Status 2021 (237)
ஒருவரால் நமக்குப் பிரச்சனை என்றால் சம்மந்தப்பட்டவரிடம் பேசி தீர்வு காண முடியும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் சிறிதாவது மனிதாபிமானத்துடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மனிதாபிமானமே இல்லாமல் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, துரோகம் செய்வது, அடுத்தவன் சொத்தை அபகரிக்க நினைப்பது போன்ற தகாத செயல்களை தெரிந்தே விடாது செய்துகொண்டிருப்பவர்களிடம் எப்படி பண்போடும் அன்போடும் பேசினாலும் அவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்களாக அவர்கள் செய்யும் பாவத்துக்கும், துரோகத்துக்கும் தண்டனையை அனுபவிக்கும்பொழுதாவது உணர்வார்களோ என்னவோ? அவர்களுக்கு ஆறாவது அறிவு எதற்கு என்பதுதான் கேள்விக்குறி! சிந்திப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment