Status 2021 (230)
நம் இறுதி காலத்தில் என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நிலை ஒவ்வொருவருக்கும் வரும். வாழ்ந்த காலங்களில் நன்மைகளையே செய்தவர்கள் தம் வாழ்வில் தாம் செய்த நற்செயல்களின் பலன்தான் இன்றும் இந்த நிலையிலும் மிகவும் சவுகர்யமாக இருக்கிறோம் என்றும், உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ வாழும் பாக்கியம் இன்றும் கிடைக்கிறது என்று மகிழ்வார். ஆனால் வாழ்வில் தவறுகளையே செய்தவர்கள் தம் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கும்போது தான் எவ்வளவு துரோகங்களையும் பாவங்களையும் செய்தோமே, அதற்குப் பிராயச்சித்தம் கூட தாம் செய்யும் நிலையில் இல்லையே என்று வருத்தப்படுவதையும் தம்மை அனைவரும் கேவலமாக பேசுவதை கண் முன்னே காண வேண்டிய நிலை வந்துவிட்டதே என புலம்புவதைவிட வேறொன்றும் செய்ய இயலாது. எனவே, இதை உணர்ந்து நாம் வாழ்வில் நல்லதையே செய்வோம், வாழ்வின் இறுதிவரை இன்பமுடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment