Status 2021 (226)
அடுத்தவன் வலி அறிந்து வாழ்கிறவன் யாரையும் காயப்படுத்தவும் மாட்டான், யாருடைய கண்ணீருக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான்.
கிருஷ்ண பரமாத்மா
மகா உன்னதமானபோதனை. ஆனால் அடுத்தவனுக்கு வலிக்க வேண்டும் அடுத்தவன் கண்ணீரைக் கண்டு தான் ஆனந்த பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே செயல்படுபவர்களுக்கு இந்த சிந்தனைகள் எல்லாம் எங்கே தோன்றப் போகிறது என்பதோடு இதற்கான பாவங்களின் பலனை அனுபவித்து தான் அழிந்து கொண்டிருக்கும் போதுகூட அவர்கள் உணரமாட்டார்கள். எனவே இப்படிப்பட்ட தீய மனப்பான்மை நமக்கு வராதிருக்க இறைவனைப் பிரார்த்தித்து நம் மனதை பக்குவப்படுத்தி வாழப் பழகுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment