Tuesday, April 29, 2025

#Victory King: ஆழ்மன உயிரோட்டம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2304🥰 

நாம் ஒரு செயலுக்கு ஆசைபட்டு பிறர் மெச்ச ஆர்வத்தோடும் செயல்பட்டு மகிழ்வுற்றாலும் அந்த செயலுக்கான "உயிரோட்டம்" இல்லையென்றால் வெற்றி பெறாது. ஏதோ "just like that" ஒரு பொழுதுபோக்காத்தான் அமையும். எந்த ஒரு செயலானாலும் நம் ஆழ்மனதிலிருந்து அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமான "உயிரோட்டம்" இருந்தால் மட்டுமே அந்த செயல் முழுமை பெற்று வெற்றியடையும்.

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, April 28, 2025

#Victory King: பணமும் குணமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2303🥰 

"பணம்" என்னும் மூன்றெழுத்தை கண்முன்னே கண்டவுடன் பாசத்தை பகடைக்காயாக்கி நேசத்தை புறக்கணித்து ஆணவ ஆதிக்கத்தை கையில் எடுத்து தேடிவந்த நல்வாழ்வை தவிடு பொடியாக்கி வாழ துணிந்தவர்கள் நிலை "கொள்ளிக்கட்டையால் தானே தன் தலையை சொரிந்து கொள்வதற்கு சமம்" உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, April 27, 2025

#Victory King: தனக்குத்தானே கிரீடம் சூட்டினால்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2302🥰 

நான் என்ற அகந்தையில் மற்றவர்களை தரக் குறைவாக எடை போடுவதும், நேசமுடன் பழகிய உறவுகளை புறக்கணிப்பதும், தனக்கத்தானே கிரீடம் சூட்டிக்கொண்டு அக மகிழ்வதுமான மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்த எண்ணுபவர்களுக்கு நிலையற்ற நிம்மதியற்ற வாழ்க்கை தான் நிலைத்து நிற்கும்.உணர்வோமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, April 26, 2025

#Victory King: நம்பிக்கை துரோகத்துக்கான பலன்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2301🥰    

நாம் ஒருவருக்கு நம் உண்மையை மறைத்து நம்பிக்கை கொடுத்து அவரை ஏமாற்றுவது என்பது மன்னிக்க முடியாத நம்பிக்கை துரோகம். அது நமக்கு வேண்டுமானால் அந்த சமயத்தில் சாதகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் ஏமாற்றப்பட்டவர் மனம் நொந்து அந்த பாதிப்பால் படும் துயரத்தின் தாக்கம் நம்மை நிம்மதியாக இருக்க விடாது. அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். 

"முற்பகல்  செய்யின் பிற்பகல் விளையும்"

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, April 25, 2025

#Victory King: முன்னேற்றத்தைத் தடுக்கும் பொறாமை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2300🥰  

பொறாமை என்பது நம் மூளையை மழுங்க அடிக்கும் கொடிய நோய். அடுத்தவர்கள் வாழ்க்கையை பற்றியே சிந்தித்து சிந்தித்து அடுத்தவர்கள் போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே அதையும் அடைய முடியாமல் நம் வாழ்க்கையிலும் முன்னேற முடியாமல் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். எனவே  பொறாமையை தவிர்த்து நம் வாழ்க்கையில் முன்னேறுவோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, April 23, 2025

#Victory King: நம் IQ!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2299🥰  

மனதில் அழுக்குடன் பேசுபவர்கள் மிகவும் பணிவாகவும் கனிவாகவும் பேசி தங்களை நல்லவர் என்று முத்திரை குத்தி கொள்வார்கள். அதுபோல்தான் பொய்யை உண்மை என்று நம்பும் அளவிற்கு உறுதிப்படுத்தி பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வலையில் நாம் விழாது தப்பிப்பது நமது IQ வில்தான் உள்ளது. "Be careful"

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, April 22, 2025

#Victory King: உப்புபோல் அன்பும் பாசமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2298🥰  

உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அதுவும் அளவோடு. அதுபோல்தான் நாம் ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் அளவோடு இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து அந்த பாசத்தின் வெளிப்பாடு மாறுபடுமே ஒழிய உண்மையான அன்பும் பாசமும் என்றும் மாறாது. உணர்ந்து செயல்பட்டால் உண்டு நமக்கு என்றும் மகிழ்ச்சி.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, April 20, 2025

#Victory King: வார்த்தைகளும் பார்வைகளும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2297🥰  

அடுத்தவர்கள் மனதை நோகடிக்கும் வார்த்தைகளைவிட அவர்களைப் பார்த்து நாம் பார்க்கும் ஒரு ஏளன அலட்சிய பார்வை அதைவிட அவர்கள் மனதை சுக்குநூறாக உடைத்து விடும். எனவே அடுத்தவர்களைப் புகழ்ந்து பேசாவிட்டாலும் பரவாயில்லை அவர்கள் மனதை புண்படுத்தாமல் பேசி பழக முயல்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, April 19, 2025

#Victory King: பேச்சின் அர்த்தம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2296🥰  

ஒருவருடன் பேசும்பொழுது நாம் என்ன அர்த்தத்தில்பேசுகிறோம் என்பதை விட நாம் கூறுவதை அவர் என்ன அர்த்தத்தில் புரிந்து கொள்கிறார் என்பதை கவனித்துப் பேசாவிட்டால் ஒருவருக்கொருவர் பேச்சில் புரிதல் இல்லாமல் பிரச்சனைக்கு ஆளாகும் நிலை வந்துவிடும். எனவே பேச்சில் மிகவும் கவனம் தேவை.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, April 18, 2025

#Victory King: நம்பிக்கையும் துரோகமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2295🥰 

மதம் பிடித்த யானையை கூட அடக்கிவிடலாம். கடிவாளம் இல்லாத தறி கெட்டு ஓடும் குதிரையை கூட கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கை துரோகிகளை மட்டும் திருத்தி விடலாம் என்று நாம் முயற்சி செய்தால் அதையும் அவர்கள் நம்புவது போல் நடித்து நம்மை கவிழ்த்து விடுவார்கள். நல்ல பாம்பு கூட நாம் தொந்தரவு செய்தால்தான் நம்மை சீண்டும். ஆனால் நம்பிக்கை துரோகிகள் அதைவிட மோசமானவர்கள்.உஷார்!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, April 16, 2025

#Victory King: ஒற்றுமையின் ஓங்காரங்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2294🥰 

சாலையோர பயிர்கள் மனிதர்களின் ஒலி அலைகளால் புத்துணர்ச்சி பெற்று நல்ல மகசூலை கொடுக்கும். அதுபோல் அந்த காலத்து கூட்டு குடும்பங்களில் உறவுகளின் கலந்துரையாடல்கள், மழலைகளின் மகிழ்ச்சி கீதங்கள், ஒற்றுமையின் ஓங்காரங்கள் என்ற ஒலி அதிர்வுகளினால் குடும்பமும் சுபிட்சமாக இருந்தது. வீடும் மங்களகரமாக காட்சியளித்தது. உறவுகள் சுருங்கி பாசம் பணத்திற்கு அடிமையான இந்த காலத்தில் இது சாத்தியமற்றவை தான். நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, April 13, 2025

#Victory King: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2293🥰 

நாம் யாரிடம் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளாத வரை நாம் தான் நமக்கு எதிரி. நம் புரிதல் இல்லாத பல பிரச்சனைகளுக்கு காரணமே இதுதான். உணர்ந்து செயல்படுவோம் என்று இந்த இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் உறுதி எடுத்துக் கொண்டு வாழப்பழகுவோமே! புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: சேரும் இடம் அறிந்து...

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2292🥰 

சதுப்பு நிலத்தில் விழும் மழைநீர் பயிர்களை வளமாக்கி நல்ல மகசூலைகொடுக்கிறது. ஆனால் சாலையில் விழும் மழை நீர் கழிவு நீருடன் கலந்து பயனற்றதாகிறது. அதுபோல்தான் நாம் சேரும் இடம் சார்ந்தே நமது தரம். நம் சேர்க்கை சரி இல்லை என்றால் நம் வாழ்க்கையும் சறுக்களில் தான் முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, April 12, 2025

#Victory King: மனப்பக்குவம்

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2291🥰 

சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளை நினைத்து நினைத்து இதுதானா வாழ்க்கை என்று வெதும்பதை விடுத்து இது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்ற மனப்பக்குவத்தை நாம் அடைந்து விட்டால் வாழ்க்கையில் நமக்கு கசப்பான பலவும் இனிக்க துவங்கி வாழ்க்கை மெல்ல மெல்ல ஜொலிக்க துவங்கும். முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, April 11, 2025

#Victory King: வாய்ப்பை தவற விட வேண்டாமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2290🥰

மரங்கள் கொத்து கொத்தாக கனிகளை ஈட்டி நம்மை கவர வைக்கும். அந்த கனிகளை  சேதமில்லாமல் பறித்து சுவைத்து உண்பது நம் திறமை. அதுபோல்தான் இறைவன்  நமக்கு கொடுக்கும் வாய்ப்பை சரியாக முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற முயல்வதும் நம் திறமையால் மட்டுமே. நமக்கு கிடைத்த வாய்ப்பை வரம் மாக்குவதும் விரயமாக்குவதும் நம் கையில் தான்!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, April 10, 2025

#Victory King: வெற்றி தோல்விகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2289🥰  

பயம், கோழைத்தனம் இரண்டிற்கும் மூல காரணம் தன்னம்பிக்கை இல்லாத திட சிந்தனையில்லாத மனம். இந்த நிலையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடியும். எனவே தீர்க்கமாக முடிவெடுத்து அது அடுத்தவர்களையும் பாதிக்காமல் செயல்படுத்த முடியும் என்றால் மட்டுமே நாம் முயற்சி செய்தது வெற்றி பெறும்.

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, April 8, 2025

#Victory King : சுதந்திரமும் முட்டுக் கட்டையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2288🥰  

நாம் செய்யும் செயல்களுக்கு நமக்கு முழு சுதந்திரம் உண்டு என்ற நினைப்பில் நம்மை நாமே அதி புத்திசாலியாக கற்பனை செய்து கொண்டு அடுத்தவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் நாம்தான் முட்டாள் ஆவோம். அதுவே நம் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏