Status 2021 (251)
பிறரை அதீதமாகப் புகழ்ந்து அவர்களை தன்வயப்படுத்தி அதன் மூலம் தன் ஆதாயத்தைத் தேடிப் பிழைப்பு நடத்துபவர்கள் பலர். புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. இதுபோல் வஞ்சப் புகழ்ச்சி செய்து அவர்களை தமக்கு அடிமையாக்கி பிழைப்பு நடத்துவது போன்று ஒரு மோசமான செயல் வேறெதுமில்லை. புகழ்ச்சிக்கு அடிமை ஆகுபவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற ஆசாமிகள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே எந்த காலகட்டத்திலும் நம்மைப் பிறர் புகழும்போது அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு மகிழ்ந்து அத்துடன் அதை முடித்துக்கொண்டால் இதுபோன்ற ஆசாமிகள் நம்மை அணுக அச்சமுறுவர். சிந்தித்து செயல்படுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment