ல் ஆபரேட்டராக பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, Sub Divisional Engineer ஆக பதவி உயர்வு பெற்று,  கடந்த 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். என்னுடைய தாய்  திருமதி. பத்மாவதியும் தொலைபேசி துறையிலேயே பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

40 ஆண்டுகாலம் சத்தியம், உண்மை, நேர்மை, நேரம் தவறாமை  இவற்றைக் கடைபிடித்து, இப்படியும் வாழ முடியும் என்பதை நிரூபித்து தன் மூன்று குழந்தைகளையும் அதன்படியே வாழ வைத்தவர்.  இதற்கு சான்றாகத்தான் நாங்கள் இன்றும் திகழ்கிறோம் என்பதைக் கூறுவதில் பெருமை அடைகிறேன்.
 
நான் இந்தியாவில் காம்கேர் என்ற ஐ.டி நிறுவனத்தின் CEO ஆகவும், என் தங்கையும், தம்பியும் யு.எஸ்ஸில் ஐ.டி துறையில் தலைமை பொறுப்பிலும் செயல்படுகிறோம்.

இவரது தனித்திறமையாக கணிதத்தைச் சொல்லலாம். கணக்கில் அதீத ஈடுபாடு கொண்டவர். மிக சிக்கலான  கணக்கிற்கும் நொடியில் தீர்வு காண்பவர். மற்றவர்கள் கால்குகேட்டர், மொபைல், கம்ப்யூட்டர் என்று தேடி  விடை கண்டுபிடிப்பதற்குள் இவர் தன் மனதாலேயே கணக்கு போட்டு விடை சொல்லி விடுவார். சிறு வயதில் V.Krishnamurthy என்ற தன் பெயரில் இனிஷியலையும்(V), பெயர் முதல் எழுத்தையும்(K) இணைத்து  Victory King என்ற புனைப்பெயராக்கிக் கொண்டு ஒருசில படைப்புகளை படைத்துள்ளார்.

காலத்தின் ஓட்டத்தில் இவரது திறமைகள் அனைத்தும் குடத்துக்குள் இட்ட விளக்காய் இருந்து விட்டது.   இவரது திறமைகளை இந்த ப்ளாக் மூலம் வெளிப்படுத்த இருக்கிறோம்.

நன்றியுடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்
சென்னை