Status 2021 (216)
நாம் எப்போதும் நம்மால் முடிந்த உதவிகளையும் நற்செயல்களையும் மற்றவர்களுக்கு செய்யும்போது நமக்கு ஓர் ஆத்ம திருப்தி ஏற்பட்டு நம் உடல்நலம் உத்வேகத்துடன் செயல்படும். அப்படி நம்மால் செய்ய முடியாத நிலையில் இருந்தாலும் மற்றவர்கள் செய்யும்போது நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாலே அதுவும் நமக்கு ஓர் ஆத்ம திருப்திதான். ஆனால் நம்மால் செய்ய முடியவில்லை என்ற பொறாமையில் மற்றவர் செய்வதை தடுக்கும் மனநிலை நமக்கு வந்துவிட்டால் அதுவே ஒரு பாவச் செயலாகும். எனவே, அந்தப் பாவச் செயலை நாம் செய்யாமல் அமைதியாக இருந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருத்தலே சாலச் சிறந்ததாகும்.
Victory King (VK)
No comments:
Post a Comment