Thursday, December 19, 2024

#Victory King: நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2248🥰

மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் அனைவரிடமும் பொய்யாக சிரித்துப் பேசி நல்ல பேரு எடுத்து, பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதை விட உலகில் கேவலமான விஷயம் ஒன்றும் இல்லை.எனவே அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து விலகி இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Wednesday, December 18, 2024

#Victory King: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2247🥰

சூழ்நிலை மாறும் போது சிலரது வார்த்தைகளும் மாறும், ஏன் பலரது முகங்கள் கூட மாறும்.என் நிலை வந்தாலும் தன்னிலை மாறாது தீர்க்கமான மனநிலையுடன் இருந்துவிட்டால் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நாம் யாருக்கும் தலைகுனியாமல் மகிழ்வுடன் வாழலாம். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏


Tuesday, December 17, 2024

#Victory King: மனம் எனும் கடிவாளம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2246🥰

கொட்டினால் அல்ல முடியாதது தண்ணீர் மட்டுமல்ல. நாம் பேசும் வார்த்தைகளும்தான். நான் சொல்லும் சொல் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் செய்யும். அடுத்தவர் மனதை புண்படுத்தி எதிரிகளை உருவாக்கவும் செய்யும். எனவே நாவை மனது எனும் கடிவாளத்தால் நம் கட்டுப்பாட்டில் வைத்து கடும் சொற்களைத் தவிர்த்து நயமுடனும் நளின முடனும் பேசப்பழகி மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் பெருவோமே.

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Sunday, December 8, 2024

#Victory King: நம் வாழ்க்கை நம் எண்ணத்தில்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2245🥰

மற்றவர் என்ன நினைப்பார் என நினைத்து நினைத்தே நம் வாழ்rவை நாம் வீணடித்துக் கொள்ளாமலல், யார் என்ன நினைத்தால் நமக்கென்ன, நம்மைப் பொறுத்தவரை நம் மனசாட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும், எந்தவித பாகுபாடு இன்றி அனைவரிடமும் மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டு வாழ்ந்தாலே போதும். உண்மையிலேயே நம் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும். நம்புவோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Saturday, December 7, 2024

# Victory King: வாழ்க்கைக்கான வெற்றி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2244🥰

வெற்றி என்பது நமக்கு இலவசமாக கிடைக்காது. அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். நம் இலக்கை அடைய தொடர்ந்து முயற்சிக்க  வேண்டும். தடைகள் வந்தாலும் பொறுமையாக இருந்து நேர்மறை எண்ணத்தோடு, விடாமல் முயற்சி செய்யும்போது வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி வரும். முயற்சிப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Thursday, December 5, 2024

#Victory King: அழகான வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2243🥰

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதிஇருக்கும் (கண்ணதாசன்) எனவே தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை நன்கு உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே அழகானதுதான்.

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Tuesday, December 3, 2024

#Victory King: பிறருடன் ஒப்பிடாமல் வாழ்வோமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2241🥰

நம்மை நாம் யாரோடும் ஒப்பிட்டு பார்க்காமல் நாம் நாமாகவே இருந்து தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்றால், நமக்கு மேலே உள்ளவரை பார்த்து ஏங்கி தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமலும், நமக்கு கீழே உள்ளவரை ஏளனமாக பார்த்து கேவலப்படுத்தாமலும் வாழ முயன்றாலே போதும். நம் கௌரவத்தையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, December 2, 2024

#Victory King: உத்தமர்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2240🥰

எவரிடம் அளவிற்கு அதிகமாக தவறுகள் உள்ளதோ அவரே மற்றவர்கள் மீது தேவையற்ற வீண்பழிகளை சுமத்தி தன்னை உத்தமர் போல் காட்டிக் கொள்வார்கள் . இப்படிப்பட்ட உத்தமர்களை இனம் கண்டு ஒதுங்கி வாழ பழகுவோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏



Wednesday, November 6, 2024

#Victory King: மகிழ்வும், மகிழ்ச்சியும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2238🥰

வாழ்க்கையில் நம்மைக் கவலை பற்றிக் கொள்ளும் சூழ்நிலையில், நாம் கவலைப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை மனதில் ஆழ பதிவிட்டு அதனை துணிந்து நேர்கொண்டு மகிழ்வுடன் வாழ முனைந்தால் நாம் அந்த சூழ்நிலையில் கவலையிலிருந்து விடுபடுவதோடு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் நாம் அந்த சமயங்களில் இப்படி செய்து மகிழ்வுடன் வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஏக்கம் வருவதையும் தவிர்க்கலாம். முயற்சிப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏 



Tuesday, October 22, 2024

#Victory King: ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்கா என்ன?

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2237🥰

தேவையென்றால் நாம் மதிக்கப்படுவதும், தேவை இல்லையேல் ஒதுக்கப்படுவதும் போன்ற மனிதர்களையும் நம் வாழ்க்கையில் சந்திக்கும் நிலையை தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஐந்து விரல்கள் ஒன்று போல் இல்லையே. எனவே அதற்கெல்லாம் நாம் ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் நம் மனது மாசுபடாமல் வாழ்ந்தால்தான் நம் வாழ்க்கை சிறக்கும்.

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Friday, October 18, 2024

# Victory King: எண்ணியது எண்ணியபடி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2236🥰

எந்த ஒரு செயலாக இருந்தாலும் நம்மால் முடியும் என்று நாம் நினைத்தால் நிச்சயமாக முடியும். நம்மால் முடியாது என்ற எண்ணத்தை வளர்த்து மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்தால் எதுவுமே முடியாது தான். எனவே நம்மை நாமே நம் எண்ணங்களை நேர்த்திசையில் இயங்க வைத்து செயலாற்றினால் நாம் எண்ணியதை எண்ணியபடி முடிப்பது சாத்தியமே.

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, October 14, 2024

#Victory King: பிரச்சனைகள் விலக!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2235🥰

நாம் நம் தற்போது இருக்கும் பிரச்சனையோடு ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை எடுத்து வைத்துக்கொண்டு பெரிது பண்ணாமல், அதாவது அதை நினைத்து வருந்தி கஷ்டப் படாமல், ஏதோ ஒரு தருணத்தில் நாம் ஜொலிக்கப் போவது உறுதி என்று நினைவு கொண்டு அந்நாளை எதிர்நோக்கி வாழ்ந்தால் நம் வாழ்க்கையே சுபிட்சமாகத்தான் அமையும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Saturday, October 12, 2024

#Victory King: கல்வி, செல்வம், வீரம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2234🥰

துர்கா தேவியை வழிபட்டு அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தி, செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வணங்கி, எக்காலத்தும்அழியாச் செல்வம் கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவியை போற்றி, துர்கா லட்சுமி சரஸ்வதி அருளைப் பெற்று நம் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிபெறுவோமே.

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Thursday, October 10, 2024

#Victory King: தயவு தாட்சண்யம் யாரிடம் காண்பிக்கலாம்?

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2233🥰

ஆடு மாடுகள் பயிரை அழிக்காது இருப்பதற்காகத்தான் வேலியே போடுகிறோம். அந்த வேலி தரமானதாக இல்லாமல் அதுவே பயிரை அழிக்கும் நிலை வரும் பொழுது அதனை நாம் பாதுகாப்பிற்கு உகந்ததாக அமைத்தால்தான் நாம் பயிறை காப்பாற்ற முடியும். அதுபோல் ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் குடும்பத்தை சிதைக்க நினைத்தால் அவரை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அப்புறப்படுத்துவது தான் அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு. உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, October 7, 2024

#Victory King: சொர்க்கமாகும் குடும்பம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2232🥰 

அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களிடம் அன்புடனும் பண்புடனும் பொறுப்புடனும் வளர்க்கப்பட்ட குழந்தைகளுடன் மகிழ்வோடு வாழ்வதுதான் குடும்பம். நாம் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்கவே இப்படிப்பட்ட குடும்பம் என்ற ஒரு அமைப்பு. எனவே நாம் சொந்தங்களோடும் பந்தங்களோடும் ஒருங்கிணைந்து வாழ்ந்து அந்த குடும்பத்தை உருவாக்குவோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Wednesday, October 2, 2024

#Victory King: மங்களகரமான குடும்பம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2231🥰

மக்கள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள சாலை ஓர மரங்கள் பயிர் வகைகள் அனைத்திலும் மக்களின் ஒலி அலைகளின் அதிர்வால் நல்ல மகசூலை கொடுப்பதை கண்கூடாக காண முடியும். அது போல் தான் குதூகலமான குடும்பத்தில் ஏற்படுகின்ற ஒலி அலைகள் குடும்பத்தில் மங்களகரத்தையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்தும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Tuesday, October 1, 2024

#Victory King: அரிது அரிது இப்பிறவி அரிது!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2230🥰

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது"(ஔவையார்). இப்படி அரிதாக கிடைத்த மானிடப்பிறவி யின் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் கடந்து செல்ல, நாம் வேண்டாத விஷயங்களிலும் குரோதங்களிலும் காலத்தை விரயமாக்காமல், இருக்கும் வரை நல்ல எண்ணங்களுடன் நற்செயலையையே செய்து புண்ணிய பாதையை தேடி பயணம் செய்து இப்பிறவியை பயனுள்ளதாகிக் கொள்வோமே!

🙏Victory King Alias V.Krishnamurthy(VK)🙏

Friday, September 27, 2024

#Victory King: குடும்பம் எனும் குருவிக்கூடு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2229🥰

குடும்பம் என்பது அன்பு  மகிழ்ச்சி பாசம் அமைதி அனைத்தும் அமைந்து அதன் அதிர்வுகளின் ஆனந்த கீதத்தில்  நம் இதயத்தை இதமாக்கி தேவையற்ற கோபத்தினால் அந்த மகிழ்ச்சி எனும் மாபெரும் சக்தியை இழக்காமல் தக்க வைத்து உறவுகளோடு இணைந்து குடும்பம் எனும் குருவிக் கூட்டை கலைக்காமல் பாதுகாப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: மெளனமே ஆயுதம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2228🥰

நம் பயம் எதிரிக்கு தைரியம். நம் அமைதி அவனுக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை.எனவே எதிரிகளிடம் எதையும் பேசி புரிய வைப்பதோ அவனுக்கு நிகராக நின்று வாக்குவாதம் செய்வதோ நம் மதிப்பிற்கு தான் கேடு. மௌனமாய் இருந்து சாதிப்பது தான் நம் சாமர்த்தியம்.உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 23, 2024

#Victory King: Over Confidence

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2227🥰

"Over Confidence" : நாம் நம் குழந்தைகளை அன்போடும் அரவணைத்தும் பரிவோடும் பாசத்தோடும் வளர்க்கலாம். ஆனால் அவர்களுக்கு அதீத நம்பிக்கையை கொடுத்து எந்த நிலையிலும் அவர்களை தட்டிக் கேட்க முடியாமல் அவர்கள் தடம் மாறி செல்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. அதீத நம்பிக்கை தன்னிலையை மறக்க செய்துவிடும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Sunday, September 22, 2024

#Victory King: புத்திசாலித்தனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2226🥰

உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். அதன் பிறகு பேசாமலேயே இருப்பதும், அந்தப் பிரச்சனையை ப் பற்றி பேசிப் பேசியே ஊதி ஊதி பெரிதுபடுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து விடாமல்  அதை முறையாக, சுமூகமாக பேசி உறவுகளை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Friday, September 20, 2024

#Victory King: வாழ்க்கையும் வெற்றியும் சிந்தனையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2225🥰

நாம் ஒரு செயலை சிந்தித்து செயல்படாமல் இருந்துவிட்டு பிறகு அதைப்பற்றி செய்திருக்கலாமோ என்று எண்ணுவதும், அந்த செயலை செய்து தோல்வியடைந்த நிலையில் அதை செய்யாதிருந்திருக்கலாமோ என்று எண்ணி வருந்தி குழம்பிக் கொண்டிருப்பதை விடுத்து , குழப்பத்தை நம் மனதில் இருந்து விலக்கி தீர்க்கமான முடிவுடன் எந்த செயலை செய்தாலும் அதில் நமக்கு வெற்றி தான்.  உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நுணலும் கெடுமே தன் வாயால்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2224🥰

யார் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு பொய்யாலேயே வாழ்க்கையை நடத்தி வருகிறார்களோ அவர்கள்தான் மற்றவர்கள் மீது தேவையற்ற வீண் பழிகளை சுமத்தி தங்களை உத்தமர் போல்  காட்டிக் கொள்வார்கள். இவர்களின் இத்தகைய உளறலே இவர்களது வாழ்க்கைக்கு உலை வைத்து விடும்."நுணலும் தன் வாயால் கெடும்". உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Tuesday, September 17, 2024

#Victory King: வாழப் பழகுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2223🥰

நமக்கான தேடலை நம்மால் மட்டுமே கண்டறிய முடியும். நமக்கான மாற்றத்தை நம்மால் மட்டுமே உருவாக்க முடியும். அதுபோல் நம் வாழ்க்கையில் எடுக்கும் எந்த முடிவையும் நாம் தான் எடுக்க வேண்டும். இதுதான் நான் என்று நம் இயல்பு மாறாமல் வாழப்பழகுவோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 16, 2024

#Victoy King: நம் வாழ்க்கை நம் கையில்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2222🥰

நம்மிடம் கொடுக்கப்பட்ட பாறையை நாம் செதுக்கி சிற்பமாக்கி அழகு பார்ப்பதும், அதை உடைத்து தூள் தூளாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதுபோல்தான் இறைவன் நமக்கு அருளிய அறிவு ஆற்றல் திறமையை முறையாக பயன்படுத்தி நம் வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும், நம்மை நாமே புண்படுத்திக்கொண்டு நரகமாக்கிக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. சிந்திப்போமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நிதான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2221🥰

நம் பொறுமையும் அளவுக்கு மீறினால் நாம் முட்டாள். அன்பும் அளவுக்கு மீறினால் அடுத்தவர்கள் தவறுகளை நம் கண்கள் மறைத்து விடும். அளவுக்கு மீறி நமக்கு கிடைக்கும் புகழ்ச்சி நம் அழிவு பாதைக்கு வழிவகுக்கும். எனவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை மனதில் கொண்டு நாம் நிதானத்தை கடைப்பிடித்தால் நமது வாழ்க்கை சீராகவும் சிறப்பாக அமையும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Monday, September 9, 2024

#Victory King: பெருமையும், உதவியும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2220🥰 

கஷ்ட காலத்தில் உதவாமல் பின்னாளில் வந்து ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என வாஞ்சையாக பேசுவது போல் நடிக்கும் உறவுகளிடமும், தன் ரத்த உறவுகளை பிறரிடம் கையேந்தவிட்டு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு தங்கள் பெருமைக்காக உதவி செய்யும் உறவுகளிடமும் நாம் நெருங்காதிருப்பதே மேல். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

Friday, September 6, 2024

#Victory King: மனிதத்தன்மை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2219🥰 

பொய்யையே உண்மை போல் பேசி வாழ்பவர்கள் ஒரு நாள் அந்தப் பொய்யாலேயே அவர்கள் வாழ்க்கை அழிந்து போகும். அதுபோல் வன்மம் வைத்து பழிவாங்கும் எண்ணம் உடையவர்களுக்கு ஒரு நாள் அந்த வன்மம் தான் அவர்களுக்கு எமன். எனவே அன்பு காட்டி வாழ முடியாவிட்டாலும் மிருகத்தனமாக வாழ்வதை விடுத்து மனிதத் தன்மையோடாவது வாழலாமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: நம் மதிப்பும், வாழ்க்கையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2218🥰

அரக்கனிடம் அன்பை எதிர் பாக்க முடியுமா? ஆணவக்காரனிடம் அனுசரணையை எதிர்பார்க்க முடியுமா? கயவரிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியுமா? பொய் பேசியே பிழைப்பு நடத்தவனிடம் உண்மையைச் சொல்லி புரிய வைக்க முடியுமா? கொலைகாரனிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா? இவற்றை எல்லாம் நாம் எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள். எனவே இவர்களிடமிருந்து காத தூரம் விலகி இருந்தால்தான் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2217🥰

அரிசி மாவில் அழகாக புள்ளி வைத்து அந்தப் புள்ளிகளை முறையாக கோடுகளால் இணைத்தால் கண்ணைக் கவரும் கோலம் வடிவமையும். அதுபோல்தான் நமது உறவினர்கள் அனைவரையும் அன்பு பாசம் என்ற கோட்டினால் இணைத்து கூடி உறவாடினால் அதில் உள்ள ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy(VK)🙏

#Victory King: வாழ்க்கையின் புத்திசாலித்தனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2216🥰

நாம் இறந்த பிறகு என்ன செய்வார்களோ எப்படி இருப்பார்களோ என்று மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து நாம் இருக்கும் பொழுதே அதற்கான காரணத்திற்கு சிந்தித்து செயல்பட்டு அதனை நிவர்த்தி செய்வதுதான் புத்திசாலித்தனம். கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே நம் மரணத்திற்கு முன்பே அதற்குப் பரிகாரம் காண முயல்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Thursday, August 29, 2024

#Victory King: புரட்டிப் போகும் வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2215🥰

நமக்கு பணம் பலம், படைபலம், உடல் பலம் என புகழ்ச்சியில் வலம் வந்து கொண்டு மற்றவர்களை உடலாலும் மனதாலும் காயப்படுத்தினால் நாம் ஒன்றை மட்டும் நன்குஉணர வேண்டும். காலம் அனைத்தையும் விட பலமானது. அது நம்மை அப்படியே புரட்டிப் போட ஒரு நொடி போதும். மறந்துவிடக்கூடாது.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Sunday, August 25, 2024

#Victory King: சுற்றத்தின் வலிமை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2214🥰

மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்பவும் எந்தவித சுப நிகழ்ச்சிகளாக ஆயினும் அதற்கான அழைப்பிதழை வாட்ஸ் அப்பிலோ, பேஸ்புக்கிலோ சிலர் பத்திரிக்கை வாயிலாகவோ, அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஃபோனில் அழைத்து பேசும் கலாச்சாரமும் குறைந்துவிட்டது. இதனால், நம் சந்ததியினருக்கு உறவுகளின் வலிமையும் நம் கலாச்சாரத்தின் பெருமையும் உணர முடிவதில்லை என்பதுதான் வேதனை.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Thursday, August 22, 2024

#Victory King: உண்மையும், பொய்யும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2213🥰

நாம் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நம்மை ஒருநாள் தலைகுனிய வைக்கும். பொய்யையேஉண்மை போல் பேசி வாழ்பவர்கள் ஒரு நாள் நிச்சயம் அந்த பொய்யாலே தங்கள் வாழ்க்கையை இழப்பர். இப்படிப்பட்டவர்களிடம் அவர்கள் சொல்வது உண்மைதான் என்று நாம் நம்பினால் நாம் தான் முட்டாள். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: உண்மையாக இருப்போமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2212🥰

நமக்கு உண்மையாக இருப்பவர்களிடம் மட்டும் நாம் உண்மையாக இருந்தால் போதும். அப்பொழுதுதான் நமக்கும் மதிப்பு  நாம் சொல்லும் உண்மைக்கும் மதிப்பு. அதை தவிர்த்து நாம் அனைவரிடமும் உண்மையாக இருந்தால் நம்மை ஏமாளியாக்கி விடுவார்கள்.உணர்வோமே! 

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Friday, August 16, 2024

#Victory King: மனதை புண்படுத்த வேண்டாமே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2211🥰

கடுமையான நோகடிக்கும் வார்த்தைகள் தான் அடுத்தவர்களை காயப்படுத்தும் என்பதில்லை. நாம் மற்றவர்களை பார்க்கும் ஒரு ஏளன அலட்சிய பார்வை அதைவிட அடுத்தவர்கள் மனதை சுக்குநூறாக்கிவிடும். எனவே பேச்சிலும் பார்வையிலும் நிதானம் இருந்தால் மட்டுமே அடுத்தவர்கள் மனம் புண்படா வண்ணம் நடந்து கொள்ள முடியும் என்பதை உணர்வோமே. 

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மனப்பூர்வமான வாழ்க்கைக்கு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2210🥰

நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை மனதில் ஏற்றி கவலைப்படாமல், நம்மால் முடிந்ததை முடிந்த வரை முயன்று மனத் திருப்தி அடைந்து, நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று வாழ்வோமேயானால் நம்வாழ்க்கை பயணம் இனிதாகவே அமையும். உணர்வோமே!

🙏 Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Monday, August 12, 2024

#Victory King: ஒப்பிடாமல், ஒப்பிட்டுக் கொள்ளாமல் வாழ்வோமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2209🥰

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம் மனதை அலைய விடாமல்,போதும் என்ற நிறைவை  மட்டும் நம் மனதில் ஏற்றி  வாழ்ந்தாலே நாம் மகிழ்வுடன் இருப்போம். நாம் மகிழ்வுடன் இருந்தால்தான் மற்றவர்களையும் மகிழ்விக்க முடியும் என்பதை நன்குணர்ந்து நாமும் மகிழ்வுடன் இருந்து மற்றவர்களையும் மகிழ்விப்போமே. 

🙏 Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: வாழ்வே இனிமை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2208🥰

கோபத்தில் நிதானம் தேவை, குழப்பத்தில் அமைதி தேவை, துன்பத்தில் தைரியம் தேவை, தோல்வியைத் தழுவும் பொழுது பொறுமை தேவை, வெற்றிவாகை சூடும்பொழுது தன்னடக்கம் தேவை இவை அனைத்தும் நம்மிடம் அமைந்துவிட்டால் நம் வாழ்வே இனிமைதான். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Sunday, August 11, 2024

#Victory King: சந்ததியினருக்கு எடுத்துக்காட்டு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2207🥰 

பிறந்து விட்டோமே வாழ்ந்து தானே ஆக வேண்டும் என்று வாழ நினைக்காமல் வாழும் பொழுதும் சரி, நாம் இறந்த பிறகும்சரி, வாழ்ந்தால் இவரைப் போல் தான் வாழ வேண்டும், இவர் குடும்பத்தை பார்த்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களால் போற்றப்படும் அளவிற்கு வாழ்ந்தால் தான் நமக்கும் பெருமை நம் சந்ததியினருக்கும் அது ஒரு எடுத்துக்காட்டாகி அவர்கள் வாழ்வும் சிறக்கும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: பரந்த மனம் வேண்டும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2206🥰 

அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. நமக்கு மரணம் எந்த விதத்தில் எந்த நேரத்தில் நிகழும் என்பதும் யாருக்கும் தெரியாது. எனவே,  மனிதனாகப் பிறந்த நாம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு ஒருவருக்கு உதவி செய்ய மனம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஒருவரை கெடுத்து நாம்  வாழ வேண்டும் என்கிற போக்கை கைவிட்டு பரந்த மனதுடன்  வாழ்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Sunday, August 4, 2024

#Victory King: குடும்பமும் மன நிம்மதியும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2205🥰 

கடன் வாங்காத அளவிற்கு வசதி, அன்பும் பாசமும் கொண்ட உறவுகள், பாசத்தோடும் நேசத்தோடும் அரவணைக்கும் குடும்பம், நம் வசதிக்கு ஏற்ப ஒரு வீடு, நேர்மையாக உழைக்கும் மன பக்குவம், உழைப்புக்கேற்ற ஊதியம், இரவில் நிம்மதியான உறக்கம், இவை அனைத்தும் நமக்கு அமைந்து விட்டால் இதைவிட என்ன வேண்டும் நம் வாழ்க்கைக்கு? இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்வுடன் வாழ்வதைத் தவிர!!!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Friday, August 2, 2024

#Victory King: இயங்கும் உலகம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2204🥰 

இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு விட்டால், நம்மால் தான் எல்லாமே நடக்கிறது என்று நினைத்து நம்மையும் வருத்திக்கொண்டு நம்மைச்சுற்றி இருப்பவர்களையும் வருத்தும் நிலை வராமலும், எப்பொழுதும் மன உளைச்சலிலேயே இல்லாமலும் மகிழ்வுடன் வாழலாம். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, July 30, 2024

#Victory King: இலக்கில் இரகசியம் காப்போம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2203🥰 

நாம் ஒரு இலக்கை நோக்கி செயலில் ஈடுபட்டு பயணிக்கும் பொழுது அதில் நாம் வெற்றி காணும் வரை அதனை ரகசியமாகவே வைத்துக் கொள்வது அவசியம். அதை தவிர்த்து யாரிடமாவது அதை சொல்ல நேர்ந்து விட்டால் அந்த ரகசியம் கசிந்து நம் இலக்கிற்கு இடர்பாடுகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. நம்மாலேயே காப்பாற்ற முடியாத அந்த ரகசியத்தை மற்றவர்கள் எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை உணர்வோமே.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Monday, July 29, 2024

#Victory King: கடிவாளம் இல்லாத குதிரை சவாரி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2202🥰 

ஒரு நற்செயலை நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர் அறிவாளி. அதனை பிறர் சொல்லி புரிந்து கொண்டு செயல்படுபவர் புத்திசாலி. அதையே பிறர் சொல்லியும் புரிந்து கொள்ளாதவர்கள் முயற்சிக்காதவர். பிறர் சொல்லி புரிந்து கொண்டும் புரியாது போல் நடிப்பவர்கள் அது அவர்கள் ஆணவம். இந்த ஆணவம் என்ற கடிவாளம் இல்லாத குதிரையில் சவாரி செய்யத் தொடங்கி விட்டால் அது நம்மை அதல பாதாளத்தில் தள்ளாமல் விடாது. உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Thursday, July 25, 2024

#Victory King: நமக்கு மட்டும் அல்ல!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2201🥰 

உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனைகளும் வலிகளும் இல்லாத மனிதனும் கிடையாது. அதுபோல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ்ந்தான் என்ற சரித்திரமும் கிடையாது. எனவே நமக்கு மட்டும் தான் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஆதங்கப்படுவதை தவிர்த்து இதுதான் இயல்பு வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழப்பழகி கொண்டால் நாமும் மகிழ்வுடன் வாழலாம்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, July 17, 2024

#Victory King: மனிதம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2200🥰 

தனக்குள்ள செல்வாக்கினாலும், பண பலத்தாலும், பக்க பலத்தாலும் நாம் எந்த தவறு செய்தாலும் தப்பித்து விடலாம் என்று இறுமாப்பில் உள்ளவர்கள் ஒரு நிலையில் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் பொழுதும் தன்னை உணர்ந்து கொள்ளவில்லை என்றால் காலம் அவர்களை சும்மா விடாது. அதைவிட பெரும் தண்டனையை கொடுத்து அவரை சின்னா பின்னமாக்கிவிடும். உணர்வோமே!  

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Monday, July 15, 2024

#Victory King: வாழ்க்கையைப் பிரகாசிக்க செய்யும் நல்ல எண்ணங்கள்

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2199🥰 

வாழ்க்கையில் எப்போதும் நாம் நிறைவைப் பற்றியே சிந்தித்து, மிகவும் நிறைவாகவே இருக்கிறோம் என்று எண்ணினால் அந்த எண்ணமே நமக்கு நிறைவான வாழ்க்கையை அளித்துவிடும். நல்ல விதையை விதைத்தால் தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனை கொடு க்கும். அதுபோல நம் நல்ல எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏 

#Victory King: பாத்திரம் அறிந்து திருத்த முயற்சிப்போம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2198🥰 

தவறு செய்பவனை காப்பாற்றத் துடிப்பது, பண்பற்றவர்களின் சொல் செயல் அனைத்தும் கபட நாடகம் என்று தெரிந்தாலும் அதனைக் கண்டு ரசிப்பது போன்ற எண்ணம் உள்ளவர்களை நாம் திருத்தவும் முடியாது. அவர்களும் திருந்த மாட்டார்கள். அதற்காக நாம் முயல்வது நம் நேரத்திற்குத் தான் கேடு. உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Saturday, July 13, 2024

#Victory King: பாச உறவுகள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2197🥰

நமது உள்ளம் வேதனையில் வெதும்பும் பொழுது, அன்பிற்கினிய ஒத்த கருத்துள்ள சில உறவுகளோடு அகமகிழ்ந்து குதுகலிக்கும் சமயங்களில், உள்ளம் அழுதாலும் சிரித்த உதடுகளின் அதிர்வுகள் உள்ளத்தையும் மகிழ்வித்து முகத்தில் பரவசத்தை கொடுத்து உடலுக்குபுத்துணர்வை ஏற்படுத்தி நம்மை ஊக்குவிக்கும் மருந்தாக அது அமையும் உணர்வோமே.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Thursday, July 11, 2024

#Victory King: நம் கெளரவத்தை நாம் காப்பாற்றிக் கொள்வோமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி2196🥰

நாம் மிகவும் நல்லவனாக இருக்க நினைத்தால் நடிகன் என்ற பட்டமும், அதிகம் அன்பு காட்டினால் அடைக்கலத்திற்கு அடி போடுகிறான் என்றும், எல்லோரையும் நம்பினால் ஏமாளியாக்கி, அதிகம் கோபப்பட்டால் கோமாளியாக்கி, கடைசியில் நமக்கு பைத்தியக்கார பட்டமே கட்டிவிடுவார்கள். எனவே யாராக இருந்தாலும் அளவோடு பழகி நம் கௌரவத்தை நாம் காப்பாற்றிக்கொள்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: உழைப்பின் வலி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி2195🥰

தேன்கூட்டில் கைவைத்து தேனை எடுப்பவனுக்குதான் அதன் வலி என்னவென்று புரியும். அதுபோல கடின உழைப்பினாலும் நேர்மையாலும் உயர்ந்து இன்று நல்ல நிலைமையில் இருப்பவர்கள் உழைப்பிற்கு பின்னால் அனுபவித்த இன்னல்களும் காயங்களும் ஒரு சிலருக்கு புரியவும் புரியாது. சொன்னாலும் உணர மாட்டார்கள்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Monday, July 8, 2024

#Victory King: வெற்றி நிச்சயம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2194🥰 

பறவைகள் மரக்கிளையில் அமரும்போது கிளையின் தரத்தை சோதி த்து அமர்வதில்லை. தன் சிறகுகளை நம்பியே அமர்கிறது. அதுபோல் அந்தப் பறவை கூட்டில் இருந்து இரை தேடி வெளியில் செல்லும் பொழுது எப்படியும் கிடைத்துவிடும் என்ற தன்னம்பிக்கையில் தான் பறந்து சென்று இரையைப் பெற்று தன் குஞ்சிகளை காப்பாற்றுகிறது. அதுபோல்தான் நாம் நம் மீது முழு நம்பிக்கை வைத்து ஒரு செயலில் ஈடுபட்டால் வெற்றி என்பது நிச்சயம்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Saturday, July 6, 2024

#Victory King: யார் மனிதன்?

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2193🥰 

"யார் மனிதன்" கல்வி கற்றவ ன் மட்டும் மனிதன் இல்லை அதற்குத் தக்க பண்புடன் வாழ்பவன்தான் மனிதன். விருந்திற்கு அழைத்து பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்பவன் மனிதன் இல்லை. அழைத்தவரை அன்போடு வரவேற்று முகம் மலர்ச்சியோடு உபசரித்து நன்றியுடன் வழியனுப்பும் பண்பு தெரிந்தவன் தான் மனிதன். சுருங்கச் சொன்னால்"நீயெல்லாம் ஒரு மனுஷனா"என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகாத அனைவருமே மனிதன் தான். உணர்வோமே!

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Thursday, July 4, 2024

#Victory King: பலவித மனிதர்கள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2192🥰 

மனிதர்கள் பலவிதம். எல்லாம் தெரிந்தவர்கள் சிலர். எதுவுமே அறியாதவர்கள் சிலர். தெரிந்ததை தெரியாது போல் நடிப்பவர்கள் சிலர். தெரியாததை தெரிந்தது போல் நடிப்பவர்கள் சிலர். தேவையின் போது மட்டும் நம்மிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்ளும் சிலர். இப்படிப்பட்டவர்களுடன்தான் நாம் நம் வாழ்நாளை கடத்த வேண்டும். எனவே யார் எப்படி இருந்தாலும் யாருக்காகவும் நாம் மாறாது நாம் நாமாகவே இருந்து விட்டால் பிரச்சனையே இல்லை.

உணர்வோமே!🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, July 3, 2024

#Victory King: நம் சந்ததிகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2191🥰 

தவறான வழிகளில் செல்பவனை ஊக்குவிப்பது, நேர்வழியில் செல்பவர்களை நக்கல் அடிப்பது, அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது போன்ற பாபகாரியங்கள செய்து  தங்கள் சந்ததியினருக்கு பாவ மூட்டைகளை சேர்த்து வைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள்  எதிர்காலம் வளம் பெற."நாம் செய்யும் பாவம் நம் சந்ததியினரைத்தான் சென்றடையும்"

உணர்வோமே!🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Saturday, June 29, 2024

#Victory King: போலிகளை அறிவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2190🥰 

சிலரின் போலி முகங்களையும் பொய்யான வாழ்க்கையையும்புரிந்துகொள்ள முடியாத பலர்,  போலி முகத்தை நம்பி அவர்களுடன் உறவாடினாலும் அவர்களின் முகத்திரை கிழியும் பொழுது கேவலப்பட்டு அனைவராலும் வெறுக்கப்படுவதுடன் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நன்றி உள்ள நாய் கூட உதாசீனப்படுத்தி விடும். போலி முகமும் பொய்யான வாழ்க்கையும் என்றும் நிலையானது அல்ல என்பது தான் நிதர்சனம்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: தொழில் தர்மமும், மூல மந்திரமும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2189🥰 

தொழில் தர்மம் என்பது நாம் வேலை செய்யும் இடமாக இருந்தால் மனிதாபிமானத்துடன் சக ஊழியர்களிடம் அன்புடனும் பண்புடனும் பழகுதல், நேரம் .தவறாமை, முக்கியமாக ஈடுபாட்டுடன் வேலை செய்தல். சுயதொழில் செய்வதாக இருக்கும் பொழுது உண்மை, நேர்மை, ஒழுக்கம் நாணயம் அனைத்தையும் கடைபிடித்தால் மட்டுமே செய்யும் தொழிலில் நிலைத்து நிற்க முடியும். இதுதான் வாழ்க்கையில் முன்னேற நாம் கடைபிடிக்கவேண்டிய மூல மந்திரமாகும்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, June 26, 2024

#Victory King: அன்பும் பாசமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2188🥰 

சில உறவுகளும் நட்புகளும் நம்முடன் அன்புடனும் பாசத்துடனும் மிகவும் கரிசனமாய் இருப்பது போல் உண்மைக்கு புறம்பாக மிகவும் நல்லவர்கள் போல் பேசுபவர்களின் சுயரூபம் தெரிந்த பிறகாவது நாம் சுதாகரித்துக் கொண்டு அவர்களிடமிருந்து விலகினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழ முடியும்.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, June 25, 2024

#Victory King: நம்பிக்கைகள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2187🥰 

மதம் பிடித்த யானை, கடிவாளம் கட்டாத குதிரை, கொம்புடன் சீறி கொண்டு வரும் மிருகம் இவைகளின் செயல்களைக் கண்டு நாம் முன்னெச்சரிக்கையாக தப்பிக்க முடியும். அதுபோல் நம்முடனே கூட பழகி நமக்கே நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் கண்ணிலே படாது விலகி இருப்பதுதான் ஒரே வழி.

🙏Victory King Alias V. Krishnamurthy' (VK)🙏

Saturday, June 15, 2024

#Victory King: பூஞ்சோலை வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2186🥰 

பணம் இன்று வரும் நாளை வந்த வழியே சென்று விடும். எனவே பணத்திற்காக விலைமதிப்பில்லா பாசத்தையும், ரத்த சம்பந்த உறவுகளையும் விற்றுவிடாமல் நம்மை நாமே காப்பாற்றி கொண்டு வாழப்பழகி விட்டால் நாம் பூஞ்சோலையின் நடுவே புது வசந்தத்தோடு நிலையான மகிழ்வோடு வாழலாம்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மாசற்ற அன்பு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2185🥰 

தற்பெருமை, பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு வெறுப்படைதல்,பிறருடைய முன்னேற்றத்தை பொறுக்க முடியாமை, தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை அற்பமாக விமரிசித்தல், மாற்றுக் கருத்து கூறுபவர்களை கடுஞ்சொற்களால் தாக்குதல் போன்ற குணங்கள் தான் பொறாமையின் அறிகுறி. இது ஒரு எலும்புருக்கி நோய். எனவே இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம் சிந்தையை, இருதயத்தை மாசற்ற அன்பினால் நிரப்புவது ஒன்றே வழி.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, June 3, 2024

#Victory King: விழலுக்கு இறைத்த நீர்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2184🥰 

படிக்கத் தெரியாதவன் கையில் பகவத் கீதை இருந்து என்ன பயன். நேசிக்கத் தெரியாதவனிடம் குடும்பத்தின் அருமை எப்படி புரியும். பொய்யையே பேசும் மொழியாக வைத்திருப்பவனிடம் உண்மையின் அருமையை எப்படி உணர முடியும். அதுபோல் அடுத்தவரின் தராதரம் தெரியாமல் பிதற்றுபவனிடம் பண்பைப் பற்றி புரிய வைக்க நாம் முயன்றால் அது விழலுக்கு இறைத்த நீர் போல் தான்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: இனிப்பும், கசப்பும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2183🥰 

நாம் உண்ணும் பொழுது காரம்,துவர்ப்பு, கசப்பு போன்ற பதார்த்தங்களை தனித்தனியே சாப்பிடும் பொழுது நமக்கு வெறுப்பு தான் தட்டும். இனிப்பை மட்டுமே சாப்பிட்டாலும் அது திகட்டி விடும். அனைத்து சுவைகளையும் பகிர்ந்து சாப்பிடும் பொழுது தான் நமக்கு உண்பதில் ஒரு முழுமை கிடைக்கிறது. அதுபோல்தான் நமது வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் பொழுது தான் நம் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: படிப்பறிவும், பட்டறிவும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2182🥰

நாம் படித்து பட்டம் பெற்று அறிவை வளர்த்துக் கொள்வது theoretical knowledge. வாழ்க்கையில் அனுபவத்தால் கற்றுக் கொள்வது practical knowledge. இரண்டையும் முறையாக பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் செயல்படுத்தும் பொழுது தான் வெற்றி நமக்கு எளிதாகிறது.Theoryஐ மழுங்கடித்து அனுபவத்தை அலட்சிய படுத்தி நாம் வாழும் பொழுதுதான் நமக்கு வாழ்க்கை கடினமாகிறது. 

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, May 29, 2024

#Victory King: வசந்த வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2181🥰 

நாம் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது வாழ்ந்தாலே அந்த வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சிதான். அதுபோல் நமக்கு யாரும் இல்லை என்று வருத்தப்படாமல் நாம் யாருக்கும் பாரமாக இல்லாமல் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே என்று மனதார நினைத்து மகிழ்ந்தால் அதுவே நம் வாழ்க்கையை வசந்தம் ஆக்கிவிடும். முயற்சிப்போமே!

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, May 28, 2024

#Victory King: வாழ்க்கையின் நிதர்சனம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2180🥰 

பணம், பேராசை, அடுத்தவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி போன்ற போதைகளுக்கு அடிமையாகி நம் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற தாரக மந்திரத்தை நாம் உரு வெற்றிக் கொண்டு நம்மை நாமே புனிதமாக்கி கொண்டாலே போதும். இதுதான் நிதர்சனம்!

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மன அமைதிக்கான வழி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2179🥰 

ஒரு சிலர் தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று தவறாக நம்மிடம் பேசும் சமயங்களில் நாம் மௌனம் சாதிப்பது தான் மேல். ஏனென்றால் தெளிவான புரிதல் இல்லாமல் பேசுபவர்கள் நாம் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்க மாட்டார்கள். எனவே மவுனமாக இருந்து விட்டால் வீண் தர்க்கத்தை தவிர்த்து நாம் மன உளைச்சலில் இருந்து விடுபடுவதோடு நம் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளமுடியும்

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 25, 2024

#Victory King: வாழ்க்கை உளவியல்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2178🥰 

நாம் எதன் மீது அதிகம் கவனம் செலுத்துகிறோமோ அதன் தாக்கம் தான் அதிகரிக்கும். பிரச்சனைகளைப் பற்றியே அதிகம் சிந்தித்தால் பிரச்சனைகள் தான் மேலோங்கும். அதுபோல் நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைப் பற்றியே சிந்திக்கும் பொழுது நமக்கு அதற்கான வாய்ப்புகளை தந்து நம்மை மகிழ்விக்கும். இதுதான் உளவியல் உண்மை. உணர்ந்து வாழ்வோமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, May 24, 2024

#Victory King: நடிப்பு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2177🥰 

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது ஓடி ஓடி வேலை செய்வது போல் பாவனை செய்து மற்றவர்கள் பார்வையை நம் மீது இழுப்பதற்கு முயற்சிக்காமல் அந்த செயலுக்காக ஆக்கபூர்வமாக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெறுவதுதான் நம் இதயத்திற்கு இதம். ஆத்மா சாந்தி. நாம் நமக்குஉண்மையாக செயல்பட்டு நம்மை நாமே தூய்மை படுத்திக் கொண்டு வாழ முயல்வோமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, May 22, 2024

#Victory King: ஓடம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2176🥰 

நிலையான நீரில் ஓடம் செல்லும்பொழுது தான் துடுப்பு நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஓடுகின்ற ஆற்றில் ஓடம் செல்லும் பொழுது நீரோட்டத்தின் கட்டுப்பாட்டில்தான் ஓடம் செல்லும். இங்கே துடுப்பு செயலற்று போகும். அதுபோல்தான் நம் மனது ஒரு நிலையில் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது தான் வாழ்க்கையையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மனம் அலைபாய்ந்து ஓடிக்கொண்டேஇருந்தால் மனம் போன திசையிலே தான் வாழ்க்கை செல்லும். உணர்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மானிடப் பிறவி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2175🥰 

 நாம் கிடைப்பதற்கு அரிய பெருமைமிகு மானிடப்பிறவி என்பதை உணர்ந்து, புறம் பேசி துரோகிகளாகி, கேவலமான ஜென்மமாக மாறிவிடாமல், நேர்மறையான எண்ணத்துடன் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் பலன் ஏதாவது ஒரு வழியில் அது நமக்கு சாதகமாக திரும்பி வரும்  என்பதை மனதில் கொண்டு நல்லதையே சிந்தித்து நன்மைகளை சந்திப்போமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 18, 2024

#Victory King: ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2174🥰 

தங்கத்தைப் போல நிறம் கொண்ட பித்தளை தன்னையும் தங்கமாக நினைத்தும், வெள்ளியைப் போல நிறம் கொண்ட ஈயம் தன்னையும் வெள்ளியாக நினைத்தும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று பார்த்து ஏளனமாக நகைத்துக் கொள்ளுமாம்.அதைபோல மனிதர்கள் தங்கள் குறைகளை மறைப்பதற்காக மற்றவர்களை குறைகூறி இகழ்ந்து விமர்சிப்பது கேலிக்கூத்தான விஷயம் என்பதை உணர வேண்டும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 16, 2024

#Victory King: எது வெற்றி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2173🥰 

நம் அழைப்பிற்கு இணங்கி நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளில் நல்லவர்களுடன் கூட பொறாமை கொள்பவர்களும், புறம் பேசுபவர்களும் கூடவே வரத்தான் செய்வார்கள். அப்பொழுது நாம் அனைவரையும் ஒரு முகமாக அன்புடன் வரவேற்று உரிய மரியாதை செலுத்தி அனுப்புவதுதான் மனிதாபிமானம். அதுபோல் நம் வாழ்க்கையில் வரும் அழையா விருந்தாளிகள் தான் இன்பமும் துன்பமும். எனவே நம்மை நாடி வந்த துன்பத்தையும் சுமையாக கருதாமல் அதனை நம்மிடமிருந்து விலக்கி வாழ முயன்றாலே அது தான் நம் வாழ்க்கையின் வெற்றி!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, May 15, 2024

#Victory King: எது அழகு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2172🥰 

நதியில் நீர் ஓடிக்கொண்டிருந்தால்தான் நதிக்கு அழகு. துளிர் விட்டு வளர்ந்தால்தான் செடிக்கு அழகு. மலர்ந்தால்தான் மலருக்கு அழகு. தோகை விரித்து ஆடினால்தான் மயிலுக்கு அழகு. துள்ளி குதித்து ஓடினால்தான் மானுக்கு அழகு. அதுபோல் உழைத்து வெற்றி பெற்றால்தான் மனிதனுக்கு அழகு!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, May 13, 2024

#Victory King: நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2171🥰 

கூட்டிலிருந்து புறப்படும் பறவை இரை எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு கிளம்புவதில்லை. ஆனால் திரும்பும் பொழுது இரையோடு கூட்டிற்கு வந்து தன் குஞ்சுகளை காப்பாற்றுகிறது. அது தான் அந்தப் பறவையின் தன்னம்பிக்கையோடு கூடிய முயற்சிக்கான வெற்றி. அதுபோல் நமக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நம் மனதை பக்குவப்படுத்தி அதை ஒரு சவாலாக ஏற்று தன்னம்பிக்கையோடு முயன்று அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவருவதும் சாத்தியமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 9, 2024

#Victory King: உண்மை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2170🥰 

துரோகத்திற்கு துணை போய்,உண்மையை மூடி மறைக்கும் பொய்யர்களாகி, சூழ்ச்சி செய்து மற்றவர்களை ஏமாற்றுபவர்களை இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில், நன்றாக பேசி பழகுவதால் நமக்கு நல்லதே செய்வான் என்று எண்ணி நாம் முட்டாளாகமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவர்கள் உண்மை நிலையை உணர்ந்து பழக முயற்சிப்போமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, May 7, 2024

#Victory King: மனிதர்களும், அவர்களின் அருமையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2169🥰 

நாம் தேடித் தேடிப் போய் பேசுவதாலேயே சிலருக்கு நம் அருமை புரிவதில்லை. எனவே வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்தாலும் அதில் முக்கியமான ஒன்று எப்படி பழகனும், யாருடன் பழகனும், எந்த அளவுக்கு பழகும் என்பதுதான். இதனை நாம் உணர்ந்து வாழப்பழகிவிட்டாலே நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 4, 2024

#Victory King: பாச உணர்வு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2168🥰 

கண்ணுக்குத் தெரியாத தென்றல் காற்று நம் இதயத்தை இதமாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் நமக்கு ஒலியை கொடுக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வாசம் நம்மை சுண்டி இழுக்கிறது. அதுபோல்தான் கண்ணுக்கு தெரியாத பந்தம் என்ற பாச உணர்வுதான் நம் உறவுகளை ஒருங்கிணைக்கிறது. எனவே அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவுகளை தக்க வைப்போமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, May 3, 2024

#Victory King: மற்றவர்கள் கருத்துகளும், நம் முடிவுகளும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2167🥰 

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அதற்கான மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதில் தவறில்லை. ஆனால் அதனை செயல்படுத்தும் பொழுது நாம் எடுக்கும் முடிவு தான் இறுதியாக இருக்க வேண்டும். எனவே எண்ணங்களை சிதறவிடாமல் நாம் எண்ணியதை எண்ணியபடி முடித்தால்தால்தான் நம் கெளரவத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 2, 2024

#Victory King: நிகழ்ச்சிகளுக்கான அழைப்பும், மரியாதையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2166🥰 

அழைப்பு என்பது உறவுகளை ஒருங்கிணைப்பதும், இளைய தலைமுறைகளுக்கு அதனை எடுத்துக்காட்டாக அமையச் செய்வதுமானதுமான உறவுச் சங்கிலியை வலுப்படுத்தும் அற்புத சக்தி. எனவேதான் குடும்பத்தில் எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும், மற்ற நிகழ்வுகளானாலும்சரி உறவுகளை அழைப்பதும், தெரியப்படுத்துவதுமான ஒரு சம்பிரதாயம். உறவுகளின் வலிமையை உணர்ந்து செயல்படுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, April 29, 2024

#Victory King: நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2165🥰 

உரிமை உண்டு என்றாலும், உறவாகவே இருந்தாலும், நமக்கு அங்கு மதிப்பில்லை என்று தெரிந்த நிலையில் நம்முடைய சுயமரியாதையை இழந்து தான் அந்த உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் விலகி இருப்பதே மேல். இதனைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல் எப்பொழுதும்போல் நல்ல சிந்தனையோடு நாம் நாமாகவே இருந்தாலே போதும் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: வாழ்வில் வெற்றிபெற!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2164🥰 

வாழ்வில் வெற்றி பெற ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும். தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்றால் வாழ்க்கையில் தடுமாறுவதைத் தவிர வேறு வழி இல்லை.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, April 26, 2024

#Victory King: உறவுகளிடம் ஒற்றுமை காப்போம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2163🥰

ஒரு சிலர் தங்கள் உறவுகளிடம் உள்ள அளவு கடந்த பாசத்தினால் சில சந்தர்ப்பங்களில் ஆர்வக்கோளாரில் ஆலோசனை என்ற பெயரில் ஒரு சில அறிவுரைகளை கூறுவதா லேயே சில உறவுகள் அவர்களை விட்டு பிரிவதற்கு காரணமாகி விடுகிறது. அறிவுரை என்பது பாசத்திற்குமட்டும் இடம் கொடுக்காமல் ஆக்கபூர்வமாகவும் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாவண்ணமும் இருந்தால் மட்டுமே உறவுகளின் ஒற்றுமை ஓங்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: பாவங்களும் பரிகாரங்களும்

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2162🥰

தர்மம் செய்யும்பொழுது அதை தடுப்பது பாவம். விருந்திற்கு அழைத்தவரை அவமானப்படுத்துவது பாவம். தானம் செய்துவிட்டு தம்பட்டம் அடித்துக் கொள்வது பாவம். அடுத்தவர் கஷ்டத்தை கண்டு ஆனந்தப்படுவது பாவம். அடுத்தவர் குடும்பத்தை அழிக்க நினைப்பது பாவம். இப்படிப்பட்ட பாவங்கள் நீங்க வேண்டும் என்றால் குறுகிய மனப்பான்மையையும் குரோத எண்ணங்களையும் குழி தோண்டி புதைத்தால் மட்டுமே சாத்தியம்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, April 24, 2024

#Victory King: நம் துன்பங்களுக்குக் காரணம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2161🥰

நினைத்து மகிழ வேண்டிய விஷயங்களை மறப்பதும்,  மறக்க வேண்டிய விஷயங்களை நினைவிலேயே வைத்து வருந்துவதும், சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமலும், தேவையில்லாத விஷயங்களில்தலையிட்டு மதிப்பை கெடுத்துக் கொள்வதும்தான் நம் எல்லா  துன்பங்களுக்கும் காரணமாகி நடக்க வேண்டிய விஷயங்களில் கோட்டை விடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதனை உணர்ந்து செயல்படுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, April 23, 2024

#Victory King: நிதர்சனம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2160🥰

பணத்தின் மோகத்திலேயே இருப்பவர்களுக்கு பாசத்தின் பெருமை தெரியாது. புகழையே பிரதானம் என்று நினைப்பவர்களுக்கு பண்பை பற்றி புரிய வைக்க முடியாது. பிச்சை எடுத்தே பிழைப்பவர்களுக்கு கௌரவமாக நாம் எதை கொடுத்தாலும் எதை செய்தாலும் ஏற்க முடியாது.  இவர்களையெல்லாம் நாம் மாற்ற முயற்சித்தால் நம் ஆயுள்தான் முடியுமே ஒழிய நம்மால் எதுவும் முடியாது என்பதுதான் நிதர்சனம்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, April 22, 2024

#Victory King: ஆடம்பரம் வேண்டாம், அன்பு மட்டுமே போதும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2159🥰

குடும்பம் என்பது அன்பின் பிறப்பிடம், மகிழ்ச்சியின் இருப்பிடம், பாசத்தின் வளர்ப்பிடம், உறவுகள் சங்கமம் ஆகும் இடம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது. ஆனந்தமாக வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை. அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, April 19, 2024

#Victory King: ஒன்றுபடுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2158🥰

பொறாமை என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு நான் என்ற ஆணவத்துடனும் எனக்கு மட்டுமே என்ற பேராசையுடனும் நம் முன்னேற்ற த்தை பொறுக்க முடியாமல் நம்மை எதிர்க்கும் அராஜக பேர்வழிகளை அடக்க வேண்டும் என்றால் நம்மிடம் ஒற்றுமைக் கரங்கள் கைகோர்த்தால் மட்டுமே சாத்தியம். உணர்ந்து நடந்தால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, April 18, 2024

#Victory King: தவறும் தண்டனையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2157🥰

ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் யார் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருக்கலாம்.ஆனால் மனசாட்சி மட்டும் நம்மை தூங்க விடாது. மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு மண்டியிட்டு அடி பணிந்து நின்று பதில் அளிப்பதுடன் செய்த தவறுகளுக்கான தண்டனையும் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதிலிருந்து மீள முடியாது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, April 16, 2024

#Victory King: மகிழ்வான வாழ்க்கைக்கான சூத்திரம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2156🥰

நம் நிலை தெரியாமல் காயப்படுத்தியவர்களைவிட, நம் நிலை தெரிந்தே காயப்படுத்தியவர்கள், நாம் எவ்வளவுதான் பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணங்களை சில சந்தர்ப்பங்களில்தான் தெரிய வருகிறது. மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால் நல்லவர்களாய் நடிப்பவர்களோடு நம்பிக்கையோடு நாம் பயணம் செய்வதுதான். இதனை நாம் நன்கு உணர்ந்து இப்படிப்பட்டவர்களை புறக்கணித்து வாழ்ந்துவிட்டால் அதுதான் நமக்கு மகிழ்வான வாழ்க்கை!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, April 15, 2024

#Victory King: நம்பிக்கைகளும் ஏமாற்றங்களும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2155🥰

நம்பியவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றியவர்கள் மீண்டும் நம் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார்கள். எது சரி எது பிழை என்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. எது எப்படி இருப்பினும் நாம் நம் மனதிற்கு பிடித்த நற்காரியங்களை செய்து, மனதிற்கு பிடித்தவர்களோடு ஐக்கியமாகி நம்மை நாமே நம் மனதை மகிழ்வு பாதைக்கு மாற்றி அமைத்துக் கொண்டால்தான் நாம் மனம் அழுத்தமின்றி நம் இறுதி காலம் வரை நிம்மதியாக கடந்து செல்ல முடியும் என்பது தான் இயல்பு.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, April 11, 2024

#Victory King: அன்போடு அரவணைப்போம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2154🥰

சூடு, குளுமை, அறுசுவைகள் இவைகள் அனைத்தையும் பக்குவமாக பதம் பார்த்து நம் வயிற்றிற்கு இதமாக அளிக்கும் நம் நாக்கு உணர்ச்சிகளோடு ஒருங்கிணைந்து கட்டுப்பாடு இன்றி அதனுடைய இஷ்டத்திற்கு வார்த்தைகளை வெளிவிடுவதால்தான் நாம் பல இன்னல்களை சந்திக்கிறோம். எனவே நாம் பேசும் வார்த்தைகளையும் பக்குவப்படுத்த நம் நாவை கடிவாளம் போட்டு நமது கட்டுப்பாட்டில் இருக்கச் செய்தால் சுற்றம், நட்பு, உறவுகள் அனைத்தையும் அன்போடு அரவணைக்க முடியும். முயற்சிப்போமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, April 9, 2024

#Victory King: நியாயத்தை பேசுவோம், சரியானவர்களிடம்!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2153🥰

எல்லாவற்றிற்கும் தனக்கென ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொள்பவரிடம் நாம் நியாயத்தைப் பற்றி வாதாடாமல் இருப்பது தான் நல்லது. இவர்கள் ஒரு சுயநலவாதிகள். இவர்களிடம் நியாயத்தைப் பற்றி வாதாடுவது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு தான் சமம். நம் பக்கமும் எதிர் பக்கமும் ஒரே நியாயம் இருக்கும் பொழுது தான் நியாயம் என்ற வார்த்தைக்கே உயிர் கிடைக்கும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, April 8, 2024

#Victory King: குடும்பம் எனும் பாசக்கூடு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2152🥰

கண்ட இடத்தில் குப்பையை கொட்டினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். அதுபோல் கண்டவர்களிடம் எல்லாம் நம் குடும்ப பிரச்சினைகளை கொட்டினால் நம் குடும்பமே கெட்டுவிடும். குடும்பம் என்னும் குருவி க் கூடு கலையாமல் இருக்க குடும்பத்துடன் அமர்ந்து மனம் விட்டுப் பேசி அன்புள்ளம் கொண்ட உறவுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதும். எந்த சூறாவளி காற்றாக இருந்தாலும் பேய் மழையாக இருந்தாலும் இந்த அன்பு பாசக் கூட்டை கலைக்க முடியாது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, April 6, 2024

#Victory King: பேசும் சொற்கள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2151🥰

கொட்டினால் அள்ள முடியாதது நீர் மட்டும் அல்ல. நாம் சொல்லும் சொல்லும் தான். நாம் சொல்லும் சொல் வெல்லவும் செய்யும் கொல்லவும் செய்யும்.  தேனீக்களை போன்றது சொற்கள். அதனிடம் தேனும் உண்டு கொடுக்கும் உண்டு. எனவே சொற்களை நாம் சொல்லும் விதத்தில்தான் நாம் நம் சொந்தங்களை சொத்தாக்கமுடியும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, April 3, 2024

#Victory King: அன்பும், பாசமும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2150🥰

நம்மீது உண்மையான அன்பும் பாசமும் கொண்ட உறவுகள் சில சமயங்களில் நம் மனது நோகும்படி நடந்துகொள்ளும் பொழுது அதனை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் அன்பு மிகுதியினால் அவரிடம் இருந்து வரும் செயலே என்று எண்ணி உறவை வலுப்படுத்தினால் நம் மனதில் பாசமும் அன்பும் தான் மேலோங்கும். அளவுக்கு மீறிய அன்பு அதிக சந்தோஷத்தை தருவது போல் இது போன்ற சில வலிகளையும் கொடுக்கத்தான் செய்யும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, April 2, 2024

#Victory King: நட்பும் உறவினர்களும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2149🥰

நாம் ஒதுக்கப்படும் இடங்களில் நாமே ஒதுங்கி விட்டால் நம் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்.புகழப்படும் இடங்களில் தன்னடக்கத்தோடு இருந்தால் நாம் மதி மயங்கி தன்னிலை மாறாமல் இருக்கலாம். விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனம் சாதித்தால் வீண் விவாதங்களை தவிர்க்கலாம். நேசிக்கும் இடங்களில் அன்புடன் இருந்தால் நட்புகளையும் நல்ல உறவுகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம். கடைபிடிக்க முயல்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Sunday, March 31, 2024

#Victory King: வாழ்க்கையை வாழப் பழகுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2148🥰

அறிவில்லா அழகு ஒரு காட்சி பொருள் மட்டுமே. பண்பில்லா பணம் பகட்டை கொடுத்து பகைமையை வளர்க்கும். விவேகம் இல்லா வீரம் முரட்டுத்தனத்தை வளர்த்து முட்டாள் ஆக்கும். அன்பில்லா உள்ளம் அடுத்தவரை காயப்படுத்தும். அதுபோல் பாசமில்லா உறவு ரயில் பயணத்தில் சக பயணிகளுக்கு தான் சமம். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ பழகுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, March 29, 2024

#Victory King: தேவை ஒற்றுமையைத் தவிர வேறொன்றுமில்லை!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2147🥰

சாதுவான மாடுகள் மந்தையாக  இருக்கும் பொழுது, ஒரு புலி அந்த  மாடுகளை விரட்டி வரும் பொழுது, அந்த மாடுகள் கூட்டாக சேர்ந்து விரட்டி தங்களை காப்பாற்றி கொள்ளும். அதுபோல ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இருந்தோமேயானால் நம்மை தாக்கும் எந்த சக்தியையும் எளிதில் வீழ்த்தி வென்று விடலாம். எந்தப் புலியின் கர்ஜனையும், நரித் தந்திரமும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. தேவை ஒற்றுமை. உணர்ந்து செயல்படுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, March 28, 2024

#Victory King: கண்மூடித்தனத்தை விட்டொழிப்போம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2146🥰

செம்மறி ஆடுகள் கூட்டமாக செல்லும் பொழுது முன்னால் செல்லும் ஆடுகள் என்ன செய்கிறதோ அதையே பின்னால் உள்ள ஆடுகளும் கண்மூடித்தனமாக செய்யும். ஒரு ஆடு கிணற்றில் குதித்து விட்டால் மற்ற ஆடுகளும் அப்படியே அதை தொடரும். அதுபோல் மனிதர்களும் குருட்டுத்தனமாக எதையும் யோசிக்காமல் ஒருவன் செய்யும் செயலையே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் தங்கள் அழிவிற்கு தாங்களே குழி தோண்டு வதற்குத்தான் சமம் என்பதை உணர்வோம் சிந்திப்போம் செயல்படுவோம்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, March 27, 2024

#Victory King: தவறும் தண்டனையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2145🥰

நாம் செய்த தவறுகளுக்கு மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதும், கடவுளிடம் சென்று பரிகாரம் செய்வதும், நாம் நம் மனசாட்சிக்கு பயந்து இனி தவறு செய்யமாட்டேன் என்பதற்கு உத்திரவாதமே தவிர அந்த மன்னிப்பும் பரிகாரமும், செய்த தவறுக்கு துணை போகாது. செய்த தவறுக்கான தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பது விதி. எனவே இதன் பிறகாவது தவறு செய்யாமல் இருந்தால் சரிதான்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, March 25, 2024

#Victory King: வாழப் பழகுவோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2144🥰

'மற்றவர்கள் உழைப்பில் வாழாதிருத்தல், மற்றவர்கள் சிரிக்கும்படி வாழாதிருத்தல், மற்றவர்களைப் போல் வாழ எண்ணாதிருத்தல், மற்றவர்கள் புகழ்ச்சிக்கு மதி மயங்காதிருத்தல்' இவற்றை நாம் நம் உள்ளத்தளவில் உறுதி செய்து கொண்டாலே போதும். நமக்கு சுய சிந்தனை மேலோங்கி தன்னம்பிக்கையுடன் நாம் நாமாகவே இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Sunday, March 24, 2024

#Victory King: சேருமிடம் அறிந்து!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2143🥰

குழந்தையா இருக்கும்போது அனைத்து குழந்தைகளுமே நல்லவர்கள்தான். அவர்கள் வளரும் விதம், சுற்றம், சூழல், சேருமிடம் இவைகள் தான் அவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் காட்சிப்படுத்தி விடுகிறது. ஒன்றை மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவர்களாகவே இருந்தாலும் சேர்க்கை சரியில்லை என்றால் அவருடைய வாழ்க்கையும் மதிப்பற்று தான் போகும் என்பதை உணர்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, March 22, 2024

#Victory King: எச்சரிக்கையாக இருப்போமே!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2142🥰

நம்மை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பவனைகூட நம்பி எதிர்கொண்டு வெற்றி பெறலாம். ஆனால் நம் கூடவே இருந்து 'குழைந்து கூழக் கும்பிடு' போடும் துரோகிகளை மட்டும் நாம் இனம் காணாமல் நம்பி விட்டால் நமக்கு எந்த நேரத்திலும் ஆபத்துதான். எச்சரிக்கையோடு இருந்து வாழப்பழகுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, March 21, 2024

#Victory King: இவ்வளவுதான் வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2141🥰

உயிரை விட துணிந்து விஷம் குடிப்பவன் பிழைத்துக் கொள்கிறான். வாழ வேண்டும் என்ற துடிப்புடன் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்பவன் இறந்து விடுகிறான். எதுவும் நம் கையில் இல்லை. சோகமே வாழ்க்கையும் இல்லை. எந்நாளும் சுகத்துடன் வாழ்ந்து விடவும் முடியாது. எனவே சுகம் வந்தால் மகிழ்ந்தும் சோகம் வந்தால் மனதிடத்துடன் அதனை எதிர்கொண்டு மீளவும் பழகிவிட்டால் இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை நாம் உணர முடியும். 

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏


Tuesday, March 19, 2024

#Victory King: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2140🥰 

பரம்பரை சொத்து இல்லாமல், பணக்கார பெற்றோர்கள் இல்லாமல், வீழ்ந்தால் உதவ உற்றார் உறவினர்கள் கூட இல்லாமல், நம்முடைய திறமையை கொண்டு சுய முயற்சியில் தனியாய் நின்று வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைக்கு வரும்பொழுது நாம் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாதது. அதே சமயம் இதில் நமக்கு செருக்கு ஏற்பட்டு விட்டால் சறுக்கல்தான். உணர்ந்து வாழ்வோம் முன்னேறுவோம்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏


Monday, March 18, 2024

#Victory King: இலக்கு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2139🥰 

நம் ஆசை நிராசையாகலாம். லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம். முயற்சியில் தோல்வியடையலாம். ஆனால் நம்மைநாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி இலக்கு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி. இதனை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏



Sunday, March 17, 2024

#Victory King: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2138🥰

கஷ்டங்களோ கவலைகளோ தெரியாமல் பிள்ளைகள் சுகமாகவும் வசதியாகவும் வளர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் துணிவு இல்லாத பிள்ளைகளைதான் நாம் உருவாக்குகிறோம் என்று. உணர்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, March 15, 2024

#Victory King: தீர்ப்புகளும் நீதிபதிகளும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2137🥰

ஒருவர் தான் தெரிந்தே ஒரு தவறை செய்வதுடன் அதை உணராத நிலையிலும் தானே ஒரு வக்கீலாக வாதம் செய்து அந்த குற்றத்தை மறைக்க முயலும் அவரே அடுத்தவர் தெரியாமல் செய்த தவறை அவர்கள் உணர்ந்த பிறகும், வக்கீலாக இருந்தவர் இங்கு ஒரு நீதிபதியாக அவதரித்து எப்படி செய்தாலும் குற்றம் குற்றமே என்று வீரமுழக்கம் செய்யும் பச்சோந்திகளை நாம் இனம் கண்டு வாழப் பழகினால் தான் நமக்கு நிம்மதி.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, March 14, 2024

#Victory King: மனிதப் பிறவியே மகத்தானது!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2136🥰

பறவைகள் தங்கள் சக்திக்கேற்ப சஞ்சரிக்கும் உயரம் வேறுபடுகிறது. ஆனால் மனிதனுக்கோ தங்கள் மனம்போல் எதுவும் சாத்தியப்படுத்த முடிகிறது. மனித பிறவி தங்கள் சக்தியை உணரும் அபூர்வமான ஒரு படைப்பு. எனவே அதைப் நாம் முறையாக பயன்படுத்தி மேன்மேலும் நம்மை நாமே நம் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வோமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, March 13, 2024

#Victory King: நம் முன்னேற்றம் நம் கைகளில்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2135🥰

இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவை மூன்றுடன் நம்பிக்கை, நேர்மை, பக்தி இவை மூன்றும் நம்மிடம் ஐக்கியமாகி இதற்கிடையில் நமக்கு ஏற்படும் பிறருடைய பாராட்டு, பழிச்சொல் குறித்து சிந்திப்பதை தவிர்த்து வாழ பழகி விட்டால் நம் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, March 11, 2024

#Victory King: பெருமை பேசும்போது கவனம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2134🥰

வறுமையில் இருப்பவனிடம் தன் செல்வ செழிப்பை பற்றி பேசுவது, நோயாளிகளுக்கு முன் தன் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி பேசுவது, சோகத்தில் இருப்பவனிடம் தன் சந்தோஷமான வாழ்க்கையை பற்றி பெருமைப்பட்டுக் கொள்வது, ஆதரவற்றவர்களை அருகில் வைத்துக்கொண்டு தன் தாய் தந்தையரை பற்றி பெருமிதத்துடன் வியாக்கியானம் செய்வது போன்ற சேடிஸ்டுகள் கண் பார்வையில் கூட நாம் படாமல் இருப்பது தான் மேல்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, March 9, 2024

#Victory King: நல்லவனுக்கு நல்லவன்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2133🥰

நம்மால் பயன் கிடைக்கும் வரை நல்லவன் வல்லவன் அமைதியானவன் பொறுமையானவன் என புகழாரம் பாடி ய அதே நாக்கு நம்மால் எந்தவித பயனும் இல்லாத நிலை யில் அதற்கு முற்றிலும் எதிர்மறையாக பறைசாற்றும் பொழுது அவர்களின் உண்மையான முகத்தை அறிந்தபின் நாம் சிறிதும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இவர்கள் இப்படித்தான் என்று அவர்களை விட்டு விலகி இருப்பது தான் நமக்கு நிம்மதி!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, March 8, 2024

#Victory King: உண்மையான பெண்கள் தினம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2132🥰


பெருமைக்குரிய பெண் ஒரு குழந்தையாக, மகளாக, மாணவியாக, பட்டதாரியாக, தொழில்நுட்ப வல்லுனராக, மனைவியாக, மருமகளாக, தாயாக, பாட்டியாக இப்படி அனைத்து அவதாரங்களிலும் தனித்துவமாக நின்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரது ஆழ்மனதிலும் பதிந்தால் மட்டுமே பெண்கள் முன்னேற்றம் என்ற கோஷத்திற்கு ஒரு முழுமை கிடைக்கும். International Women's Day வாழ்த்துக்களுடன்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, March 7, 2024

#Victory King: வசந்தக் காற்று வீசும் நம் வாழ்க்கையில்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2131🥰

அன்பு உள்ளங்கள் ஒருங்கிணைந்தால் அனைத்தையுமே அழகாக காட்டும். நம் நம்பிக்கை நமக்கு நல்வழியை காட்டி அனைத்துமே நல்லதாக நடக்கும். இயற்கை நம் கண்களுக்கும் இதயத்திற்கும் குளிர்ச்சியை கொடுத்து நம் உற்சாகத்தை மேலும் மேலும் கூட்டும். இவைகள் அனைத்துமே நமக்கு அமைந்து விட்டால் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே வசந்த காற்று வீசும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, March 5, 2024

#Victory King: நிம்மதியான வாழ்க்கை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2130🥰

நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து குழந்தைகளை வறுமை தெரியாது வளர்த்து பந்தாவாக வாழ்வது இல்லை. புரிதலும் நிதானமும் தவறாமல், அடுத்தவர்கள் நிம்மதியை குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல், நமக்கு கிடைத்ததை மனமுவந்து ஏற்று  குழந்தைகளை பண்புடன் வளர்த்து குடும்பத்தை அரவணைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் அதுதான் நிம்மதியான வாழ்க்கை.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: உலக நியதி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2129🥰

ஒருவர் செய்த நன்மையையும் அன்பையும் ஆதரவையும் மறப்பதுடன் அவர்களுக்கு எதிராகவே செயல்படுதல், தங்கள் கடந்த கால வாழ்க்கையை மறந்து வசதி வாய்ப்புகள் வந்தவுடன் மதிமயங்கி ஆட்டம் போடுபவர்கள் தங்கள் கடைசி காலத்தில் அனைத்தையும் சிந்தித்து சிந்தித்து நொந்து கஷ்டத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கத்தான் செய்வார்கள். இதுதான் உலக நியதி.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மதம் பிடித்த யானை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2128🥰

மதம் பிடித்த யானை தான் தன்னிலை இழந்து அனைத்தையும் அழிக்கும். கடிவாளம் இல்லாத குதிரை தான் தாறுமாறாக ஓடி நிலை குலைந்து நமக்கு ஆபத்தை விளைவிக்கும். கொம்புள்ள மிருகங்கள் கூட நாம் சீண்டினால் தான் மிரண்டு போய் நம்மை நோக்கி வந்து தாக்கும். ஆனால் நம்பிக்கை துரோகிகளின் அருகில்  இருந்தாலே நமக்கு ஆபத்துதான்.எனவே அவர்கள் பார்வையிலிருந்தே விலகி இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: வாழ்க்கைப் பயணமும் ஓர் இன்ப சுற்றுலாதான்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2127🥰  

உறக்கத்திலிருந்து விடுபட்டால் அது விழிப்பு. வீழ்ந்தவன் எழுந்து வீருநடை போட்டால் அது தன்னம்பிக்கை. தோல்வியின் தொடர் ஓட்டத்தின் முடிவுதான் வெற்றி. அதுபோல் வாழ்க்கை பயணத்தின் பிரிதிபலிப்புத்தான் நம் அனுபவம்.  எனவே, வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தால் நம் வாழ்க்கைப் பயணமும் ஒரு இன்பச் சுற்றுலாதான்.🙏

Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, February 27, 2024

#Victory King: கெளரவமும், வெற்றியும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2126🥰

அனைத்திற்கும் பயந்து நடுங்குவது, கடந்த காலத்தைப் பற்றியே பேசி காலத்தை வீணடிப்பது, அளவுக்கு அதிகமாக யோசிப்பது, முயற்சியே செய்யாமல் முடிவை எதிர்பார்ப்பது, அனைத்தும் அறிந்தவன் நான் என்று தனக்குத் தானே புகழ் மாலை சூட்டிக் கொள்வது, இவற்றை நாம் தவிர்த்தால் நம் கௌரவத்தை நாமே காப்பாற்றிக் கொள்வதுடன் வெற்றியும் நம்மை நாடி வரும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: நல்வினையும், தீவினையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2125🥰

நன்மையோ தீமையோ பிறரால்  வருவதில்லை. அவரவர்கள் செய்கிற பாவ புண்ணியத்தால் மட்டுமே வரும். மனிதன் மதி வழியில், மதியோ விதி வழியில், விதியோ கர்மவழியில், அந்தக் கர்மா நம் கையில் அதாவது நாம் இன்று செய்யும் செயல் (கர்மா) தான் நாளை நமக்கு வர இருக்கும் நல்வினை தீவினை உணர்வோமே!  

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, February 24, 2024

#Victory King: நினைவலைகளும், வாழ்க்கையின் போக்கும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2124🥰

வயதான காலத்தில் நம் நினைவுகளை அசைபோடும் போது வாழ்க்கையில் சுவாரஸ்யமான நினைவுகள் இருந்தால்தான் சுகம். எனவே நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழ்ந்தால்தான் அது நம் இறுதி கால நினைவலைகளுக்கு வித்திடும். நம் நிகழ்கால நற்செயல்கள்தான் வயதான காலத்தின் நம் தனிமைக்கு கிடைக்கப் போகும் ஊக்க சக்தி!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, February 23, 2024

#Victory King: நம் வெற்றி நம் நம்பிக்கையில்தான்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2123🥰

நாம் ஒவ்வொருவரும் சுவைக்கத்துடிக்கும் ஒரு மாயக்கனிதான் வெற்றி.நாம் அதை எட்டிப்பறிக்க முயலும் போது நம்மிடமிருந்து தட்டிப் பறிக்கும் நிலைகூட வர ஏதுவாகும்.அந்த சமயத்தில் நம் தன்னம்பிக்கையும் விடாமுயற்யும்தான்  அந்த தடைகளை உடைத்தெறியும் சூலாயுதமாக அமைந்து நம் வெற்றிக்கு வழி வகுக்கும். நம் வெற்றி நம் நம்பிக்கையில்தான். உணர்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, February 19, 2024

#Victory King: வாழ்க்கைக்கான கூகுள் மேப்!

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2122🥰

நம் வாழ்க்கை பயணத்திற்கு "Google map" கிடையாது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று கூட புரியாத ஒரு பயணமாகும். பலதரப்பட்ட முகங்களை சந்திக்கும் நிலையும் உண்டு. வெற்றிகளும் நம்மை வரவேற்கலாம். தோல்விகளும் நம்மை துரத்தி அடிக்கலாம். எதற்கும் துவளாமல் துணிந்து மனோதிடத்துடன் அனைத்தையும் எதிர்கொண்டால் மட்டுமே நம் பயணம் இனிதே முடியும். "துணிவு மனோதிடம் விடாமுயற்ச்சி" இதுதான் "Google map"

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, February 16, 2024

#Victory King: பெற்றோர் பாசம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2121🥰

நாம் நம் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்கள் முகம் பார்த்தும் கண் பார்த்தும் அன்புடனும் பாசத்துடனும் பேசுவதும் அவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து குடும்ப சூழ்நிலையில் நம்முடன் பகிர வைப்பதும் தான் நாம் பெற்றோர்களிடம் எதுகுறித்தும் எந்த சூழ்நிலையிலும் பயமின்றி பேசலாம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உருவாகி தன்னிச்சையாக செயல்படாமல் பெற்றோர்களுடன் இணக்கமான பாசிட்டிவான உறவை மேம்படுத்தும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, February 13, 2024

#Victory King: பொய்யை வெல்லும் மெய்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2120🥰

எப்படி உதிர்ந்த மலர்கள் மீண்டும் செடியில் ஒட்டாதோ, கடந்த காலங்கள் திரும்பாதோ,உடலைவிட்டு பிரிந்த ஆவி திரும்பாதோ அதுபோல் பொய்யும் மெய்யை வெல்ல முடியாது. பொய் ஒரு Slow Poison. வருங்காலத்தில் அது நம்மை அழித்துவிடும். உண்மை ஒன்றே நிலைத்து நின்று நம்மை காப்பாற்றும் என்பது நியதி.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, February 10, 2024

#Victory King: தவறுகளும், தண்டனையும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2119🥰

அனைத்து தவறுகளுக்கும்மன்னிப்பு உண்டு. ஆனால் நாம் மற்றவர்களுக்கு செய்யும் துரோகத்திற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. துரோகம் ஒரு கொலைக்கு சமம். அது ஒரு பஞ்சமா பாதகம்.கடைசிகாலத்தில் இவர்கள் உதவிக்கு துணை இல்லாமல் உடல் செயல் இழந்து தனக்கு தானே அணு அணுவாக சித்திரவதை அனுபவிப்பதிலிருந்து தப்பவே முடியாது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, January 13, 2024

#Victory King: போகிப் பண்டிகை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2118🥰

போகிப் பண்டிகை அன்று ஏதாவது பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என பிளாஸ்டிக் போன்ற இயற்கையை மாசுபடுத்தும் பொருட்களை எரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை விடுத்து நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் குரோதங்கள் போன்ற மாசை களைந்தெடுத்து நம் மனதை தூய்மைப்படுத்தி நாளை தை முதல் தேதி உத்திராயண புண்ணிய காலத்தில் சூரிய பகவான் தன் பயணத்தை வடக்கு முகமாக பயணிக்க துவங்கி நமக்கெல்லாம் அருள்பாலிக்க வரும்சூரிய பகவானை வணங்கி வரவேற்க நம்மை ஆயத்தம் செய்து கொள்ளும் நாள் தான் போகிப் பண்டிகை.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, January 12, 2024

#Victory King: எதிர்பார்ப்பு என்பது?

  🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2117🙏

எதிர்பார்ப்பு ஏமாற்றம்தான் தரும் என்று பொருள் இல்லை. நம் சக்திக்கு மேற்பட்டவற்றை எதிர்பார்ப்பதும், நயவஞ்சகக்காரர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பதும்தான்நமக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். அது நம் அறியாமை.நம் சக்திக்கு உட்பட்டவைகளுக்கு எதிர்பார்ப்பதும், தகுதியானவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதும் பொய்க்காது.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, January 9, 2024

#Victory King: வாழ்க்கை வளம் பெற!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2116🙏

களைகளை களைந்தெடுத்து  வளர்க்கப்படும் பயிர்கள்தான் நல்ல மகசூலை தரும். அதுபோல் உரிமையில்லாத உறவையும், உண்மை இல்லாத அன்பையும், நேர்மையில்லாத நட்பையும் நாம் நம்மிடம் இருந்து விலக்கி விட்டாலே நமக்கு  தன்னம்பிக்கை தழைத்து வளர்ந்து நம் வாழ்க்கை வளம் பெறும்.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, January 6, 2024

#Victory King: உடல் ஆரோக்கியம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2115🙏

நாம் நமக்கு துரோகம் செய்பவர்களை நினைத்து கலங்கும் நேரத்தில் எல்லாம் நமது கடந்த காலங்களில் நாம் செய்த நற்செயல்கள் சாதனைகள் அதனால் பயன் பெற்று மகிழ்ந்தவர்கள் நமக்கு நடந்த இனிய நினைவுகளையும் மானசீகமாக நினைவில் கொண்டு வாழ முயற்சித்தால்  துரோகிகளின் சிந்தனைக்கு இவைகள் ஒரு மாற்று மருந்தாகி நம்மை உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து நம்மை மகிழ்வுடன் வாழவைக்கும்.

🙏victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, January 4, 2024

#Victory King: புண்ணிய தர்மங்கள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2114 🙏

நேர்மையாகவும் மனசாட்சியுடனும்தான் செயல்படுகிறோம் இருப்பினும் நமக்கு மன கஷ்டமே மிஞ்சுகிறது என்றும் கடவுள் கூட நம்மை காப்பாற்றவில்லையே என்றும் ஆதங்கப்பட்டு வேதனை அடையும் நேரத்தில் தான் நாம் செய்த நன்மைகள், புண்ணியம் தர்மங்கள் நான் இருக்கிறேன் என்று நமக்கு கை கொடுத்து நம்மை காப்பாற்றும்.

🙏victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: நல்லவர்களும் வல்லவர்களும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி  2113 🙏

நாம் ஆயிரம் உதவிகள் செய்திருந்தாலும் ஒரே ஒரு முறை  செய்ய இயலாத நிலைமை வரும் பொழுது நம்மைப் புறக்கணிக்கும் உறவுகள் நட்புகள் நம்மை விட்டு விலகும் நிலை  வந்தால் அதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல்நாம் நாமாக இருந்து சுயத்தை இழக்காமல் வாழ பழகிவிட்டால் நல்லவர்கள் நம்மை தானே நாடி வருவார்கள். நமக்கும் பெருமை நம் உள்ளத்திற்கும் குளுமை

🙏victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏