Welcome

கணக்குப் போடலாம் வாங்க!
 
கணக்கு என்றால் வேப்பங்காயாக இருக்கின்றவர்களுக்குக் கூட  கணக்கும் கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது போல எளிமையே என்பதற்காகத் தான் இந்த ப்ளாக்.

கூட்டல், கழித்தல் போன்ற எளிமையான கணக்குகளுக்குக் கூட கைவிரல்களோடு சேர்த்து  கால்விரல்களையும் பயன்படுத்துகின்றவர்களுக்கு இந்த ப்ளாக் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கணக்கும் இனிக்கும் அளவுக்கு எளிய வழிகளை கொடுக்க இருக்கிறோம்.

இதன் மூலம் உங்கள் அனைவரையும் கணக்கில் புலி ஆக்கிவிடுவோம் என்றெல்லாம் சொல்லி பொய்யான நம்பிக்கையை விதைக்கவில்லை. கணக்கைக் கண்டு காத தூரம் ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம்.

இது எங்கள் சிறிய முயற்சியே, உங்கள் அனைவரையும் பயனடையச் செய்யும் என்று நம்பி இப்பயணத்தைத் தொடருகிறோம்.

வாழ்த்துக்கள்!