Status 2021 (182)
இயற்கை வளம், மக்களிடம் ஒற்றுமை, பெரியவர்களிடம் மரியாதை இவை எல்லாம் சேர்ந்து இருந்ததால்தான் அந்த காலத்து வாழ்க்கை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. ஊரில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஊரே திரண்டு வரும். ஆனால் இன்று இயற்கை வளமும் இல்லை. மனிதர்களிடம் ஒற்றுமையும் குறைந்துவிட்டது. பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடின்றி குறைகள்தான் பெருகி வருகிறது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சுயநல ஆதிக்கம் மிகுந்த சிலரால் மற்றவர்களின் வாழ்க்கை மன அழுத்தத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கும் நிலை இன்று. ஒற்றுமையும் நேர்மையும் இருந்தால்தானே அமைதியாக வாழ முடியும்?
Victory King (VK)
No comments:
Post a Comment