Friday, September 29, 2023

#Victory King: வாழ்க்கைப் பயணம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2105🥰

வாழ்க்கை என்பது ஒரு பயணம். நல்லதோ கெட்டதோ அது நம் பயணத்தின் ஒரு பகுதி தான். இன்பம் வந்தால் ரசித்துக் கொண்டே நகர வேண்டும். துன்பம் வந்தால் அதனை கடந்து செல்ல பழக வேண்டும். அப்பொழுதுதான் நம் பயணத்தை இறுதிவரை தளர் வில்லாமல் உற்சாகத்துடன் கடந்து சென்று பயணத்தை இனிதாக முடிக்க முடியும்.

🙏"Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, September 27, 2023

#Victory King: எண்ணங்கள், நேர்மறை எண்ணங்கள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2104🥰

நமது நேர்மறை எண்ணங்களின் பிரதிபலிப்புதான் நம் வாழ்க்கையின் நடைமுறை. நம் நேர்மறை எண்ணங்கள் நம் மன அழுத்தத்தை குறைக்கும் உந்துவிசையாக அமைந்து, நமக்கு உற்சாகத்தை கொடுத்து, நம் செயலில் நேர்த்தியை ஏற்படுத்தி, ஆத்மதிருப்தியை அளித்து, மகிழ்வான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். எனவே எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து வாழப்பழகுவோமே!

🙏"Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, September 23, 2023

#Victory King: குறிக்கோள்களும் வாழ்க்கையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2103🥰

குறிக்கோள் இல்லாத செயல்களுக்கு குறிப்பு எழுதி செயல்படுத்த முடியாது. அதுபோல் காரணமில்லாமல் நடக்கும் நிகழ்வுகளுக்கு நீதியை எதிர்பார்க்க முடியாது. எனவே வாழ்க்கை என்றால் வாழ்வில் வெற்றி பெற குறிக்கோள் வேண்டும். உணர்வோமே!

🙏"Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, September 22, 2023

#Victory King: மெளனம் கலைவோமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2102🥰

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி, மௌனம் காக்காமல், சொல்ல வேண்டிய விஷயத்தை, சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னால்தான் அந்த சொல்லுக்கு ஒரு தீர்வு கிடைத்து தெளிவு பிறந்து அதற்கான செயல் வடிவத்தை நாம் செவ்வனே பெறுவோம். எனவே"மௌனம் கலைவோமே"

🙏"Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, September 21, 2023

#Victory King: நம்மை நாம் நொந்துகொள்ள வேண்டாமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2101🥰

யாரோ நம்மைப்பற்றி குறைகூறி விட்டார் என்பதை நினைத்து நம்மை நாமே நொந்து கொண்டு மன அழுத்தத்தில் இல்லாமல், குறைகள் எல்லாம் நம்மைப் பற்றி சொல்பவர்களிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து, நம்மை நாமே மகிழ்ந்து வாழ பழக வேண்டும். மகிழ்ச்சியுடன் வாழ்வது என்பது ஒரு கலை. நம்மிடம் உள்ள நிறைகளை உளமார நினைத்துக் கொண்டிருந்தாலே போதும். அது நம்மை மகிழ்வுடன் வாழ வைத்து விடும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, September 16, 2023

#Victory King: பூத்துக் குலுங்கும் பூங்காவனம்

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2100🥰

'எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது' (கவிஞர் கண்ணதாசன்) என்பதை நன்குஉணர்ந்து, வருவதை பெருமையுடன் ஏற்று, துயரங்களை துச்சம் என கருதி எதிர்கொண்டு, நாம் வாழும் காலத்தை நலமுடனும் வளமுடனும் மகிழ்வுடன் வாழப் பழகிவிட்டால் நம் வாழ்க்கையே ஒரு பூத்துக் குலுங்கும் பூங்காவனம்தான். 

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, September 14, 2023

#Victory King: தன்வினை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2099🥰

உறவுகளை உதறித் தள்ள காரணங்களை எதிர் பார்த்து சந்தர்ப்பம் வரும் பொழுது சாதுரியமாக அதனை காரணப்படுத்தி உறவுகளிடம் இடைவெளியை ஏற்படுத்துவது மனசாட்சி இல்லாதவர்களின் கீழ்த்தரமான செயல். தன்வினை தன்னைச் சுடும் என்பது போல் தங்களுக்கு அந்த நிலை வரும் பொழுதாவது உணர்ந்து வருந்தினால் சரிதான்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, September 13, 2023

#Victory King: நம் வாழ்வு மலர!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2098🥰

அடுத்தவன் வாழ்வை கெடுத்து நாம் வாழ நினைத்தாலோ அடுத்தவன் பொருளை அபகரித்து நாம் ஆனந்த பட்டாலோ அந்த நம் எண்ணத்தின் எதிர்மறை அதிர்வு நம் வாழ்க்கையை சிறிது சிறிதாக சீரழித்து நம்மையும் நம் சந்ததியினரையும் நடுத்தெருவில் நிறுத்தி விடும் என்பதை நாம் நன்கு நம் மனதில் பதிய வைத்து விட்டாலே போதும் நம் வாழ்வு மலர!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Sunday, September 10, 2023

#Victory King: விவாதத்தை விடுத்து விவேகத்தை கையாளுவோம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2097🙏

ஒரு பிரச்சனை என்று வந்தால் அதனை விவேகத்துடன் கையாண்டால்தான் நாம் சாதகமான முடிவை எதிர்பார்க்க முடியும். அதனை விடுத்து விவாதத்தில் ஈடுபடுவோமே யானால் அது எதிர்வினையை தந்து அந்த ஒரு சிறு பிரச்சனை பூதாகரமாகி இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிடும். எனவே எங்கும் எதிலும் விவாதத்தை விடுத்து விவேகத்தை கையாள பழகுவோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Friday, September 8, 2023

#Victory King: தன்னம்பிக்கை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2096🙏

உரிமையோடு கூடிய உறவுகளும், உண்மையான அன்பு உள்ளங்களும், நேர்மையான நட்பு வட்டங்களும் நமக்கு கிடைத்து விட்டால் தன்னம்பிக்கை நம்மிடம் தானே வந்து தழுவிக் கொண்டு நம் வாழ்வை மலரச் செய்துவிடும்!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Monday, September 4, 2023

#Victory King: திறமை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2095🙏

திறமைசாலிகள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ஏங்குவதை விடுத்து சரியான நேரத்தில் சரியான வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் நாமும் திறமைசாலிகள் தான். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்பதை நாம் நம் மனதில் நிலை நிறுத்தி விட்டால் நம் வாழ்விலும் வெற்றி என்பது நிச்சயம்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Friday, September 1, 2023

#Victory King: வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2094🙏 

கருங்கல்லை சிற்பமாக்கி மகிழ்வதும் சிலைகளாக்கி வணங்குவதும் அதனையே படிக்கற்களாக மாற்றி மேலே உயர முயற்சிப்பதும் நம்திறமையையும் மனோபாவத்தையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் உந்து சக்திதான்.அதுபோல்தான் இறைவன் நமக்கு அளித்த வாழ்க்கை என்னும் பொக்கிஷத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தால்தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰