Thursday, May 29, 2025

#Victory King: இதமான நல் இதயமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2323🥰

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு, கைமாறு கருதாத உதவி, போலித்தனம் இல்லாத புன்னகை, உறுதுணையாக இருக்கும் உறவு போன்ற மனிதநேய குணங்கள் ஒருவரிடம் ஒருங்கிணைந்து அமைந்துவிட்டால் அவர்கள் இதமான இதயத்துடன் வாழ்நாள் முழுவதும் இன்பமுடன் வாழ இயலும். முயற்சிக்கலாமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, May 28, 2025

#Victory King: குணம் நாடி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2322🥰 

ஒருவருடைய உண்மையான முகத்தை அறியாமல் தெரிந்தவர் பழக்கப்பட்டவர் என்று ஒரே காரணத்தினால் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் நம்மை ஏமாளியாக்கி நம் குடும்பத்தையே கூறுபோட்டு நம்மை தீராத மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள். எனவே நம் வாழ்வு சிறக்க "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" கடைபிடிப்போமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, May 26, 2025

#Victory King: அழகென்பது!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2321🥰 

நகர்ந்தால்தான் நதிக்குஅழகு.
மலர்ந்தால்தான் மலருக்கு அழகு.
அதுபோல் தவழ்ந்தால்தான் குழந்தைக்கு அழகு.
நயமாக பேசினால் தான் சொல்லுக்கு அழகு.
பட்டம் பெற்றால் தான் பதவிக்கு அழகு.
பகிர்ந்து மகிழ்ந்து உண்டால்தான் விருந்துக்கு  அழகு.
கூடி வாழ்ந்தால் தான் குடும்பத்திற்கு அழகு.
இவை அனைத்தையும் நாம் அனுபவித்து விட்டால்
நம் வாழ்க்கையே அழகுதான்.


🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, May 25, 2025

#Victory King: உண்மைகளும், உள்ளமும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2320🥰

சில உண்மைகளை சொல்ல நினைத்தால் பயத்தில் 'நா' எழுவதில்லை      சொல்லாமல் இருந்தால் நெஞ்சம் நெருடுகிறது, துணிந்து சொல்லிவிட்டால் ஏற்றுக்கொள்வார் யாரும் இல்லை என்று எண்ணி மன உளைச்சலால் தடுமாறாமல் உண்மையைச் சொல்லி நம் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்வதே மேல்!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, May 24, 2025

#Victory King: நம்மிடம் இருப்பவை பல பேரிடம் இல்லையே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2319🥰  

மற்றவர்களிடம் இருப்பது போல் நம்மிடம் எதுவுமே இல்லையே என்று ஏங்குவதை விடுத்து நம்மிடம் இருப்பவை பல பேரிடம் இல்லையே என்று மாற்றி யோசித்தால் நமக்கு நிம்மதி. அதுபோல் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புலம்புவதை தவிர்த்து அவர்களிடமிருந்து விலகி விட்டாலே நமக்கு நிம்மதி. எனவே நம் நிம்மதிக்கு மருத்துவர் நம் "மனமே"!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, May 23, 2025

#Victory King: கோள் மூட்டிகளை இனம் கண்டு கொள்வோமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2318🥰 

அலுவலகமாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி அங்கே கோள் முட்ட ஒரு கூனியும், காட்டிக் கொடுக்க ஒரு எட்டப்பரும், பிரிவினை ஏற்படுத்த ஒரு சகுனியும் இருக்க தான் செய்வார்கள். நாம் மிகவும் உஷாராக இருந்து புத்திசாலித்தனமாக அவர்களை இனம் கண்டு பழகினாலே போதும். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, May 22, 2025

#Victory King: தர்மத்தின் வழி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2317🥰 

"அங்கீகாரம்" நம் திறமைக்கு கிடைக்கும் பரிசு.
"கௌரவம்" நம் செயலுக்கு கிடைக்கும் புகழ்.
"தர்மம்" ஒரு பாதுகாப்பு கவசம்.
 
நாம் செய்யும் தர்ம செயலானது நமக்கு இடுக்கண் வரும்பொழுதெ ல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து  நம்மை காப்பாற்றும் மகாசக்தி என்பது  நிதர்சனமான உண்மை. எனவே அதர்மத்திற்கு துணை போகாமல் தர்மத்தின் வழி நடந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முயல்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, May 21, 2025

#Victory King: தவறுகளும், தப்புகளும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2316🥰 

தவறு என்பது தவறி செய்வது. அதை அவர்களே அதை திருத்திக் கொள்வார்கள் அல்லது சொன்னாலும் புரிந்து கொள்வார்கள். ஆனால் தப்பு என்பது தெரிந்தே செய்வது. இவர்களை திருத்தவே முடியாது. அந்தத் தப்பையே சரி என்று சாதிப்பார்கள். அதுபோல்தான் பொய்யையே பேசி பிழைப்பு நடத்துபவர்கள் எப்பொழுதும் அவர்களால் உண்மையாக நடந்து கொள்ளவே முடியாது. உணர்ந்து பழகுவோமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, May 20, 2025

#Victory King: சுயமதிப்பீடு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2315🥰 

நம் தகுதியை உணர்ந்து அதற்கு ஏற்ப தகுதியானவற்றை யாரிடம் எதை எதிர்பார்ப்பது என்று சுயமதிப்பீட்டுடன் நாம் எதிர்பார்க்கும் பொழுது நமக்கு ஏமாற்றம் அதனால் ஏற்படும் மனவலியையும் மற்றும் பொறாமை, ஏக்கத்திலிருந்தும் நாம் விடுபட்டு இயல்பான வாழ்க்கையை நடத்த ஏதுவாகும். "Contented life is a continual feast".

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, May 19, 2025

#Victory King: நல்லவராவதும், தீயவராவதும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2314🥰 

நம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க நாம்  நேர்மையாகவும் உண்மையாகவும் ஒழுக்கமாகவும் பிறரை ஏமாற்றிப் பிழைக்காமலும் ஒற்றுமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும்.  அவர்கள் ஆழ்மனதில் பதிந்தது தான் அவர்கள் வாழ்க்கை பயணம். அவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் நம் நடத்தையில் தான்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, May 18, 2025

#Victory King: வாய்ப்புகளும், வழிமுறைகளும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2313🥰 

உணவை சமைத்து பரிமாறலாம் மேலும் வாயில் ஊட்டிகூடவிடலாம்.  அதை மென்று சாப்பிடுவது மட்டுமாவது நாம் செய்தேயாக வேண்டும். அதுபோல் இறைவன் நம் முன்னேற்றத்திற்கான வழியை காண்பிப்பதுடன் வாய்ப்பையும் கொடுக்கும் பொழுது அதை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெரும் வாய்ப்பு என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, May 17, 2025

#Victory King: உறவுகளும், நட்புகளும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2312🥰 

உறவோ, நட்போ எதுவாக இருந்தாலும் சரி மேலோட்டமாக பார்த்தால் மிகவும் அழகாகத் தான் தெரியும். ஆனால் நெருங்கிப் பார்க்கும் பொழுது ஏதோ ஒருவிதக் கட்டுப்பாடு இருந்தே தீரும். எனவே இருக்கும் இடத்தில் நாம் நீக்கு போக்குடன் நடந்துகொள்ள பழகி விட்டால் எங்கிருந்தாலும் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். முயற்சிப்போமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, May 16, 2025

#Victory King: பொறுப்பற்ற குடும்பஸ்தர்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2311🥰 

சாதாரண வேலையில்  இருந்தாலும் நான்தான் அலுவலக தலைமை என பிதற்றுவார், கையில் காசு இல்லை  என்றாலும் லகரத்தில் கையிருப்பு என உருட்டுவார், கடந்த காலத்தை அரண்மனை வாழ்க்கைபோல் என வாய் கூசாமல் ஸ்லாகிபார், இப்படியாக குடும்பத்தில் பொறுப்பற்று வாழும் சில ஐன்மங்கள். இவர்களை ஆரம்பத்திலேயே தட்டி வைக்கவில்லை என்றால் அந்த குடும்பமே கவலைகிடம்தான்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, May 7, 2025

#Victory King: பெற்றோர் பாசம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2310🥰 

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி திருமணத்திற்குப் பிறகு அவர்களை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் வசம் ஐக்கியமாக்குவதுடன் தங்கள் பிள்ளைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தக்க வைத்துக்கொண்டு ஆணவத்தில் அகமகிழும் பெற்றோர்களுக்கு அந்தப் பாவத்திற்கான தண்டனையை "காலம்" கொடுக்கும் பொழுது அதிலிருந்து தப்பவே முடியாது.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, May 6, 2025

#Victory King: பிரிவினைப் பாசங்கள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2309🥰

பந்தியிலே பாரபட்சம் நம் மதிப்பை கெடுக்கும். ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் நம் பச்சோந்தித்தனத்தை பறைசாற்றும். உறவுகளிடம் காண்பிக்கும் பாரபட்சம் நம் சுற்றத்தையே சுருங்க வைத்து விடும்.அதைவிட கொடுமை பெற்ற பிள்ளைகளிடமே ஆண் பெண் என்ற பேதமை பாரபட்சம் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். எனவே பாரபட்சம் என்ற பிரிவினை பாசத்தை தவிர்த்து வாழப் பழகுவோமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, May 5, 2025

#Victory King: அமைதியான வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2308🥰

நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள், சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சில ஆசைகள், மீளவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள் இப்படி வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். எனவே எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நமக்கு அமைதி கிடைக்கும்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, May 4, 2025

#Victory King: கலகலப்பான வாழ்க்கைக்கு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2307🥰 

கலகலப்புடன் கலந்துரையாட சுற்றங்கள் மன மகிழ்வுடன் மழலைகளோடு கூடி வாழும் சந்தர்ப்பங்கள்  உள்ளன்புடன் பாசமும் நேசமும் கொண்ட பிள்ளைகள் உண்மையாகவும் உறுதுணையாகவும் அமைந்த உறவுகள் இவைகள் அனைத்தும் ஒருவனுக்கு கிடைத்து விட்டால் மன அழுத்தம் என்ன எமனே நேரில் வந்தாலும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு அரியதொரு சக்தியை பெற்று மகிழ்வுடன் வாழ்வது சாத்தியமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, May 3, 2025

#Victory King: புத்திசாலித்தனமான வாழ்க்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2306🥰

நாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவருக்கு  முழு மூச்சுடன் செயல்பட்டு உதவி செய்திருந்தாலும்சிலர் அந்த நன்றியை மறந்தாலும், நம்மையே புதிதாக பார்ப்பது போல் பார்த்தாலும்கூட,அது அவர்கள் பிறவி குணம் என்று புறம்தள்ளி  "நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம் மீது விழுந்து புடுங்காமல் இருந்தால் சரி தான்"என்று நினைத்து வாழ்க்கையை கடத்துவது தான் புத்திசாலித்தனம்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, May 2, 2025

#Victory King: இழப்புக்குக் காரணம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2305🥰  

நம் இழப்புக்கு எல்லாம் காரணம்  அலட்சியப் போக்கும் ஈடுபாடு இல்லாமையும் தான். இழந்தபின் வருந்தி பலன் இல்லை. முயற்சிக்கும் முன் நன்கு சிந்தித்து முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் மட்டுமே இழப்பை தவிர்க்க முடியும். சிந்திப்போமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏