Status 2021 (245)
அகம் என்பது நமது உள்மனது. அதுவே ஆழ்மனது. புறம் என்பது நம் உடல் உறுப்புகள். அகத்தின் கட்டளைபடியே புறம் செயல்படும். எனவே, அகம் மகிழ்வுடன் இருந்தால்தான் புறத்தால் நாம் செய்யும் செயல்பாடுகளும் உணர்வுபூர்வமாகவும் உற்சாகத்துடனும் இயங்கும். அகம் மகிழ்வுடன் இருக்க நம் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது நம் முகத்தில் மகிழ்ச்சி பொலிவுடன் தெரிவதுடன் நம் உற்சாக நரம்புகள் உத்வேகத்துடன் செயல்பட்டு செயலில் நேர்த்தியும் அழகும் வெளிப்படும். எனவே, அகமும் புறமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உள்ளுணர்வுகள். எனவே, அகத்தை மகிழ வைத்து நம் செயலை செம்மைப்படுத்தி ஆத்மசாந்தியுடன் வாழ முயல்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment