Friday, April 28, 2023

#Victory King: பிரச்சனைகளும், தீர்வுகளும்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2029

நமக்கு பிரச்சனை என்று ஒன்று வந்துவிட்டால், அதனை பிரச்சனை என்று எடுத்துக் கொண்டால் கவலை  கோபம் பயம் அனைத்தும் நம்மை ஆட்கொண்டு நம் சிந்தனைகளை சிதறடித்து விடும். ஆனால், அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விட்டால் தைரியமும் தன்னம்பிக்கையும் நம்மை நாடி வந்து சிந்தித்து செயல்பட செய்து, எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்க முடியும். முயற்சிப்போமே!

Victory king alias V. Krishnamurthy

Thursday, April 27, 2023

#Victory King: மனசாட்சி!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2028

நாம் மனசாட்சிக்கு மதிப்பளித்து, மனித நேயத்துடன் மற்றவர்களை மதித்து வாழ்வதில் தவறில்லை. ஆனால் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இல்லையெனில் நம் மனசாட்சியயே அது அசைத்துப் பார்த்து நம்மை அற வழியிலிருந்து நகர்த்த ஏதுவாகிவிடும் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே நாம் நாமாகவே எப்பொழுதும் இருப்போம்!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, April 25, 2023

#Victory King: நிதர்சனம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2027

மற்றவர்களை காயப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதனை நியாயப்படுத்துபவர்களையும் தெரிந்தே துரோகத்தை செய்து அந்த உணர்வுகளே சிறிதளவும் இல்லாது திரிபவர்களையும்  எப்பொழுதும் பொய்யையே பேசி அதனை உண்மை என்று சாதிப்பவர்களையும் விதி விடாது துரத்தி வீழ்த்தியே தீரும். இதுதான் நிதர்சனம்!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, April 18, 2023

#Victory King: வாழும் காலத்து சொர்க்கம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2026

அழிவையும் ஆபத்தையும் தரும் ஆணவம், கோபம்,பொறாமை, துரோகம், பேராசை இவற்றையெல்லாம் நம் மனதில் இருந்து அகற்றி, வதந்திகளை புறந்தள்ளி, நட்பிற்கும் அன்பிற்கும் உயிர் கொடுத்து, உறவுகளை அரவணைத்து, உண்மையாக உழைத்து, மகிழ்வுடன் வாழ்ந்தால், நாம் வாழும் காலத்தே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

Victory king alias V. Krishnamurthy

Monday, April 10, 2023

#Victory King: காலத்தின் கண்ணாமூச்சி!

  விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2025

என்னதான் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி, கெட்டவர்களை உத்தமர்களாக்கி, மற்றவர்கள் பார்வைக்கு காட்சியாக்கினாலும் உண்மையை காலம் ஒருநாள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். காலத்திடம் யாரும் கண்ணாமூச்சி காட்ட முடியாது. உணர்வோமே!

Victory king alias V. Krishnamurthy

Saturday, April 8, 2023

#Victory King: அகத்தின் அழகும், புறத்தின் அழகும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2024

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்". நம் ஆழ்மனதில் இருக்கும் இன்பம் துன்பம் பொறாமை இவற்றின் பிரதிபலிப்பை நம் முகமே காட்டி கொடுத்து விடும். அதுபோல்தான் நம் எண்ணத்திற்கேற்பதான் நம் செயல்களும் அமையும். எனவே உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினாலும் நம் அங்க அசைவுகள் செயல்கள் நம்மை மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும் என்பதை மனதில் கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று அக மகிழாமல் வாழ பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Friday, April 7, 2023

#Victory King: திருந்தச் செய்வோம்!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2023

நாம் ஒரு நன்மை நடப்பதற்காக ஒரு உண்மையை மறைக்க முயலும் பொழுது முதலில் அதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நம்முடன் உள்ள  குடும்ப உறுப்பினர்களுக்கும் அதில் முழு உடன்பாடு இருத்தல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் கூட நன்மைக்காகவே நாம் செய்யும் அந்த செயல் திசை மாறி நம்மை அவமானப்படுத்திவிடும். எனவே நன்மைக்காக உண்மையை மறைப்பது தவறில்லை என்றாலும் அதனை திறம்பட திருந்த செய்தால்தான் முழுமை பெறும் என்பதனை நன்குணர்ந்து செயல்படுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Tuesday, April 4, 2023

#Victory King: உண்மையோடு ஒன்றுவோமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2022

உண்மை சில நேரங்களில் வலிக்கத்தான் செய்யும். அதற்கு பொய் ஒரு வலி நிவாரணி அல்ல. வலித்தாலும் சகித்துக் கொண்டு உண்மையின் பக்கம் நின்றால் உண்மைதான் வெல்லும். நம்  உள்ளத்தில் உண்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும் என்பதை உணர்ந்து உண்மையோடு ஒன்றி நாம் வாழப் பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy

Monday, April 3, 2023

#Victory King: விரும்பினாலும் வெறுத்தாலும்!

 விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2021

நாம் விரும்பினாலும் வெறுத்தாலும் தவிர்க்க முடியாததும் கணிக்க முடியாததும் நம்  இறப்பு. எனவே நாம் இருக்கும் ஒவ்வொரு நாளையும் நன்னாளாக கருதி நன்மையே செய்து உற்றார் உறவினர் சுற்றம் என அளவளாவி அகமகிழ்ந்து வாழப்பழகி விட்டால் என்னாளும் நமக்கு நன்னாளே..!

Victory king alias V. Krishnamurthy

Saturday, April 1, 2023

#Victory King: உணர்வோமே!

விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2020

நாம் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முயற்சிக்கலாம். ஆனால், அதுவே பொறாமையாக மாறிவிடக்கூடாது. பொறாமை என்னும் புற்றுநோய் நம்மை பற்றி கொண்டு விட்டால் அதுவே நமக்கு ஒரு சாபக்கேடு. அது ஒரு மன நோய்.நம் அழிவிற்கான ஒரு அறிகுறி. இதனை உணர்ந்து வாழப் பழகுவோமே!

Victory king alias V. Krishnamurthy