Monday, January 31, 2022

#Victory King: பார்த்துப் பேசுவோமே!

Victory King's Status 1019

நாம் மற்றவர்களிடம் பேசும்பொழுது எதிராளியின் ஏற்பு சக்தியை மனதில்கொண்டு பேச வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் அனைவரிடத்தும் பேசினால் அது விழலுக்கு இறைத்த நீர் போலதான். அதுபோல நாம் ஒருவரிடம் பேச வேண்டும் என்று மனதில் தோன்றினால் உடனே அவர்களிடம் பேசிவிட வேண்டும். காலம் தாழ்த்தினால் அவர்களிடம் ஒரு வேளை பேச முடியாத ஒரு நிலை  வந்து விட்டால் அந்த குற்ற உணர்வு  நம் மனதை விட்டு அகலாது நம்மை வருத்திக் கொண்டே இருக்கும். சிந்திப்போமே!

VK

Sunday, January 30, 2022

#Victory King: பொன்னான காலம்!

Victory King's Status 1018 

காலம் பொன்னானது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அந்தக் காலங்களில் நாம் செய்த ஒவ்வொரு செயலும் நம் மனதில் உழன்று கொண்டேதான் இருக்கும். காசை இழந்தால் பெற்றுவிடலாம். காலத்தை இழந்தால் திரும்ப பெற முடியாது. எனவேதான் வாழுங்காலத்தை பொன்னாகக் கருதி நல்லதையே நினைக்க வேண்டும் நல்லதே செய்ய வேண்டும்.

VK

Saturday, January 29, 2022

#Victory King: சந்தர்ப்பவாதிகள்

 Victory King's Status 1017

நாம் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றாலோ ஆதரிக்க வேண்டுமென்றாலோ நேரடியாக செயல்படுத்த வேண்டும். சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒருவரை எதிர்க்க மற்றொருவரை ஆதரிப்பது அநாகரிகமான செயல் என்பதோடு நாம் ஆதரித்தவரே நமக்கு எதிரியாக மாறி நம்மை அழிக்கவும் நேரிடலாம். சிந்திப்போமே!

VK

Friday, January 28, 2022

#Victory King : சாதனையும் சோதனையும்!

 Victory King's Status 1016

நாம் ஒன்றை சாதிக்க வேண்டும் என்றால் பல சோதனைகளை எதிர்கொண்டு அதனைக் களைந்து எடுத்து முன்னேறி வெற்றி பெறுவதுதான் நாம் பெருமைப்படக்கூடிய நமக்குக் கிடைக்கும் முழுமையான வெற்றி!

VK

Thursday, January 27, 2022

#Victory King: இரக்க குணமும் சுயநலமும்!

Victory King's Status 1015

இரக்க குணம் உள்ள நம் மனதையும்

இரும்பாக்கி விடுகிறது

சிலரின் சுயநலத்தால் நமக்கு அவர்கள் செய்யும்

துரோகச் செயலால்.

VK

Tuesday, January 25, 2022

#Victory King: மனசாட்சி!

 Victory King's Status 1014

நமக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்நாள் முழுவதும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து நம்முடனே பயணம்செய்யும் ஒரே நண்பன் நம் மனசாட்சி தான். எனவே நம் மனசாட்சி நாம் மற்றவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுது அவர்கள் நமக்கு தண்டனை கொடுக்காவிட்டாலும் நம் மனசாட்சியே நம்மை அமைதியாக இருக்க விடாமல் நம்மை அணு அணுவாக சித்திரவதை செய்து நம்மை கொன்றுவிடும்.

VK

Monday, January 24, 2022

#Victory King : நியாயங்களும், தர்மங்களும்!

 Victory King's Status 1013

நமக்கு எது நியாயமோ அதனையே தன் கருத்து என்று அடுத்தவர்களுக்கு கூறும் அறிவுரைகள் எல்லாம் நம்முடைய சுயநலம்தான். நாம் கூறும் கருத்து அது அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் அத்துடன் நமக்கு அந்த கருத்தை சொல்வதற்கு தகுதியும் இருக்க வேண்டும். நம் சுயநலத்தால் அது மற்றவர்கள் மனம் புண்படாத வண்ணமும் இருக்க வேண்டும்.

VK

Sunday, January 23, 2022

#Victory King: சுயநலம்!

Victory King's Status 1012

இன்று அடுத்தவர்கள் வலியை உணராமல் சுயநலமாக செயல்படுபவர்கள் நாளை அவர்களுக்கு அந்த நிலை வரும்போது தாங்கிப் பிடிக்கக்கூட ஆள் இல்லாத அனாதைகள்தான். இதுதான் இயற்கையின் நியதி!

VK

Saturday, January 22, 2022

#Victory King : நல்வாழ்க்கை மந்திரம்!

 Victory King's Status 1011

அடுத்தவனை அழித்து ஆனந்தமாய் வாழும் இதுதான் இன்ப வாழ்க்கை என்று எண்ணி பூரிப்படையும் சுயநலவாதிகளின் நிலை எந்த நிமிடத்திலும் அதுவே அவர்களுக்கு கழுத்தை நெரிக்கும் எமனாகத்தான் வரும் என்பதை உணர்ந்தால் மட்டுமே உண்டு நல்வாழ்வு அத்தகையோருக்கு.

VK

Friday, January 21, 2022

#Victory King : வாழ்வதற்கு ஆயிரம் வழிகள்!

Victory King's Status 1010

அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம். ஆனால் நமக்கென சிறந்த வழியை நாம் தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது நமக்கு  கிடைக்காத ஒன்றுதான். ஒருவரை கண்டுஅவர்கள் நன்றாக வாழ்ந்தால் அவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று நினைப்பதை  தவிர்த்து  அவர்களை போலவே நாமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் நாம் நம் வாழ்க்கையில்  முன்னெற முடியும்.

VK

Thursday, January 20, 2022

#Victory King: வாழ்க்கையில் பொறுப்பு!

Victory King's Status 1009

நமக்குள் லட்சியம் ஒன்று இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்குள் வந்துவிட்டாலே பொறுப்பு என்பது நமக்கு தானாகவே வந்துவிடும். நமக்கு பொறுப்பு வந்துவிட்டாலே வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.

VK

Wednesday, January 19, 2022

#Victory King : பண்புடன் வாழ!

Victory King's Status 1008

நமக்கு உதவிய வரை ஒருபோதும் நாம் மறக்கலாகாது. 

நம்மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்கலாகாது. 

நம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றலாகாது. 

நாம் பண்புடன் வாழ இதுவே தாரக மந்திரமாகும்.


VK

Tuesday, January 18, 2022

#Victory King: இன்பமான வாழ்க்கைக்கு!

Victory King's Status 1007

வாழ்க்கையில் நமக்கு எதிர்பார்ப்பும் ஆசைகளும் இருப்பது இயல்புதான். ஆனால் அவை அனைத்தும் நமக்கு நடந்துவிடும் என எண்ணுவதுதான் தவறு. எனவே, எது நடக்கிறதோ அதனையே மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ முயற்சித்தால்தான் நம் வாழ்க்கை இன்பமாக இருக்கும்! 

VK

Monday, January 17, 2022

#Victory King : பச்சோந்தி வாழ்க்கை!

Victory King's Status 1006

பூத்து குலுங்கினாலே பறித்து விடுவார்கள் என்று பூச்செடிகள் ஒரு நாளும்   பூக்காமல் இருந்தது இல்லை. ஆனால் சில மனிதர்கள் தான் பலபேருக்காக பல நேரங்களில் பச்சோந்தி வேஷம் போட்டு கொண்டு தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். இயற்கையை பார்த்தாவது கற்றுக்கொள்வோமே!

VK

Sunday, January 16, 2022

#Victory King: துரோகமும் தண்டனையும்!

Victory King's Status - 1005

துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.அதிலும் துரோகத்தை செய்து விட்டு, அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான். மிகச் சிறந்த  துரோகிகள். இத்தகையோர் தாங்கள் செய்த பாவத்இற்கு தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் சந்ததியினர் வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கின்றனர். சிந்திப்பீர்!

VK

Thursday, January 13, 2022

#Victory King: பொங்கல் வாழ்த்து!

 

 உள்ளத்தில் அன்பு பொங்கிட
ஒருவருக்கொருவர்
பரஸ்பரம் பாசம் பெருகிட
நம் இல்லங்கள்
அனைத்தும் செழித்திட
உழைத்து உண்போம் என
மனதில் உறுதி பூண்டு
சர்க்கரைப் பொங்கல் இட்டு
சூரிய பகவானை நம் இல்லத்துக்கு
அழைத்து வணங்கி
அனைவரும் அருள் பெறுவோமே!
அனைவருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துகள்!
- VK

 

 




Tuesday, January 11, 2022

#Victory King: குற்றமும், சுற்றமும்!

 Victory King's Status - 1003

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை" - உறவுகள் மேம்பட இதுவே தாரக மந்திரம்.

VK

Saturday, January 8, 2022

#Victory King: இறைசக்தி

Victory King's Status - 1002

பிரச்னையிலும் துன்பத்திலும் உழன்றாலும், அந்த நிலையிலும் மனதைத் தளரவிடாமல் இறைசக்தி நம்மை நிச்சயம் மீட்கும் என்பதை பரிபூரணமாக யார் உணர்கிறார்களோ அவர்களே தம் வாழ்க்கையை இயல்பாகவாழ்ந்து வெற்றியடைய செய்யமுடியும்.

VK

Friday, January 7, 2022

#Victory King: காலம் புகட்டும் பாடம்!

Victory King's Status - 1001

நம் பேராசை, அகங்காரம், பகைமை மற்றவர்களுக்கு செய்யும் துரோகம் இதுபோன்ற தவறான குணங்களின் விளைவுகள் விஸ்வரூபம் எடுத்து நம்மையேதான் வந்தடையும். இதுதான் காலம் நமக்குப் புகட்டும் பாடம்.

(VK)

Thursday, January 6, 2022

#Victory King : சந்தனமாய் இருப்போமே!

 Victory King's Status - 1000

'ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகள் சுற்றியிருந்தாலும் சந்தன மரம் தனது வாசனையை இழந்ததில்லை' என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருப்பதைப் போல் நாம் நற்பண்புகளுடன் நாம் நாமாகவே இருந்து வாழ்ந்தால் நம்மைச் சுற்றி எத்தனைத் தீமைகள் இருந்தாலும் எந்த தீய சக்தியும் நம்மைத் தாக்காது.

 Victory King (VK)