Status 2021 (167)
‘யாரை நம்புவது?’ என்கிற கேள்வி, வயது வேறுபாடின்றி அனைவராலும் கேட்கப்படுகிறது. ‘எவரையுமே நம்ப முடிய வில்லை!’ என்கிற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. இது துரோகத்தை அனுபவித்தவர்கள் மனதில் இருந்து வரக்கூடிய ஒரு புலம்பலே. அடுத்தவருக்கு துரோகம் செய்து சுகமாக வாழ நினைத்தால், கடைசியில் நாமே விரட்டியடிக்கப்படுவோம். ஆனால் இன்று துரோகம் செய்பவர்கள் அதிகாரத்திலும் செல்வச் செழிப்பிலும் திளைப்பதை நாம் கண் கூடாகக் காண்கின்றோம். அவர்களின் துரோகம் விருதுகளால் அங்கீகரிக்கப்படுகிறது. துரோகம் செய்வது தனித் திறமையாகக் கருதப்படுகிறது. பாவம் எளிய மனிதர்கள்! எவரை நம்புவது? எதன் மீது நம்பிக்கை வைப்பது? ஏன் நம்பிக்கை துரோகம் இழைக்கப்படுகிறது… என்பதெல்லாம் அறியாமல் தடுமாறுகிறார்கள். வரலாறு துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை. எனவே சிந்திப்போம். செயல்படுவோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment