Tuesday, May 28, 2013

கண் பார்வையில் காலமும், நேரமும்!

அந்த காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாததோடு மட்டும் அல்லாமல், கடிகாரத்தில் நேரம் பார்க்கக் கூட தெரியாத நிலையில் கிராமங்களில் நிறைய பேர் இருந்தார்கள்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதில்லை.

நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சூரியன் இருக்கும் திசையை வைத்து,  எந்த திசையில் எந்த கோணத்தில் இருக்கிறது என்று கண்ணால் பார்த்து, அதற்குத் தகுந்தாற் போல சரியாக நேரத்தை கூறுவார்கள். அது மிகவும் சரியான நேரமாக இருக்கும்.

இன்னொரு முறையும் கையாண்டு வந்தார்கள். வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நேரம் தெரிய வேண்டுமென்றால் தன்னுடைய நிழலை சூரிய ஒளியில் பார்த்து, நிழலின் நீளத்தை வைத்து நேரம் சொல்லுவார்கள்.

அவர்கள் படிக்கவில்லையே என்று சோர்ந்து மூலையில் உட்காராமல், அவரவர்கள் வேலையை சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையோடும் செய்து வந்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இன்று எந்த திசையை நோக்கினாலும் நேரம் நம்மையும் அறியாமல் கண் முன்னால் நிற்கிறது. மொபைல், கார், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட் இதோடு மட்டுமல்லாமல் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சுவர்கடிகாரம், கைகளில் கைகடிகாரம் இப்படி எங்கும் எதிலும் நேரம்காட்டிகள்...

இவ்வளவையும் வைத்துக் கொண்டு  ‘டைம் கீப் அப்’ செய்ய முடியாமல், அதற்கு பல காரணங்களைக் கூறி வருகிறார்கள்.   ‘டைம் கீப் அப்’ என்பது மனதளவில் வர வேண்டிய விஷயம். மனதளவில் வந்தால் தான் செயல்வடிவம் கொடுக்க முடியும்.

இயலாமைக்குக் காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதை முறியடிக்க முயற்சி மட்டுமே போதும். நிச்சயம் நம்மால் அதை சாதிக்க முடியும். நம் இயலாமையினால் அடுத்தவர்கள் நேரத்தையும் சேர்த்து நாம் வீணடிக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். நம்மால் முடியும். முயற்சி மட்டுமே தேவை!

நேரமும் காலமும் நம் கைக்குள் அடக்கம்!

If we maintain time, We can  achieve the goal.

 -வீக்கே-

2 comments:

panasai said...

>>>> இயலாமைக்குக் காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதை முறியடிக்க முயற்சி மட்டுமே போதும். நிச்சயம் நம்மால் அதை சாதிக்க முடியும். நம் இயலாமையினால் அடுத்தவர்கள் நேரத்தையும் சேர்த்து நாம் வீணடிக்கிறோம் என்பதை >>>>
உண்மையான வார்த்தைகள்... சிறப்பாக இருக்கிறன்றன உங்கள் பதிவுகள்... தொடருங்கள்..

panasai said...

>>>> இயலாமைக்குக் காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதை முறியடிக்க முயற்சி மட்டுமே போதும். நிச்சயம் நம்மால் அதை சாதிக்க முடியும். நம் இயலாமையினால் அடுத்தவர்கள் நேரத்தையும் சேர்த்து நாம் வீணடிக்கிறோம் என்பதை >>>>
அருமையான கருத்து ஐயா.. பயனுள்ளப் பதிவுகள். தொடருங்கள்...