Friday, June 27, 2025

#Victory King: "ஆளும் வளரணும் அறிவும் வளரணும்"

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2340🥰 

ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்பதல்ல வாழ்க்கை. "ஆளும் வளரணும் அறிவும் வளரணும்" அதற்கு நாம் முழுமையாக முயற்சி செய்து வெற்றி பெற்றால் தான்  அது வாழ்க்கையின் முதிர்ச்சி. அறிவு வளர்ந்தால் பண்பு வளரும். அந்தப் பண்புதான் நம் வாழ்வை வளம் பெற செய்து நம்மை நேர்வழிப்படுத்தும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, June 26, 2025

Victory King: எண்ணித்துணிக கருமம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2339🥰 

ஒருவர் இருக்கும் பொழுது அவரின் மகத்துவம் தெரியாமல்  நோகடித்து விட்டு அவரை இழந்தபின் உண்மையை உணர்ந்து வருந்தி என்ன பலன். நம் மனதிலிருந்து அதை அழிக்க முடியாத ஒரு கறை தான். எனவே  "எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு".

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, June 25, 2025

#Victory King: கடின உழைப்புக்கான பலன்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2338🥰 

இரவு பகலாக கடின உடல் உழைப்பை கொடுத்து பாதுகாத்த நெற்பயிறானது, அந்த அறுவடை நாளான்று நல்ல மகசூலை ஒரு விவசாயி காணும் பொழுது அந்த மகிழ்ச்சியில் அவரது பிரகாசமானமுகத்தை ஒப்பிட வேண்டுமென்றால், கருவை வயிற்றில் ஒன்பது மாதங்கள் சுமந்து அடைந்த வேதனைகளையும் சுகங்களாக அனுபவித்து தன் உயிரையே பணயம் வைத்து தன் குழந்தையை பெற்றெடுத்த அடுத்த நொடியே குழந்தையின் அழுகுரலையும் முகத்தையும் பார்த்தவுடன்  பரவசமுடன் மகிழும் அந்தத் தாயின் முகத்தோடு ஒப்பிட்டால் மிகையாகாது.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, June 16, 2025

#Victory King: குறைகளை உணர்ந்து திருந்துவரை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2337🥰 

அடுத்தவர்கள்விஷயத்தில் தலையிட்டு அலசி ஆராய்ந்து அவர்களின் குறைகளை மட்டுமே காண்பவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைப்பதாக நினைத்து தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ளும் ஒரு யுக்தியே என்றாலும் அவர்கள் மனசாட்சி உறுத்ததிலிருந்து தப்ப முடியாது தங்கள் குறைகளை உணர்ந்து திருந்துவரை.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, June 15, 2025

#Victory King: நாம் ஒரு பாக்கியசாலியே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2336🥰

உண்மையாக இருப்பதால் தான்  காயப்படுகிறோம், உரிமையுடன் பழகுவதால் தான் கோபப்படுகிறோம், நம் நேர்மை தான் நம்மை வெறுக்கச்செய்கிறது என்று  வேதனைப்படாமல் உண்மை பெருமைக்குரியது, உரிமை புரிதலின் புனிதம், நேர்மை நம் கௌரவத்தை காப்பாற்றும் கேடயம் என்று சிந்தித்துப் பார்த்தால் இவைகளை ஒருங்கே பெற்ற நாம் ஒரு பாக்கியசாலி என்பதை உணர முடியும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: உடலும் மனமும் சீராக!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2335🥰 

இருளில் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு சிந்தித்தாலும், மூடிக்கொண்டு சிந்தித்தாலும் நம் நிழல் கூட நமக்கு உதவிக்கு வராது. மன அழுத்தம் தான் மிஞ்சும்.நாம் வெளிச்சத்திற்கு வந்து நாலு பேருடன் பேசி பழகும் பொழுது தான் நாம் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டு நம் சிந்தனைக்கும் விடை கிடைக்கும்.  இதயமும் இதமாகி உடல் நிலையை சீர்படுத்தி நம்மை நலமுடன் வாழ வைக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, June 14, 2025

#Victory King: அனுபவிப்போம் வாழ்க்கையை நல்லவிதமாக!

🥰 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2334🥰

அரிசி மாவில் புள்ளி வைத்து அந்த புள்ளிகளை இணைத்த அழகிய கோலங்கள் வீட்டு வாசலை அலங்கரித்து அதுபோல் வீட்டு உறுப்பினர்களும் அன்போடும் பாசத்தோடும் ஒருவருக்கொருவர் இணக்கமாகி மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் "positive vibration"உடனும் நாம் வசிக்கும் வீடு அமைந்து விட்டால்"positive energy" தானாகவே நம்மை சூழ்ந்து சொர்க்க வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க முடியும் பாக்கியம் இருந்தால்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, June 13, 2025

#Victory King: நல்வாழ்க்கைக்கான அஸ்திரம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2333🥰

ஒருவர் நம்மிடம் ஒரு பொய்யை உண்மை போல் சித்தரித்து பேசும் பொழுது அது நமக்கு பொய் என்று தெரிந்தும் "அப்படியா" என்று கேட்டு அவரை விட்டு நகர்ந்து விட்டால் அவர் மேலும் தனது புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதிலிருந்து நாம் தப்பிக்கலாம். அதுபோல் அந்தந்த சூழ்நிலைகளை சமயோகிதமாக இடத்திற்கு தகுந்தாற்போல் "அஸ்திரத்தை" பயன்படுத்தி சமாளித்தால் மட்டுமே நம் கௌரவத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, June 12, 2025

#Victory King: வெற்றிப் பாதையை நோக்கி செல்வோமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2332🥰

நாம் விரும்புவதை அடைய முயற்சிக்கலாம். அது கிடைப்பதற்கு முன்பாகவே நாம் கனவுகளை வளர்த்துக் கொண்டு விட்டால் ஒரு சமயம் அது கிடைக்காத பட்சத்தில் அந்த ஏமாற்றம் நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டையாகிவிடும். எனவே எதற்கும் உண்மையாக முயற்சிப்போம் கிடைத்தால் வெற்றி இல்லையேல் மீண்டும் முயற்சித்து வெற்றிப் பாதையை நோக்கி செல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, June 11, 2025

#Victory King: வாழ்க்கைக்கான புரிதல்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2331🥰

ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாத வாழ்க்கைக்கு மூல காரணமே ஒருவர் மற்றவருக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகங்களும் அதனால் ஏற்படும் காயங்களின் ஆறாத ரணத்தினால் தான். குற்றங்களை மன்னிக்க முடியும். ஆனால் ஒருவரின் குரோதங்களும் செய்த துரோகங்களும் ஆழ் மனதில் பதிந்து நீங்காத நினைவாகிவிடுகிறது. அதன் வேதனை தான் விரக்தியும் விரோதமும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, June 10, 2025

#Victory King: வாழ்க்கை ஒரு நாடக மேடை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2330🥰

நாடக நடிகர்கள் மேடையில் வேஷம் போட்டு நடிக்கும் பொழுதும் அரவாரத்துடன் பாராட்டுவார்கள். நாடகம் முடிந்ததும் வேஷம் கலைந்த பிறகும் அவர்கள் திறமையைப் போற்றி பாராட்டுவார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் நல்லவன் போல் நடிக்கும் வேஷதாரிகளை அவர்கள் முகத்திரை கிழிந்ததும் அவர்களை தெரு நாய்கள் கூட மதிக்காது. இப்படிப்பட்ட வேஷதாரிகளை புறக்கணித்து வாழப்பழகுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, June 9, 2025

#Victory King: காலம் புகுத்தும் பாடம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2329🥰

மற்றவர்கள் குறைகளை அலசி ஆராய்ந்து  நீதிபதி போல் நீதி சொல்ல முற்படுபவர்கள் மற்றவர்கள் தங்கள் குறைகளை கூறும் பொழுது வக்கீல் ஆக மாறி வாக்குவாதம் செய்து தங்களை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்கும் மனசாட்சியற்ற மனிதர்களை அந்த மனசாட்சியே அவர்களுக்கு நீதி புகட்ட வேண்டும் இல்லையேல் "காலம்"புத்தி புகட்டிவிடும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, June 8, 2025

#Victory King: குறுந்தொடராகவும், நெடுந்தொடராகவும் மாறும் வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2328🥰 

நம் வாழ்க்கையே ஒரு தொடர்கதை தான். அது பல பருவங்கள், நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், திண்டாட்டங்கள், என சுவாரசியமானது. இது சிலருக்கு நீண்ட நெடுந் தொடராகவும் சிலருக்கு குறும்படம் போல குறுகிய கால தொடராகி முற்றுப்புள்ளியுடன் முடியும். முடிந்த தொடர்கள் அடுத்தவர்கள் மனதில் நிலைத்து நிற்பதும் ஏதோ ஒரு தொடராக எண்ணுவதும் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையை பொறுத்துதான்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, June 7, 2025

#Victory King: வாழ்க்கை எனும் சுவற்றில் அடித்த பந்து!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2327🥰

ஒருவருக்கு பிடிக்காத செயலை செய்து அவர்களை வெறுப்பேற்றாமலும், ஒருவரின் எதிரிக்கு எதிரியுடன் நட்பு கொண்டு அந்த எதிரியுடன் உள்ள பகையை மேலும் உசுபேற்றாமலும், மற்றவர்களைப் பற்றி புறம் பேசி அவர்களின் சாபத்திற்கு ஆளாகமலும் வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை சிறக்கும். இல்லையேல் நம் வாழ்க்கை "சுவற்றில் அடித்த பந்து தான்". அனுபவிக்க வேண்டியது தான்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, June 6, 2025

#Victory King: எதிர்பார்ப்புகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2326🥰

"எதிர்பார்ப்பு"என்ற ஒன்று நம் மனதில் ஒரு ஓரத்தில் கூட இல்லாமல் வாழ்ந்தால் தான் நமக்கு நிம்மதி. என்னதான் அன்பையும் பாசத்தையும் திகட்ட திகட்ட நம் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தாலும் எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து நமக்கு கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல்  பிள்ளைகளுக்கு நம் கடமையைச் செய்த பெருமையோடு வாழ்வதுதான் எதிர்பார்ப்பற்ற பரந்த உள்ளம். ஆத்மத்திருப்தியும்கூட!


🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, June 5, 2025

#Victory King: வாழ்க்கை சுழற்சியில் இன்பங்களும் துன்பங்களும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2325🥰

இரவும் பகலும் மாறி மாறி வருவதை நாம் தினமும் கண்கூடாக கண்டாலும் அது பூமியின் சுழற்சியினால் ஏற்படும் மாற்றங்களே. அதுபோல்தான் நாம் அனுபவிக்கும் சுகம் துக்கம் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் அனைத்துமே நம் வாழ்வின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் தான் என்பதை நாம் உணர்ந்தாலே போதும் இந்த நிதர்சனத்தோடு இணைந்து வாழ பழகி விடுவோம். தெளிவு பெறுவோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, June 4, 2025

#Victory King: நம் தலைமுறை அமைக்கும் வாழ்க்கைப் பாதை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2324🥰

தன் குடும்பம் தன் பிள்ளைகள் என சிந்திக்கும் சுயநலவாதிகள் தங்கள் இறுதி காலம் வரை அந்த இருமாப்பிலேயே இருந்து காரணமே இல்லாமல் உறவுகளுக்கெல்லாம் ஊறுவிளைவித்த மனிதாபிமானமற்ற ஜென்மங்கள் தாங்கள் கெடுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் தலைமுறையும் கெடும் என்பதை உணராதது தான் வேதனை. இந்நிலைக்கு நாம் ஆளாகாமல் வாழப்பழகுவோமே!

🙏     Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏