Saturday, June 5, 2021

பாராட்டு!

 Status 2021 (151)

பாராட்டு என்பது நாம் கொடுக்கும் பரிசை விட மிகவும் மதிப்பு உள்ளதாகும். நாம் ஒரு விருந்திற்கோ அல்லது சுபநிகழ்ச்சிக்கோ செல்லும்பொழுது நம்மை அழைத்தவர்களை மனதார பாராட்டி அவர்கள் ஏற்பாடு செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது என்று முகமலர்ச்சியுடனும் உள்ளன்புடனும் வாயார வாழ்த்தினால் அதனை ஏற்பவர்கள் அகமகிழ்ந்து நாம் அளித்த பரிசை விட பல மடங்கு மேன்மையாகக் கருதுவார்கள். நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அழைத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்பும் அதுவே ஆகும். எனவே, பாராட்ட தகுதி உள்ளவர்களை மனதார பாராட்டி அவர்கள் மனதையும் குளிரவைத்து நாமும் மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

No comments: