Status 2021 (261)
நமக்கு அரிதாய் கிடைத்த ஆறாவது அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திப் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் நம்மையும் நம் சுற்றத்தையும் மேம்படுத்தி வாழ்வதை விடுத்து அதை எதிர்மறையாகப் பயன்படுத்தி அடுத்தவனை அழித்தும் கேடு செய்வதையே தொழிலாகக் கொள்வதுமாக வாழ்ந்தால் அது நம் தலையிலேயே நாம் கொள்ளி வைத்துக்கொண்டு அழிவதற்கு சமம். இயற்கையை அழித்தோம், நீர் நிலைகளை பராமரிக்கத் தவறினோம், விண்ணை முட்டும் அடுக்கு மாடிகளைக் கட்டி நிலத்தடி நீரை முழுவதுமாக உறுஞ்சினோம். அதன் விளைவுதான் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீரழிவுகள். அதுபோல்தான் நம் வாழ்வில் கேடு நினைத்தால் அழிவுதான் பிரதிபலன் என்பதை உணர்ந்து மனிதனாக வாழ முயல்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment