Saturday, October 31, 2020

தெளிவான சிந்தனை!

 Status 387

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

டாக்டர் அப்துல் கலாம்

நமக்கு துன்பங்கள் வரும் பொழுது தளர்ந்து விடாமல், துன்பத்திற்கு  காரணமானவர்களை பற்றி சிந்தித்து சிந்தித்து கோபப்படாமல் துன்பத்திலிருந்து மீள என்ன வழி என சிந்தித்து செயல்பட்டு துன்பங்களை சந்தித்து விட்டால் வாழ்க்கையில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம். நமது தெளிவான சிந்தனையே வெற்றிக்கு வழிவகுக்கும்.

Victory King (VK)

Friday, October 30, 2020

உறவுச் சங்கிலி விடுபடாமல் இருக்க!

 Status 386

உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான் பிறகு  குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும். ஆனால் தற்கால வாழ்க்கை முறையில் சில பல காரணங்களினால் இன்றையஇளைய தலைமுறைகள் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வளரும் முறை. சிறுவயதிலிருந்தே உறவுகளின் மேன்மையை சொல்லி வளர்காததால் வந்த விளைவுதான் இது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் உறவு சங்கிலி விடுபடாமல் இருக்க வாய்ப்புண்டு.

Victory King (VK)

Thursday, October 29, 2020

தீய சக்திகள் விலக!

 Status 385

தீய சக்திகள் விலகி நன்மைகள் பெருகச் செய்ய வேண்டியவைகள்:

எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. வலம்புரிச் சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்குச் சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். 

இந்துமதம் முகநூல் பக்க பதிவு.

மனதார நம்பி கடைபிடிப்போம். நம்மை நாம் காப்போம். நலமுடனும் மனதிடமுடனும் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, October 28, 2020

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்!

 Status 384

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 

பொருள்: ஊரை பகைத்தால் அடியோடு அழிய நேரிடும்

கொன்றை வேந்தன்

அனைவரையும் அரவணைத்து வாழ்வதுதான் கற்றவர்களுக்கான பண்பு. அதை விடுத்து சுயநலம் மிகுதியால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கெடுதல் செய்தல், அவர்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அனைத்து செயல்களில் ஈடுபடுதல் இவ்வாறான தீய செயல்களை செய்பவர்களின் குடும்பமே வேரோடு அழிந்து விடும் என்பதை அன்றே ஔவையார் தன்னுடைய கொன்றைவேந்தன் நூலில் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். நீதி நூல்களை மதிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

Victory King(VK)

Tuesday, October 27, 2020

கற்ற கல்வியின் பயன்!

 Status 383

கல்விக்கு அழகு கசடற மொழிதல். 

குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.

வெற்றிவேற்கை

கற்றதினால் ஆன பயனால் நல்வழியில் நம் சிந்தனையை செலுத்தி நற்செயல்களையே செய்து அவை மற்றவர்களும் பயனடையும்படி செய்யும் பொழுதுதான் நாம் கல்வி கற்பதற்கான பலனை முழுமையாக அடைவோம்.

Victory King (VK)

Monday, October 26, 2020

கர்வம் அடக்குவோம்!

 Status 382

இந்த விஜயதசமி நன்னாளில் நாம் சரஸ்வதி தேவியை வணங்கி கற்றவர் கல்லாதவர்களுக்கு கற்பித்தல் வேண்டும் அத்துடன் தங்கள் அறிவை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எல்லாம் கற்று விட்டோம்அனைத்தும் நமக்குத் தெரியும் என்ற மமதையில் இருப்பவர்களுக்கு ஒளவை பாட்டி  "கலைமகளே தான் கற்றது கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை" என்று கூறுகிறாள். எனவே நாம் நம் கர்வத்தை அடக்கி  அறிவை மென்மேலும் வளர்த்து நாமும் பயன் அடைவோம் மற்றவர்களும் பயனடையச் செய்வோம். கல்விக்கு இல்லை எல்லை என்பதை உணர்வோம்.

Victory King (VK)

Sunday, October 25, 2020

செய்யும் தொழிலே தெய்வம்!

 Status 381

செய்யும் தொழிலே தெய்வம். அந்த தெய்வத்தை போற்றி வணங்குவதற்காக தான் இந்த நவராத்திரி விழா. நமக்கு அறிவை கொடுக்கும் சரஸ்வதி தேவியையும் அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொடுக்கும் லட்சுமி தேவியையும் இவற்றையெல்லாம் பேணிக்காக்கும் தைரியத்தைக் கொடுக்கும் துர்க்கா தேவியையும் வேண்டி வணங்கி போற்றி இந்த முப்பெரும் தேவிகளின் அருள் நமக்கு தொடர்ந்து கிடைக்க பிரார்த்திப்போம். நாம் எந்த தொழில் செய்தாலும் அது நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்பதை மனதில் கொண்டு அந்த தொழில்தான் நாம் வணங்கும் தெய்வம் என்பதை உணர்ந்து அதற்கான உரிய மரியாதையை தந்து உழைப்பின் பலனை முழுமையாக அடைவோம். நாளைய விஜயதசமி நன்னாளில் நம் அறிவுச் செல்வத்தை மேலும் பட்டை தீட்டி வாழ்க்கையில் முன்னேறுவோம்

Victory King (VK)

Saturday, October 24, 2020

சரஸ்வதி தேவி அருள் பெறுவோம்!

Status 380

கல்விச் செல்வம் அருள கன்னியாக அமர்ந்த தேவி..! கூத்தனூர் சரஸ்வதி.இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள். தமிழகத்தில் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது.

ஸ்தல வரலாறு

உயர்கல்வி, நல் ஞானம் ஆகியவற்றை அருள்புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட்டு அருள் பெறுவோம்.

Victory King (VK)

கூத்தனூர் கோயில் செல்லும் வழி!

கூத்தனூர் சரஸ்வதி கோயில் மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே  உள்ளது.

Friday, October 23, 2020

லலிதாம்பிகை அருள்பெறுவோம்!

 

Status 379

திருமீயச்சூர்  லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருவாள். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீளச் செய்வாள். வாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் அருள்புரிவாள். 

கோயில் ஸ்தலவரலாறு 

இந்த நவராத்திரி நன்னாளில் திருமீயச்சூர் அன்னை லலிதாம்பிகை வழிபட்டு
அவள் அருள் பெற்று நலமாக வாழ்வோம் 

Victory King (VK)


கோயிலுக்கு செல்லும் வழி!

ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர் திருவாரூரில் இருந்து 25கிமீ தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 18கிமீ தொலைவிலும் கோவில் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து 33கிமீ தொலைவில் உள்ளது. திருவாரூர் –மயிலாதுறை பேருந்துகள் பேரளம் வழியாக செல்லும். பேரளத்தில் இறங்கி 1கிமீ நடந்து இத்திருக்கோவிலை அடையலாம்.

---***---

Thursday, October 22, 2020

கடந்து வந்த பாதையை மறவோம்!

Status 378

 நாம் பிறக்க காரணமானவர், நாம் கல்வி கற்க உதவியவர், அல்லல்படும் நேரத்தில் உணவு அளித்தவர், ஆபத்துக்காலத்தில் நம்மோடு இருந்தவர், தன்னை மறந்து நம்மை நேசித்தவர் இவர்கள் அனைவரும் நமக்கு தந்தையே. இவர்களுக்குச் செய்யும்  நன்றிக்கடன் ஆயிரம் தெய்வங்களுக்குச் செய்யும்தொண்டினை விட மேலானது.

சாணக்கியர்

நாம் ஏழ்மை நிலையிலிருந்து இந்த உயர்நிலை அடைவதற்கு நாம் கடந்து வந்த பாதையில் தடுமாறும் பொழுது நம்மை தூக்கி நிறுத்தியவர்களையும் வறுமையில் வாடும் பொழுது ஆறுதல் சொல்லி அரவணைத்தவர்களையும் ஊக்கம் அளித்து நம்மை உயர்த்தியவர் களையும்  மனதார நினைவில் பதித்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் தடம் மாறாமல் இடர்பாடுகள் இல்லாமல் இனிதே கடக்க முடியும். நம் நிகழ்காலமும் எதிர்காலமும் நாம் கடந்து வந்த பாதையின் உயிர்நாடி என்பதை நாம் உணர வேண்டும்.

Victory King (VK)

Wednesday, October 21, 2020

வினை விதைத்தவன்...

 Status 377

வேப்பமரத்தைக் கிளை முதல் வேர்வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. அதுபோல் தீய குணம் கொண்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாணக்கியர்

அடுத்தவன் குடும்பத்தை அழித்து வாழ்பவனும் சுயநல மிகுதியால் அடுத்தவர்களுக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டு சொல்லியும் திருந்தாத துரோகிகளுக்கு தங்கள் குடும்பமும் வம்சமும் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரவேண்டும். அப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் வாழ்க்கையில் மீளமுடியாத தண்டனையிலிருந்து தப்பவே முடியாது

Victory King (VK)

Tuesday, October 20, 2020

நல்லதே நடக்கும்!

 

Status 376.               

நன்மைகளையே செய்து மனத்தூய்மையுடன் மனதார கலியுக தெய்வம் காஞ்சி மகாபெரியவரை பிராத்தித்து நம் குறைகளை அவர் முன் வைத்தால் அதன் தீர்வுக்கான வழிமுறைகள் நம்மை வந்து அடைய அவர் அருள் பெற்று நல்லதே நடக்கும். நலம்பெற வாழ்வோம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Victory King (VK)

Monday, October 19, 2020

திருமாலின் அவதாரங்கள்!

 Status 375

திருமால் மச்சாவதாரத்தில், சோமுகாசுரன் திருடிச்சென்ற வேதங்களை  திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 

வராக அவதாரத்தில் இரண்யாட்சன் என்ற அசுரனை   பூமியை தோண்டிச் சென்று அவனை அழித்தார்.  

நரசிம்ம அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்ற இரண்யனைக் கொன்றார். 

ராமாவதாரம் எடுத்து தலைக்கனத்தால் தகாத செயல்களை செய்து வந்த சிவபக்தனான ராவணனையே வதம் செய்தார்.

எனவே இந்த கலியுகத்தில் சுயநலத்திற்காக அடுத்தவர் குடும்பங்களை அழித்து அடாத செயல்களில் ஈடுபட்டு வரும் கயவர்களை இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து  அவர்கள் குடும்பத்தை அழிப்பது உறுதி.

Victory King (VK)

Sunday, October 18, 2020

எதிர்காலத்துக்காக சிந்திப்போமே!

Status 374

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்களாகும்

சாணக்கியர்

வயதான காலத்தில் மனைவி-கணவனை இழப்பதும் கணவன்-மனைவியை இழப்பதும் துரதிஷ்டவசமானது என்றாலும் நமது விதிப்படி கர்மவினையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும. ஆனால் நாம் நல்ல நிலையிலேயே இருக்கும் பொழுது அனைவரையும் நம்பி பணத்தை இழப்பதும் தனக்கென பணத்தை சேமித்து வைக்காமல் இருப்பதும்தான் நாம் செய்யும் மகா தவறு. இதுதான் உண்மையிலேயே துரதிஷ்டமானது. எனவே முதுமையில் கவலையின்றி இருக்க நம்மை நாம் காத்துக்கொள்ள மற்றவர்கள் நம்மை மதிக்க நாம் நலமுடனும் வளமுடனும் இருக்கும்பொழுதே நமக்காகவும் ஓரளவு பணத்தை சேமித்து வைத்துக்கொள்வதுதான் நமக்குப் பெருமை.

Victory King (VK)

Saturday, October 17, 2020

தவறுகளை திருத்திக்கொள்வோம்!

 Status 373

தவறு செய்பவர் மட்டுமல்ல அந்த தவறை தட்டிக் கொடுப்பவரும் அதை கண்டும் காணாமல் செல்பவரும் தண்டனைக்கு உரியவரே!

கிருஷ்ண பரமாத்மா

அதிலும் தவறு செய்பவர்கள், அதனை தூண்டுபவர்கள், தட்டி கொடுப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து விட்டால் அவர்கள் குடும்பம் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொண்டாள் புத்திசாலித்தனம்.

Victory King (VK)

Friday, October 16, 2020

விருந்தோம்பல்!

 Status 372

உணவை சமைப்பது ஒரு கலை. சுகாதாரமான சூழ்நிலையில் சுத்தமாகவும் சுவை மிகுந்ததாகவும் சத்துள்ளதாகவும் ஈடுபாட்டுடன் சமைத்து முக மலர்ச்சியுடன் பரிமாறும் பொழுது உண்பவர்களுக்கும் சமைத்துப் பரிமாறுபவர்களுக்கும் இருக்கும் மன திருப்தி சொல்லில் அடங்கா. அதுபோல் நம் கையாலேயே சமைத்து பசிப்போர்க்கு வயிறார உணவளித்து நாமும் மகிழ உண்பவர்கள் உள்ளங்களும் குளிரும் பொழுது குடும்பமே சுபிட்சத்தில் தழைத்தோங்கும். அதுபோல் வாயில்லா ஜீவன்களுக்கும் பறவைகளுக்கும் அதற்கேற்ற உணவுகளை அளித்து மகிழ்ந்தால் நம் வாழ்வு வளம் பெறும். இன்றைய உலக உணவு தினத்தில் இதனை உறுதி எடுத்து செயல்படுவோமே!

Victory King (VK)

Thursday, October 15, 2020

டாக்டர் அப்துல் கலாம்!

 Status 372

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்

டாக்டர் அப்துல் கலாம்

அதுபோல்தான் தவறு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்து திருந்தும் பொழுது நல்லவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைகணம் பிடித்த ஆணவக்காரர்கள் முட்டாள்களாகவும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டும் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறார்கள். எனவே நம் தவறுகளை உணர்ந்து நாம் நலமாக வாழ்வோம்

Victory King (VK)

Wednesday, October 14, 2020

தீயவை விலகி நல்லவை அணுக!

 Status 371

மறந்தும்கூட மற்றவர்களுக்கு கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

(குறள் 204)

தீயவற்றைப் பார்க்காதே! தீயவற்றைப் பேசாதே! தீயவற்றைக் கேட்காதே!  தீயவற்றிலிருந்து நாம் விலகியிருந்தாலே போதும். நல்லவைகள் தானாய் நம்மை வந்தடையும் என்பதுதான் காந்தியடிகள் தெரிவிக்க விரும்பிய சித்தாந்தம்.

இதற்கு மேலும் அடுத்தவர்களுக்கு தீங்கிழைத்து தாம் மட்டும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. எனவே சிந்திப்போம். சிறப்பான வாழ்க்கையை அனுபவிப்போம்.

Victory King (VK)

Tuesday, October 13, 2020

மகாகவி போற்றி வணங்கிய காளி!

 


Status 370

காலமும் நேரமும் காளி தேவியின் கையில்..!

காளி தேவி காலசொரூபி. காலத்தை கணிப்பவள். ‘எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருவேன்' என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதை அப்படியே முழுமையாக செய்து காட்டுபவள்தான் காளி தேவி. அதர்மம், எங்கே தலைவிரித்தாடுகிறதோ அங்கே அழிவை ஏற்படுத்துவாள். மோசக்காரர்களை நாசம் செய்வாள். அக்கிரமக்காரர்களை காலம், நேரம் பார்த்து அடியோடு அழித்துவிடுவாள். நல்லவர்களுக்கு நன்மையே செய்வாள் அந்த மகாகாளி.

மகாகவி பாரதி 

மகாகவி போற்றிய  காளியை வணங்கி நம் கஷ்டங்களிலிருந்து விடுபெற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Monday, October 12, 2020

புயலும் பூந்தென்றலும்!

 Status 369

நேற்றைய புயலை நினைத்து இன்றைய பூந்தென்றலுக்காக ஜன்னல்களை அடைக்க மாட்டான் புத்திசாலி.

சாணக்கியர்

புயலுக்காக அடைக்கப்பட்ட ஜன்னல்களினால் நடப்பதை அறிய முடியாத சுயநலவாதிகள் இன்றைய பூந்தென்றலையும் அனுபவிக்க முடியாமல்  புயலையே நினைத்து நினைத்து புழுங்கி புத்தி பேதளிப்பதுதான் மிஞ்சும். எனவே பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளாமல் இயற்கையோடும் நம்மை சார்ந்தவர்களோடும் சேர்ந்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Sunday, October 11, 2020

நினைப்பது நடக்கும்!

 Status - 368

நீ நினைப்பதுபோல் நிச்சயமாக ஒரு நாள் உன் வாழ்க்கை மாறும்... கவலை விடுத்து முன்னேறு... ஏற்படுகின்ற கஷ்டங்கள் உன் வாழ்வை வளமாக்குவதற்காகவே.

கிருஷ்ண பரமாத்மா

அந்த நன்னாளை எதிர்பார்த்து எதிரிகளை நேர் வழியில் எதிர்கொண்டு மனதை திடமாக்கி மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, October 10, 2020

நம் நிலை நாம் அறிவோமே!

 Status 367

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது. 

கண்ணதாசன்

நம் எண்ணங்களும் ஆசைகளும் நம் நிலைமைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். நம் எண்ணங்கள் எல்லை மீறி செயல் வடிவத்தில் அடுத்தவர்களை பாதிக்கும் பொழுது அது ஆபத்தில் தான் முடியும். "தன் வினை தன்னைச் சுடும்". 

மனசாட்சி உள்ளவர்கள்தான் இதை உணர முடியும். இல்லையேல் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் பொழுதாவது உணர்ந்தால் சரி. "பேராசை பெருநஷ்டம்"

Victory king (VK)

Friday, October 9, 2020

வாய்மையே வெல்லும்!

 Status 366

பொய் என்ற கவசம் தன்னை காக்கும் என்று நம்புகின்றனர்... அதை உண்மை எனும் அஸ்திரம் உடைத்தெறியும் என்பதையும் மறந்து..!

கீதையில் கிருஷ்ணர்

பொய்யால் கிடைக்கும் புகழ் பெருமை வெற்றி அனைத்துமே ஒரு மாயைதான். உண்மை வெளிவரும் பொழுது அதன் தாக்கத்தை நம்மால் தாங்க முடியாது. உண்மை எப்பொழுதுமே நிலைத்து நின்று நம் மதிப்பை மேலும் மேலும் உயர்த்துவதுடன் பொய்மையால் நம்மை விழ்த்த நினைப்பவர்களை பொடி பொடியாக்கிவிடும். இறுதியில் உண்மைதான் வெல்லும்.

VictoryKing (VK)

Thursday, October 8, 2020

நல்வினையும் தீவினையும்!

 Status 365

ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும்பொது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை!

பட்டினத்தார்

நமக்கு நாமே ராஜா என்ற ஆட்டம்போடும் மனிதர்களின் சுயரூபம் தங்கள் ஆட்டம் அடங்கும் தருவாயில் மற்றவர்களால் தூற்றப்படுவதுதான் இயற்கை. அந்நிலை வரும்பொழுது நம்மால் குனிந்த தலை நிமிர முடியாது. மற்றவர்கள் தயவின்றி வாழலாம்  என்று நினைக்கலாம். நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் சாபத்திலிருந்து நாம் மீளமுடியாது. நாமும் நம் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நன்மையை செய்யா விட்டாலும் தீவினைகள் செய்யாதிருந்தால் நாம் நலமுடன் வாழ வாய்ப்பு உண்டு

Victory King (VK)

நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோமே!

 Status 364

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

 புலி பதுங்குவது பயத்தினால் அல்ல!

பழமொழிகள்

பேசும்பொழுது அடுத்தவர் ஊமையாக இருந்தால் அவர் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. நம்மை கூர்ந்து கவனித்து சரியான இடத்தில்  கடிவாளம் போட காத்திருக்கிறார் என்று பொருள். எனவே எதிராளியை ஏளனமாக நினைத்து பேசுவதை விடுத்து நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

Tuesday, October 6, 2020

குற்ற உணர்ச்சி!

 Status 363

குற்ற உணர்ச்சி:

இது ஒரு புனிதம். இந்தப் புனிதத்தை உணராமல் மற்றவர்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் செய்து கொண்டு அவர்கள் வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு சற்றும் குற்ற உணர்வே இல்லாமல் திரிந்து கொண்டிருக்கும் கொடூரமான மனித மிருகங்கள் திருந்த வேண்டும் என்றால் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவராவது நல்ல உள்ளம் படைத்தவராக இருத்தல் வேண்டும். இல்லையேல் தன் செயலால் அவர்கள் குடும்பமே அழியும் பொழுதாவது  உணர முடியுமா என்பதும் சந்தேகம்தான். எனவே மனித நேயத்தோடு வாழ்வோம். மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்போம். நமது குடும்பத்தை வம்சத்தை காப்போம்

Victory king (VK)

Monday, October 5, 2020

மானிட ஜென்மம்!

 Status 362

அன்பு படர்ந்த கொடியினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும்; அதன் அழகைக் குலைக்க மேவும்; கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்; சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா!

கண்ணதாசன்

அகந்தையில் தறிகெட்டு தடுமாறி செய்யொன்னா காரியங்களை செய்து களித்து வாழும் ஆறறிவு படைத்த மானிட ஜென்மத்தின் நிலையும் கடைசியில் இந்தக் குரங்கின் நிலைதான்.

Victory King (VK)

Sunday, October 4, 2020

காரியத்தடைகள் அகல!


 
Status 361

காரியத்தடைகள் அகல  நம்மைச் சுற்றி இருக்கும் ஆபத்துகள் நம்மை நெருங்காமல் இருக்க பாதுகாப்பான வளையமாய் இருப்பது சரபேஸ்வரர் வழிபாடு.

விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும்  சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.

Victory king (VK)

Saturday, October 3, 2020

தவறுகளும் தண்டனைகளும்!

 Status 360

ஆணவம் அகங்காரம் கொண்டு தேவர்கள சிறைபிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்த  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்கிறார். அதுபோல இரணியனின் அட்டகாசம் பொறுக்காமல் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்கிறார். இந்த கலியுகத்தில் கொடூர புத்தி உள்ளவர்களையும் மற்றவர்களை அழித்து வாழும் அற்பப் பதர் களின் வம்சத்தையே வதம் செய்ய இறைவன் அவதார புருஷனாக வராவிட்டாலும் அவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)

Friday, October 2, 2020

அகந்தையின் அழிவு நிச்சயம்!

 Status 359

சிவபக்தனான ராவணன் சிவனிடம் தவம்புரிந்து சாகாவரம் பெற்று தான் என்ற அகங்காரத்தில் தகாத காரியங்கள் எல்லாம் செய்து வந்தான். எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றவன் மனிதனால் தன்னை என்ன பண்ண முடியும் என்ற இருமாப்பில் அந்த வரத்தை கேட்காததால் மகாவிஷ்ணு தன்னுடைய ராமாவதாரத்தில் ராவணனை வதம் செய்கிறார். இப்பேற்பட்ட ராவணனுக்கே இந்நிலை வந்தது. எனவே அகந்தையில் அக்கிரமம் செய்யும் யாராகிலும் கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அக்கிரமக்காரரின் வம்சத்தையே அழித்துவிடுவார் என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Victory King (VK)

Thursday, October 1, 2020

வலியாரை தெய்வம் அடிக்கும்!

 Status 358

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.

பழமொழி                     

இது ஓர் உயிர் மொழி.இன்று நம்மிடம் பலம் இருக்கிறது என்று எண்ணி மற்றவர்கள் மனதை காயப்படுத்தி தொல்லைகள் கொடுக்கும் துரோகிகளுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனையிலிருந்து  மீள முடியாது. நமது அட்டகாசம் அத்து மீறும் பொழுது கடவுள் அசுரனை போல் வந்து நம்மை நாசப்படுத்தி விடுவார். இதனை மனசாட்சி உள்ளவர்கள் உணர்ந்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்புண் டு. இல்லையேல் அழிவுகாலம் அருகில் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

Victory King (VK)