Status 2021 (248)
பாராட்டு என்பது ஒருவரது சிறப்பை அங்கீகாரம் செய்வதற்கு பயன்படுத்தும் யுக்தி. பிறரது புகழ்ச்சியை நம் மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அதை ஓர் உற்சாக டானிக்போல எடுத்துக்கொண்டுவிட்டால் சிறப்பு. நம் மீது செலுத்தப்படும் புகழ்ச்சி அளவுக்கு மீறும்போது அதுவே போதையாகிவிடும். நம்மை அழிவுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வலிமையானது அதீத புகழ்ச்சி. எனவே, நமக்குக் கிடைக்கும் புகழ்ச்சியை மகிழ்ச்சியோடு ஏற்று அவ்வப்பொழுது நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால் நமக்கு மமதை ஏறாது. வாழ்க்கையை நிலையாக வாழ ஏதுவாகும். கடைப்பிடிப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment