Status 2021 (205)
நாம் சற்று வாழ்க்கையில் பயந்து பயந்து வாழ்ந்தால் நம்மை சீண்டி சீண்டி வெறுப்பேற்றுவதுடன் நம்மிடம் இருந்து எதை அபகரிக்கலாம் என்று நம்மை சுற்றி சுற்றி வந்து நம்மை மேலும் சோர்வடைய செய்துவிடுவார்கள் சிலர். நாம் வாழ்க்கையில் மனோதிடத்துடன் முன்னேறி படிப்படியாக உயரும்போது அதே நபர்கள் நம்மை தஞ்சமடைந்து இப்போதும் நம்மால் அவர்கள் ஏதேனும் சுகமடைய முடியுமா என்று பார்ப்பார்கள். அவர்கள் எப்படி நம்மிடம் பழகினாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் நாமாக இருந்து அந்தந்த நிலையில் நம்மால் என்ன முடியுமோ அதனை செய்து வாழ்வதுதான் சிறந்த பண்பு என்பதை உணர்ந்து சிறப்புடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment