Wednesday, May 31, 2023

#Victory King: உழைப்பில்லா உணவு!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2047🙏 

வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு கடுமையான உழைக்க வேண்டும். அந்த உழைப்பும்  ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்ததை அடைய முடியும். ஈடுபாடு இல்லா உழைப்பு உப்பில்லா உணவிற்கு சமம். உண்ணலாம் சுவைக்க முடியாது.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Tuesday, May 30, 2023

#Victory King: சலிப்படையாத முயற்சி!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2046🙏 

வேதனைகளை சகித்துக் கொண்டு வாழ்வதை விடுத்து, சலிக்காமல் அதனை எதிர்கொண்டு ஜெயித்து விட்டால் அதுதான் நம் வாழ்க்கை வளம் பெறுவதற்கான சாதனை. சலிப்படையாத முயற்சிதான் நம் முன்னேற்றத்திற்கான ஒரே வழி.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Sunday, May 28, 2023

#Victory King: ஆறாவது அறிவு!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2045🙏 

மனிதனாய் பிறந்து அரக்க குணத்தை கொண்டு அடுத்தவர்களை அழிக்க துடிப்பவர்கள் பறவைகளின் ஒற்றுமையையும்,மிருகங்களின் இனப்பற்றையும் பார்த்தாவது, அறிந்து கொண்டாவது திருந்தி வாழ முயற்சித்தால் இறைவன் நமக்கு அளித்த ஆறாவது அறிவின் பயனை அடைய முடியும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Saturday, May 27, 2023

#Victory King: நமக்கு நாம் நன்மை செய்து கொள்வோம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2044🙏 

எந்த இடமாக இருந்தாலும் சரி, உறவுகளோ நட்புகளோ எதுவாகினும் நாம் நம் எல்லையை தாண்டாது இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை. இல்லையேல் நமக்கு  நாமே சூன்யம் வைத்துக் கொள்ளும் நிலை தான்.உணர்வோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Friday, May 26, 2023

#Victory King: மனிதாக மாற்றும் மந்திரம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2043🙏 

நாம் தன்னம்பிக்கை தாரகனாக இருக்கலாம், சுய சிந்தனையில் சூரனாக இருந்து செயல்படலாம், முயற்சி செய்து செயல்படுவதில் முனைவராக கூட இருக்கலாம். ஆனால் நம்மிடம் மனிதாபிமானத்தோடு மற்றவர்களை மதிக்கும் மனிதநேயம் இல்லையென்றால் மெற்கூறிய அனைத்துமே விரயமாகிவிடும்.மனிதனை மனிதனாக்குவது மனிதநேயமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

#Victory King: விடா முயற்சி!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2043🙏 

முயற்சிக்கு முன்னால்

கேலிகள், கிண்டல்கள்,

துரோகங்கள், சோகங்கள்,

காயங்கள், சோதனைகள்,

தோல்விகள் யாவும்

தோற்று ஒரு நாள் நம்

விடாமுயற்சி தான் வெற்றி பெறும்

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Saturday, May 20, 2023

#Victory King: வாழ்க்கையும், மனநிலையும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2042 🙏

நாம் ஒரு செயலை செயல் படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதனை தடுப்பதற்கு பல காரணங்கள் நம் காதுகளில் ஒலிக்கும். அந்த சமயத்தில் நம் மனசாட்சி மயக்க நிலை அடைந்து விட்டால் அந்த செயலில் உள்ள நியாயங்களுக்கு உயிர் இல்லாமல் போய்விடும். எனவே இந்நிலை நமக்கு வராது நாம் செயலில் ஈடுபட்டால் நாம் மன உறுத்தல் இல்லாமல் வாழ இயலும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Thursday, May 18, 2023

#Victory King: பொக்கிஷமான சந்ததியினர்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2041 🥰

நாம் நம் சந்ததியினருக்கு பணம் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எந்தவித பாரபட்சமும் இல்லாது உறவுகள் என்னும் உன்னதமான பொக்கிஷத்தை அவர்கள் மனதில் ஆழப் பதியும் படி உணர்த்தி விட்டால் அதுவே அவர்கள் வாழ்க்கைக்கு அசைக்க முடியாத ஒரு பலமாகும். நம் காலத்தில் உறவுகளைப் பிரித்து வாழ்ந்து விட்டால் நம் சந்ததியினர் வாழ்க்கையும்  சிதறிப் போகும் என்பதை உணர்வோமே!

🥰Victory King (VK)🥰

Monday, May 15, 2023

#Victory King: பூத்துக் குலுங்கும் பூங்காவனம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2040 🥰

குடும்பம் என்பது அன்பு, அக்கறை, நம்பிக்கை மற்றும் சொந்தம் ஆகிய உணர்வுகளால் பிணைக்கப்பட்டு, நம்மை காக்கும் பெற்றோர்கள், அக்கறையுள்ள அன்பான உடன்பிறப்புகள், அத்தை மாமா தாத்தா பாட்டி இவர்களின் நம்பிக்கையின் ஒளியில் ஒளிர்ந்து ஒற்றுமை என்னும் அமிர்தத்தால் ஊட்டப்பட்டு இருந்துவிட்டால் அதுதான் நம் குளுமையான வாழ்விற்கு ஒரு பூத்துக் குலுங்கும் பூங்காவனம்!

🥰Victory King (VK)🥰

Sunday, May 14, 2023

#Victory King: அன்பு உள்ளங்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2039 🥰

நம் வாழ்வில் சில நிகழ்வுகளை நம்மால் மறக்க முடியும் என்றால் அது வெறும் நினைவுகள் தான். அப்படிமறக்க முடியாமல் நம் மனதையே சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்குமானால் அதுதான் உண்மையான அன்பிற்கான உறவு. அது நமக்கு ஒரு அன்புத் தொல்லை தான் என்றாலும் அவ்வப்பொழுது அது நமக்கு ஊக்க சக்தியாக அமைந்து நம் இதயத்தை இதமாக்கி மகிழ வைக்கும். அப்படிப்பட்ட அன்புள்ளங்கள் நமக்கு கிடைத்து விட்டால் நாம் தான் பாக்கியசாலி.

🥰Victory King (VK)🥰

Saturday, May 13, 2023

#Victory King: சபை நாகரிகம்!

😍விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2038😍

பெற்றோர்களும் பிள்ளைகளும் நண்பர்களைப் போல் பழகலாம் உரையாடலாம் குதுகளிக்கலாம். அது நல்ல குடும்பத்திற்கு அழகுதான். ஆனால் பெற்றோர்கள் வயதை ஒத்த பெரியோர்களிடமும் பிள்ளைகள் அப்படி பழகினால் அது பெற்றோர்களுக்குத்தான் தலைகுனிவு. அந்த சமயத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அறிவுரை கூறி திருத்தவில்லை என்றால் குதூகலகுடும்பத்தில் குழப்பம் தான் ஏற்படும்.சபை நாகரிகத்தை காப்போமே!

🙏🏻Victory King alias ‘V. Krishnamurthy’🙏🏻

Friday, May 12, 2023

#Victory King: அன்புள்ளங்கள்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2037

தூய அன்புள்ளங்கள் நமக்கு கிடைப்பது என்பது அரிது. அதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால் அது கொடுமை. அந்த கொடுமையை மறப்பது என்பது வேதனை. அந்த வேதனையை நினைத்தாலே வலி. எனவே கிடைத்த அன்பை நழுவ விடாமல் தொடர்பில் வைத்து மகிழ்வுடன் வாழப்பழகுவோமே!

Victory king alias 'V. Krishnamurthy'

Thursday, May 11, 2023

#Victory King: வாழ்க்கை நலம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2036

நாம் யாரை எங்கே வைப்பது என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவோம்.யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்பதிலும் கவனமாக இல்லை என்றால் நம் சொல்லிற்கு மதிப்பில்லாமல் போய்விடும். மனிதநேயம் மிகவும் முக்கியம் அதே சமயத்தில் நாம் ஏமாளியாக இருந்து விடக்கூடாது.

Victory king alias 'V. Krishnamurthy'

Tuesday, May 9, 2023

#Victory King: நமக்கு நாமே கேடு நினைக்க வேண்டாமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2035

நான் என்ற ஆணவம், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை, தங்கள் சக்திக்கு ஒவ்வாத பேராசை, சுயநலத்தால் அடுத்தவர்களுக்கு செய்கின்ற துரோகம், தம் புகழுக்காக மற்றவர்கள் மேல் புழுதியை வாரிப்போடும் அவலம் இவை அனைத்தும் நம் வாழ்க்கை நாசமாவதற்கு நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் "slow poison".

Victory king alias V. Krishnamurthy

Saturday, May 6, 2023

#Victory King: வாழ்க்கைப் பயணம்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2034

Diversion ம் சற்று சகிப்புத்தன்மையும் நமக்கு இல்லை என்றால் சிறு சங்கடங்களையும் கஷ்டங்களாக உணர வைத்து அதுவே நம்மை மன உளைச்சலுக்கு வித்தாக்கி நம் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். எனவே நம் மனதிற்கு உற்சாகம் தரும் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு  இனிய நினைவுகளோடு எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்தால் நம் வாழ்க்கை வசந்தமாகும்.

Victory king alias V. Krishnamurthy

#Victory King: நட்பு!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2033

பால் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. பாலை காய்ச்சும் பாத்திரம் சுத்தமாக இல்லை என்றால் பால் திரிவது போல் நாம் மட்டும் நல்லவர்களாக இருந்து நம் சேர்க்கை சரியில்லை என்றால் அது நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். எனவே"கூடா நட்பு கேடாய் முடியும்"என்பதை மனதில் கொண்டு நல்லோரை பார்ப்பதும் நன்று நல்லோர் சொல் கேட்பதும் நன்று. உணர்ந்து வாழ்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Wednesday, May 3, 2023

#Victory King: சுயநலவாதிகளுக்கு ஒரு குட்டு!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2032

நாம் கூறும் உண்மைகள் மற்றவர்களுக்கு சாதகம் இல்லாத நிலையில், பொய் என்று சாதிக்கும் சுயநலவாதிகளைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல் மனம் தளராமல் அவர்களிடமிருந்து ஒதுங்கி நாம் நாமாகவே இருக்க பழகி விட்டாலே போதும் அதன் தாக்கத்திலிருந்துநாம் விடுபடலாம். சுயநலவாதிகளுக்கு சூடு கொடுத்தால் போல் ஆகிவிடும்.

Victory king alias V. Krishnamurthy

Monday, May 1, 2023

#Victory King: குழந்தை வளர்ப்பு!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2031

குழந்தைகள் தவழும் பொழுது நாம் அவர்களுக்கு சிறிது தூரத்தில் நின்று வா வா என்று கூறி கையை அசைத்தால் நாம் அந்த குழந்தையின் காதுகளுக்கும் கண்களுக்கும் கொடுக்கும் பயிற்சியில் நம்மை நோக்கி தவழ்ந்து வரும். இதுதான் அந்தக் குழந்தையின் முயற்சிக்கு நாம் கொடுக்கும் பயிற்சி. இதுபோல் குழந்தை வளர்ப்பில் நம் ஒவ்வொரு செயலும் அவர்களின் முயற்சிக்கு வித்தாக அமைய வேண்டும். இதுவே அவர்களின் ஆழ்மனதில் நன்கு பதிந்து வருங்காலத்தில்தன்னம்பிக்கைக்கு பேருதவியாக இருக்கும். உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy