Status 2021 (255)
எல்லோரும் போகிறார்களே என்று நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றால் நம் பாதை நமக்கு புலப்படாது. நம் பாதையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம் திறமையை நாம்தான் கண்டறிந்து நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாம்தான் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. தன்னம்பிக்கையோடு நாம் செயல்பட்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டால்தான் அது மற்றவர்களோடு நாம் இணக்கமாக செயல்பட முடியும். தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உணர்ந்து வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment