Status 2021 (156)
கிராமப்புறங்களில் வயல்களில் நடவு நட்டது முதல் பயிர் அறுவடை செய்யும் வரை அதன் சொந்தக்காரர்கள் தினமும் ஒரு முறை அந்த வயலை சுற்றி பார்த்து வருவார்கள். அப்பொழுதுதான் அந்தப் பயிர்களுக்குள் 'நமது முதலாளிகள் நம்மை கவனமாக பார்த்துக் கொள்கிறார்' என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டு பயிர்கள் மகிழ்ச்சி அடைந்து மளமளவென்று வளர்ந்து வளமான விளைச்சலைக் கொடுக்குமாம். அந்த பயிர்களுக்கே அத்தனை உணர்வுகள் இருக்கும் பொழுது நம்முடனேயே இருக்கும் நம் குழந்தைகளுக்கு எவ்வளவு கிரகிக்கும் சக்தி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் நம் வளர்ப்பினால் தான் நம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும் பண்பும் வளரும் என்று பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் நம் சந்ததியினரின் வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் அமையும்!
Victory King (VK)
No comments:
Post a Comment