Status 2021 (228)
நாம் எந்தப் பொருளைப் பற்றியாவது அதிகம் சிந்தித்தால் அது நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசை வளர்ந்துவிடும். அது நமக்குக் கிடைக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கோபம் வந்தால் மனம் தடுமாறுகிறது. மனம் தடுமாறினால் செயல்களில் தடுமாற்றம் அதிகமாகி நம் நிலைப்பாட்டைக் குலைத்து நமது இயல்பான வாழ்க்கையைக் கெடுக்கிறது. ஆகவே, இந்த நிலை நமக்கு வராது இருக்க நாம் எதையும் எதிர்பார்க்கும்போது கிடைத்தால் நல்லது இல்லையேல் அதைப் பற்றிக் கவலைப்படாது மாற்றி சிந்தித்து கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் தத்துவம் என்பதை நாம் உணர்ந்து மகிழ்வுடன் வாழலாமே!
Victory King (VK)
No comments:
Post a Comment