Status 2021 (210)
விருந்தோம்பல் என்பது நம் அன்பு வட்டங்களை அரவணைத்தும், உறவுச் சங்கிலியை வலுப்படுத்தியும், ஒருவருக்கொருவர் புரிதலை மேம்படுத்தியும், நம் சொந்த பந்தங்களுடனும் நட்பு வட்டங்களுடனும் மகிழ்வுடன் கொண்டாடும் ஓர் அருமையான நிகழ்வு. நம் பண்பை மெருகூட்டுவதுடன் பகையை வெல்லும் ஒரு பேராற்றல் இதற்கு உண்டு. கூட்டுப் பிரார்த்தனைக்கு எவ்வளவு மகிமை உண்டோ அதேபோல் நாம் கூடி மகிழும் பொழுதும் அதன் மகிமையை பெறுவோம். எனவே விருந்தோம்பலை ஒரு கடமையாகச் செய்யாமல் அறுசுவை உணவுடன் அனைவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்து ஆரோக்கியமாக வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment