Sunday, October 24, 2021

பாசம்!

Status 2021 (274)

பணம் இன்று வரும் நாளை போகும். பாசம் மட்டும்தான் நிரந்தரமானது. பாசம் என்பது நமக்கு கிடைப்பதற்கரிய விலைமதிப்பில்லா பூர்வீக சொத்து. அதனை அழித்து நம் வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொள்ளாமலும் பாசம் என்ற பெயரில் வேஷம் போடாமலும் உண்மையான பாசத்தோடும் உயரிய சிந்தனையோடும் நாம் வாழ்ந்து பாசத்தின் பெருமையை உணர்த்துவோமே!

 Victory King (VK)

Saturday, October 23, 2021

கொடுத்து வாழ்ந்தால் கோடி புண்ணியம்!

 Status 2021 (273)

கொடுத்து வாழ்ந்தால் கோடி புண்ணியம். கொடுப்பது என்பது பணம் மட்டுமல்ல. நம் இனிமையான வார்த்தைகள் கூட ஒருவருடைய தாகத்தைத் தணிக்கலாம். நம் புன்னகை கூட ஒருவருடைய இதயத்தில் விளக்கேற்றலாம். நம் அன்பானது ஒருவரை மனிதனாக வாழ வைக்கலாம். எனவே நாம் மற்றவர்களை கெடுத்து வாழாமல் நம்மால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்ந்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைத்து வாழப் பழகுவோமே!

Victory King  (VK)

Wednesday, October 20, 2021

சீரிய பெற்றோர்கள்!

 Status 2021 (272)

தூய்மையான - அன்பு

போலியற்ற - அக்கறை

நேர்மையான - வழிகாட்டல்

நியாயமான - சிந்தனை

நேசிக்கத்தக்க - உபசரிப்பு

மாறுதலில்லா - நம்பிக்கை

காயங்களற்ற - வார்தை

கம்பீரமான - அறிவுரை

கலங்கமில்லா - சிரிப்பு

உண்மையான - அழுகை என

அத்தனை குண நலன்களுடனும்

தோழிக்கு தோழியாய்

தோழனுக்கு தோழனாய்

தோள் கொடுக்கும் பண்புகளுடன் பெற்றோர் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்தான் சிறந்த பாக்கியசாலி. பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகள் வாழ்க்கை சிறக்க வாழ்ந்து காட்டுவோமே! 

Victory King  (VK)

Sunday, October 17, 2021

பொறுமையே பெருமை!

Status 2021 (271)

நாம் எடுக்கும் முடிவு சரியா தவறா என்று நமக்கு தடுமாற்றம் வரும் பொழுது சற்று பொறுமையாக இருந்து அதனை சரி செய்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது உறுதியானது. வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பொறுமைதான் என்பதை உணர்ந்து நம் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவோமே!

 Victory King  (VK)

Saturday, October 16, 2021

மனிதாபிமானம்!

  Status 2021 (270)

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட மனிதாபிமானம்  இருக்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த பல மனிதர்களுக்கு மனிதாபிமானமே இல்லாமல் நம் மீது நம்பிக்கை வைத்தவர்களை கூட ஏமாற்றி துரோகம் செய்து அதையே சாமர்த்தியம் என்று நினைத்து தம் வாழ்க்கையை தானே அழித்துக் கொள்கிறார்கள். எனவே தன் வினை தன்னைச் சுடும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு நாம் வாழ்க்கையில் நன்மையே செய்து விநாயகர் அருளையும் சரஸ்வதி கடாக்‌ஷத்தையும் முழுமையாகப் பெற்று  நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, October 7, 2021

தவறுகளும் பிராயச்சித்தமும்!

 Status 2021 (269)

வாழும் காலத்தே செய்த தவறுகளை உணர்ந்து அதற்கான பிராயச்சித்தம் தேடிக்கொண்டுவிட வேண்டும். இல்லை என்றால்  கடைசி காலத்தில் உடலைக்கொல்லும் வலிகளுடன், நாம் செய்த தவறுகளும் சேர்ந்துகொண்டு நம் மனதை பல மடங்குகளாகக் கொன்றெடுக்கும். நம் மனசாட்சி மனசாட்சியே (?!) இல்லாமல் வார்த்தைகளால் குதறித் தள்ளும். தப்பிக்கவே முடியாது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. உடல் வலிக்கு மருந்து சாப்பிட்டு தப்பிக்கலாம். ஆனால் மனவலிக்கு பிராயச்சித்தம் ஒன்றே மருந்து. அதை வாழும் காலத்தே செய்துவிடுவோமே!

Victory King (VK) 






Tuesday, October 5, 2021

தலைமுறை இடைவெளி!

Status 2021 (268)

‘தலைமுறை இடைவெளி இருக்கக் கூடாது’ என பிள்ளைகளை தங்கள் நண்பர்களைப்போல நடத்துவதில் தவறில்லை. ஆனால் எந்த இடத்தில் நண்பர்களைப் போல பழக வேண்டும் எனவும், எந்த இடத்தில் பெற்றோராக கண்டிப்புடன் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் கவனம் வேண்டும். இந்த தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவு, நட்பு, தன்னார்வத் தொண்டாற்றும் மனப்பாங்கு போன்றவை முந்தைய தலைமுறையினருக்கு  தானாகவே சென்றடைந்துவிடுகிறது. ஆனால், முந்தைய தலைமுறையினரின் நல்ல பழக்க வழக்கங்கள் அடுத்தத்தலைமுறையினருக்கு முழுமையாக சென்றடைவதில்லை. அவை முழுமையாகச் சென்றடையும்போதுதான் தலைமுறை இடைவெளியின் தாக்கம் குறையும். இடைவெளியை அதிகரிப்பதும் குறைப்பதும் இல்லாமல் செய்வதும் நம் கையில்தான். உணர்வோமே!

Victory King (VK) 



Sunday, October 3, 2021

நியாயப்படுத்தப்படும் தவறுகள்!

Status 2021 (267)

தெரிந்தே ஒருவர் தவறு செய்வதும் அந்த தவறையே நியாயப்படுத்துவதும் தவறை உணர மறுப்பதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசி ஏமாற்றுவதும் செயல்படுவதும் அதே நியாயம் என்று வாதாடுவதுமான நேர்மையற்ற வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்க்கை நாசமாகிவிடும் நிலையில் இருந்து தப்பவே முடியாது. எனவே நாம் எந்நிலையிலும் நேர்மை தவறாது வாழ்ந்து நம் வாழ்க்கையில் வளம் வருவோமே!

Victory King (VK)

Saturday, October 2, 2021

குறிக்கோள் வைப்போம்!

  Status 2021 (266)

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். நம்முடைய குறிக்கோள்தான் நமக்கு சாதனைகள் பல புரிய வைக்கத் தேவையான உந்துதலைக் கொடுக்கும். நமக்கான குறிக்கோள் நம்மை பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்ய வைத்து நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணங்களை பரவவிடும். நேர்மறை எண்ணங்கள்தான் நாம் நேர்வழியில் செல்ல உந்து விசையாக அமையும். நம் வழி நேர்வழி என்பதை மனதில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!

 Victory King (VK)

Friday, October 1, 2021

தானத்தில் சிறந்த தானம்!

 Status 2021 (265)

நீங்கள் கற்கும் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அதுவே நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கு நீங்கள் செலுத்தும் ஆகச் சிறந்த மரியாதை. கற்றுக்கொள்வதைவிட கற்பிக்கும்போது பல மடங்கு அறிவாற்றல் உங்களுக்குள் வளரும். பணமாகவும் பொருளாகவும் கொடுக்கும் தானத்தைப் போலவே நாம் கற்றுக்கொண்டதனால் நாம் பெற்ற பயனை மற்றவர்களும் பயன் அடையச் செய்ய நாம் முயல்வதும் ஒருவகை தானமே! 

 Victory King (VK)

Thursday, September 30, 2021

துரோகத்தின் கூலி!

 Status 2021 (264)

பாம்பு தன் தோலை எவ்வளவு தடவை உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான். அதுபோல் துரோகிகள் எவ்வளவு நல்லவன் போல் நடித்தாலும் துரோகி துரோகி தான். நாம் வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான் துரோகிகளை இனம் கொள்ள முடிகிறது. துரோகத்தால் பலர் வீழ்ந்திருக்கலாம். ஆனால் துரோகித்தவர் ஒருவர்கூட நன்றாக வாழ்ந்ததே சரித்திரம் இல்லை. எனவே நாம் துரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாம் அடுத்தவரை ஏமாற்றி துரோகம் செய்ய முயலக்கூடாது. நேர்மைக்கு என்றுமே மரணம் இல்லை என்பதை உணர்ந்து நேர் வழியில் நம் வாழ்வை கடந்து செல்வோமே!

 Victory King (VK)

Wednesday, September 29, 2021

உதவியும் சேவையும்!

 Status 2021 (263)

அத்தியாவசியமான உதவிகளை தேவைக்கு ஏற்ப சூழல் அறிந்து செய்வதே சேவை எனப்படும். பிறருக்காக உதவி செய்யும்போது அதில் எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்தால் அது சிறப்பு பெறும். எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்காக செய்யப்படும் உதவிகளை ஆத்ம திருப்த்தியுடன் செய்யும்போது நம் உணர்வு நரம்புகள் உத்வேகத்துடன் செயல்படும்.   நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி நம் வாழ்வை செம்மைப்படுத்தும். எனவே, நேர்மறை எண்ணங்கள் வளர நம் மனதைப் பக்குவப்படுத்தி வாழ்வோமே! 

Victory King  (VK)



Tuesday, September 28, 2021

சுயநலக் கேடு!

 Status 2021 (262)

நான் என்ற ஆணவம் பேராசையால் அடுத்தவனிடம் காட்டும் பொறாமை, சுயநலத்தால் அடுத்தவன் பொருளை அபகரித்து சுகபோகங்களை அனுபவிக்கும் மனோபாவம், தாம் யோக்கியன் போல் மற்றவர்களுக்கு செய்யும் உபதேசம், மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து அடுத்தவர்களை அழிக்கும் அராஜகம் இவைகள் அனைத்தும் நம் வாழ்க்கையையும் நம் சந்ததியினருக்கும் விடாது துரத்தி அழைக்கும் காரணிகள். இப்படிப்பட்ட  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கூற வாய்ப்பு கொடுக்காமல் வாழ பழகுவோமே!

Victory King  (VK)

Monday, September 27, 2021

கெடுவான் கேடு நினைப்பான்!

Status 2021 (261)

நமக்கு அரிதாய் கிடைத்த ஆறாவது அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திப் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் நம்மையும் நம் சுற்றத்தையும் மேம்படுத்தி வாழ்வதை விடுத்து அதை எதிர்மறையாகப் பயன்படுத்தி அடுத்தவனை அழித்தும் கேடு செய்வதையே தொழிலாகக் கொள்வதுமாக வாழ்ந்தால் அது நம் தலையிலேயே நாம் கொள்ளி வைத்துக்கொண்டு அழிவதற்கு சமம். இயற்கையை அழித்தோம்,  நீர் நிலைகளை பராமரிக்கத் தவறினோம், விண்ணை முட்டும்  அடுக்கு மாடிகளைக் கட்டி நிலத்தடி நீரை முழுவதுமாக உறுஞ்சினோம். அதன் விளைவுதான் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீரழிவுகள். அதுபோல்தான் நம் வாழ்வில் கேடு நினைத்தால் அழிவுதான் பிரதிபலன் என்பதை உணர்ந்து மனிதனாக வாழ முயல்வோமே!

Victory King (VK)

Sunday, September 26, 2021

இயற்கையும் இறைசக்தியும்!

Status 2021 (260)

நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும். இது கண்களுக்குப் புலப்படாத சக்தி. நம்முடைய  முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.  இது கண்களுக்கு புலப்படும் சக்தி. இயற்கையையும் இறைவனையும் மதிப்போம். நம் தேக நலத்தையும் மன நலத்தையும் காப்போம்!

Victory King (VK)

Saturday, September 25, 2021

எதிர்பார்ப்புகள்!

Status 2021 (259)

நாம் எதிர்பார்த்தது கிடைக்காவகடில் அதில் நாம் அதி தீவிரம் காண்பிக்கும் பொழுது நம் மனதில் ஒரு ஏக்கம் வரும். அதனை நாம் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும்ஏக்கத்தின் உச்சகட்டம் நமது உணர்ச்சி நரம்புகளை பாதித்து நம் எதார்த்த நிலையை மாற்றி நம் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை மனதார ஏற்றுக்கொண்டு வாழ்வோமே யானால் ஏக்கம் நம்மை அண்டவே அண்டாது. எனவே நம் மனதில் ஏக்கத்திற்கு இடம் கொடுக்காமல் நலமுடன் வாழ்ந்து மகிழ்வோமே!

Victory King (VK)

Friday, September 24, 2021

தற்புகழ்ச்சி!

 Status 2021 (258)

நாம் நல்லவன் என்பதை மற்றவர்கள் கூறி அதனை நாம் கேட்டு ஆத்ம திருப்தி அடைய வேண்டும். அதை விடுத்து நான் நல்லவன் நான் நல்லவன் என்று நம்மை நாமே சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு தற்புகழ்ச்சி அடைவதைப் போல ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. அதைவிட கேவலம் நாம் நல்லவன் என்று காட்டிக்கொள்ள மற்றவர்களை தீயவனாக சித்தரித்து நம்மை நாமே பெருமைப்பட்டுக் கொள்வது. இத்தகையோர் அவர்கள் உண்மை வெளிப்படும் பொழுது சென்றவிடமெல்லாம் மானங்கெட்டு மதிகெட்டு தம் நிலை கெட்டுப் போவதுதான் மிஞ்சும். எனவே நம் நிலையை உணர்ந்து நடந்து கொண்டால் நமக்கு உண்டு நல்வாழ்வு!

Victory King (VK)

Thursday, September 23, 2021

கலிகாலத்தின் நிலை!

 Status 2021 (257)

கெட்டவர்கள் காலம் முழுவதும் எந்தவித கஷ்டமும் இல்லமால் அடுத்தவர்களை அழித்துக்கொண்டும், தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டும் சுகமாகதான் சாகும் வரை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பண்போடு வாழ்ந்து நற்செயல்களையே செய்து பல கஷ்டங்களுக்கு இடையேதான் காலம் முழுவதும் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதுதான் கலிகாலத்தின் நிலை. எப்படி இருப்பினும் நாம் செய்த நற்பலன்களின் பலன் ஏதேனும் ஒரு ரூபத்தில் ஏதோ நிலையில் நமக்கு வந்தடையும் என்ற ஆத்ம திருப்தியில் யார் எப்படி இருப்பினும் நாம் நல்லவர்களாகவே இருப்போமே!  

Victory King (VK)

Wednesday, September 22, 2021

பெற்றோர் கடமை!

Status 2021 (256)

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. அதனை ரசித்து உணர்ந்து வாழ வேண்டுமென்றால் நம் பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும். அந்த அளவிற்கு பெற்றோர்கள் பண்போடு வாழ்ந்து காட்டி நம் சந்ததியினரை வழிநடத்தினால் நம் தலைமுறைகள் வாழ்வு சிறந்து விளங்கும். எனவே பெற்றோர்களாகிய நாம் அதனை நன்குணர்ந்து வாழ்ந்து காட்டுவோமே!

Victory King (VK)

Tuesday, September 21, 2021

பொதுநலத்தில் சுயநலனும்!

Status 2021 (255)

எல்லோரும் போகிறார்களே என்று நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றால் நம் பாதை நமக்கு புலப்படாது. நம் பாதையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம் திறமையை நாம்தான் கண்டறிந்து நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாம்தான் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. தன்னம்பிக்கையோடு  நாம் செயல்பட்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டால்தான் அது மற்றவர்களோடு நாம் இணக்கமாக செயல்பட முடியும். தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உணர்ந்து வாழ்வோமே! 

Victory King (VK)

Monday, September 20, 2021

நாம் மனிதன் தானா உணர்வோமே!

 Status 2021 (254)

நம் மகிழ்ச்சி நம் எண்ணத்திலும் நம் வார்த்தைகளிலும் நாம் செய்யும் நல்லிணக்கத்திலும் தான் இருக்கிறது. நம் எதிர்காலமும் நாம் இன்று செய்யும் செயலைத்தான் சார்ந்திருக்கிறது. செய்வதற்கான பலன் என்னவாக வர போகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் எதுவும் செய்யாவிடில் நமக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாம் உணர வேண்டும். நாம் மனிதனாய் பிறந்தால் மட்டும் மனிதனல்ல. மனிதாபிமானத்துடன் நாம் வாழ்ந்தால் மட்டுமே நாம் மனிதன் என்பதை மனதில்கொண்டு வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, September 18, 2021

தனித்துவத்துடன் செயல்படுவோமே!

  Status 2021 (252)

ஊரோடு ஒத்துவாழ வேண்டியதுதான். ஆனாலும் நமக்கென சில கொள்கைகளை வைத்துக்கொள்வதன் மூலம் தனித்துவத்துடன் செயல்பட முடியும். ஒரு தவறை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக அது சரியென்று ஆகிவிடாது. அதையே நாம் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. தனித்துவத்துடன் செயல்படும்போது மனநிறைவும் ஆத்மதிருப்தியும் உண்டாகி தன்னம்பிக்கை உணர்வு மேலோங்கும்.

Victory King (VK) 

Friday, September 17, 2021

வஞ்சப் புகழ்ச்சி!

 Status 2021 (251)

பிறரை அதீதமாகப் புகழ்ந்து அவர்களை தன்வயப்படுத்தி அதன் மூலம் தன் ஆதாயத்தைத் தேடிப் பிழைப்பு நடத்துபவர்கள் பலர். புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. இதுபோல் வஞ்சப் புகழ்ச்சி செய்து அவர்களை தமக்கு அடிமையாக்கி பிழைப்பு நடத்துவது போன்று ஒரு மோசமான செயல் வேறெதுமில்லை. புகழ்ச்சிக்கு அடிமை ஆகுபவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற ஆசாமிகள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே எந்த காலகட்டத்திலும்  நம்மைப் பிறர் புகழும்போது அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு மகிழ்ந்து அத்துடன் அதை முடித்துக்கொண்டால் இதுபோன்ற ஆசாமிகள் நம்மை அணுக அச்சமுறுவர். சிந்தித்து செயல்படுவோமே!

Victory King (VK) 

Thursday, September 16, 2021

‘அடக்கம் அமரருள் உய்க்கும்'

Status 2021 (250)

ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் அடிமை என்று அர்த்தமில்லை. அமைதியான குணம் என்பது ஒரு பண்பு. அமைதி மனத்தூய்மையைக் கொடுக்கும். மன அமைதி இருந்தால்தான் நம் செயல்களில் தெளிவு இருக்கும். அமைதிக்கு அடையாளம் அடக்கம். மனதில் தெளிவு இல்லை என்றால் அது தரிகெட்டு அவிழ்த்துவிட்டக் காளை போல் அலைபாய்ந்து தாறுமாறாய் சிந்திக்கத் தூண்டி மற்றவர்களை பதம் பார்க்க முற்படும். எனவே, அமைதியாக இருந்து அடக்கத்தைக் கடைபிடித்து மற்றவர்களை சீண்டாமலும் நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டும் வாழ முயல்வோமே!  ‘அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கைப் போற்றுவோமே! 

Victory King (VK) 


Wednesday, September 15, 2021

நன்றி மறப்பது நன்றன்று!

Status 2021 (249)

தேவையானவர்களுக்கு தேவைப்படும்போது தக்க சமயத்தில் உதவி செய்வதே நற்பண்பு. பணமும் பொருளும் கொடுத்து உதவுவது மட்டுமல்ல, மனம் தளர்ந்திருக்கும்போது நேர்மறையாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் உதவிதான்.  உதவி என்பது செயல் மட்டுமல்ல, உதவுபவருக்கும் உதவி செய்பவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைக் கொடுக்கும் மனம் ஒத்த உணர்வு. நமக்கு உதவி செய்பவருக்கு எக்காலத்தும் நாம் மனதாலும் தீங்கு நினைக்காமலும் நன்றியை மறக்காமலும் இருந்தாலே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் கொள்வோமே! 

Victory King (VK) 


Tuesday, September 14, 2021

அதீத புகழ்ச்சி அழிவுக்கு வித்தாகும்!

Status 2021 (248)

பாராட்டு என்பது ஒருவரது சிறப்பை அங்கீகாரம் செய்வதற்கு பயன்படுத்தும் யுக்தி. பிறரது புகழ்ச்சியை நம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அதை ஓர் உற்சாக டானிக்போல எடுத்துக்கொண்டுவிட்டால் சிறப்பு. நம் மீது செலுத்தப்படும் புகழ்ச்சி அளவுக்கு மீறும்போது அதுவே போதையாகிவிடும். நம்மை அழிவுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வலிமையானது அதீத புகழ்ச்சி. எனவே, நமக்குக் கிடைக்கும் புகழ்ச்சியை மகிழ்ச்சியோடு ஏற்று அவ்வப்பொழுது நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால் நமக்கு மமதை ஏறாது. வாழ்க்கையை  நிலையாக வாழ ஏதுவாகும். கடைப்பிடிப்போமே! 

Victory King (VK)

Monday, September 13, 2021

சோம்பித் திரியேல்!

Status 2021 (247)

நாம் எந்த ஒரு பொருளையும் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாது இருந்தால் அது நமக்குப் பயனற்றுதான் போகும். அது வீடாக இருக்கலாம், உபயோகப்படுத்தக் கூடிய எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அதுபோல்தான் நம் உடல் உறுப்புகளும். நம் உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து உடல் உறுப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்து எல்லாவற்றையுமே இயக்கத்தில் வைத்திருக்காவிட்டால் நாமும் ஒரு ஜடம்தான். எனவே,  ‘சோம்பித் திரியேல்’ என்ற ஒளவையாரின் வாக்கின்படி நாம் சோம்பலைத் தவிர்த்தாலே மனதும் புத்துணர்ச்சியுடன் இயங்கும். உடல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படும். வாழ்க்கையை தொய்வில்லாமல் கடத்த ஏதுவாகும் என்பதை உணர்வோமே!

Victory King (VK)

Sunday, September 12, 2021

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Status 2021 (246)

நம் பிள்ளைகளிடம் நமக்கு பாசம், பரிவு அதிகமாக இருக்கலாம். அவர்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கிக்கொடுத்து மகிழ்விக்கலாம். ஆனால், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து பண்போடு வாழக் கற்றுக் கொடுத்து வளர்க்காமல் தன் பிள்ளை தனக்கு வேண்டியதை தானே தேர்ந்தெடுக்கும் திறமை அவர்களுக்குண்டு என அவர்கள் மீது பாசத்தைக் கொட்டி அவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல் தக்க சமயத்தில் தகுந்த அறிவுரைகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது சந்தேகமே இல்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனவே, அவர்களுக்கான பொறுப்புணர்வுக்கு அவர்களின் சிறுவயது முதலே நாம்தான்  முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லையேல் தும்பை விட்டு வாலைப் பிடித்த விஷயமாகத்தான் இருக்கும். சிந்திப்போமே!

Victory King (VK)

Saturday, September 11, 2021

அகமும் புறமும்!

 Status 2021 (245)

அகம் என்பது நமது உள்மனது. அதுவே ஆழ்மனது. புறம் என்பது நம் உடல் உறுப்புகள். அகத்தின் கட்டளைபடியே புறம் செயல்படும். எனவே, அகம் மகிழ்வுடன் இருந்தால்தான் புறத்தால் நாம் செய்யும் செயல்பாடுகளும் உணர்வுபூர்வமாகவும் உற்சாகத்துடனும் இயங்கும். அகம் மகிழ்வுடன் இருக்க நம் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும்போது நம் முகத்தில் மகிழ்ச்சி பொலிவுடன் தெரிவதுடன் நம் உற்சாக நரம்புகள் உத்வேகத்துடன் செயல்பட்டு செயலில் நேர்த்தியும் அழகும் வெளிப்படும். எனவே, அகமும் புறமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உள்ளுணர்வுகள். எனவே, அகத்தை மகிழ வைத்து நம் செயலை செம்மைப்படுத்தி ஆத்மசாந்தியுடன் வாழ முயல்வோமே! 

 Victory King (VK)

Thursday, September 9, 2021

உண்மையே உயர்வளிக்கும்!

Status 2021 (243)

போலி என்பது உண்மைக்கு எதிரானது. நடக்காத ஒரு விஷயத்தை உண்மைப்போல நம்பச் செய்வதுதான் போலித்தனம். பிறரை ஏமாற்றுவதற்கான முயற்சியின் முதல்படியே போலியாக நடித்து நம்ப வைப்பதாகும். போலியாக நடித்து வாழ்வது மனிதாபிமானமே இல்லாத  நேர்மையற்ற பொய்யான வாழ்க்கைக்கு வித்திடும். பொய்யாக போலியாக நடிப்பவர்கள் வாழ்க்கை பொய்யில் முடிந்து அந்தப் பொய்யே அவர்களை வீழ்த்திவிடும். உண்மையே நமக்கு உயர்வளிக்கும், உயிர்காக்கும். உணர்ந்து நடந்தால் நம் வாழ்க்கையே வசந்தம்தான்.   

Victory King (VK)

Wednesday, September 8, 2021

தோன்றின் புகழொடு தோன்றுக!

Status 2021 (242)

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் –  நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை. எனவே தன்னம்பிக்கையை வளர்ப்போம். நம் திறமையை நிலைநாட்டுவோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். 'தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவன் வாக்கை மெய்ப்பித்து வாழ்வோமே!

Victory King (VK)



Tuesday, September 7, 2021

இடவாகுபெயர்!

 Status 2021 (241)

பொதுவாக மற்றவர்கள் நம்மைப் பார்த்து  ‘எப்படி இருக்கீங்க, வீடு ஆஃபீஸ் எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்பது வழக்கம். அவர் கேட்பது ஆஃபீஸ் கட்டிடத்தைப் பற்றியோ, வீட்டின் அமைப்பைப் பற்றியோ அல்ல.  இது ஒரு இடவாகுபெயர். வீடு என்பது அப்பா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டு, அன்பினாலும் பாசத்தினாலும் கட்டுண்ட ஓர் ஆலயமாகக் கருதினால் ஒருவருக்கொருவர் எதிர்மறை எண்ணங்கள் விலகி அனைவரையும் அன்போடு அரவணைக்கும் பக்குவம் கிடைக்கும். அதுபோல் அலுவலகம் என்பது சக ஊழியர்கள், நண்பர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர்களால் சூழப்பட்டு இதையும் ஓர் ஆலயமாகவே நாம் கருதினால் உழைப்பில் சலிப்பும் மாறுபட்ட கருத்துக்களும் நம்மை வந்து அடையாது. பண்போடு நம் பணியை செய்ய வழிவகுக்கும்.  இவ்வாறாக நம் மனதைப் பக்குவப்படுத்த முயற்சிப்போமே! 

Victory King (VK)


Monday, September 6, 2021

பண்புக்கு இலக்கணம்!

Status 2021 (241)

நம் மதிப்பையும் பண்பையும் மற்றவர்கள் பார்த்து அதன் பெருமையை அவர்கள் வாயார வாழ்த்த வேண்டும். அதுதான் நம் மதிப்புக்கும் செயலுக்கும் பண்புக்கும் கிடைக்கும் உரிய அந்தஸ்த்து. அதை விடுத்து   தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொண்டு தன் செயலையே பெருமையாக நினைப்பதுடன்  மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்குடன் வாழ்வது நமக்கான மரியாதையை நாமே குறைத்துக்கொள்வதோடு ஒரு நிலையில் மற்றவர்கள் நம்மைப் பற்றி இகழ்ந்துப் பேசும் அழிவின் விளிப்புக்கே கொண்டு சென்றுவிடும். எனவே, நம் சுய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் சுயதம்பட்டம் அடிப்பதை விடுத்து பண்போடு வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Sunday, September 5, 2021

பூத்துக் குலுங்கும் மலர்களைப் போல் வாழ்வோமே!

 Status 2021 (240)

நாம் பூத்துக் குலுங்கினாலே நம்மைப் பறித்துவிடுவார்கள் என்று மலர்கள் ஒரு நாளும் பூக்காமல் இருந்ததில்லை. அதுபோல மற்றவர்கள் எப்படி இருந்தாலும் என்ன நினைத்தாலும் நாம் பச்சோந்திகளை போல அவர்களுக்காக வேஷம் போடாமல் நம் நிலையை மாற்றிக்கொள்ளாமல் நாம் நாமாகவே இருந்து நம் சுயத்தை காப்பாற்றி பண்புடன் வாழ்வோமே!

 Victory King (VK)

Saturday, September 4, 2021

அளவோடு பழகுவோம்!

 Status 2021 (239)

நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்: மிகவும் நல்லவனாக இருந்து விட்டால் நம்மை நடிகன் என்று சொல்வார்கள். மிகவும் அதிகமாக அன்போடு பழகி விட்டால் ஒரு நிலையில் நம்மை அடிமையாக்கி விடுவார்கள். மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டாலோ நம்மை பைத்தியம் ஆக்கும் வரை விடமாட்டார்கள். அதிகம் கோபப்பட்டாலோ கோமாளியாக்கி வேடிக்கை பார்ப்பார்கள். எல்லோரையும் நம்பி விட்டாலோ நம்மை ஏமாற்ற பலர் காத்திருப்பார்கள். எனவே நம் குணநலன்களை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் அளவோடு வெளிப்படுத்தி வாழ்ந்தால் மட்டுமே உலகம் நம்மை மதிக்கும். உணர்ந்து  செயல்பட்டால் உண்டு நல்வாழ்வு!

Victory King (VK)

Friday, September 3, 2021

பொறுமையே பெருமை!

 Status 2021 (238)

ஒருவருக்கு பொறுமை என்பது மிகவும் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய ஒரு உணர்வு. நாம் எந்த செயலை எடுத்துக்கொண்டாலும் நாம் முயற்சி செய்யலாமே ஒழிய அந்த செயல் எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்பொழுது தான் நடக்கும் என்பது எதார்த்தமான ஒரு உண்மை. நாம் நம் அவசரத்தை அதில் காட்டினால் அந்த செயல் ஏடாகூடமாக தான் முடியும் என்பதோடு நமது நிம்மதியையும் கெடுத்து மன உளைச்சலை தான் கொடுக்குமே ஒழிய செயலின் வெற்றியை நாம் காண்பது கடினம். எனவே பொறுமை கடலினும் பெரிது என்பதை மனதில் கொண்டு அனைத்து விஷயங்களிலும் நாம் பொறுமையாக இருந்து வெற்றி அடைய முயல்வோமே!

Victory King ( VK)

Thursday, September 2, 2021

ஆறாம் அறிவு!

Status 2021 (237)

ஒருவரால் நமக்குப் பிரச்சனை என்றால் சம்மந்தப்பட்டவரிடம் பேசி தீர்வு காண முடியும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் சிறிதாவது மனிதாபிமானத்துடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மனிதாபிமானமே இல்லாமல் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, துரோகம் செய்வது,  அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைப்பது போன்ற தகாத செயல்களை தெரிந்தே விடாது செய்துகொண்டிருப்பவர்களிடம் எப்படி பண்போடும் அன்போடும் பேசினாலும் அவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தெரிவதற்கு வாய்ப்பில்லை.  அவர்களாக அவர்கள் செய்யும் பாவத்துக்கும், துரோகத்துக்கும் தண்டனையை அனுபவிக்கும்பொழுதாவது உணர்வார்களோ என்னவோ? அவர்களுக்கு ஆறாவது அறிவு எதற்கு என்பதுதான் கேள்விக்குறி! சிந்திப்போமே!

Victory King (VK)


Wednesday, September 1, 2021

பிரச்சனைகளும் தீர்வுகளும்!

Status 2021 (236)

நமக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அதற்கு தீர்வு காணதான் முனைய வேண்டும். அது சம்மந்தமாக ஊரெல்லாம் பேசி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து,  சம்மந்தப்பட்டவர்களிடம் மட்டுமே பேச வேண்டிய விஷயத்தை மட்டும் பேசி நடந்ததைப் பற்றிக் கிளறி தர்க்கம் செய்வதை தவிர்த்து  நடக்க வேண்டியதை மட்டுமே பேசி அந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நம் பிரச்சனையை சரி செய்வதற்கு இதுவே சிறந்த வழியாகும். முயற்சிக்கலாமே! 

Victory King (VK)


Tuesday, August 31, 2021

தன்னம்பிக்கை இருந்தால் நாமே நாயகன்தான்!

 Status 2021 (235)

நம் வாழ்வை நிர்ணயிப்பது தன்னம்பிக்கைதான். நமக்கு நம் மீதே நம்பிக்கை இல்லை என்றால் நமது அனைத்து செயல்களிலும் சலிப்புத்தன்மைதான் ஏற்படும். சலிப்புத்தன்மை ஏற்படும்போது அந்த செயல்களில் உள்ள ஆபத்துகள் மட்டும்தான் நமக்குப் புலப்படும். அதனால் நாம் எடுத்த செயலில் வெற்றி காண முடிவதில்லை. நம் சலிப்புத்தன்மையை விரட்ட வேண்டும் என்றால் நம்மிடம் இருந்து நம் மீது உள்ள நம்பிக்கையை நாம் வலுப்படுத்த வேண்டும். நம்பிக்கை வலிமை அடையும்போது விடா முயற்சியும் செயல்களில் ஈடுபாடும் நம்மை வந்து அடைந்து அனைத்து செயல்களும் வெற்றியை நோக்கி பீடு நடைபோடும். முயற்சிப்போமே!

Victory King (VK)

Monday, August 30, 2021

வாழ்க்கைப் பயணம்!

 Status 2021 (234)

நாம் வாழ்க்கையில் அடிப்பட்ட பின்புதான் அனைவரின் உண்மையான முகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையிலாவது நம்மை நாமே புரிந்துகொண்டு நடந்ததைப் பற்றி கவலைப்படாமல் இனிமேலாவது நம் வாழ்க்கையை கூர்ந்து ஆராய்ந்து மன அழுத்தத்தைத் தவிர்த்து வாழ முயல்வோமே!

Victory King (VK)

Sunday, August 29, 2021

வாழ்க்கையின் நிதர்சனம்!

  Status 2021 (233)

நயவஞ்சகமாகவும் பொய்யாகவும் சுயநலத்தோடும் பேசும் பேச்சுக்களும் செயல்களும் ஒரு நாள் நமக்கு எதிராக நம்மையே வந்தடையும். நம்மை இழிவு படுத்தும் வாழ்க்கையை அழித்து விடும் என்று அனைத்து மகான்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருந்தும் எதற்கும் அடங்காமல் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஆணவத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தமக்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர வேண்டும். இந்த உண்மைகளை நாமாவது நன்கு உணர்ந்து நம் வாழ்க்கையை வெல்வோமே!

Victory King (VK)

Saturday, August 28, 2021

பண்புக்கு இலக்கணம்!

Status 2021 (232)

நாம் நம் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல் நல்லது. நற்செயல்களை செய்வது நல்லது. முடியவில்லை என்றால் நற்செயல் செய்பவர்களுக்கு உதவி செய்தாலே நல்லது. ஒருவர் இக்கட்டான நிலையில் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்றுவது மிக மிக நல்லது. ஆனால் ஒன்று. நாம் உதவி செய்துவிட்டு அதையே சுட்டிக் காட்டி அவர்களின் மனதை புண்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது. நல்லது மட்டுமல்ல, அதுதான் பண்பு. அந்த பண்பு மட்டும் நமக்கு இருந்து விட்டால் நம் வாழ்வில் மென்மேலும் முன்னேறி நலமுடன் வாழும் பாக்கியம் நமக்குக் கிடைத்துவிடும். முயற்சிப்போமே!

Victory King (VK)

Friday, August 27, 2021

மனோதிடமே மாமருந்து!

Status 2021 (231)

என்னதான் நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டாலும் சில ஏமாற்றங்களை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த சமயத்தில்தான் நாம் அமைதி காத்து பொறுமையுடன் இருந்து அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வர முயற்சித்து வெற்றி அடைய வேண்டும். அமைதியும் பொறுமையும் மனோதிடமும் இருந்தால் எந்த இக்கட்டான நிலையில் இருந்தும் நாம்  நிச்சயமாக வெளியில் வரமுடியும். முயற்சித்துத்தான் பார்ப்போமே!

Victory King (VK)

Thursday, August 26, 2021

கோபத்தைத் தவிர்ப்போமே!

 Status 2021 (230)

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான். நம்மை தவறாக புரிந்துகொண்டவரைப்  பற்றி நாம் எண்ணி அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் நம் மனசாட்சிப்படி நாம் செய்வது தான் சரி என்று உணர்ந்துவிட்டால் நாம் கோபத்தை தவிர்ப்பது சாத்தியமே. நாம் எண்ணுவதும் செய்வதும் உண்மையிலேயே நியாயமானதாக இருப்பின் நம் மனசாட்சி தான் நமக்கு நீதிபதி. எனவே நாம் கோபத்தை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை காப்போமே!

Victory King (VK)

Wednesday, August 25, 2021

வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால்!

 Status 2021 (230)

நம் இறுதி காலத்தில் என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நிலை ஒவ்வொருவருக்கும் வரும். வாழ்ந்த காலங்களில் நன்மைகளையே செய்தவர்கள் தம் வாழ்வில் தாம் செய்த நற்செயல்களின் பலன்தான் இன்றும் இந்த நிலையிலும் மிகவும் சவுகர்யமாக இருக்கிறோம் என்றும், உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ வாழும் பாக்கியம் இன்றும் கிடைக்கிறது என்று மகிழ்வார். ஆனால் வாழ்வில் தவறுகளையே செய்தவர்கள் தம் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கும்போது  தான் எவ்வளவு துரோகங்களையும் பாவங்களையும் செய்தோமே, அதற்குப் பிராயச்சித்தம் கூட தாம் செய்யும் நிலையில் இல்லையே என்று  வருத்தப்படுவதையும் தம்மை அனைவரும் கேவலமாக பேசுவதை கண் முன்னே காண வேண்டிய நிலை வந்துவிட்டதே என புலம்புவதைவிட வேறொன்றும் செய்ய இயலாது. எனவே, இதை உணர்ந்து நாம் வாழ்வில் நல்லதையே செய்வோம், வாழ்வின் இறுதிவரை இன்பமுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Tuesday, August 24, 2021

ஒப்பீடும் தாக்கமும்!

Status 2021 (229)

சூரியனையும் சந்திரனையும் நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவை அததற்குரிய நேரத்தில் தான் பிரகாசிக்கும்,  மறையும்.  அதோடு மட்டுமில்லாமல் அவற்றின் தன்மையும் முற்றிலும் வெவ்வேறு. சூரியன் தகிக்கும். சந்திரன் குளிர்ச்சி. எனவே, ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் அதன் சிந்தனையிலேயே நம் நேரத்தை வீணாக்கி மன உளைச்சலையும் கொடுத்து நம்மை முடக்கிவிடும். எனவே, நாம் எப்போதும் நம் பாணியிலேயே சிந்தித்து செயல்பட்டு  நாம் நாமாகவே இருந்து வாழ்வில் மகிழ்வோமே!

Victory King (VK)

Monday, August 23, 2021

சிந்தனையும் செயல்பாடும்

 Status 2021 (228)

நாம் எந்தப் பொருளைப் பற்றியாவது  அதிகம் சிந்தித்தால் அது நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசை வளர்ந்துவிடும். அது நமக்குக் கிடைக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கோபம் வந்தால் மனம் தடுமாறுகிறது. மனம் தடுமாறினால் செயல்களில் தடுமாற்றம் அதிகமாகி நம் நிலைப்பாட்டைக் குலைத்து நமது இயல்பான வாழ்க்கையைக் கெடுக்கிறது. ஆகவே, இந்த நிலை நமக்கு வராது இருக்க நாம் எதையும் எதிர்பார்க்கும்போது கிடைத்தால் நல்லது இல்லையேல் அதைப் பற்றிக் கவலைப்படாது மாற்றி சிந்தித்து கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் தத்துவம் என்பதை  நாம் உணர்ந்து மகிழ்வுடன் வாழலாமே!    

Victory King (VK)

Sunday, August 22, 2021

லட்சியம்!

Status 2021 (227)

காலங்கள் மாறினாலும் சரி காட்சிகள் மாறினாலும் சரி எந்த நிலையிலும் நாம் நம் லட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் அதனைவிடாபிடியாக தக்க வைத்து வாழ வேண்டும். நமக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் ஏதோ ஒரு காரண காரியத்தோடு தான் நடக்கிறது என்பதை உணர்ந்து எது நடந்தாலும் நம் லட்சியம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வாழ்வில் முன்னேறி வளமுடனும் நலமுடனும் வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, August 21, 2021

எண்ணத் தூய்மை!

 Status 2021 (226)

அடுத்தவன் வலி அறிந்து வாழ்கிறவன் யாரையும் காயப்படுத்தவும் மாட்டான், யாருடைய கண்ணீருக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான்.

கிருஷ்ண பரமாத்மா

மகா உன்னதமானபோதனை. ஆனால் அடுத்தவனுக்கு வலிக்க வேண்டும் அடுத்தவன் கண்ணீரைக் கண்டு தான் ஆனந்த பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே செயல்படுபவர்களுக்கு இந்த சிந்தனைகள் எல்லாம் எங்கே தோன்றப் போகிறது என்பதோடு இதற்கான பாவங்களின் பலனை அனுபவித்து தான் அழிந்து கொண்டிருக்கும் போதுகூட  அவர்கள் உணரமாட்டார்கள். எனவே இப்படிப்பட்ட தீய மனப்பான்மை நமக்கு வராதிருக்க இறைவனைப் பிரார்த்தித்து நம் மனதை பக்குவப்படுத்தி வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Friday, August 20, 2021

தன்வினை!

Status 2021 (225)

தவறு செய்பவர்கள் தங்களுக்கு பின்பலமாக ஒரு கிரிமினலை வைத்துக்கொண்டுதான் எல்லா அராஜகங்களையும் செய்வார்கள். ஆனால் ஒன்று பாம்பாட்டிக்கு பாம்பால் தான் சாவு என்று சொல்லுவதை போல எந்த கிரிமினல் தவறு செய்வதற்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்களாலேயே தான் அராஜகம் செய்பவர்களுக்கும் அழிவு. அராஜகம் செய்பவர்களின் சந்தோஷம் தற்காலிகமானதே. அடுத்தவரைக் கெடுத்து ஆனந்தப்படுபவர்களின் நிலை அவர்கள் வாழ்க்கையில் எழுந்திருக்க முடியாத வீழ்ச்சி வரும்பொழுதுதான் தெரியும். எனவே நமக்கு ஆள் இருக்கிறது என்று அராஜகத்தில் ஈடுபடாமல் அனைவரையும் அனுசரித்து அரவணைத்து வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிதான்!

Victory King  (VK)

Thursday, August 19, 2021

வாழ்க்கையில் சிறந்ததை சிந்திப்போமே!

 Status 2021 (224)

நம் மனதை  நாம் வெற்றி கொண்டாலே ஆயிரம் பேரை வென்றதற்கு சமம்.  நம் ஆணவம் காணாமல் போக வேண்டும் என்றால் எதுவுமே நமக்கு நிலையில்லை என்பதை உணர்ந்தால் போதும். நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என்றால் நாம் எதை செய்தாலும் மனப்பூர்வமாக திருப்தியாக செய்ய வேண்டும். நிகழ்காலத்தை சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டுவிட்டால் இறந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கவலைப்பட வேண்டிய நிலை வராது. உண்மைக்குதான் எப்போதும் நிலைத்து நிற்கும் சக்தி உண்டு.  இவையெல்லாம் நம் வாழ்க்கையில் கடைபிடித்து விட்டால் உண்மையை அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்து மனநிறைவுடன் வாழ முடியும்.

Victory King (VK)

Wednesday, August 18, 2021

உடல்மொழியோடு நடைபோடுவோம்!

Status 2021 (223)

அதிகம் சிந்தித்தால் குழப்பங்கள்தான் மிகும், அதிகம் பேசினால் அவமானங்கள்தான் மிஞ்சும், அதிகம் மவுனம் சாதித்தால் நம் மதிப்புதான் கெடும். எனவே, பொறுமையாக சிந்தித்து செயல்பட்டு பேச வேண்டியவற்றை பேச வேண்டிய இடத்தில், அளவோடு நன்கு புரியும்படி பேசி, மற்றவர்கள் கூறுவதை உள்வாங்கி அமைதியாக மவுனம் சாதித்து அதற்குரிய பதிலை அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தி நம் வாழ்வை கடந்து செல்லும்போது நமக்கான மதிப்பு நம்மை வந்து அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிந்தித்து  செயல்படுவோமே! 

Victory King (VK)

Tuesday, August 17, 2021

பிராயச்சித்தம்!

 Status 2021 (222)

நாம் பாவம் செய்வதைவிட செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் கூட தேடாமல் புண்ணியம் கிடைத்தால் போதும் என்று இறைவனிடம் பிராத்திப்பதால் எந்தவித பிரயோனமும் இல்லை. யாருக்கும் பயப்படாவிட்டாலும் இறைவனுக்கு மட்டுமாவது பயந்து பாவம் செய்யாமல் இருந்தால் நமக்கு அருள் கிடைப்பது நிச்சயம். தெரியாமல் செய்த பாவத்தைவிட தெரிந்து செய்த பாவங்கள் மேலும் மேலும் நம்மைத் துன்புறுத்திக்கொண்டேதான் இருக்கும். ‘யாருக்குத் தெரியப் போகிறது என்று செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் சாட்சியாக சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள்’ என்கிறது மனுதர்ம சாஸ்த்திரம். இதனை நம்புபவர்கள் திருந்தட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டு அனுபவித்த பிறகாவது உணர்ந்தால் நல்வழி கிடைக்கும். 

Victory King (VK)

Monday, August 16, 2021

குழந்தைகள் எதிர்காலம் சிறக்க!

Status 2021 (221)

குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதைக் காட்டிலும் அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். எந்த அறிவுரைகளையுமே காதினால் கேட்பதைவிட கண்களால் பார்க்கும்போது ஆழப் பதிந்துவிடும். அறிவுரைகளைக் கூறும்போது நம் ‘நா’ நயம் சமயத்தில் அழுத்தத்திலும் குதற்கத்திலும் வருவதற்கு வாய்ப்புண்டு. அது குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவேதான், நாம் வாழ்ந்து காட்டும்போது அதனுடைய பலன் முழுமையாக அவர்களைச் சென்றடையும். நாம் பண்போடும் அன்போடும் குழந்தைகளின் மனதில் ஆழப்பதியும்படி  வாழ்ந்து காட்டி அவர்களது எதிர் காலத்தை சிறப்பாக்க முயல்வோமே! 

Victory King (VK)

Sunday, August 15, 2021

முயல்வோம் முன்னேறுவோம்

 Status 2021 (220)

நம் வாழ்க்கையில் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது அதை நம் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகக் கருதி உறுதியுடன் பற்றிக்கொண்டு நம் லட்சியத்தை சாதிக்க உத்வேகத்துடன் செயல்பட்டு இடையில் போராட்டங்கள் எது வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் முன்னேறி நம் லட்சியத்தில் வெற்றி கண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். விட்டுக் கொடுப்பதும், தட்டிக் கொடுப்பதும் மனம்விட்டுப் பேசி அன்பை பரஸ்பரம் வலுப்படுத்திக் கொள்வதும்தான் நம் முன்னேற்றத்திற்கான வெற்றி படிகளாகும். முயல்வோம் முன்னேறுவோம்!

Victory King. (VK)

Saturday, August 14, 2021

நம் மனசாட்சியே குலதெய்வமாய்!

 Status 2021 (219)

நம் குடும்பத்துக்கு குலதெய்வ வழிபாடு மிக முக்கியம். நாம் குல தெய்வத்தை மறந்தால் குடும்பத்தில் குழப்பங்களையும் இன்னல்களையும் நாம் அனுபவிக்க வேண்டிய நிலைதான் வரும். ஆனால் இதை தகுந்த பரிகாரங்களுடன் சரி செய்துவிடலாம்.  அதுபோல் மனிதன் பயந்து வாழ வேண்டிய முக்கிய தெய்வமான ஒன்று மனசாட்சி. மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்காமல் நாம் செய்கின்ற தீய செயல்களுக்கும் மற்றவர்களுக்கு செய்யும் துரோகங்களுக்கும் பரிகாரம் என்பதே கிடையாது.  அது மனசாட்சி என்ற தெய்வத்துக்கே செய்யும் துரோகமாகும். அந்த பாவம்  நம்மையும் அழித்து நம் குடும்பத்தையும் சந்ததியினரையும்  தலைமுறை தலைமுறையாக துரத்தி பாடம் புகுத்திவிடும். எனவே, நாம் நம் சந்ததியினருக்கு நல்லவற்றை சேர்த்து வைக்காவிட்டாலும் இதுபோன்ற பாவங்களை சேர்த்து வைக்காமல் சந்ததியினரையாவது வாழ விடுவோமே! 

Victory King (VK) 

Friday, August 13, 2021

நேரமும் காலமும்!

Status 2021 (218)

நேரம் பொன் போன்றது. எனவே, நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் மற்றவர்கள் நேரத்தை வீணடிக்காமலும் மற்றவர்கள் நம் நேரத்தை வீணடிக்க இடம் கொடுக்காமலும் நம் நேரத்தை நாமே வீணடித்துக்கொள்ளாமலும் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்கள் வியக்கும் வண்ணம் நம் திறமையை வளர்த்துக்கொண்டு சிறப்புடன் வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Thursday, August 12, 2021

நல்லொழுக்கமே அன்பு!

 Status 2021 (217)

நல்லொழுக்கத்துக்கு உரிய பண்புகளான மனிதநேயம், இரக்கம், பாசம் இவைதான் அன்புக்கு ஆதாரம். மேலும், மற்றவரின் நன்மைக்காக ஆத்மார்த்தமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசமும்  மனிதர்களிடம் மட்டும் இல்லாமல் ஐந்தறிவு கொண்ட பிராணிகளிடமும் நாம் செலுத்தும் கருணைதான் அன்பு. எனவே, நாம் அன்புள்ளம் கொண்ட பண்போடு வாழ்ந்தால் நமக்குப் பூரண ஆத்ம திருப்தி கிடைப்பதுடன் நம் வாழ்க்கையில் வசந்தமும் வந்தடையும். முயற்சித்துத்தான் பார்ப்போம்.

Victory King (VK)


Wednesday, August 11, 2021

முடிந்ததை செய்வோம்!

  Status 2021 (216)

நாம் எப்போதும் நம்மால் முடிந்த உதவிகளையும் நற்செயல்களையும் மற்றவர்களுக்கு செய்யும்போது நமக்கு ஓர் ஆத்ம திருப்தி ஏற்பட்டு நம் உடல்நலம் உத்வேகத்துடன்  செயல்படும். அப்படி நம்மால் செய்ய முடியாத நிலையில் இருந்தாலும் மற்றவர்கள் செய்யும்போது நமக்கு இப்படி  ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாலே அதுவும் நமக்கு ஓர் ஆத்ம திருப்திதான். ஆனால் நம்மால் செய்ய முடியவில்லை என்ற பொறாமையில் மற்றவர் செய்வதை தடுக்கும் மனநிலை நமக்கு வந்துவிட்டால் அதுவே ஒரு பாவச் செயலாகும்.  எனவே, அந்தப் பாவச் செயலை நாம் செய்யாமல் அமைதியாக இருந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருத்தலே சாலச் சிறந்ததாகும். 

Victory King (VK)

Tuesday, August 10, 2021

ஒப்புரவு ஒழுகு!

 Status 2021 (215)

‘ஒப்புரவு ஒழுகு’  அதாவது எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நல்லவிதமாகப் பழக வேண்டும். 

- ஒளவையார். 

ஆமாம். நம் அறிவாளித்தனத்தை எல்லா இடங்களிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்து தன்மையாகப் பழகக் கற்கவில்லை என்றால் நம் அறிவுக்கு மதிப்பே இருக்காது. மதிப்பற்று போகும். எனவே நம்மைச் சுற்றி உள்ளவர்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம். நம் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்வோமே!

Victory King (VK)

Monday, August 9, 2021

குணமே மருந்து!

Status 2021 (214)

நாம் கற்ற கல்வி நமக்கு பட்டத்தைக் கொடுக்கலாம், பதவியைக் கொடுக்கலாம், அந்தஸ்த்தைக் கொடுக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் தக்க வைத்துக்கொள்ள உதவும் ஒரே ஆயுதம் நம் குணம்தான். நம் குணம் மட்டும் நேர்மறையில் இருந்தால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொற்களும் பிறரது இதயத்தில் நல்ல தரமான விதைகளாகப் பதிந்து அவை செடி கொடி மரங்களாகத் தழைத்து நம் மீது அன்பு மலர்களைத் தூவி பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். எனவே, நற்குணங்களோடு வாழ்ந்து அனைவரையும் அரவணைப்போமே!     

Victory King (VK)

Sunday, August 8, 2021

பெற்றோரைப் போற்றுவோம்!

 Status 2021 (213)

 நமக்கு உயிர் கொடுத்து இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய பெற்றோருக்கு உரிய அந்தஸ்தையும் மதிப்பையும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொடுக்காமல் இறந்த பிறகு அவர்கள் புகைப்படத்தை மாட்டி மாலை போட்டு அவர்களுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து காரியங்கள் செய்து தங்கள் பெருமையை வெளிப்படுத்துவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு. பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும், பிரார்த்தனை செய்தாலும் அதற்குப் பரிகாரம் என்பதே கிடையாது. அந்த பாவத்துக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நம் தாய் தந்தையரின் அருமை நமக்கு நாம் வளரும்போது தெரியாது. நாம் நம் பிள்ளைகளை வளர்க்கும்போதுதான் அதனை உணர முடியும். இதனை மனதில் கொண்டு நாம் பெற்றோரை எந்த சமயத்திலும் சுமையாகக் கருதாமல் மனமுவந்து உரிய அந்தஸ்த்தைக் கொடுத்து அவர்களின் ஆசியைப் பெற்று நாமும் நம் சந்ததியினரும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து காட்டுவோமே!

Victory King (VK)

Saturday, August 7, 2021

நடப்பதை நலமாகக் கருதுவோமே!

Status 2021 (212)

நாம் விரும்பி பிறக்காதது போல நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல. அனைத்தும் நம் விதிப்படிதான் நடக்கும் என்பதை உணர்ந்து நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்பதை நன்கு புரிந்துகொண்டு நன்மையே செய்வோம். நல்லதையே நினைப்போம். நடப்பதையே நலமாகக் கருதுவோமே!

Victory King (VK)

Friday, August 6, 2021

இயல்பும் செயற்கையும்!

  Status 2021 (211)

நாம் மற்றவர்கள் வியக்க வேண்டும் என்பதற்காக படோடோபமாகவும் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்களை கவரும்படி செய்யும் எந்த செயலும் ஒரு தற்காலிக ஜொலிப்புதான் கவரிங் நகைகளைப் போல. அதே செயலை நாம் உள்ளன்போடு மனது ஒத்து மகிழ்ச்சியாக செய்யும்போது மற்றவர்கள் அதைப் பார்த்து பெருமைப்பட்டால் அது சுத்தத் தங்கத்தைப் போல் எப்போதுமே வாழ்க்கையில் ஜொலித்துக்கொண்டே இருக்கும். எனவே, நாம் செய்யும் எந்த செயலும் மற்றவர்களால் மனதாரப் பாராட்டப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் பாராட்டும்படி செயற்கையாக செயல்படுத்தாமல் இருந்தால்தான் நம் மதிப்பு எப்போதும் நிலைத்து நிற்கும். சிந்திப்போம். செயல்படுவோம்!

Victory King (VK)

Thursday, August 5, 2021

விருந்தோம்பலும் ஓர் மகிமையே!

 Status 2021 (210)

விருந்தோம்பல் என்பது  நம் அன்பு வட்டங்களை அரவணைத்தும், உறவுச் சங்கிலியை வலுப்படுத்தியும், ஒருவருக்கொருவர் புரிதலை மேம்படுத்தியும், நம் சொந்த பந்தங்களுடனும் நட்பு வட்டங்களுடனும் மகிழ்வுடன் கொண்டாடும் ஓர் அருமையான நிகழ்வு.  நம் பண்பை மெருகூட்டுவதுடன் பகையை வெல்லும் ஒரு பேராற்றல் இதற்கு உண்டு. கூட்டுப் பிரார்த்தனைக்கு எவ்வளவு மகிமை உண்டோ அதேபோல் நாம் கூடி மகிழும் பொழுதும் அதன் மகிமையை பெறுவோம். எனவே விருந்தோம்பலை ஒரு கடமையாகச் செய்யாமல் அறுசுவை உணவுடன் அனைவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்து ஆரோக்கியமாக வாழ்வோமே!

Victory King (VK)

Wednesday, August 4, 2021

நன்றி மறவாதீர்!

 Status 2021 (209)

நாம் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தாங்கிப் பிடிக்காதவர்களையும், நமக்கு இன்னல்கள் வரும்போது நம் கண்ணீரை துடைக்காத உறவுகளையும், நம் வருமானத்துக்கே வழி இன்றி வருத்தப்படும்போது ஆதரிக்காதவர்களையும், நமக்கு நல்ல நிலை வந்ததும் நம்மைச் சுற்றி வருபவர்களையும் நம் வாழ்நாளில் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதும், நாம் கஷ்டப்பட்டபோது கை கொடுத்தவர்களையும் நாம் தளர்ந்தபோது தோள் கொடுத்தவர்களையும் நம் வாழ்நாளில் என்றுமே நன்றியை மறக்காமல் இருப்போமேயானால் நம் வாழ்க்கை தானாகவே மேன்மைப்பட்டு நலமுடன் வாழ்வோம்!   

Victory King (VK)

Tuesday, August 3, 2021

பிறப்பின் பயன்!

 Status 2021 (208)

எதுவும் இல்லாமல்தான் பிறந்தோம்.  பிறகு எல்லாம் வேண்டுமென்று அலைந்தோம். ஒரு நிலையில் எதுவும் நிரந்தமில்லை என்பதையும் அறிந்தோம். உற்று நோக்கும்போது உயிரும் சொந்தமில்லை என உணர்ந்தோம். மேலும், ஒரு நாள் உலகை விட்டு சொல்லாமல் சென்று விடுவோம் என்பதுதான் வாழ்க்கை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்தோம். இவை அனைத்தும் நன்கு அறிந்த நாம், இருக்கும் வரை நல்லவற்றையே எண்ணி நன்மையே செய்து முடிந்தவரை பிறர் மனம் புண்படாமல் வாழ்க்கையை நடத்தி நம் வாழ்நாளை கடத்தாவிட்டால் நாம் மனிதப் பிறவியாகப் பிறந்தும் பலன் இல்லை. எனவே நாம்  நற்பண்புகளோடு  வாழ்ந்து வாழ்க்கையை மகிழ்வோடு கடத்துவோம்!  

Victory King (VK)

Monday, August 2, 2021

காலமும் நேரமும் காத்திராது!

Status 2021 (207)

நம் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். எனவே நம் வாழ்க்கையை பாழாக்கும் தகுதிக்கு மேல் பேராசையைத் தவிர்த்து, தற்பெருமையை அடக்கி, காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் நம்மைக் கடக்கத் துடிக்கும் இளமையிலேயே நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க முயற்சித்து உழைப்பால் நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டால்தான் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நம் வயதோடு சேர்ந்து நாமும் உயர்ந்து நம்முடைய இலக்கை அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்வோடு வாழ முடியும். முயற்சித்தால் முடியும் என்பதை உறுதிப்படுத்துவோமே!

Victory King (VK)

Sunday, August 1, 2021

மெளனமே மருந்து!

 Status 2021 (206)

நமக்கு ஒருவரது செயல் பிடிக்காத போதும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாத போதும், நம்மை விட்டு ஒருவர் விலகி செல்லும் போதும், மற்றவர் பொறாமையினால் நம்மை சதா குறை கூறிக் கொண்டே இருக்கும் போதும், இவைகளெல்லாம் பார்த்து நமக்கு கோபம் வரும் பொழுது மௌனமாய் இருப்பது மட்டும்தான் நமக்கு நல்லது. உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட்டால் நாம் தான் தவறு செய்தவர்கள் ஆகிவிடுவோம். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் மனதை அடக்குவோம் மௌனத்தைக் கடைப்பிடிப்போம். ஆரவாரமில்லாமல் நிலைமையை சமாளிப்போம்.

Victory King (VK)

Saturday, July 31, 2021

இளைய தலைமுறைகள் சிந்திக்க!

 Status 2021 (205)

நாம் படித்து பட்டம் பெற்று நல்ல நிலையில் இருக்கும் பொழுது கல்வி அறிவைப் போதித்த குருவிற்கு நன்றி சொல்லியும், நல்ல வேலையில் அமரும் பொழுது நம் திறமைக்குதான் கிடைத்தது என்றாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று வணங்கி அதன் மதிப்பை உணர்ந்து நேர்மையாக உழைத்தும், நம்மை பெற்று வளர்த்து இந்தஅளவிற்கு ஆளாக்கிய பெற்றோர்களின் அருமை பெருமைகளை உணர்ந்து அவர்களை மதித்து வணங்கி கடைசிவரை அன்போடும் பண்போடும் பழகியும் வளரும் இளைய தலைமுறைகள் வாழ்க்கையில் சிறப்புடனும் வளமுடனும் வாழ்வதற்கான முன்மாதிரிகள். சிந்திக்கட்டும் இளைய தலைமுறைகள்!

Victory King (VK)

Friday, July 30, 2021

சிறப்புடன் வாழ்வோமே!

 Status 2021 (205)

நாம் சற்று வாழ்க்கையில் பயந்து பயந்து வாழ்ந்தால் நம்மை சீண்டி சீண்டி வெறுப்பேற்றுவதுடன் நம்மிடம் இருந்து எதை அபகரிக்கலாம் என்று நம்மை சுற்றி சுற்றி வந்து நம்மை மேலும் சோர்வடைய செய்துவிடுவார்கள் சிலர். நாம் வாழ்க்கையில்  மனோதிடத்துடன் முன்னேறி படிப்படியாக உயரும்போது அதே நபர்கள் நம்மை தஞ்சமடைந்து இப்போதும் நம்மால் அவர்கள் ஏதேனும் சுகமடைய முடியுமா என்று பார்ப்பார்கள். அவர்கள் எப்படி நம்மிடம் பழகினாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் நாமாக இருந்து அந்தந்த நிலையில் நம்மால் என்ன முடியுமோ அதனை செய்து வாழ்வதுதான் சிறந்த பண்பு என்பதை உணர்ந்து சிறப்புடன் வாழ்வோமே!    

Victory King (VK)

Thursday, July 29, 2021

பிறவிப் பயன்!

 Status 2021 (204)

நமக்கு கெளரவம் என்பது நாவினால் அன்போடும் பண்போடும் பேசுவதால் மட்டும் வந்திவிடாது. நம் செயலிலும் அந்த பண்பு இருந்தால் மட்டுமே அந்த கெளரவம் முழுமையாக நமக்குக் கிடைக்கும். நயவஞ்சகத்தை மனதில் வைத்து நாவினால் நெய் ஒழுகப் பேசி மற்றவர்களை ஏமாற்றி பசுந்தோல் போர்த்திய புலியாக நடித்து அடுத்தவர்களை காலை வாரிவிடுவது கொலை செய்வதை விட மாபாதக செயலாகும். எனவே, போலி கெளரவத்தை விடுத்து நற்பண்புகளோடு நம் காலத்தை கடத்தி நம் கெளரவத்தையும் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்தால் நாம் இறந்த பிறகும் பிறவியின் பயனை அடைவோம் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை.   நம் கெளரவம் நம் கையில்தான்!

Victory King (VK)

Wednesday, July 28, 2021

வாழ்ந்து காட்டுவோமே!

 Status 2021 (203)

உறவுச் சங்கிலியை வலுப்படுத்த நாம் நினைப்பதில் தவறில்லை. அதேசமயம் உறவுகள் நம்மை தூக்கி எறிந்தால் வருந்துவதில் பலனில்லை. வாழ்ந்து காட்ட வேண்டும் அவர்கள் நம்மைத் தேடி வரும் அளவுக்கு. எனவே எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ கற்றுக் கொண்டுவிட்டால் அதுதான் நம் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். வாழ்ந்து காட்டுவோம். மகிழ்ந்து வாழ்வோம்!

Victory King (VK)

Tuesday, July 27, 2021

விமர்சனங்களை ஏற்போமே!

 Status 2021 (202)

நாம் ஒருவரிடம் நம் கருத்தை சொல்லும்போது அவர் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தை  மனதில் வைத்துக்கொண்டு சொல்லாமல் அவர் கடுமையாக விமர்சித்தாலும் சிறிதளவும் கோபம் கொள்ளாமல் அவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்டு பொறுமையுடன் பதில் சொல்லும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை என்றால்  நாம் மனதளவில் பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல் மற்றவர்கள் முன் நம் கெளரவத்தை இழக்கும் நிலைதான் வரும். சிந்திப்போம். செயல்படுவோம். நம் கெளரவத்தைக் காப்போம்!

Victory King (VK)

Monday, July 26, 2021

வாழ்வை இனிமையாக்க!

 Status 2021 (201)

நமது இக்கட்டான நிலையிலும் நிதானம் இழக்காமல் மிகவும் அமைதியாக முடிவெடுப்பது, மிகுந்த சந்தோஷமான சூழ்நிலையில் நிலைதடுமாறாமல் மனதை சமநிலையில் வைத்துக்கொள்வது, மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக நமக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பது, எந்த நிலையிலும் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை ‘வளவள’ என்று பேசாமல் சுருக்கமாக சொல்லி அதனைப் புரிய வைப்பது இவை அனைத்தையும் நம் மனதில் அடைக்கலம் கொடுத்துவிட்டால் நம் வாழ்வே சொர்க்கம்தான். முயற்சிப்போம், வாழ்க்கையை இனிமையாக்குவோம்!   

Victory King (VK)

Sunday, July 25, 2021

செய்தவறை திருத்திக்கொள்வோம்!

Status 2021 (200)

தவறு செய்வது என்பது மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் இயல்பான ஒன்றுதான். எப்போது அதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்கு இயல்பாகவே பண்புடன் கலந்த நல் உணர்வுடன் கூடிய வாழ்வினைப் பெற்றுவிடுகிறார்கள். தங்கள் தவறை உணராமல் தொடர்ந்து அதையே செய்துகொண்டு மூடர்களாக இருப்பவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு வாழ்வினை கெடுத்துக்கொள்கிறார்கள். எனவே, நம் தவறுகளை உணர்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்! 

Victory King (VK)

Saturday, July 24, 2021

வெற்றியே சந்தோஷம், சந்தோஷமே வெற்றி!

  Status 2021 (199)

நாம் செய்யும் செயல்களை வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணி  முயற்சி எடுத்து செய்வதைவிட,  நாம் சாதாரணமாக செய்யும் செயல்களை கூடுதல் அக்கறை எடுத்து மிகச் சிறப்பாக செய்தால் அதுவே நம் திறமைக்குக் கிடைத்த  சிறந்த வெற்றி. வெற்றியும், சந்தோஷமும் எப்போதும் ஒன்றாகவே கிடைக்கும்.  நாம்  விரும்புவதை அடைந்துவிட்டால் அது வெற்றியாகும். நாம் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும். எனவே, நாம் வெற்றியை நோக்கிப் பயணம் செய்து சந்தோஷமான வாழ்க்கையைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Friday, July 23, 2021

எது சாதனை?

  Status 2021 (198)

எது சாதனை?

நாம் வாழ்க்கையில் எந்தவித சாதனையும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. மற்றவர்களை வேதனைப்படுத்தி காயப்படுத்தாமல் வாழ்ந்தாலே அதுவே ஒரு பெரிய சாதனைதான். நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் பரிவும் பல மடங்கு பெருகி ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் நம்மைக் காத்து வாழ்வை வளமாக்கும். முயற்சிப்போம். சாதிப்போம்!

Victory King (VK)

Thursday, July 22, 2021

துன்பங்களை எதிர்கொள்ள!

  Status 2021 (197)

நம்முடைய  துன்பமான காலங்களைக் கூட தன்னம்பிக்கையுடன், உறுதியான நம்பிக்கையுடன் எதிர்கொண்டால், நம்  தடைகள் அனைத்தும் வெற்றிப் படிகளாக மாறி நம்மை புத்துண்டர்வுடன் செயல்பட வைக்கும் என்பது நிச்சயம். இப்படி செய்வதால்,  துன்பங்கள் பொடிப்பொடியாகி தூர ஓடி விடும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் நம் மனதுக்குக் கிடைக்கும். இதனைப் பின்பற்றுவது சிறிது கடினமான செயல்தான் என்றாலும் முயன்றால் முடியாதது இல்லை. முயற்சித்துத்தான் பார்ப்போமே!

Victory King (VK)

Wednesday, July 21, 2021

சொர்க்கமும் நரகமும்!

 Status 2021 (196)

வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களைப் பொறுத்தே. நம் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே வெளிப்படும். நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்லவை வெளிப்பட்டு நம்மை செம்மைப்படுத்தி நாம் இருக்கும் இடத்தை சொர்க்கமாக்கும். கெட்ட எண்ணங்கள் குடியேறி மண்டிக்கிடந்தால் தீயவை வெளிப்பட்டு நாம் இருக்கும் இடத்தை நரகமாக்கும். எனவே நம் எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்வோம். நாமிருக்கும் இடத்தை சொர்க்கமாக்குவோம்.

Victory King (VK)

Tuesday, July 20, 2021

மனமே, பக்குவப்படு!

  Status 2021 (195)

ஒருவருக்கு தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு எதிரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல் எல்லாவற்றையும் அற்பமாகத்தான் நினைப்பார்கள். பணத்தினால் வரும் மமதையும் புகழினால் வரும் போதையும் அவர்கள் கண்களை மறைத்து கண்ணிருந்தும் குருடர்களாக ஆகிவிடுவார்கள். அவர்கள் நிலை தலைகீழாக மாறும்பொழுது அரவணைப்பதற்கு ஆள் இல்லாமல் மனநிலை பிழன்றவர் போலவே ஆகிவிடுவார்கள். எனவே, நாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் எந்த நிலையிலும் நமக்குத் தடுமாற்றம் வராத வண்ணம் மனதைப் பக்குவப்படுத்தி வாழ்ந்தால் வாழ்க்கையில் உயரலாம்.

Victory King (VK)

Monday, July 19, 2021

உதவிக்கான இலக்கணம்!

  Status 2021 (194)

ஒருவர் மனம் உடைந்து நெஞ்சத்தால் காயம்பட்டு நொந்துபோய் நம்மிடம் வந்து நிற்கும்பொழுது நாம் அவர்களுக்கு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எந்த கருத்தும் கூறாமல் ஆறுதலாக சில வார்த்தைகளை சொல்லி நம் அன்பை அவர்களிடம் செலுத்தும் பொழுது அதுவே அவர்கள் மனதிற்கு ஒத்தடம் கொடுத்தது போல் சுகமாக இருப்பதுடன் அவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் சிறந்த மாமருந்தாகவும் இருக்கும். இதுதான் உதவிக்கரத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.

Victory King (VK)

Sunday, July 18, 2021

இறைவனின் கருணை!

 Status 2021 (193)

இறைவன் வேண்டுவதைத் தருபவர் அல்ல. வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்.

- ஓஷோ

இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோல் இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது. எனவே இறைவனிடம் வேண்டும்பொழுது நம் தகுதிக்கேற்ப நியாயமாக கிடைக்க வேண்டியதை வேண்டியும், நமக்கு இடையூறு செய்பவர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வணங்கினால் இறையருள் நமக்கு கிடைத்து வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுவது நிச்சயம். ஆத்ம சுத்தம் நமக்கு இருந்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்!

Victory King (VK)

Saturday, July 17, 2021

எண்ணமும் செயலும்!

  Status 2021 (192)

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து, அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.

சுவாமி விவேகானந்தர்

எண்ணுதலும் எண்ணியதை தீவிரமாக சிந்தித்து நேர்மையுடன் செயல்படுத்துதலும்தான் நம் வெற்றிக்கு ஆணிவேர். பண்பிற்கு இலக்கணம். நம் எதிர்காலத்தை வளமாக்கும் தாரக மந்திரம். இதனை கடைபிடித்து கண்ணியமாக வாழ்வோமே!

Victory King (VK)

Friday, July 16, 2021

தேடி வரும் புண்ணியங்களும், பாவங்களும்!

 Status 2021 (191)

நீ அளித்த தானமும் தர்மமும், நீ செய்த புண்ணியமும் பாவமும், நீ செய்தசூழ்ச்சியும் துரோகமும் ஒரு நாள் உன்னை தேடி வந்து நீ செய்ததை விட சிறப்பாக செய்து விட்டு போகும்.

கிருஷ்ண பரமாத்மா

எனவே நாம் செய்யும் ஒவ்வொரு தீய செயல்களுக்கும் துரோகங்களுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அதுபோல நாம் செய்யும் ஒவ்வொரு நற் செயலுக்கும் உரிய பலன் கிடைத்தே தீரும். இதனை நன்கு உணர்ந்து செயல்பட்டு நம் வாழ்க்கையில் நலம் பெறுவோமே!

Victory King (VK)

Thursday, July 15, 2021

வாழ்க்கை சுபிக்‌ஷமாக அமைய!

 Status 2021 (190)

 ‘சினம் அன்பை அழிக்கும். கர்வம் அடக்கத்தை அழிக்கும். பொறாமை அனைத்தையும் அழித்துவிடும். அகந்தையை அழித்துவிட்டால் அடக்கம் தானாக வந்துவிடும்’ என்று மஹாவீரர் கூற்றுப்படி நாம் கோபத்தைக் கட்டுப்படுத்தி அகந்தை நம்மை அண்டாமல் மனதை அன்பின்பால் செலுத்தி நம் திறமையின்பால் நம்பிக்கை வைத்து பொறாமையை அகற்றி வாழ்ந்தால் நம் வாழ்க்கை நலமுடன் அமைவதுடன் நம் சந்ததியினரையும் நல்வழிப்படுத்தும். 

Victory King (VK) 

Wednesday, July 14, 2021

அறிவுரை ஆனந்தமாக!

Status 2021 (189)

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் கிடைக்கும் ஆனந்தம் அபரிவிதமானது. கர்வம் கலந்தது. நம் அறிவுரையைக் கேட்பவன்
அறியாதவனாகவும், நாம் அறிவாளி ஆகிவிடுகிறோம்.  எனவேதான் மற்றவர்கள் கேட்காமலேயே நாம் அள்ளி வழங்கி மகிழ்வது அறிவுரைதான்.  ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அறிவுரை கூறும் முன், நாம் அதற்குத் தகுதியானவர்களா என்பதையும், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா என்பதையும் யோசித்து, மற்றவர்கள் மனம் புண்படாவண்ணம் நாம் கூறும் அறிவுரைக்கு மதிப்பு உண்டு. அதனை நாம் பின்பற்றினால் நமக்கும் மதிப்பு, ஏற்பவர்களுக்கும் பயன்.

Victory King (VK) 

Tuesday, July 13, 2021

வாழ்க்கையின் வெற்றி!

 Status 2021 (188)

வாழ்க்கை என்பது கடவுள் நமக்குக் கொடுத்த ஒரு வெகுமதி. அதை நாம் குறுக்கு வழியினாலும் தந்திரத்தாலும் மட்டும் முன்னேறிவிடலாம் என்று நினைத்துவிடக் கூடாது. புத்திசாலித்தனத்தாலும் அன்பினாலும் மட்டுமே வாழ்க்கையை வெல்ல முடியும். அதே சமயத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் விழிப்புடனும் மனசாட்சியுடனும் செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியம். எப்போதும் வாழ்வில் நாம் நாமாக இருந்து நம்பிக்கையுடனும் எளிமையுடனும் வாழ்வை நடத்திச் சென்றால் மனம் மகிழ்வுடன் அனைத்து செயல்களிலும் வெற்றி அடைவது சாத்தியமான ஒன்றே. முயற்சித்துத்தான் பார்ப்போமே!

Victory King (VK) 

Monday, July 12, 2021

வாழ்க்கையின் நீதி!

 Status 2021 (187)

நாம் ஒருவரிடம் சத்தியம் செய்து ஒரு காரியத்தை செய்கிறேன் என்று ஒத்துக்கொண்டால் சமயத்தில் சங்கடத்தில் மாட்டிவிடுவோம். அதை சாதாரணமாக செய்கிறேன் என்று சொல்லி அதை செய்து முடித்தாலும் சந்தர்பவசத்தால் செய்ய முடியாவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம். எனவே எதற்கும் சத்தியம் செய்து சங்கடத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதுபோல வஞ்சனையையே நம் மனதில்கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு அனைத்தும் வீணாகும் பாரதத்தில் சகுனிபோல. அதுபோல், மனதில் குரோதம் கொண்டாலும் நமக்கு விரோதம்தான் மிஞ்சும் வாழ்வில், பாரதத்தில் திருதராஷ்டிரனாய் போல. எனவே பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் அனைத்தும் பிள்ளைகளைத்தான் பாதிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப நாம் வாழ்வில் பயணித்து நல்லதோர் மனிதனாய் நலமுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, July 11, 2021

செய்யக்கூடாத பாவங்கள்

Status 2021 (186)

நல்லவர் மனதை புண்படுத்துவது, பிறருக்கு தானம் கொடுக்கும்போது அதை தடுத்து நிறுத்துவது, தூய நட்புக்கு வஞ்சகம் செய்வது, ஏழைகளை ஏமாற்றுவது, கயவர்களுக்கு உபகாரம் செய்வது, நம்மிடம் நல்லவர்கள்போல் நடித்து நம்மை உளவு பார்ப்பது போன்ற பாவங்களை செய்ய நம் மனதில் இடம் கொடுக்காமல் நல்லவற்றையே நினைத்து நன்மைகளையே செய்து நம் வாழ்க்கையை தூய்மைப்படுத்திக் கொள்வோமே!

Victory King (VK)

Saturday, July 10, 2021

எண்ணமே வாழ்க்கை!

  Status 2021 (185)

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் புத்தர் கூறியபடி நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். இதை புரிந்து நடந்தால் நம் வாழ்க்கையில் பொறாமை, விரோதம், காழ்ப்புணர்ச்சி நம்மிடம் தலை தூக்காமல் நலமாக வாழ முடியும்.

Victory King (VK)

Friday, July 9, 2021

பெற்றவர்கள் மனம் குளிர!

 Status 2021 (184)

நாம் வாழ்க்கையில் மற்றவர்கள் பெருமைப்படும்படி வாழ்வதைவிட பெற்றவர்கள் பெருமைப்படும்படி வாழ்ந்தால்தான் நம் வாழ்க்கை வளம் பெறும். பெற்றவர்கள் பெருமைப்பட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்து நம்மை வாழ்த்தும்போது நம் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக அமையும். எனவே, மற்றவர்களைப்போல் நாம் வாழ நினைத்தாலும், நம்மைப் பார்த்து மற்றவர்கள் வாழ நினைத்தாலும் அவரவர்கள் திறமையையும் நேர்மையையும் பின்பற்றி வாழ்ந்து முன்னேறினால் வாழ்க்கை வளம் பெறுவது நிச்சயம். 

Victory King (VK)

Thursday, July 8, 2021

வாழ்க்கையின் தத்துவம்!

  Status 2021 (183)

நம் வாழ்வில் நாம் பிறந்தது முதல் இறுதிவரை மொத்த நாட்களில் நாம் அனுபவிக்க வேண்டிய  இன்பம், துன்பம், புகழ், கவலை எல்லாவற்றுக்கும் ஓர் அளவுகோல் உண்டு. அதன்படி அவை சிலருக்கு வாழ்க்கையின் முற்பகுதியில் வரலாம். பிற்பகுதியில் வரலாம். மாறி மாறி வரலாம். ஆனால் நாம் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான் நியதி. எனவே நாம் ஆனந்தம் வரும்பொழுது அகமகிழ்ந்து ஆடாமலும் துன்பம் வரும்போது துவண்டுவிடாமலும் கவலை வரும்போது கண்கலங்காமலும் நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு இதுவும் கடந்து போகும் என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு வாழ்க்கையின்  தத்துவத்தை நன்குபுரிந்து வாழ்ந்தால் மகிழ்ந்து வாழலாம்!

Victory King (VK)

Wednesday, July 7, 2021

ஒற்றுமை!

  Status 2021 (182)

இயற்கை வளம், மக்களிடம் ஒற்றுமை, பெரியவர்களிடம் மரியாதை இவை எல்லாம் சேர்ந்து இருந்ததால்தான் அந்த காலத்து வாழ்க்கை  ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.  ஊரில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஊரே திரண்டு வரும். ஆனால் இன்று இயற்கை வளமும் இல்லை. மனிதர்களிடம் ஒற்றுமையும் குறைந்துவிட்டது. பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடின்றி குறைகள்தான் பெருகி வருகிறது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்  சுயநல ஆதிக்கம் மிகுந்த சிலரால் மற்றவர்களின் வாழ்க்கை மன அழுத்தத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கும் நிலை இன்று. ஒற்றுமையும் நேர்மையும் இருந்தால்தானே அமைதியாக வாழ முடியும்?

Victory King (VK)

Tuesday, July 6, 2021

எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்...

 Status 2021 (181)

நமக்கு நிலைமை எல்லாம் சாதகமாக இருக்கிறது என்று நினைத்ததெல்லாம் செய்து அடாத வழியில் செல்லும்பொழுது நடுவில் சாதகமற்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் செய்த அடாத செயல்களுக்கு எல்லாம் தகுந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே எத்தருணத்திலும் நாம் ஒரே நிலைப்பாட்டிலிருந்து மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் செய்யும் எந்த செயலுக்கும் ஈடு இணையேதுமில்லை. எனவே 'நாம்' என்ற தலைக்கனம் நம்மை பற்றாவண்ணம் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் வாழ்ந்து நம் வாழ்வில் வளம் பெறுவோம்!

Victory King (VK)

Monday, July 5, 2021

நன்றியும், நன்றிக் கடனும்!

  Status 2021 (180)

நமக்கு ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ததை நம் வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாத ஒரு விஷயம். நமக்குப் பண பலம் வரலாம், அந்தஸ்து வரலாம். ஆனால் அந்த நன்றிக் கடனை மட்டும் நாம் மறந்தால் நாம் ஒரு பண்பில்லாத மனிதராகி விடுவோம். நாம் பெற்ற உதவியானது ஒரு வட்டியில்லா கடன். பாசத்தின் பலன். பண்பின் இலக்கணம். எனவே, எத்தருணத்திலாவது எந்த வகையிலாவது நாம் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்தினால்தான் நாம் மனநிம்மதியை பெற முடியும். நன்றியை மறந்தால் உதவி செய்தவர் வேண்டுமானால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். நாம் நம் மன உறுத்தலில் இருந்து விடுபட முடியாது. எனவே, நாம் நன்றியை மட்டும் கடனில் வைக்கக் கூடாது. இந்த உண்மையை உணர்ந்தால் நாம் பண்போடு வாழலாம்.

Victory King (VK)

Sunday, July 4, 2021

வாழ்வெனும் பயணம் இனிதாக!

  Status 2021 (179)

சிலர் நாம் எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுபவர்கள். ஒரு சிலர் நாம் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்றும் சிலர் நாம் சொல்வதில் உள்ள நியாயத்தை போற்றுவார்கள். அது அவரவர்கள் பிறவிக்குணம். வளர்ந்த விதம். நம் கருத்தில் நியாயம் இருக்கும் பொழுது மற்றவர்கள் நினைப்பதை பற்றியோ பேசுவதை பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் போற்றுதலும் தூற்றுதலும் அவரவர்கள் தனிப்பட்ட கருத்து என்று எண்ணி எதற்கும் தனித்துவம் கொடுக்காமல் மனதை கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நம் வாழ்வெனும் வண்டிச்சக்கரம் நிலையாக நகர்ந்து செல்லும்.

Victory King (VK)

Saturday, July 3, 2021

வாழ்வே சொர்க்கம்!

 Status 2021 (178)

குடும்பம் என்பது இப்பூவுலகில் கடவுள் நமக்கு ஏற்படுத்திக்கொடுத்த ஒரு சந்தர்ப்பம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம் கைகளில் தான் உள்ளது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மனைவி, மக்கள், உறவுகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து அன்புடனும், பாசத்துடனும் பந்தப் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு மகிழ்வுடன் வாழ்வதுதான் குடும்பம். சொர்க்க வாழ்க்கைக்கு சாலச் சிறந்த மந்திரம் இவைதான். குடும்பச் சங்கிலி விலகா வண்ணம் மகிழ்வினை தக்க வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. முயற்சித்தால் நம் வாழ்வே சொர்க்கம்தான்.

Victory King (VK)

Friday, July 2, 2021

நல்லதே நடக்கும்!

 Status 2021 (177)

நாம் நல்லதே நடக்கும் என்று நம்பும்போது அது நம்மை மட்டும் அல்ல, நம்மை சுற்றி இருப்பவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இத்தகைய உள்ளத்தூய்மையினால் நல்ல எண்ணங்களையே நம் மனம் நாடும், நல்ல செயல்களையே நம்மை செய்யத் துண்டும், உடல் உற்சாகத்துடன் முகத்தில் மகிழ்ச்சிப் பொங்கி எழுந்து பரவசத்துடன் மற்றவர்களை ஈர்க்கும். இத்தகைய அற்புதமான சக்தியை நாம் பெற்று மகிழ்வடைய முயற்சித்து வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, July 1, 2021

உழைப்பும் ஈடுபாடும்!

 Status 2021 (176)

நாம் ஒரு கடமையை செய்யும்பொழுது அதனை உள்ளன்புடனும் ஈடுபாட்டுடனும் செய்யும்போது அந்த செயலுக்கான வெற்றி கிடைக்கும்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனம் மகிழ்ந்து நம் உடலுக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டு ஆரோக்கியமான சூழ்நிலையே கிடைக்கும். அதே செயலை நாம் ஈடுபாடு இல்லமல் ஏதோ கடமைக்காக செய்யும்பொழுது அதன் விளைவு நமக்கு சாதகமாக அமையும் என்று சொல்ல முடியாது. அதை நாம் கஷ்டப்பட்டு செய்தோம் வெற்றிக் கிடைக்கவில்லையே என வேதனைப்படக் கூடிய நிலை வரும். எந்த செயலாக இருந்தாலும் கடமைக்காக மட்டும் செய்து நம்மை நாமே தூற்றிக்கொள்ளாமல், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நம் கடமையை செவ்வனே செய்து எந்தவித சோர்வு மனப்பான்மையும் இல்லாமல் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் மனம் மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

Wednesday, June 30, 2021

அனுபவத்தைப் பெருமையாக்குவோம்!

Status 2021 (175)

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

விவேகானந்தர்

நம் இலக்கை அடைவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை அடையும்பொழுது நமக்கு ஓர் அனுபவம் கிடைக்கும். தோல்வியினால் நாம் பெற்ற அதிர்ப்தியைவிட அந்த அனுபவங்களை நாம் பெருமையாக்கிக்கொண்டு அதனையே ஒரு படிக்கல்லாக்கி மென்மேலும் முயன்று நம் இலக்கை அடைந்து வெற்றிக் கனியை சுவைப்போமே!

Victory King (VK)

Tuesday, June 29, 2021

வாழ்க்கையே அலைபோல!

  Status 2021 (174)

ஒரு காலத்தில் கிராமங்களில் உறவுகளுடன் ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தார்கள். அதன் பிறகு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என பல வெவ்வேறு காரணங்களினால் வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் அங்கே அவரவர்கள் வசதிக்கு ஏற்ப ஒரு பெரிய வீட்டில் உள் வாடகையாக தங்க வேண்டிய நிர்பந்தம். அதன் பிறகு அவரவர்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகளில் சொந்தமாக ஃப்ளாட்டை வாங்கி அதில் குடியேறி தங்கள் நிலையில் உயர்ந்து வாழ்ந்து வரும் நிலை. இதுவும் கூட்டுக் குடும்பம் மாதிரியே. வெவ்வேறு குடும்பங்கள் இணைந்த ஒரு கூட்டுக் குடும்பம். இந்த மூன்று நிலைகளிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் கூட்டுக்குடும்பமாக இருந்தாலும் சரி, ஒண்டுக்குடியாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். இதில் யாராவது ஒருவர் சுயநலமாகவோ மற்றவர்களை சீண்டும்படியாகவோ இருந்துவிட்டால் கூட்டுக்குடும்பமும் ஒன்றுதான், தனிக்குடித்தனமும் ஒன்றுதான். சொந்த வீடு என சொல்லிக்கொண்டு நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்வதும் ஒன்றுதான். யார் எப்படி இருந்தாலும் நம்மைப் பொருத்தவரை நியாயவாதியாகவும் நேர்மையாகவும் இருந்து அதில் இடர்பாடுகள் இருந்தாலும் சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை!

Victory King (VK)

Monday, June 28, 2021

உண்மையின் உறைவிடமே உன்னத வாழ்க்கை!

 Status 2021 (173)

பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். இப்படிப்பட்டவர்கள் தன் சுயநலத்துக்காகப் பொய், மற்றவர்களை ஏமாற்றுவதற்காகப் பொய் என இப்படியாக தங்களைத் தானே பொய்யாக்கிக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்வதுடன் மட்டுமில்லாமல் தங்கள் குடும்பத்தையே அந்தப் பொய்யால் பாழடையச் செய்து சுற்றத்தை இழந்து சந்ததியினரை இழந்து நிர்கதியாக நிற்கும் நிலை அவர்களுக்கு வந்தபோதும் அதில் இருந்து அவர்கள் திருந்தவில்லை என்றால் அதுவே அவர்கள் அழிவதில் இருந்து யாரலும் காப்பாற்ற முடியாது. எனவே இதனை நாம் நம் மனதில் கொண்டு நம் வாழ்வை உண்மையின் உறைவிடமாக உருவாக்கிக்கொண்டு மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Sunday, June 27, 2021

அன்பே ஆனந்தம்!

  Status 2021 (172)

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஆனந்தத்தைத்தான் கொடுக்கும். அதற்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முழு ஈடுபாடு, ஆர்வம், உழைப்பு, ஊக்கம் இவை அத்தனையையும் இழைத்து செயல்படுத்தும்போது அன்பின் பிரவாகமாக அது வெளிப்படும். பிறருக்கு உதவி செய்தால்தான் நமக்கு ஆனந்தம் என்பதில்லை. நம்மால் முடிந்ததை மனம் உவந்து எதைச் செய்தாலும் அதிலும் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அதை உள்ளன்போடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். முயற்சித்துத்தான் பாருங்களேன். 

Victory King (VK)

Saturday, June 26, 2021

நேர்கொண்ட பார்வை!

 Status 2021 (171)

நாம் நேர்மையாகவும் உண்மை உள்ளவனாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனால் ஏற்படும் எதிர்வினைகளை தாங்கும் சக்தி உள்ளவர்களாகவும், அதனை நேர்மையாக எதிர்கொள்வதில் திறமைசாலியாகவும் இருந்தால்தான் நமது உண்மைகளை பொய்யாக்கி தாம் சொல்வதுதான் உண்மை என்று அரிதாரம் பூசி நயவஞ்சக நாடகம் ஆடி நம்மை அழிப்பதில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே, எதிர்வினைக்கு பயந்து நம்மை நாம் மாற்றிக்கொள்ளாது உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெல்லும் என்ற மன திடத்துடன் வாழ்ந்து பொய்யனைப் பொய்யாக்கி நம்மை நாம் காத்து தைரியமுடன் வாழ்வோமே!   

Victory King (VK)

Friday, June 25, 2021

மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

Status 2021 (170)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒரு கடமை, இல்லையென்றால் நாம் நம்  மனதை வலிமையாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ள முடியாது.   நமக்கு மன மகிழ்ச்சியாக இருந்தால்தான் உடலில் ஓர் உத்வேகம் ஏற்பட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும். அதே சமயம் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனநிறைவு கிடைக்கும். இவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. எனவே, எதிர்மறை எண்ணங்களை விடுத்து, சீரிய சிந்தனையோடு நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சித்து உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்போமே!

Victory King (VK)



Thursday, June 24, 2021

நேர் வழியே நல்வழி!

 Status 2021 (169)

நம் தூய்மையான மனதும் நேர்மையும் தான் நம்மை நல்வழிப்படுத்தி வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும். நாம் அப்படி வாழ நினைத்தால் நம்மால் நிச்சயம் முடியும். அதற்கான பாதையை பார்த்து நடந்தால் நேர்மைக்கான பாதை நம் கண்களுக்கு தெரிந்து நம் பயணத்தை தொடரச் செய்து நேர்மையின் கதவுகள் திறக்கப்பட்டு ஒளிமயமான எதிர்காலத்தை நமது காட்சிப்படுத்தி நம்மைக் கவலைகளில் இருந்து மீட்டு மகிழ்வோடு வாழ வைக்கும். முயற்சித்தால் முடியாதது இல்லை. எனவே முயன்று வாழ்க்கையை மகிழ்வோடு கடந்து செல்வோமே!

Victory King (VK)

Wednesday, June 23, 2021

மனோதிடம்!

 Status 2021 (168)

சந்தோஷமான நம் வாழ்க்கையில் பல சோதனைகளும் வேதனைகளும் இடர்படுவது இயற்கை. அந்த சமயத்தில் நாம் மனமுடைந்து உட்கார்ந்து விடாமல் சோதனைகளையும் வேதனைகளையும் வென்று ஒரு சாதனையாக்கி மகிழ்வான குடும்பம் என்ற ஓடம் தள்ளாடாமல் நகர்ந்து செல்ல ஒரே வழி நமது மனோதிடம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனோதிடத்தை நாம் வளர்த்துக் கொண்டாலே நம் வாழ்க்கை எப்பொழுதுமே மகிழ்வாக இருக்கும். எனவே மனோதிடமே மனிதபலம் என்பதை நாம் நன்கு உணர்ந்து செயல்பட்டு நமது மகிழ்வான வாழ்வை தொடர்வோமே!

Victory King (VK)

Tuesday, June 22, 2021

ஏன் இந்த மனக்கவலை?

 Status 2021 (167)

‘யாரை நம்புவது?’ என்கிற கேள்வி, வயது வேறுபாடின்றி அனைவராலும் கேட்கப்படுகிறது. ‘எவரையுமே நம்ப முடிய வில்லை!’ என்கிற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. இது துரோகத்தை அனுபவித்தவர்கள் மனதில் இருந்து வரக்கூடிய ஒரு புலம்பலே.  அடுத்தவருக்கு துரோகம் செய்து  சுகமாக வாழ நினைத்தால், கடைசியில் நாமே விரட்டியடிக்கப்படுவோம். ஆனால் இன்று  துரோகம் செய்பவர்கள் அதிகாரத்திலும் செல்வச் செழிப்பிலும் திளைப்பதை நாம் கண் கூடாகக் காண்கின்றோம். அவர்களின் துரோகம் விருதுகளால் அங்கீகரிக்கப்படுகிறது. துரோகம் செய்வது தனித் திறமையாகக் கருதப்படுகிறது. பாவம் எளிய மனிதர்கள்! எவரை நம்புவது? எதன் மீது நம்பிக்கை வைப்பது? ஏன் நம்பிக்கை துரோகம் இழைக்கப்படுகிறது… என்பதெல்லாம் அறியாமல் தடுமாறுகிறார்கள். வரலாறு துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை. எனவே சிந்திப்போம். செயல்படுவோம்!

Victory King (VK)

Monday, June 21, 2021

குறிக்கோளும் முன்னேற்றமும்!

  Status 2021 (166)

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள் என்ற புத்தரின் பொன்மொழிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு கடுமையான உழைப்பில் நேர்வழியில் பயணிக்கத் தொடங்கினால் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. குறிக்கோள் இல்லாமல் மனம் போனபடி வாழ்பவர்களுக்குத்தான் முன்னேற்றம் கேள்விக்குறியாகும். குறிக்கோளுடன் உழைப்பு, புத்திசாலித்தனம், சரியான சந்தர்பங்களை கைவிடாமல் பற்றிக்கொள்ளுதல் என சூழலை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருப்பவர்களை வாழ்க்கை என்றும் ஏமாற்றவே ஏமாற்றாது. இதுவரை எந்த குறிக்கோளும் இல்லாமல் இருப்பவர்கள் உங்களுக்கு என பிரத்யோகமான குறிக்கோளை உருவாக்கிக்கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

Victory King (VK)

Sunday, June 20, 2021

உண்மையின் மதிப்பு!

 Status 2021 (165)

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை. இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு. தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

Victory King (VK)

Saturday, June 19, 2021

பிள்ளை வளர்ப்பு!

 Status 2021 (165)

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உறவுகளின் வலிமையையும் அவசியத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். பெற்றோர்களே தங்கள் சுயநலத்திற்காக தங்கள் பெற்றோர்களையும் உறவுகளையும் ஒதுக்கி தங்களைப் பிள்ளைகள்  பார்த்துக்கொள்வார்கள், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற இருமாப்பில், தங்கள் பிள்ளைகள் தங்களைப் பார்த்து தானே வளர்கிறது என்பதை உணராமல் வாழும்போது இவர்களுக்கும் அதே நிலைதான் வரும். காலம் கடந்து கடைசி காலத்தில் தனிமையை உணரும் பொழுதுதான் அதன் வலி தெரியும். எனவே நமது பிள்ளைகள் எதிர்காலம் சிறக்க வேண்டுமென்றால் நாம் சொந்த பந்தங்களை நமது பூர்வீக சொத்தாக நினைத்து அரவணைத்து வாழ்ந்து காட்ட வேண்டும் நம் பிள்ளைகளுக்கு!

Victory King. (VK)

Friday, June 18, 2021

உன் நிழல் உன்னோடு தான்!

 Status 2021 (164) 

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி என்ற புத்தரின் பொன்மொழிக்கு ஏற்ப நாம் எது செய்தாலும் அதன் பலன்களில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை நன்கு உணர்ந்து நம் வாழ்க்கையில் நாம் சொல் செயல் சிந்தனை அனைத்திலும் கவனமாக இருந்து நன்மைகளையே செய்து நலமுடன் வாழ்வோமே!   

Victory King (VK)

Thursday, June 17, 2021

நிம்மதியான வாழ்க்கைக்கு!

Status 2021 (163) 
அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். என்ற விவேகானந்தரின் வாக்குக்கு ஏற்ப நாம் நம் மனதை நம் கட்டுக்குள் வைத்து நேர்வழியில் செலுத்தினோமேயானால் நிம்மதியான வாழ்க்கையை பெறுவது உறுதி!

Victory King (VK)

Wednesday, June 16, 2021

நேர்மறையும் எதிர்மறையும்!

 Status 2021 (162)

நாம் நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களோடு பழகுவதையும் பேசுவதையும் தவிர்ப்பதோடு நல்ல எண்ணம் நேர்மறை செயல்பாடு உள்ளவர்களோடு பழகும்பொழுது அது நம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும் நம் செயலுக்கு ஒரு உத்வேகத்தையும் கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக்கும். எனவே நம்மை சோர்வடையச் செய்யும் எதிர்மறை சுற்றம் நம்மை அண்டாத வண்ணம் நம்மை நாம் காத்து எப்பொழுதும் நம் ஊக்க சக்தியை மென்மேலும் மிகைப்படுத்தி எங்கும் எதிலும் வெற்றி பெற்று நாமும் வாழ்ந்து நம் சுற்றத்தையும் வாழவைப்போமே!

Victory King (VK)

Tuesday, June 15, 2021

தன் வினை தன்னைச் சுடும்!

 Status 2021 (161)

நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு நாம் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களால் நமக்கு ஏற்பட்ட துன்பங்களும் அதன் மன உளைச்சலுமே அவர்களை அணு அணுவாக சித்திரவதை செய்து மீளா துயரத்தை ஏற்படுத்தி நாம் அடைந்த துன்பங்களை விட பல மடங்கு துன்பத்தை அனுபவித்தே  தீருவார்கள். எனவே நாம் அத்தகைய சந்தர்ப்பங்களில் பொறுமையாக இருந்து இன்னல்களிலிருந்து விடுபட இறைவனைப் பிரார்த்தித்து அமைதி கொள்வோம்!

Victory King (VK)

Monday, June 14, 2021

மனிதனாய் பிறந்தால்!

Status 2021 (160)

மனிதனாய் பிறந்தால்!

சுயநலத்தை தவிர்க்க வேண்டும்;
மனதில் தீய எண்ணங்களை அண்டவிடாது இருக்கவேண்டும்; அடுத்தவர்களுக்கு துரோகம் செய்து தாம் வாழ முனையாது இருக்க வேண்டும்; அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும் போது நமக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று சிந்தித்து செய்யப்பட வேண்டும்;
இவற்றை எல்லாம் சிந்தித்து செயல்படாவிட்டால் ஆறாவது அறிவை பெற்றும் பயனற்று தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலைதான் வரும். அதிலிருந்து தப்பவே முடியாது. எனவே நம்மை நாம் காத்து நலமுடன் வாழ முயல்வோமே!

Victory King (VK)

உடல், மனம், சமுதாய நலனில் அக்கறை கொள்வோம்!

 Status 2021 (159)

நாம்  மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று, உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவது, மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உடல் நலனும் மனநலனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மனம் சரியாக இருந்தால் உடல் சரியாக இயங்கும். உடல் சரியாக இயங்கினால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். மூன்றவதாக கூறியுள்ள சமுதாய நலன் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களையும் மாசுபடுத்தாமல் வாழ்வது. இவற்றை நாம் கடைபிடித்தாலே நமக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைப்பதுடன் நம்மை மகிழ்வோடு வாழ வழிவகுக்கும்! முயற்சித்துத்தான் பார்ப்போமே!

Victory King (VK)

Sunday, June 13, 2021

திகட்டினால் விருந்தும் கெடும்!

 Status 2021 (158)

விருந்தோம்பல் ஒரு கலை. வந்தோரை அன்போடும் பண்போடும் வரவேற்று உபசரித்து விருந்து கொடுத்தல், அன்பு உள்ளங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் ஒரு சிறந்த டானிக். அதிலும் வருவோருக்கு தகுந்தாற்போல் அவர்கள் வயதிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றாற்போல் விருந்தளிப்பதுடன் வருந்தி வருந்தி போட்டு அவர்கள் உடல்நிலை கெடுக்காமல் விருந்தளிப்பது ஒரு சீரிய பண்பு. எனவே ஆனந்தத்தோடு வந்த விருந்தினர்களை ஆரோக்கியத்தோடு அனுப்பி வைப்பதுதான் விருந்தோம்பலில் நாம் கடைபிடிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம். எனவே விருந்தில் கேட்டுக் கேட்டுப் பரிமாறலாம். ஆனால் போட்டுப்போட்டு அவர்கள் ஆரோக்கியத்தை கெடுக்காமல் அகமகிழ்ந்து உறவாடலாம்!

Victory King (VK)

Saturday, June 12, 2021

பாசத்தினால் பிள்ளை கெடும்!

 Status 2021 (157)

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் பாசம்ஓர் விலை மதிப்பில்லாத பொக்கிஷம். அதுதான் ரத்தபாசம். அந்தப் பாசத்தினால் குடும்பத்தில் வசந்தம் ஏற்படவேண்டும். அதை விடுத்து பாசம் என்ற பெயரில் அவர்களை கட்டுப்பாடில்லாமல் வளர்த்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்து விடக் கூடாது. பாசம் என்ற குதிரையை கடிவாளம் போட்டு அதன் மறுமுனை பெற்றோரின் கையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோரின் பாசத்தை பிள்ளைகள் ஒரு வலுவான சக்தியாக வைத்துக்கொண்டு தாறுமாறாக தங்கள் மனதை ஓட விடும் பொழுது பெற்றோர் கட்டுப்பாடு என்ற கடிவாளத்தை இழுத்து பிடித்து அவர்களை நேர்வழியில் செல்ல வழிவகுத்து வாழ்க்கையை வளமாக்கும்.-

Victory King (VK)

Friday, June 11, 2021

பாராத பயிறும் கெடும்!

 Status 2021 (156)

கிராமப்புறங்களில் வயல்களில் நடவு நட்டது முதல் பயிர் அறுவடை செய்யும் வரை அதன் சொந்தக்காரர்கள் தினமும் ஒரு முறை அந்த வயலை சுற்றி பார்த்து வருவார்கள். அப்பொழுதுதான் அந்தப் பயிர்களுக்குள்  'நமது முதலாளிகள் நம்மை கவனமாக பார்த்துக் கொள்கிறார்' என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டு பயிர்கள் மகிழ்ச்சி அடைந்து மளமளவென்று வளர்ந்து வளமான விளைச்சலைக் கொடுக்குமாம்.  அந்த பயிர்களுக்கே அத்தனை உணர்வுகள் இருக்கும் பொழுது நம்முடனேயே இருக்கும் நம் குழந்தைகளுக்கு எவ்வளவு கிரகிக்கும் சக்தி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் நம் வளர்ப்பினால் தான் நம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும் பண்பும் வளரும் என்று பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் நம் சந்ததியினரின் வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் அமையும்!

Victory King  (VK)

Thursday, June 10, 2021

கடவுளுக்குத் தெரியும்!

 Status 2021 (155)

தன் உயிரைப் பணயம் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்தான் கடவுள். அந்தக் குழந்தையின் அழுகுரல்  சத்தத்திற்கு ஏற்ப குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து வளர்க்கும் சக்தி தாய்க்குத் தெரியும். அது போல் நமக்கு ஆறறிவையும் கொடுத்து இவ்வுலகில் வாழ வழிவகுத்த கடவுளுக்குத் தெரியும் நமக்கு என்ன வேண்டும், எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பதும், தீயவர்களை எப்போது எப்படி அழிக்க வேண்டும் என்பதும். எனவே நாம் பொறுமையாக இருந்து நாம் செய்யும்ள நற்செயலுக்கான பலன் எப்படியும் நமக்கு வந்தே அடையும் என்பதை மனதார புரிந்து கொண்டு அந்நாளை எதிர்பார்த்து மகிழ்வுடன் வாழ்வோமே!

Victory King (VK)

Wednesday, June 9, 2021

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

 Status 2021 (154)

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழப் பழகிவிட்டால் மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. மகிழ்ச்சியே நம்மைத் தேடி வரும் 

காஞ்சி மகாபெரியவர்

நாம் நல்ல எண்ணத்தோடு ஒன்றை நினைத்து அதனை நேர்வழியில் செயல்படுத்தும் பொழுது நாம் செய்வது நம் மனசாட்சிக்கு சரி என்று பட்டால் அதனிடையே சில இடர்பாடுகள் வரும்பொழுது அதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதுவும் நாம் செய்யும் செயலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையே என்று மனதார எண்ணி அந்த வேலையை தொடர்ந்து முன்னேறுவோமேயானால் நாம் அதில் வெற்றியடைந்து மகிழ்வது நிச்சயம். எனவே நடப்பதையே நமக்கு சாதகமாக்கி வாழ்ந்து மகிழ்வோமே!

Victory King (VK)

Tuesday, June 8, 2021

எண்ணம் சொல் செயல்!

 Status 2021 (153)

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து. அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.

சுவாமி விவேகானந்தர்.

சொல்லில் வலிமை, செயலில் நேர்மை, சிந்தனையில் தூய்மை இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடித்து மேன்மையோடு வாழப் பழகுவோமே!

Victory King (VK)