Status 2021 (247)
நாம் எந்த ஒரு பொருளையும் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாது இருந்தால் அது நமக்குப் பயனற்றுதான் போகும். அது வீடாக இருக்கலாம், உபயோகப்படுத்தக் கூடிய எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதுபோல்தான் நம் உடல் உறுப்புகளும். நம் உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து உடல் உறுப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்து எல்லாவற்றையுமே இயக்கத்தில் வைத்திருக்காவிட்டால் நாமும் ஒரு ஜடம்தான். எனவே, ‘சோம்பித் திரியேல்’ என்ற ஒளவையாரின் வாக்கின்படி நாம் சோம்பலைத் தவிர்த்தாலே மனதும் புத்துணர்ச்சியுடன் இயங்கும். உடல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படும். வாழ்க்கையை தொய்வில்லாமல் கடத்த ஏதுவாகும் என்பதை உணர்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment