Status 2021 (241)
பொதுவாக மற்றவர்கள் நம்மைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க, வீடு ஆஃபீஸ் எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்பது வழக்கம். அவர் கேட்பது ஆஃபீஸ் கட்டிடத்தைப் பற்றியோ, வீட்டின் அமைப்பைப் பற்றியோ அல்ல. இது ஒரு இடவாகுபெயர். வீடு என்பது அப்பா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டு, அன்பினாலும் பாசத்தினாலும் கட்டுண்ட ஓர் ஆலயமாகக் கருதினால் ஒருவருக்கொருவர் எதிர்மறை எண்ணங்கள் விலகி அனைவரையும் அன்போடு அரவணைக்கும் பக்குவம் கிடைக்கும். அதுபோல் அலுவலகம் என்பது சக ஊழியர்கள், நண்பர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர்களால் சூழப்பட்டு இதையும் ஓர் ஆலயமாகவே நாம் கருதினால் உழைப்பில் சலிப்பும் மாறுபட்ட கருத்துக்களும் நம்மை வந்து அடையாது. பண்போடு நம் பணியை செய்ய வழிவகுக்கும். இவ்வாறாக நம் மனதைப் பக்குவப்படுத்த முயற்சிப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment