Sunday, October 12, 2025

# Victory King: இருக்கும் இடத்தைப் பொறுத்துதான் மதிப்பு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2396🥰

இருக்கும் இடத்தைப் பொறுத்துதான் மதிப்பு. உதாரணமாக 189 இதில் 9 ன் மதிப்பு 9 தான் 8 மதிப்பு பத்தாவது ஸ்தானத்தில் இருப்பதால் என்பது. ஒன்றின் மதிப்பு 100 ஸ்தானத்தில் இருப்பதால் 100.1ன் முன் 0வை சேர்த்தால் மதிப்பில்லை.9க்கு பிறகு 0 வந்தால் மதிப்பு ஆயிரம் ஆகிவிடுகிறது. அது போல் தான்  நமக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் சேருமிடத்தைப் பொறுத்து தான். எனவே"குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்ககொளல்"

முயல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Friday, October 10, 2025

#Victory King: மூத்தோர் இருந்து சந்ததியை வழிநடத்தட்டும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2395🥰 

வாழை மரம் ஒரு மங்களகரமான, இதயத்திற்கு இதமளிக்கும் புனிதத்தையும் பெற்று மரத்தின் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் அற்புத சக்தி படைத்தது. அதுபோல் குடும்பத்தில் அனுபவமிக்க நற்குணங்களுடன் மனநிறைவோடு வாழும் மூத்தோர் இருந்து தம் சந்ததியினரை வழி நடத்தும் பாக்கியம் நமக்கு கிடைத்துவிட்டால் நம் குடும்பமே சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நம்மை நாம் நம்புவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2394🥰  

பறவைகள் மரக்கிளைகளில் துணிச்சலுடன் அமர்வது அந்தக் கிளையை நம்பி இல்லை. தங்கள் சிறகுகளை நம்பி தான். அதுபோல்தான்  நம்முடைய செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி அடுத்தவர்களை நம்பி இறங்காமல், நம்மையும் நம் திறமையையும் மட்டுமே முழுமையாக நம்பி செயல்பட்டால்தான் அதற்கான வெற்றியை ஆத்மதிருப்தியுடன் நாம் காண முடியும்.உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, October 9, 2025

#Victory King: சந்ததியினருக்கு வழிகாட்டுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2393🥰  

தழைத்து படர்ந்து வளர்ந்த பெரிய மரங்கள் இளைப்பாற நிழல்களை கொடுத்தும், அவைகளின்காய்ந்த நிலையில் அடிமரம் தொட்டிலாகவும், கட்டிலாகவும், கிளைகள் விறகாவும் நமக்கு உபயோகமு ள்ளதாக அமைவது போல்,உரிமை உள்ள உறவும், உண்மையுள்ள அன்பும், நேர்மையுள்ள நட்பும்,கிடைத்து நம்பிக்கை உள்ள வாழ்வு நாம் பெற்று விட்டால் நாமும் இருக்கும்வரை அனைவராலும் போற்றப்பட்டும்,இறந்த பிறகும் நம் சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்குவோம்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, October 8, 2025

#Victory King: சின்னஞ்சிறு விஷயங்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2392🥰 

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள சின்ன சின்ன விஷயங்களை கூட அழகுடன் செய்ய பழகலாம். பிறருடைய சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டலாம். எதிர்காலம் குறித்த பயங்களை தவிர்த்து இன்று எப்படி உற்சாகமாக இருக்கலாம் என்பதை பற்றி சிந்திக்கலாம். நேர்மறை எண்ணங்களுடன் நாம் சிறு சிறு விஷயங்களையும் கொண்டாட தொடங்கினால் நாம் உடலாலும் மனதாலும் உற்சாகத்துடன் திகழ்வோம். முயற்சிக்கலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, October 6, 2025

#Victory King: இலட்சியம் இல்லா வாழ்க்கை, முட்கள் இல்லா கடிகாரமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2391🥰 

நம் வாழ்க்கை பயணம் ஒரு லட்சியத்தை நோக்கி இருக்க வேண்டும். இல்லாமல் மனம் போன போக்கிலும் கால் போன போக்கிலும் சென்றால் நாம் ஒரு 'ஜடம்'தான். அது துடுப்பு இல்லாமல் ஓடத்தில் செல்வதற்கு சமம். முட்கள் இல்லாத கடிகாரம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன. அதுபோல்தான் லட்சியம் இல்லாத வாழ்க்கையும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, October 5, 2025

#Victory King: எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2390🥰   

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தையும் பெற்று நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக்கி மகிழ்வுடன் வாழ, நாம் பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், சம்பந்தமில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தாலே போதும். நம் வாழ்க்கையும் சிறக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, October 4, 2025

#Victory King: மனசாட்சியை ஏமாற்ற முடியாதே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2389🥰  

நம் மனசாட்சி  நம்  நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அதற்கான நீதியை தனித்துவமாக கொடுக்கும் வல்லமை பெற்றது. எனவே மனசாட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து நாம் தவறு செய்தால் நாம் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம் ஆனால் மனசாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அது நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, October 3, 2025

#Victory King: காலம் பதில் சொல்லும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2388🥰  குறுக்கு வழியில் சம்பாதித்து பொய் கணக்கு எழுதுபவர்கள் மிகவும் கவனத்துடன் தப்பில்லாமல் எழுத முயல்வார்கள். அதுபோல்தான் தவறு என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் அந்த தவற்றிற்காக ஒரு கட்டுக் கதையையே கற்பனை வளத்துடன் உண்மை நிகழ்வு போல் தன் பேச்சு சாதுரியத்துடன் அனைவரையும் நம்ப வைப்பார்கள். ஆனால் "காலத்தை"மட்டும் நம்ப வைக்க முடியாது. அது  ஒரு நிலையில் வைத்து செய்துவிடும்.உஷார்!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, October 2, 2025

#Victory King: பேருதவி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2387🥰  

வறுமையில் இருப்பவர்களிடம் நம் வசதி வாய்ப்புகளைப்பற்றியும், குழந்தைகள் இல்லாதவர்களிடம் நம்  பிள்ளைகளின் பெருமைகளை பற்றியும், அநாதைகளிடம் பெற்றோர்களை பற்றியும் பேசாதிருத்தலும், மொத்தத்தில் அடுத்தவர்கள் மனம் கலங்கப்படும் அளவிற்கு எதையுமே செய்யாதிருந்தாலே போதும் . அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி. உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, October 1, 2025

#Victory King: வாழ்க்கை சுபிக்‌ஷமாக!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2386🥰 

ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கு ஏற்படும் விரக்தியிலி ருந்து வெளிவர நாம் அதை மாற்றுவதற்கு வாய்ப்பிருந்தால் மாற்றலாம். இல்லையென்றால் அந்த விஷயத்தையே ஏற்றுக் கொள்ள நம் மனதைப்பக்குவபடுத்திக் கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் அந்த விஷயத்தை நம் மனதிலிருந்து நீக்கி விட்டு நிம்மதியாக இருக்க முயல வேண்டும். இல்லையேல் அந்த விரக்தியே நம்வாழ்க்கையை சூனியமாக்கிவிடும் உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏