Monday, July 7, 2025

#Victory King: இருக்கும்போதே புரிந்து கொள்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2344🥰

நமக்கு நெருங்கிய ஒருவரைப் பற்றி புரிதல் இல்லாமல் பகை உணர்வுடனேயே வாழ்ந்து அவர் இறக்கும் தருவாயில் அவரைப் பற்றி புரிந்து அவர் இறந்தபின் அழுது ஆர்ப்பாட்டம் செய்து புலம்பி என்ன பயன்.குற்ற உணர்வு தான் மிஞ்சும். எனவேதான் ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுதே நம் கோபதாபங்களை விட்டு அரவணைத்து புரிதலோடு வாழ்ந்திருந்தால் இருவருமே மன அமைதியோடு இருந்திருக்கலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Sunday, July 6, 2025

#Victory King: நட்புப் பயணம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2343🥰 

வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு நல்லவன் என்று எண்ணி நட்பை வளர்த்து சிக்கலில் மாட்டி விடக்கூடாது. பசுந்தோல் போர்த்திய புலிகள்  ஏராளம்."அடுத்தவரை மதித்தல், பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கேடு செய்யா திருத்தல், பிறர் குடியை கெடுக்காதிருத்தல், புறம் பேசாமை" போன்ற நற்குணங்கள் கொண்ட நல்லவர்கள் நட்பு நமக்கு கிடைத்துவிட்டால் பயமின்றி நாம் நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, July 5, 2025

#Victory King: அனைவரிடமும் ஏமாறாமல் அன்பு காட்டுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2342🥰 

ஒருவர் நம்மை ஏமாற்றினால் அவர் புத்திசாலி என்றோ நாம் முட்டாள் என்றோ எடை போட்டு விட வேண்டாம். அது நாம் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் நமக்கு செய்தது நம்பிக்கை துரோகம். அதன் மூலம் நாம் அறிந்து கொண்ட உண்மை "அனைவரையுமே நம்பி விடாதே". இதனை சிந்தித்து செயல்பட்டால்  ஏமாற்றம் என்பது நம்மை எட்டிப் பார்க்காது.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, July 4, 2025

#Victory King: தவறை சுட்டிக் காட்ட தவற வேண்டாம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2341🥰 

நாம் நமக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் தவறிழைக்கும் பொழுது அவர் மற்றவர்களால் அவமதிப்பதை தவிர்க்கும் நோக்கில் மனிதாபிமானத்தோடு அவரை காப்பாற்றும் பொழுது அதை அவர் அதன் உண்மை நோக்கை புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் தவறிழைக்க முனைந்தால் நாம் அவரை நேர்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும் முடியவில்லை என்றால் அவரை விட்டு விலகி இருப்பது தான் நமக்கு கௌரவம்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏