Wednesday, August 6, 2025

#Victory King: எதிர்பார்ப்புகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2359🥰 

கல்நெஞ்சக்காரனிடம் கருணையையும், பண்பற்றவரிடம் பணிவையும், அரக்கனிடம் அன்பையும் எதிர்பார்ப்பது பாலைவனத்தில் நீரோடையையும், தரிசு நிலத்தில் பசுஞ்சோலையையும் எதிர்பார்ப்பதற்கு சமம். எனவே மற்றவர்கள் தரமறிந்து தகுதியறிந்து எதையும் நாம் எதிர்பார்த்தால் மட்டுமே நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, August 5, 2025

#Victory King: தானத்திலேயே சிறந்தது நிதானம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2358🥰 

"தானத்திலேயே சிறந்தது நிதானம்" நாம் நிதானத்தை இழந்தால் கோபத்தின் உச்சிக்கு சென்று அடுத்தவர்கள் மனதை புண்படசெய்து பகைமைக்கு வித்திட்டு அது நம்மை மனநோய்க்கு ஆளாக்கிவிடும். நிதானம் ஒன்றுதான் அதற்கு வருமுன் காக்கும் மருந்தாகும். அதே சமயத்தில் நம் அவசர கால நிலையில் நாம் நிதானத்தை கடைபிடித்தால் அழிவையும் ஏற்படுத்திவிடும். எனவே சூழ்நிலைக்கேற்ப நிதானம்  என்ற அஸ்திரத்தை பயன்படுத்தினால் மட்டுமே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, August 4, 2025

#Victory King: மகிழ்ந்து வாழ்வோம், வாழ்ந்து மகிழ்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2357🥰 

மகிழ்ந்து வாழ்வது என்பது ஒரு கலை. அதை யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது. இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. எனவே அதில் "அன்னப்பறவை" போல் அபூர்வ சக்தியை பெற்று இன்பத்தை மட்டும் பிரித்தெடுத்து அனுபவித்து வாழப்பழகிவிட்டால் வாழ்க்கையே சுகம் தான் நமக்கு. சுமையல்ல!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, August 3, 2025

#Victory King: பண்பிற்கான இலக்கணம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2356🥰 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கை, நயமான இயல்பான பேச்சு, யாரையும் காயப்படுத்தாத அன்பு காட்டும் பாங்கு, பண்பு மாறாத பார்வையும் செயலும், உரிமையோடும் உள்ளன்போடும் உறவுகளிடம் உறவாடும் தன்மை இவைகள் தான் நம் பண்பிற்கான இலக்கணம்  உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, August 1, 2025

#Victory King: தனித்துவத்துக்குக் கிடைக்கும் மரியாதை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2355🥰 

ஒருவருக்கு பணம், புகழ், பவர் இவைகள் அனைத்தும் இருக்கும் பொழுது கிடைக்கும் மரியாதை ஒரு போலி தான். இவைகள் அனைத்தையும் அவர் இழந்து நிற்கும் நிலையில்தான் அது அவருடைய தனித்துவத்துக்கு கிடைத்த மரியாதை இல்லை என்ற உண்மை புரியும். ஒருவருக்கு அவருடைய தனித்துவத்திற்கு கிடைக்கும் மரியாதை தான் உயிரோடு இருக்கும் பொழுதும் சரி இறந்த பிறகும் சரி நிலைத்து நின்று அவரை கௌரவிக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏