Status 2021 (241)
நம் மதிப்பையும் பண்பையும் மற்றவர்கள் பார்த்து அதன் பெருமையை அவர்கள் வாயார வாழ்த்த வேண்டும். அதுதான் நம் மதிப்புக்கும் செயலுக்கும் பண்புக்கும் கிடைக்கும் உரிய அந்தஸ்த்து. அதை விடுத்து தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொண்டு தன் செயலையே பெருமையாக நினைப்பதுடன் மற்ற எல்லோரையும்விட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்குடன் வாழ்வது நமக்கான மரியாதையை நாமே குறைத்துக்கொள்வதோடு ஒரு நிலையில் மற்றவர்கள் நம்மைப் பற்றி இகழ்ந்துப் பேசும் அழிவின் விளிப்புக்கே கொண்டு சென்றுவிடும். எனவே, நம் சுய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் சுயதம்பட்டம் அடிப்பதை விடுத்து பண்போடு வாழப் பழகுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment