Status 2021 (229)
சூரியனையும் சந்திரனையும் நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவை அததற்குரிய நேரத்தில் தான் பிரகாசிக்கும், மறையும். அதோடு மட்டுமில்லாமல் அவற்றின் தன்மையும் முற்றிலும் வெவ்வேறு. சூரியன் தகிக்கும். சந்திரன் குளிர்ச்சி. எனவே, ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் அதன் சிந்தனையிலேயே நம் நேரத்தை வீணாக்கி மன உளைச்சலையும் கொடுத்து நம்மை முடக்கிவிடும். எனவே, நாம் எப்போதும் நம் பாணியிலேயே சிந்தித்து செயல்பட்டு நாம் நாமாகவே இருந்து வாழ்வில் மகிழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment