Tuesday, September 30, 2025

#Victory King: வாழ்க்கைப் பயணத்தை எளிமையாகக் கடக்க!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2385🥰 

ரயில் பயணத்தில் பயணிகள் சிலர் பாடலோடும், சிலர் புத்தகங்களோடும், சிலர் கைபேசிகளோடும் மற்றசிலர் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணக் கலைப்பை எளிதாக்கி கொள்வார்கள். அதுபோல் நம் இறுதி மூச்சு நிற்கும் வரை உள்ள வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்க இது போன்ற பல உபாயங்களை நாம் கடைபிடித்து வாழ்ந்தால் பயணம் முழுவதையுமே எளிமையாக்கி மகிழ்வுடன் வாழலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, September 29, 2025

#Victory King: ஆணவம், பொறாமை, பேராசை

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2384🥰 

ஆணவம், பொறாமை, பேராசை இவை மூன்றும் தான் நம் நிம்மதியை குலைக்க வரும் 'எமன்'. அந்த எமனையே விரட்டி எடுக்கும் சூலாயுதம் "நாம் அடைந்ததை ஆனந்தத்துடன் ஏற்று திருப்தி அடையும் பக்குவத்துடன்கூடிய நம் மனதுதான்". முயற்சி செய்து நிம்மதியுடன் வாழ்ந்து மகிழ்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, September 28, 2025

#Victory King: நிதர்சனம்

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2383🥰 

உறவுகளோ நட்புகளோ நம் வாழ்க்கைக்கு உதவலாம். ஆனால் அவர்கள் நம்மை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற எண்ணம்  மட்டும் நமக்கு  எந்த நிலையிலும் வந்து விடக்கூடாது. நம் வாழ்க்கையை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். அவரவர்கள் மனம், பாதை, பயணம் தான் அவரவர்கள் வாழ்க்கை.   அதுதான் நிதர்சனம் என்பதை நாம் உணர்ந்து விட்டால் நம் தன்னம்பிக்கை நம்மை ஊக்குவித்து நம் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, September 27, 2025

#Victory King: பட்ட மரமும், நல்ல மரமும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2382🥰 

நாம் இறந்தகால இழப்புகளையே நினைத்து வருந்தி எதிர்காலத்தையே மறந்து நிகழ்காலத்தையும் பாழாக்கிக் கொண்டால் நம் வாழ்க்கை ஒரு பட்ட மரம் தான். எனவே  எதிர்கால முன்னேற்ற சிந்தனையோடு நிகழ்காலத்தை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்தால், நல்ல உரமிட்டு நீர் பாய்ச்சி தழைத்து வளர்ந்த மரங்களுக்கு ஒப்பாக திகழ்வோம். முயல்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, September 26, 2025

# Victory King : மண்வாசனை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2381🥰 

மழைக்காலங்களில் மழை சாரலும் இளம் தென்றலும் உடலுக்கு சுகம். மண்வாசனை மனதிற்கு இதம். அதுபோல் அந்த கால பண்டிகை நாட்களில் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து மழலைகளுடனும் பெரியவர்களுடனும் ஆனந்தமாக புரிதலோடு உற்சாகத்துடன் கொண்டாடும் அழகே கண்கொள்ளா காட்சிதான்.அதுபோல் இப்பொழுதும் நாம் மகிழ்ந்துவாழ முயற்சிப்போமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, September 25, 2025

#Victory King: தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2380🥰 

நாம் சற்று நொடித்திருக்கும் சமயங்களில் உறவுகள் நம்மிடமிருந்து ஒதுங்கினாலும், நட்புகள் நகர்ந்தாலும் அதைப் பற்றி எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் நம் உயிருக்கு உயிராய் நம்முடனே இருக்கும் தனிமையில் நேர்மறை எண்ணங்களுடன் நம் திறமைக்கு தீனி போட்டு தன்னம்பிக்கை என்னும் அஸ்திரத்திரத்தை பயன்படுத்தி விலகியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, September 20, 2025

#Victory King: முன் உதாரணங்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2379🥰 

நல்ல தரமான விதைகள்தான்  நல்ல மகசூலை ஈட்டித்தரும். அதுபோல்தான் நம் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்தால்தான் நல்ல பழக்கம் வரும். அது நல்ல பண்பை வளர்க்கும். அது நம் எதிர்காலம் சிறப்பாக அமைய வித்திடும். அதுவே நம் சந்ததியினர் களுக்கும் முன் உதாரணமாக அமைந்து அவர்கள் வாழ்க்கையும் சிறக்கும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, September 19, 2025

#Victory King: பண்பே பலம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2378🥰 

மனசாட்சியுடனும், மனித நேயத்துடனும் பழகுபவர்கள் பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கத்தையும், தாம் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கும்  பக்குவத்தையும் கொண்டு பண்புக்கு இலக்கணமாக திகழ்வதால் தான் அவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருக்கிறார்கள்.பண்புதான் நமக்கு பலம் என்பதை உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏