Friday, January 31, 2025

#Victory King: நேர்மையின் அழகு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2257🥰 

நேர்மை என்பது பேச்சில் மட்டும் இருந்தால் போதாது செயலிலும் இருக்க வேண்டும். தோற்றத்தில் மட்டும் கண்ணியத்தை காட்டாமல் நடத்தையிலும் வேண்டும். உதவி செய்வது மட்டும் கருணை  அல்ல அதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும் . உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, January 30, 2025

#Victory King: வாழ்க்கைப் பயணம் சுகமாக!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2256🥰 

நம்மால் மட்டும் ஏன் சந்தோஷமான சூழ்நிலையில் வாழ இயலவில்லை என்று வருந்தி நம்மை நாமே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொள்ளாமல் அதற்கு என்ன சாத்திய கூறு என்று முயன்று நம் மனதை திசைமாற்றி பயணித்தால் அந்தப் பயணமே சுகமாக தான் இருக்கும்.இறதியில். அந்த வாழ்க்கையை நாம் அடையும் பொழுது அது நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை கொடுத்து  மகிழ்வுடன் வாழ வாய்ப்புண்டு. முயற்சிப்போமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நிதானமே நிலையான வாழ்க்கைக்கான மந்திரம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2255🥰

உரிமை இருக்கிறதே என்று அதிக உரிமை எடுத்துக் கொண்டால் வெறுக்கப்படுவோம்.  அதிக அனுதாபம் கொண்டால் நாம் ஏமாளியாவோம். அடுத்தவர்களிடம் காட்டும் அதிக பாசம் அவர்களின் தவறுகளை நம் கண்கள் மறைக்கச்செய்யும். எனவே எதிலும் எப்பொழுதும் நிதானமாக இருந்தால் மட்டுமே நம் நிலையை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். உணர்வோமே!

Victory King  🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, January 25, 2025

#Victory King: வெற்றியடையச் செய்யும் யுக்தி

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2254🥰 

முடியாது என்று நாம் தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் அதை வெற்றியடையச் செய்யும் யுக்தி புதைந்திருக்கும். நாம் மனம் தளராது நம் முயற்சியை கைவிடாது தொடர்ந்தால்  அந்த சூட்சுமத்தை அடைந்து அந்த செயலில் வெற்றி பெறுவது சாத்தியமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, January 24, 2025

#Victory King: வாழ்க்கையின் கேடயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2253🥰 

பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் நம்மிடம் அமைந்து விட்டால் நமக்கான மரியாதையும் மதிப்பும் மற்றவர்களிடமிருந்து தானே நம்மை வந்து அடையும். நம் நற்குணங்கள் தான் நம் வாழ்விற்கான கேடயம். உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நம் வாழ்க்கை சொர்க்கமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2252🥰

பதவியால் வரும் கர்வம், புகழால் வரும் மயக்கம், கற்றதினால் வரும் செருக்கு, பணத்தால் வரும்போதை இவைகளை அகற்றி கடுமையான உழைப்பு, இடைவிடா முயற்சி, ஆரவாரமில்லாத வாழ்க்கை, ஆணவமில்லாத நன்னடத்தை இவைகளை தன்வயப் படுத்தி வாழப்பழகி விட்டால் இறுதி வரை நம் வாழ்க்கை சொர்க்கம் தான்!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, January 21, 2025

#Victory King: நம் வாழ்க்கை நம் கையில்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2251🥰

குடும்பத்தில் யாரையும் திருத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது. புரிய வைக்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும் செயல். எனவே நாம் அடுத்தவர்கள் குறைகளை சொல்லிப் புலம்பாமல் வாழப்பழகினால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உணர்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, January 20, 2025

#Victory King: "எண்ணம் போல் வாழ்வு"

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2250🥰

"எண்ணம் போல் வாழ்வு"

எதுவும் நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டால் எல்லாமே முடியும். முடியாது என்ற எண்ணம் மேலாங்கி விட்டால் எதுவுமே முடியாததுதான். எனவே எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழப் பழகுவோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, January 18, 2025

#Victory King: பிரச்சனைக்கு தீர்வு காண:

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2249🥰

பிரச்சனைக்கு தீர்வு காண: 

பேசியே வளர்க்காமல் பேசி புரிய வைப்போம்! நடந்ததை கிளராமல் நடப்பதை மட்டும் பார்ப்போம்! ஊரெல்லாம் பேசி பெரிது படுத்தாமல் உரியவர்களிடம் மட்டும் பேசுவோம்! மனதில் உறுதியோடு இருப்போம் பிடிவாதத்தை தவிர்ப்போம்! முயற்சிப்போமே! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏