Status 2021 (204)
நமக்கு கெளரவம் என்பது நாவினால் அன்போடும் பண்போடும் பேசுவதால் மட்டும் வந்திவிடாது. நம் செயலிலும் அந்த பண்பு இருந்தால் மட்டுமே அந்த கெளரவம் முழுமையாக நமக்குக் கிடைக்கும். நயவஞ்சகத்தை மனதில் வைத்து நாவினால் நெய் ஒழுகப் பேசி மற்றவர்களை ஏமாற்றி பசுந்தோல் போர்த்திய புலியாக நடித்து அடுத்தவர்களை காலை வாரிவிடுவது கொலை செய்வதை விட மாபாதக செயலாகும். எனவே, போலி கெளரவத்தை விடுத்து நற்பண்புகளோடு நம் காலத்தை கடத்தி நம் கெளரவத்தையும் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்தால் நாம் இறந்த பிறகும் பிறவியின் பயனை அடைவோம் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. நம் கெளரவம் நம் கையில்தான்!
Victory King (VK)
No comments:
Post a Comment