Friday, February 28, 2025

#Victory King: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனைகள்

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2273🥰 

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அதுபோல்தான் ஒரு பிரச்சனை மனஸ்தாபம் என்று வந்தால் வாழ்க்கையில் அதை ஒருநிலையில் முற்றுப்புள்ளி வைத்து முடிக்கவில்லை என்றால் அது விஸ்வரூபம் எடுத்து விபரீதத்தில் தான் முடியும். உணர்ந்து செயல்பட முயல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 27, 2025

#Victory King: பணமே வாழ்க்கை அல்ல!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2272🥰 

நாம் வாழ்க்கையில் முன்னேற: பணிவு இருக்கலாம் ஆனால் அடிமையாகி விடக்கூடாது. இரக்கம் இருக்கலாம் ஆனால் ஏமாளி ஆகிவிடக்கூடாது. ஆசை இருக்கலாம் அது பேராசையாக ஆகிவிடக்கூடாது. துணிவு இருக்கலாம் ஆனால் துரோகிகளுக்கு துணை போகிவிடக்கூடாது. எளிமையாக வாழலாம் ஆனால் கருமியாகவே வாழ்ந்து விடக்கூடாது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான் ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. முயற்சிக்கலாமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, February 26, 2025

#Victory King: அன்புக்கும் பாசத்துக்கும் கூட இடைவெளி வேண்டும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2271🥰 

சாலையில் வாகனங்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்பொழுது சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தால் மட்டுமே விபத்தை தவிர்க்கலாம். அதுபோல்தான் உறவுகளாகட்டும் நட்புகளாகட்டும் என்னதான் மிகவும்நெருங்கியவர்களாக இருந்தாலும்கூட சிறிது இடைவெளி விட்டு அந்த அன்பையும் பாசத்தையும் தொடர்ந்தால் தான் வாழ்நாள் முழுவதும் அது நிலைத்து நம்மை மகிழ்விக்கும். அதுதான் நிதர்சனம். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, February 25, 2025

#Victory King: விழலுக்கு இறைத்த நீர்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2270🥰  

எவ்வளவுதான் ஓடி ஓடி உதவி செய்தாலும் பெருந்தன்மை இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் உதவியானது "விழலுக்கு இறைத்த நீர் போல் தான்". "பாத்திரம் அறிந்து பிச்சை இடு"என்ற பழமொழிக்கேற்ப தகுதி பார்த்து தேவை அறிந்து நாம் செய்யும் உதவி தான் பேரு உதவி, பயனுள்ள உதவி. உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, February 24, 2025

#Victory King: நிம்மதியான வாழ்க்கைக்கு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2268🥰 

நிம்மதியான வாழ்க்கைக்கு: உடல் ஆரோக்கியம், திருப்தி அடையும் மனம், நேர்மையுடன் சம்பாதித்த பணம், அனுசரணையான குடும்பம், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத நிலை, கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழப் பழகும் பக்குவம், விட்டுக் கொடுத்து வாழும் மனம், அன்பான உறவுகள், பாசமுள்ள பிள்ளைகள் இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்துவிட்டால் அதுதான் இறைவன் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு அளிக்கும் அருள்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: பொறுமைக்கும் எல்லை உண்டு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2269🥰 

எதிராளி பொறுத்துக் கொள்கிறார் சகித்துக் கொள்கிறார் என்பதற்காக நாம் அடுத்தடுத்து அவரை உதாசீனப்படுத்தி காயப்படுத்தினால், "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு"எனவே ஒரு நிலையில் அவர்களின் எதிர்ப்பு அஸ்திரத்தை நம் மீது பிரயோகப்படுத்தும் பொழுது அதை தாங்கும் சக்தியை நாம் இழந்து நம் நிலை மிகவும் மோசமாகிவிடும்."சாதுமிரண்டால் காடு கொள்ளாது"இதனை உணர்ந்து மனிதநேயத்தோடு வாழப் பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, February 23, 2025

#Victory King: சக்தி வாய்ந்த மண், தரமான விதை, பதமான தண்ணீர்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2267🥰 

பயிர் நல்ல மகசூலை கொடுக்க வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மண் தரமான விதை பதமான தண்ணீர் வளர்ச்சிக்கேற்ப உரம் உணர்வோடு பாதுகாக்கும் உழவர்கள் அனைத்தும் உறங்கிணைத்து இருக்க வேண்டும். அதுபோல்தான் குழந்தைகள் வளர்ப்பிலும். ஆரோக்கியமான சூழ்நிலை அன்புக் கரங்களின் அரவணைப்பு குழந்தைகளின் குதூ களிப்பிற்கு உறவுகளின் வலிமை மிகவும் முக்கியம். சிந்திப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 20, 2025

#Victory King: மனமெனும் ஆசான்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2266🥰  

நல்ல வாழ்க்கை அமைய பெற்றவர்கள் அதனை தக்க வைத்துக் கொண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்காதவர்கள் கிடைத்த வாழ்க்கையை தமக்கு தகுந்தபடி நல்வாழ்க்கையாக அமைத்துக் கொண்டும் மகிழ்வுடன் வாழ பழகி விட்டால் அனைவரது வாழ்க்கையுமே நல்வாழ்க்கைதான். அனைத்திற்கும் நம் மனம் தான் ஆசான். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, February 19, 2025

#Victory King: பாசம், நேசம், ஒற்றுமை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2265🥰  

பாரபட்சம் இல்லாத பாசமும், நேர்மையான நேசமும், ஓரவஞ்சனை இல்லாத ஒற்றுமையும் ஒரு குடும்பத்தில் அமைந்துவிட்டால், இந்த மனோபாவங்கள் ஆல விழுதுகளை போல் அந்த குடும்பத்தை தாங்கி ஆணிவேரை அசைக்க விடாமல் ஓங்கி உயர்த்தி விடும். முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, February 18, 2025

#Victory King: வாழ்க்கையும் மனப்பக்குவமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2264🥰  

நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள், நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள், சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சில ஆசைகள், மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள், இவைகளை எல்லாம் நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று வாழ பழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, February 14, 2025

#Victory King: உறவினர்களும், குடும்ப ஒற்றுமையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2263🥰 

நம் வீட்டிற்கு விரும்பி வரும் உறவுகளிடம் நாம் முகம் கொடுத்து பேசாமல் அலட்சியப்படுத்தி உரிய மரியாதை கொடுக்காமல் அவர்களை காயப்படுத்தும் பொழுதும்கூட அவர்கள் வந்த இடத்தில் நம்முடன் சரிக்கு சரி நின்று தங்கள் அதிர்ப்தியை காண்பிக்காமல் அதன் பிறகு நம் குணம் தெரிந்து நம்மை விட்டு விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள். இதுதான் நல்லவர்களின் பண்பு.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 13, 2025

#Victory King: கிடைத்ததை ஏற்று மகிழ்வோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2262🥰 

நம் வாழ்க்கையில் எல்லா பயணங்களும் இனிதாக முடியும் என்று கூற முடியாது. அதுபோல் நாம் எண்ணியதெல்லாம் நடந்து விடும் என்றும் கணித்து விடக்கூடாது. அனைத்துமே நமக்கு சாதகமாக வரும்பொழுது தான் நிம்மதியாக இருப்பேன் என்று நாம் எண்ணினால் வாழ்க்கையில் நிம்மதியையே தொலைத்து விடுவோம். எனவே கிடைத்ததை ஏற்று மகிழ்ந்து வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை மலரும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, February 10, 2025

#Victory King: எண்ணத்தூய்மையே மூலதனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2261🥰 

நம் சிந்தனை நேர்மையாக இருந்தால் நம் மனது தூய்மையாகி  நம் முயற்சியை முறைப்படுத்தும். முயற்சி முறையாகும் பொழுது நாம் எடுக்கும் செயல் அனைத்தும் தெளிவாகி நமக்கு வெற்றியை பெற்று தரும். எனவே நாம் எண்ணியது எண்ணியபடி நடக்க நம் எண்ணத்தூய்மையே மூலதனம் என்பதை உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, February 8, 2025

#Victory King: பொறாமை எனும் புற்றுநோய்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2260🥰 

ஒருவர் செயலில் உள்ள நேர்த்தியையும் அதன் தொடர் வெற்றியையும்பார்த்து பொறாமை படுவதை விடுத்து அந்த வெற்றிக்கு அவரின் உழைப்பின் வெளிப்பாடு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை சிந்தித்து அதன் வழி முயன்றால் நாமும் மற்றவர்களால் பாராட்டப்படுவோம் என்பதை உணரவில்லை என்றால் நாம் பொறாமை என்னும் புற்று நோயால் வாழ்க்கை முழுவதும் அவதிப்படுவதை தவிர வேறு வழி இல்லை. உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, February 7, 2025

#Victory King: வாழ்க்கையின் கெளரவம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2259🥰 

யானைக்கு மதம் பிடித்தால் தாறுமாறாக ஓடி அனைத்தையும் அழிக்க முயலும். கடிவாளம் கட்டாத குதிரை தரிகெட்டு ஓட ஆரம்பிக்கும். இவைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். அதுபோல் மனிதனுக்கு செருக்கு என்று வந்துவிட்டால் தலைகனம் மேலோங்கி தன்னிலை உணராது அடுத்தவர்களை மதியாது தன் சுய கௌரவத்தைஇழக்க நேரிடும். எனவே உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாம் கௌரவத்தோடு வாழபழகுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, February 6, 2025

#Victory King: பேச்சின் நயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2258🥰 

பேச்சு:  எதையும் எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும். அடுத்தவர்களை பற்றி பேசும்பொழுது  அருகில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி பேசினால் அதுவே நமக்கு ஆபத்தாக முடியும். நம் முகமும் தொனியும் கனிவுடன் இருப்பது மிகவும் முக்கியம். எனவே நாம் பேச்சில் நாகரீகத்தை கடைப்பிடித்தால் மட்டுமே நம் இமேஜை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏