🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2411🥰
துணிவு நம்மை உழைப்பில் உயர்த்தி நம் வாழ்வை வளம் பெற செய்யும் உந்து சக்தி. பணிவு நம் பண்பை உயர்த்தும் மகா சக்தி. நம்கனிவான வார்த்தை அடுத்தவரை ஈர்க்கும் ஒரு காந்த சக்தி. கருணை உள்ளம் நம் குடும்பத்திற்கும் சந்ததியினருக்கும் நாம் சேர்த்துவைக்கும் புண்ணிய பொக்கிஷம். முயற்சிப்போமே!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Tuesday, November 11, 2025
#Victory King: நாம் சேர்த்துவைக்கும் புண்ணிய பொக்கிஷம்!
Monday, November 10, 2025
Victory King: நம் வாழ்க்கை, நம் சொர்க்கம்!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2410🥰
ஏனோ பிறந்தோம் எப்படியாவது வாழ்ந்து முடித்தால் போதும் என்று எண்ணுவதல்ல நம் வாழ்க்கை. நமக்கு கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாக அனுபவித்து வாழவேண்டும். பிறரின் முன் நாம் வாழ்ந்து காட்ட கிடைத்ததில்லை இப்பிறவி. நம் சக்தியை நாம் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் உச்சத்தை தொட்டு சாதிக்க பிறந்தோம் என்பதை எண்ணி மகிழ்வுடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தான். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Saturday, November 8, 2025
Victory King: ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2409🥰
ஏழ்மையிலேயே வாழ்பவர் நம் வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்று கவலைப்படுவது இயற்கையே. கால சுழற்சியில் நம் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உண்டு என்பதை மனதில் ஏற்றி அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழப் பழகலாமே! "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Friday, November 7, 2025
Victory King: நம் முடிவு நம் கையில்!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2408🥰
நாம் செய்ய விரும்பும் விஷயம் நியாயமானதாகவும் நம் மனதிற்கு நல்லதாகப்படுமாயின் உடனே முடிவெடுத்து செயல்படுத்தி விட வேண்டும். அனைவரது சம்மதத்தையும் பெற்று தான் செய்ய வேண்டுமென நினைத்தால் அது குழப்பத்திலும் குளறுபடியாகவும் தான் முடியும். யோசனை கேட்கலாம் தவறில்லை. ஆனால் முடிவு நம் கையில் தான் இருக்க வேண்டும் அந்த விஷயம் முழுமை பெற. சிந்திப்போமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏07/11/25
Thursday, November 6, 2025
Victory King: நம் வாழ்க்கைக்கு ஆரோக்கியம்!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2407🥰
வாழ்க்கையில் பல இடர்பாடுகள் வந்தாலும் அதனை முறியடித்து வாழ்க்கையை வீணடிக்காமல் வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் உற்றார் உறவினர்களிடம் அன்பு காட்டி பாராட்டி அந்த உறவை உயிரோட்டமாக வைத்திருப்பதும். பண்புடன் பழகும் சக மனிதர்களோடு சுமுகமாகவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் வாழ்வதுதான் நம் வாழ்க்கைக்கு ஆரோக்கியம். உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Tuesday, November 4, 2025
Victory King: ஆணவத்தின் உச்சகட்ட நிலை!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2406🥰
ஆணவம், திமிர், கர்வம் இதன் உச்ச கட்டத்தில் இருப்பவர்கள் தாங்கள் குதிரையின் மேல் கம்பீரமாக சவாரி செய்வது போல் தன்னை பெருமித படுத்திக் கொள்ளலாம். ஆனால் குதிரையில் சவாரி செய்யும் பொழுது கர்வம் மிகுந்து கடிவாளத்தின் பிடிமானம் நழுவும் சமயத்தில் அந்த குதிரை தாறுமாறாக ஓடி சவாரி செய்பவரை தலை குப்புற விழ வைத்துவிடும். ஒருவரின் ஆணவத்தின் உச்சகட்ட நிலை இதுதான்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Sunday, November 2, 2025
#Victory King: தொட்டில் பழக்கம் இறுதி காலம் வரை!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2405🥰
சுய பட்சாபத்தோடயே தன்னை முன்னிலைப்படுத்தி வளர்ந்தவர்கள் எப்போதுமே அடுத்தவர்களை நம்பியே தான் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தன் வயதான காலத்தில் அடுத்தவர்களுக்கு பாரமாகத்தான் இருக்க முடியும். இந்நிலை வரும்பொழுது ஒரு நிலைமைக்கு மேல் மற்றவர்களால் வெறுக்கப்பட்டும் சூழல்தான் வரும்."தொட்டில் பழக்கம் இறுதி காலம் வரை தொடரத்தான் செய்யும்"எனவே இந்நிலை நமக்கும் வராமல் வாழப் பழகுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
Saturday, November 1, 2025
#Victory King: ரகசியம் காப்போம்!
🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2404🥰
நமக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை அதன் உண்மை நிலை தெரியும் வரை நம் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது தான் ரகசியம். அதை யாராவது ஒருவரிடம் வெளிப்படுத்திவிட்டாலே அது விஷம்போல் பலரூபத்தில் பரவி அந்த விஷயம் நமக்கே எதிர்வினையாக வந்தடைந்து நம்மை தலை குனிய வைத்து விடும்.எனவே ரகசியம் என்பது நம் மனதுக்கு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்படுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏