Status 2021 (219)
நம் குடும்பத்துக்கு குலதெய்வ வழிபாடு மிக முக்கியம். நாம் குல தெய்வத்தை மறந்தால் குடும்பத்தில் குழப்பங்களையும் இன்னல்களையும் நாம் அனுபவிக்க வேண்டிய நிலைதான் வரும். ஆனால் இதை தகுந்த பரிகாரங்களுடன் சரி செய்துவிடலாம். அதுபோல் மனிதன் பயந்து வாழ வேண்டிய முக்கிய தெய்வமான ஒன்று மனசாட்சி. மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்காமல் நாம் செய்கின்ற தீய செயல்களுக்கும் மற்றவர்களுக்கு செய்யும் துரோகங்களுக்கும் பரிகாரம் என்பதே கிடையாது. அது மனசாட்சி என்ற தெய்வத்துக்கே செய்யும் துரோகமாகும். அந்த பாவம் நம்மையும் அழித்து நம் குடும்பத்தையும் சந்ததியினரையும் தலைமுறை தலைமுறையாக துரத்தி பாடம் புகுத்திவிடும். எனவே, நாம் நம் சந்ததியினருக்கு நல்லவற்றை சேர்த்து வைக்காவிட்டாலும் இதுபோன்ற பாவங்களை சேர்த்து வைக்காமல் சந்ததியினரையாவது வாழ விடுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment